Tuesday, December 31, 2024

*Wishing you and your family a happy, healthy, prosperous and  New Year 2025.* 
உன்னை சுற்றியிருக்கும் 
நான்தான் உன்னை அழகாக்குகிறேன் என நானே நினைத்து கொள்கிறேன் 

உறித்து வீசிய பின்தான் 
நீதான் உண்மையான பரிசுப்பொருள்
நான் உன்னை சுற்றியிருந்த பளபளப்க்கும காகிதம் என் புரிகிறது.

பூமி.சாமி.

Thursday, December 26, 2024

காலையில் கண்விழிக்கும் வரை 

பசியில்லை
கவலையில்லை
துன்பம்
துயரம்
ஏதுமில்லை 

பள்ளி
படிப்பு
பரிட்சை
பற்றி கவலையில்லை 

வேலை
பணம்
கடன்
என்ற தொல்லையில்லை

என் உலகையே
மாற்றி போட்டுவிடுகிறது
இந்த சேவலின்
கூவல்.

பூமி.சாமி.


மனதையும் வயிரையும்
ஒருசேர நிரப்பிவிடுகிறது
"சாப்பிட்டாயா" என்று நீ
கேட்கும் ஒற்றை வார்த்தை.

பூமி.சாமி.


Tuesday, December 24, 2024

Merry Christmas to You and Your Family.
💐💐💐🎂🎂🎂

Best Wishes by
Dr. R.Rengasamy. HoD of Computer Science,
BGCW.



Monday, December 23, 2024

ஒவ்வொரு முறையும்
நீ  ஏமாற்றுகிறாய் 
நான் ஏமாறுகிறேன்
ஆனாலும் 
இது காதல் இல்லாமல் போகாது.

பூமி.சாமி.


Saturday, December 14, 2024



தியாகங்கள்
எப்பொழுதும்
ஆர்ப்பாட்டமாய்
இருப்பதில்லை

வெள்ளந்திகள்
தங்களை
விளம்பரப்படுத்திக்
கொள்வதில்லை 

கொடையாளர்கள்
எப்பொழுதும்
தங்களை கவனித்து கொள்வதில்லை

தொழிலை செம்மையாய்
செய்பவனுக்கு கடவுள் என்ற ஒன்று தனியாக தேவையில்லை 

நேர்மைக்கு நிகர்
இவ்வுலகில் எதுவும் இல்லை

சேவைக்கு உன்னைவிட
பெரிய உதாரணம் தேவையில்லை

பாசத்திற்கு நீதான்
இலக்கணம் என்று
சொல்ல தேவையில்லை

உன்னைவிட
வாழ்க்கையை போதித்த ஆசிரியர்
எவரும் இல்லை

உன் பாதத்தை விட
அமைதி தரும் இடம்
இவ்வுலகில் எதுவும் இல்லை

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா"

-உங்கள் அன்பு மகன்.





உன்னிடம் கேட்பது எல்லாம்

சிறுதுளி அன்பு
சிறுதுளி நட்பு
சிறிது நன்றி
சிறிது அக்கறை
சிறிதளவு உன் நேரம்
சிறிதளவு உன்னுடன் உரையாடல்

எதுவுமே கிடைக்காதபோது
பெருவெள்ளமாய் மனதில் பெருக்கெடுக்கிறது
கோபம்.

பூமி.சாமி.

Wednesday, December 11, 2024

என்னிடம் பேச நேரம் இல்லை
என்பவரின் நினைவுகள் தான்
என் முழு நேரத்தையும் வியாப்பித்து இருக்கிறது.

பூமி.சாமி.


Wednesday, December 4, 2024

ஒருவரை நம்பலாமா
வேண்டாமா என்று நகர்கிறது
வாழ்க்கை

நாம் நம்ப தொடங்கும்போது
அவரை நம்மைவிட்டு
நகர்த்தி விடுகிறது வாழ்க்கை.

பூமி.சாமி.
தேவதை என்பது
பெயர்ச்சொல் அல்ல,
வினைச்சொல்.

-பூமி.சாமி.

Tuesday, December 3, 2024

உன்மேல் சின்ன சின்ன
விசயங்களுக்கு கோப்படுகிறேன்
மனம் இருளில் இருக்கிறது.

காலையில் கதிரவன்
தோன்றுகையில் இருள் விலகி
பனி மறைகிறது
அன்பெனும் மலர் தெரிகிறது.

பூமி.சாமி.

Saturday, November 30, 2024

தேவை தீர்ந்தபின் வார்த்தைகளும் தீர்ந்து போகுமோ?

ஆரம்பத்தில்
பத்தி

அதன் பின்
சில வரிகள்
சில சொற்கள்

பிறகு 
ஒன்றிரண்டு சொற்கள்
ஒற்றை சொல்
ஸ்மைலி

கடைசியில் நின்றே போனது
உன் உரையாடல்.

பூமி.சாமி.

அது மழலை மழைக்காலம்

ஒட்டு திண்ணை
ஓர இருக்கை
மழை சாரல்
வாழை இலை
அம்மாவின் 
வெண் பொங்கல்
கருவாட்டு குழம்பு

உண்மையில் சொர்க்கம் அது.

பூமி.சாமி.

Thursday, November 28, 2024

உனக்கு ஒரு பக்கத்தை 
தந்துவிட்ட பிறகேன் 
ஆராய்கிறாய் அன்பானவரின்
மறுப்பக்கத்தை.

பூமி.சாமி.

Sunday, November 24, 2024

விலகுபவர்களை விட்டுவிடுவதும்
இருப்பவர்களை இருக்கமற்று பற்றிக் கொள்ளுவதும்
பயணத்திற்கு நல்லது.

பூமி.சாமி.

Friday, November 22, 2024

எல்லாவற்றையும் எளிதில் மறந்து விடுகிறேன் நான்

என் அம்மாவின் ஈடு இணையற்ற தியாகத்தை
என் அப்பாவின் அளவிடா முடியா உழைப்பை
என் வாழ்க்கை இணையின் அளப்பரிய அன்பை
என் குழந்தைகளின் ப்ரியத்தை
கூடப்பிறந்தவர்களின் அக்கறையை
என் உறவினர்களின் பாசத்தை
என் நண்பர்களின் உற்ற நேர உதவியை
என் மாணவர்களின் மரியாதையை

எல்லாவற்றையும் எளிதாக மறந்து கடந்து விடுகிறேன்  நான்

ஆனால் 
அவர்கள் எதையும் மறக்க கூடாது என சண்டையிடுகிறேன் நான்.

பூமி.சாமி.



யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை,
பத்து நாட்களாக பாட்டு சத்தம் கேட்க வில்லை,
அதிகாலை எங்களை எழுப்புவதே அவர்களின் பாட்டுதான்,
குடும்பத்தை காலி செய்து விட்டு
எங்கோ சென்று விட்டனர்,
ஆம், அது எங்கள் வீட்டருகில் 
புங்கமரத்தில் வசித்த குயில் குடும்பம்,
வெற்று வீடாய் காட்சியளிக்கிறது
அந்த மரம்.

எப்படி சொல்வது என்று தெரியவில்லை
" WE MISS YOU LOT"

-பூமி.சாமி.
 



Monday, November 18, 2024

ஐம்பதாவது பிறந்தநாள்

பலநேரங்களில்
எண்களும் எண்ணிக்கைகளும்
கண்டுபிடிக்க படாமலேயே 
இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பூமி.சாமி.
நேர்த்தியாய் தொடுத்த சரம் போல் மனிதர்கள்,
மனம் என்னவோ உதிரி உதிரியாய்.

பூமி.சாமி.

Friday, November 15, 2024

நீ ஒரு அடி விலகியபோது
என்னை ஒராயிரம் அடி விலகச் சொன்னது என் அறிவு

நீ ஒராயிரம் சென்றப்பின்னும் 
உன்னருகில் ஒர் அடி தூரத்திலேயே 
நின்று கொண்டிருக்கிறது
என் பாழாய் போன மனது.

பூமி.சாமி.

Thursday, November 14, 2024

I CAN CREATE A RIGHT THOUGHT FROM WRONG SITUATION, WRONG BEHAVIOUR, AND  WRONG PERSON.

Wednesday, November 13, 2024

கதவை திறந்து பாருங்கள்
தட்டுவது கடவுளாக கூட இருக்க கூடும்
எப்போதும் சாத்தானின் பயத்திலேயே இருக்காதீர்கள்.

பூமி.சாமி.

Tuesday, November 12, 2024

கொடிகள்,  ஆகாசத்தை தொட்டுவிட்ட ஏகாந்தத்தில்

கோல்கள்,  தான் ஏற்றிவிட்ட 
கொடியின் நினைவுகளில்.

பூமி.சாமி.

மதிக்கபடாத இடங்களில்
ஒதுங்கிவிட நினைக்கிறேன்

ஒதுக்க முடியா இடங்களில்
மதிக்கபடவில்லை எனில் என் செய்வது.

பூமி. சாமி.

Wednesday, November 6, 2024

கணினி மொழி
கனிமொழியிடம்
உரையாட போகிறது.

பூமி.சாமி.


Sunday, November 3, 2024

சிறிது அன்பை அக்கறையை காட்டி
ஏமாற்றி விட முடிகிறது என்னை
ஏமாந்த பின்னும்
இன்னொருமுறை
ஏமாற தயாராகி விடுகிறேன் நான்.



பூமி.சாமி.


Saturday, November 2, 2024

எதையும் தயங்காமல் கேள்
என்று சொல்லும் நான்தான் 
எனக்கு தேவை வரும்போது
தயங்கி தயங்கி நிற்கிறேன்

உனக்கு எனும்போது உரக்க
பேசும் நான்
எனக்கு எனும்போது ஊமையாகி
விடுகிறேன்

உனக்கு ஒன்றென்றால் ஓடோடி வரும் நான்
எனக்கு எனும்போது என் அருகில் நானே நிற்க மறுக்கிறேன்.

பூமி.சாமி.






Friday, November 1, 2024

எனது செல்பேசியின் கேமரா
பூமியை நோக்கியே
இருக்கிறது

சாமியை நோக்கி
திரும்புவதில்லை.

பூமி.சாமி

நெருக்கம்
உரசல்
உராய்வு
காயம்,

சற்று விலகியிருத்தல்
மனசுக்கு
மருந்து.

பூமி.சாமி.
கேட்பதற்கு முன்
சிறிது யோசித்தால்
பெரும்பாலான
கேள்விகள் மௌனமாகி விடும்.

பூமி.சாமி.

Wednesday, October 30, 2024

அனைவருக்கும்
இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துகள்.

இரா.ரெங்கசாமி.

Monday, October 28, 2024

நம்பிக்கை
 ஏமாற்றம்

பிறகும்
நம்பிக்கை

ஏமாற்றம்

இதுதான்
வாழ்க்கை

என்று நம்புவதை நிறுத்துகிறோமோ
அன்று முடிந்தது வாழ்க்கை.

பூமி.சாமி.


Saturday, October 26, 2024

காலக் கொடுமை

திரையில் திறமை
இயல்பான நடிப்பு,

தரையில் திறமை
இயல்பே நடிப்பு.

பூமி.சாமி


Wednesday, October 23, 2024

நீங்கள் கூப்பிடாமல்
உங்கள் வாசல் வரை வந்தது தவறுதான்,
நீங்கள் என்றோ ஒருநாள்
என்மீது வைத்த ஒருதுளி
நேசம் என்னை தானாய் நகர்த்தி 
வந்துவிட்டது. நான் என்செய்ய.

பூமி.சாமி.

Sunday, October 20, 2024

மழை பெய்து
மண்ணோடு கலந்த பின்னும்
மழைமேக நினைப்பில்
மழை நீர்.

பூமி.சாமி.

Saturday, October 19, 2024

மழையில்
மண்ணில்
மல்லாந்து
கிடக்கும்
மலர்கள்
மலர்ந்து
சிரிக்கும்போது

வாழ்வில்
வீழ்கையில்
மீள்வது
எப்படி
என தெரிகிறது.

பூமி.சாமி.



Wednesday, October 16, 2024

எதையும் இழக்காமல்
எதையும் பெற்றுவிட வேண்டும் என்று 
துடிக்கிறது இந்த விவர மனம்
நீண்ட தேடலுக்கு பிறகுதான் 
இந்த மரமண்டைக்கு உரைக்கிறது
இழத்தல் தான்
பெறுதலுக்கான திறவுகோல் என்று.

பூமி.சாமி.


Tuesday, October 15, 2024

மழையில்
வண்ணப்பூச்சு 
கரைந்து,
ஒரிரு இடங்களில் எட்டிப்பார்கிறது 
சுவரின்
உண்மையான நிறம்.

முகம்.

-பூமி.சாமி.

Monday, October 14, 2024

எந்த கரத்தையும் பற்றுவதற்கு
கொஞ்சம் பயமாகவே இருக்கிறது
உதறி விடுமோ 
மறந்து விடுமோ
துன்பத்தில் இழுத்து விட்டு விடுமோ
துரோகம் இழைத்து விடுமோ
நன்றி மறந்து விடுமோ என்று

இதை தாண்டி
சில நற்கரங்கள்
உன்னை சுற்றி
எந்த ஆர்ப்பாட்டமும்
அழகும் இன்றி அறிதாய்
இருக்க கூடும்
கண்டடைவது
உன் கையில் தான் இருக்கிறது.

-பூமி.சாமி.

Sunday, October 6, 2024

பயணம் முடிந்தபின்னும்
பாதையின் நினைவுகள்.

-பூமி.சாமி.

Friday, October 4, 2024

 சுற்றுலா நாள், ஒன்று இரண்டு என்று மாறி மூன்றாகி போனது

எண்ணிக்கை, இருபது முப்பது என்று மாறி ஐம்பதாகிப் போனது

புகைப்படங்கள் நூறு இருநூறு
என்றாகி செல்பேசியின் மெமரியை
முழுதாய் முடித்தது 

வாங்கியது ஒன்றிரடலிருந்து கணக்கற்ற தாய் மாறி
வங்கி கணக்கை முடித்ததது

ஐம்பது தேவதைகளை எண்ணி எண்ணி
அதற்குமேல் எண்கள் மறந்து போனது

வகுப்புக்கு நேரத்திற்கு வந்து விடலாம் போல 
இந்த பேருந்திற்கு நேரத்திற்கு வருவது.


இந்த கிச்சடி மட்டும் வாழ்வின் மறக்க முடியாத மெனுவாய் மாறியது

பாண்டிச்சேரி வந்தபின்னும் 
பெங்களூர் பர்ச்சேஸ் போக வாய்ப்பிருக்கா சார் என்று கேட்க தோன்றுகின்றது

இந்த மூன்று வருடப் படிப்பில்
இந்த மூன்று நாட்கள் போதும்
முந்நாறு வருடம் மனதில் நிலைத்து இருக்கும்.

உங்கள் பொன்னான நேரத்தை என்னுடன் செலவிட்டதற்கு நன்றி.

பூமி.சாமி.










Thursday, October 3, 2024

If you can't compete with someone,
Judge him. 

Tuesday, October 1, 2024

மழை,
மனதின் பாரம் கரைகிறது
குறைகிறது.

பூமி.சாமி.

Thursday, September 26, 2024

பெருங்க்கூட்டத்தில் 
உண்மை
அன்பு
நன்றி 
உடையோரை
தேடிக் கொண்டிருக்கிறேன்,

அது போல்
வேறு ஒருவரும்
தேடிக் கொண்டிருக்க கூடும்
அத் தேடலுக்கு விடையாய்
நான் இருக்க முயல்கிறேன்.

பூமி.சாமி.

Sunday, September 8, 2024

அவர்கள் தண்ணீரில்
எண்ணெய் போல்தான்
இருந்திருக்கிறார்கள்

நான் தான் 'செம்புலப் பெயல் நீராய்' இருந்திருக்கிறேன்
அதனால் என்ன
காலம் எதையும் தெளிய வைக்கும்
காத்திருக்க வேண்டும்,

அதுதான் கடினம்.

பூமி.சாமி.

Monday, September 2, 2024

உதவி என்றவுடன்
உன் ஞாபகம் தான் வந்தது 
கேட்டேன், செய்தாய்
காலப்போக்கில்
உன் உதவியை மறந்தேன்
உன்னையும் மறந்தேன்

இப்பொழுதும்
ஒரு உதவி தேவைப்படுகிறது
மீண்டும் உன் ஞாபகம் தான் வருகிறது
நன்றி கெட்ட மனதை
திட்டிக்கொண்டே
கொஞ்சம் கூட கூச்சம்
இல்லாமல்
கேட்டு விடுகிறேன் 
நீ செய்வாய் 
என்ற நம்பிக்கையில்.

பூமி.சாமி.

Friday, August 23, 2024

உன்னிடம் ஒப்பனையாய் பேச
ஓராயிரம் வார்த்தைகள்
இல்லை என்னிடம்
ஆனால் 
உனக்காக அன்பாய் செய்ய
ஒரு சிறு செயல் இருக்கிறது.


பூமி.சாமி.

Monday, August 19, 2024

படித்ததில் பிடித்தது

SLAV£RY OF MEN BY WOMEN

A must READ for every MAN!

Every Man irrespective of who they are must read the book by a German writer ESTHER VILLAR the THE MANIPULATED MAN.

This BOOK has caused outrage and HOSTILE CRITICISM from women, it explains how women since the earliest times have MANIPULATED men and turned them into their SLAVES, they have PRETENDED to be the OPPRESSED s.£¥ while in the real sense they are the OPPRESSORS. 

She explains how a WOMAN manipulates a MAN skillfully by steps like COURTSHIP and finally MARRIAGE, hence the saying “a man chases a woman until SHE catches him”.

In her book she explains how the man is TRICKED to care for the woman all his LIFE and her offspring. 

He rolls the stone like SISYPHUS and in turn gets rewarded by a few minutes of s£xual PLEASURE. 

We can, by observing Esther Villars assertions that a man is a SLAVE of his DESIRES and the WOMAN uses and has used it for THOUSANDS of years as a stick and carrot to keep the man chasing VANITY and commit his life to SERVING her.

She goes ahead to explain the RIVALRY of WOMEN, how each woman feels the powerful urge and need to OWN a male for HERSELF. 

Like a SLAVE owner, she detests any move the MAN would make to offer his services to another woman. She uses all means to keep the man to herself and her offspring alone.

Esther Villar's sentiments are captured by Nigerian Poet, critic and writer, Chinweizu Ibekwe in his book, “The Anatomy of Female Power” (AFP) and  Will Farrel's, “The Predatory Female”. 

They all push the THEORY that all societies are MATRIARCHAL and not PATRIARCHAL as we are pushed and forced to believe. 

MATRIARCHY has ruled not through brawn but WITS and TRICKS; women feigning weakness to be protected etc. Thus the male becomes the most exploited s.£¥ in human history, (in wars the man is always ready to DIE for the woman; he has been trained to do that).

Chinweizu calls the idea of DATING and COURTSHIP, TRAINING, like that of a horse. It is during this time that a woman having kept the man on a LEASH by denying him s.£¥ and getting him addicted to her by FALSE charms, trains and breaks him to whatever she wants him to become.

The MARRIAGE celebration becomes a celebration for the woman and her friends, and they all congratulate HER for having succeeded in getting herself a SLAVE . 

A man on that WEDDING day waves goodbye to his INDEPENDENCE and his coalition of males and commits himself to a SISYPHEAN life, rolling the stone, an act he cannot abandon having SOCIETY and the GOVERNMENT checking on him and always ready to JAIL, SHAME or EXILE him for absconding his duties of SLAVERY. 

Thus, the government and SOCIETY helps the WOMAN in keeping her SLAVE (man) in check.

Chinweizu gives a narration of how women are trained by older matriarchs to TAME men. He explains how a man is trained to rely on women by his own mother. 

A man is SHAMED for cooking for himself and other domestic chores by his own mother who is an agent of the global matriarchal rule.

By getting the MAN to hate DOMESTIC works and having it enforced by culture which warns men against going into the kitchen, doing LAUNDRY etc. 

The mother trains his son for the woman who will captivate him and when the time comes she takes hold of the man's stomach and by getting the man addicted to her body she holds him by the two, in BED and in the KITCHEN. 

With those two weapons she manipulates the man and turns him into her plaything.

A noble piece which is a must read for every MAN under the globe.

FOLLOW: Sadiq Saad ✍️
நீங்கள் நீங்களாகவே தான் 
இருக்கிறீர்கள்
என்னின் அதீத எதிர்பார்ப்புதான்
தவறு என்பேன்.

எங்க பாடம்
மறந்து போகும்
உங்க பாடம்
வாழ்வில் மறக்க முடியாத பாடம்.


Sunday, August 11, 2024

வலிகள் தான் வரிசைக் கட்டி
வார்த்தைகளாக நிற்கின்றன
கவிதைகளில்.

பூமி.சாமி.



Saturday, August 10, 2024

ஒரு கம்ப்யூட்டர் கவிதை

நீ ரேம்(RAM)
நான் ஹார்ட் டிஸ்க் (Hard Disk)
அதுதான் பிரச்சினை.


பூமி.சாமி.

Friday, August 9, 2024

நன்றியின் வாசம் கூட அறியாத நீ
மீண்டும் உதவி கேட்க்கிறாய்
செய்ய வேண்டாம் என்கிறது அறிவு
செய் என்கிறது மனது
செய்யத்தான் போகிறேன் 
நிச்சயம் நீ மறந்து விடுவாய் 
என தெரிந்தும்
நீ நீயாக இருந்துவிட்டு போ
நான் நானாக இருந்து விட்டு போகிறேன்.

பூமி.சாமி.


Tuesday, August 6, 2024

"பக்கத்துல வாழும்போது
உன்னருமை தெரியல
உன்னருமை தெரியும்போது
பக்கம் நீ இல்ல"

என்று பாட்டை பாட வாய்ப்பில்லாது 
இருக்கும்போதே உங்களின் மீது
அன்பு செலுத்துபவர்களை கொண்டாடுங்கள்.




Saturday, August 3, 2024

படித்ததில் பிடித்தது

பந்தயத்தின் மிக உயர் ஒழுக்கம் என்ன?...
ஓட்டப்பந்தய வீரர் #இவான்
உலகிற்கு உணர்த்திவிட்டார்?
____________________________________________

கென்யாவின் ஓட்டப்பந்தய வீரர் ஆபெல் முட்டாய் பந்தய வெற்றிக் கோட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில் இருந்தார். 

ஆனால் பந்தயப் பாதை குறிகளால் குழப்பமடைந்து வெற்றிக் கோட்டை அடைந்துவிட்டோம் என்று ஓட்டத்தை முடித்துக்கொண்டார்.  

ஒட்டத்தில் ஆபெல்லுக்கு பின்னால் (ஸ்பானிஷ் பேசும்) இவான் பெர்னாண்டஸ் இருந்தார். 

கென்னிய வீரர் ஆபெல் குழம்பிப்போய்விட்டார் என்பதை உணர்ந்த இவான் தொடர்ந்து ஓடுமாறு ஆபெலை நோக்கி கத்த ஆரம்பித்தார். ஆபெல்லுக்கு ஸ்பானிஷ் தெரியாது. இவான் என்ன சொல்லுகிறார் என்று ஆபெல்லுக்கு புரியவில்லை.

தான் கூறுவது ஆபெல்லுக்கு புரியவில்லை என்பதை உணர்ந்த பெர்னாண்டஸ் ஆபெல்லை வெற்றிக்கோட்டை நோக்கி விரையச் செய்தார்.

இதைக் கவனித்த ஒரு நிருபர் இவானிடம், "நீங்கள் இதை ஏன் செய்தீர்கள்?" என்றார். 

அதற்கு இவான் பதிலளித்த பதில் :
"ஒரு நாள் நாம் ஒரு பக்குவமான சமுதாய வாழ்க்கை நிலைக்கு உயர்வோம் என்பது என் கனவு. அந்த சமூக அமைப்பில் நாமும் மற்றவர்களும் வெற்றி பெற வேண்டும்."

நிருபர் முன்வைத்த அடுத்த கேள்வி :
"ஆனால் நீங்கள் ஏன் கென்யாவை வெல்ல அனுமதித்தீர்கள்?"  

அதற்கு இவானின் பதில் :
"நான் அவரை வெல்ல விடவில்லை; அவர் வெல்லப் போகிறார். போட்டி அவருடையது" என்றார்.

நிருபர் வற்புறுத்தி மீண்டும் கேட்டார் :
"ஆனால் நீங்கள் வென்றிருக்கலாம்!"  

இவான் நிருபரைப் பார்த்து பதிலளித்தார் :
"ஆனால் நான் ஆபெல்லின் குழப்பத்தை பயன்படுத்தியிருந்தால் எனது வெற்றியின் தகுதி என்னவாக இருக்கும்? இந்த பதக்கத்தின் மரியாதை என்னவாக இருக்கும்? என் அம்மா இதைப் பற்றி என்ன நினைப்பார்?"  

மதிப்புகள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு பரவுகின்றன.  

நாம் நமது குழந்தைகளுக்கு என்ன மதிப்புகளைக் கற்பிக்கிறோம்? மற்றவர்களுக்கு நாம் எவ்வளவு ஊக்கமளிக்கிறோம்?  

நம்மில் பெரும்பாலோர் மக்களின் பலவீனங்களை பலப்படுத்த உதவுவதற்குப் பதிலாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

இது எவ்வளவு தவறானது என்பதற்கு இவான் மிகச் சிறந்த உதாரணம்.

நம்மில் எத்தனைபேர் இவானோடு ஒத்துப்போகிறவர்களாக இருக்கிறோம்?

நன்றி இவான்...

Tuesday, July 30, 2024

மனம் விட்டு பேச
யாரும் இல்லை என்பதே
'வெற்றிடம்' எனப்படுகிறது.

பூமி.சாமி.

Wednesday, July 24, 2024

எல்லோரிடம் கேட்டு பெறுவதற்கு
ஒரு எளிமையான பட்டியல்
என்னிடம் இருந்துக் கொண்டே இருக்கிறது
அது ஒருபோதும் அது கரைவதில்லை
ஏனெனில் அவர்கள் கேட்பதும் இல்லை
நானாய் சொல்லுவதுமில்லை.

பூமி.சாமி.

Tuesday, July 23, 2024

மேற்ப்பக்கம் ஒட்டாத தண்ணீர் தான்
அத்தாமரை இலையை தாங்கிப் பிடிக்கிறது.

பூமி.சாமி.

Saturday, July 13, 2024

வாழ்வில் இல்லாத
முடிச்சுகளை
போட்டும் அவிழ்த்தும் 
பார்க்கிறது மனசு.

பூமி.சாமி.

Wednesday, July 10, 2024

உன் நினைவுகளுடன் தான்
நித்தம் நித்தம் நகருகிறது நாழிகை 
உன் கனவுகளுடன் தான்
இரவில் கலைகிறது உறக்கம்
கற்பனையில் உன்னுடன்தான்
 தித்திக்கிறது வாழ்க்கை
நிஜமாய் எதுவும் நடக்காது என்றபோதும்
உன் நினைவு என்பதும்
நிஜமாய் நீ என்பதும் ஒன்றுதான் எனக்கு.

பூமி.சாமி.

Sunday, July 7, 2024

சில அவசர வேலைகளை
சீக்கிரமாய் முடித்தேன்
சில வேலைகளை நாளைக்கு
தள்ளி வைத்தேன்
வெளியில் செல்லும்
வேலைகளை தவிர்த்து விட்டேன்
ஒரு வேளை உணவைக் கூட தவிர்த்தேன் 

எல்லா நேரத்தையும்
உனக்குக்காய் எடுத்துக் கொண்டு
தொலைபேசியில் அழைப்பாய்
என காத்திருந்தேன்
கடைசிவரை அழைக்கவே இல்லை நீ.

பூமி.சாமி.

Friday, July 5, 2024

அவள்தான் தேவதை

நீ அழ வைத்தபோதும்
அவள் அன்பிலிருந்து மாறுவதில்லை

நீ எப்படி இருந்தாலும்
அவள் அக்கறையிலிருந்து அகலுவதில்லை

அவள் கஷ்டத்தில் இருந்தாலும்
உன் துன்பத்திற்கு தோள் கொடுக்க மறப்பதில்லை

தேவைதையை தேடி அலையாதே
தேவதைகள் எப்பொழுதும் தன்னை
தேவதையாய் உணர்வதே இல்லை.

பூமி.சாமி.














Saturday, June 29, 2024

இருக்கும்போதே கொண்டாடுவோம்


ஒருவருடைய
நற்குணங்களை
கண்டடைவதற்கும்
கொண்டாடுவதற்கும்
ஒரு விலை 
தேவைப்படுகிறது

அது அவருடைய பிரிவு அல்லது இழப்பு.

பூமி.சாமி.

Thursday, June 27, 2024

ஒரு இறப்பு செய்தி
அவரை தெரிந்த வாட்ஸ்அப் குழுவில்
போட்டேன்
ஒருவர் RIP போட்டார்
இன்னொருவர் ஸ்மைலியோடு நின்றார்
மற்றொருவர் விபரம் கேட்டார்
இன்னொருவர் வருத்தப்படுவதாய் சொன்னார்
சிலர் மட்டும் மாலையோடு
மலர் அஞ்சலி செய்ய
பல பேர் இதற்கும்
நமக்கும் சம்பந்தம் இல்லை
 என இருந்து விட

நம் இறப்புக்கு பின்னும் என்ன
நடக்கும் என்பதை அறியும்
மந்திரசக்தி வந்து விட்டது
எனக்கு.

பூமி.சாமி.


Wednesday, June 26, 2024

என் நேரத்தை கொஞ்சமாய் கொஞ்சமாய் 
உடைத்து ஒவ்வொருக்காய்
கொடுக்கிறேன்,
நான் கொடுப்பவர்கள்
எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட கொடுக்காதவர்கள் தான்,
எனினும் கொடுப்பது தான்
என் வழக்கம் 
யாசிப்பது அல்ல.

பூமி.சாமி.

Sunday, June 23, 2024

எல்லாம் சம்பிரதாயத்திற்காக
சொல்லி சொல்லி
மனப்பூர்வமாக
சொல்லுவது எப்படி என்பது
மறந்தே போய்விட்டது எனக்கு.

பூமி.சாமி.
ஆம் இல்லை க்கு
இடையில்

மௌனம்
என்று ஒரு பதில்
இருக்கத்தான்
செய்கிறது

அது 
பலநேரங்களில் நமக்கு 
வசதியாய்
இருக்கிறது

எப்பக்கமும்
சாய்ந்து விட
ஏதுவாய்
இருக்கிறது.

பூமி.சாமி.




Wednesday, June 19, 2024

போ போ எங்கு சுற்றினாலும்
இங்குதானே வரவேண்டும்
என்று சொல்லி சிரிக்கிறது
இடுகாடு.

பூமி.சாமி.

Tuesday, June 18, 2024

சின்ன சின்ன செயல்களற்ற 
வண்ண வண்ண வார்த்தைகள்
வாசல் தோறும் கிடக்கின்றன.

பூமி.சாமி.

Monday, June 17, 2024

சட்டை பையை துலாவும் போதெல்லாம் 
கொஞ்சம் கடலும் கடற்கரையும்
 கையில் படுகிறது.

பூமி.சாமி.


worthy reading

Why you don’t react to everything

I’m 'Slowly' Learning That I Don’t Have To React To 'Everything' That Bothers Me.

I’m slowly learning that I don’t have to hurt those who hurt me.

I’m slowly learning that maybe the 'ultimate' sign of maturity is walking away instead of getting even.

I’m slowly learning that the energy it takes to react to every bad thing that happens to you drains you and stops you from seeing the other good things in life.

I’m slowly learning that I’m not going to be everyone’s cup of tea and I won’t be able to get everyone to treat me the way I want to be treated 'and that’s okay.'

I’m slowly learning that trying so hard to ‘win’ anyone is just a 'waste' of time and energy and it fills you with 'nothing' but emptiness.

I’m slowly learning that not reacting doesn’t mean I’m okay with things, it just means I’m choosing to 'rise' above it.

I’m choosing to take the 'lesson' it has served and learn from it I’m choosing to be 'the bigger' person.

I’m choosing my 'peace of mind' because that’s what I 'truly' need. I don’t need more drama. I don’t need people making me feel like I’m not good enough. I don’t need fights and arguments and 'fake' connections. I’m slowly learning that sometimes 'not' saying anything at all says everything.'

I’m slowly learning that reacting to things that upset you gives someone else power over 'your' emotions.

You can’t control what others do but you can control how you respond, how you handle it, how you perceive it and 'how much of it' you want to take personally. I’m slowly learning that most of the time, these situations say nothing about you and a lot about the other person.

I’m slowly learning that even if I react, it won’t change anything, it won’t make people suddenly love and respect me, it won’t magically change their minds.

Sometimes it’s better to just let things be, let people go, 'don’t' fight for closure, 'don’t' ask for explanations, 'don’t' chase answers and 'don’t' expect people to understand where.

Sunday, June 16, 2024

அப்பா

நாங்கள் சட்டை போட வேண்டும் என்பதற்காக
அவர் சட்டை அணிந்ததில்லை

நாங்கள் காரில் செல்ல வேண்டும் என்பதற்காக
அவர் மிதிவண்டியை தாண்டி யோசித்ததில்லை 

நாங்கள் மெட்ரோ நகரங்களுக்கு நகர வேண்டும் என்பதால்
அவர் கிராம எல்லையை தாண்டியதில்லை 

ஒவ்வொரு முறையும் அவர் சாப்பிடும்போதும்
ஒவ்வொருவரையும் சாப்பிட்டாயா என்று  கேட்க மறப்பதில்லை 

வீட்டுக்கு வந்த எவரையும் வெறும் வயிராய் அனுப்பியதில்லை 

கல்வி மட்டும் கொடுத்து விட கனவோடும் கடனோடும் அலைந்தவர் அவர்

எவ்வளவு துன்பம் வந்த போதும் ஒரு முறை கூட வாழ்வை சலித்துக் கொண்டது இல்லை 

நம் குழந்தைகள் ஆனாலும் மரியாதையும் சுதந்திரமும் கொடுக்க வேண்டும் என்ற கற்றுக் கொடுத்தவர் அவர்

 எங்களில் ஒருவரையும் ஒருபோதும்
 கை நீட்டி அடித்ததில்லை என்றாலும்
ஆறில் ஐவரை அரச அதிகாரியாய் ஆக்கியவர் 


உலகமே விடிந்து விழுந்தாலும் 
வீட்டில் ஒரு டம்ளர் விழுந்தது போல் வாழ்வில் எதிர்கொள்ளும் பக்குவம் அவர் 

தனக்கு ஒரு பைசா செலவு செய்யாமல் ஊருக்கு ஒன்றென்றால் உடனே உதவிடுபவர் அவர் 

வாழ்வில் ஒளி ஏற்றிடும் கடவுளுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் என்று விளக்களித்தவர் அவர்

நடந்தே எங்கும் செல்பவர் 
அவரது ஒவ்வொரு அடியும் 
எங்களின் வாழ்வின் படியானது 

ஒரு துண்டும் ஒரு கைலியுடனும் கடவுளை பார்த்து விட முடியுமா?
முடியும், அவர்தான் எங்கள் அப்பா.

பூமி.சாமி.


Saturday, June 15, 2024

 மாத்திரை
விழுங்க நிமிர்ந்தேன்,
முழு நிலா.

பூமி.சாமி.

Friday, June 14, 2024

THE GOOD YOU DO TODAY, PEOPLE WILL OFTEN FORGET TOMORROW, DO GOOD ANYWAY.

Thursday, June 13, 2024

எனக்கு ஒன்று
அவளுக்கு ஒன்று
நாற்காலிகள் எதிரெதிரே
உரையாடுவதற்கு

நான் அமர்ந்து உரையாடினேன்
கடைசிவரை காலி நாற்காலியுடன்.

பூமி.சாமி.

Wednesday, June 12, 2024

பல கேள்விகளுக்கு
மௌனம்தான்
சரியான பதிலாகிறது.

பூமி.சாமி.
மயில்
குயிலாகவும்,
குயில் 
மயிலாகவும்
மாற நினைப்பதில்லை

மனிதன் மட்டும் தான் மற்றவர்கள்
போல் வாழ நினைத்து 
தன் அடையாளம் தொலைத்து
மடிந்து போகிறான்.

பூமி.சாமி.

Tuesday, June 11, 2024

உன்னுடன் சண்டையிடுவது
நீ வேண்டும் என்பதற்காகத்தான்
வேண்டாம் என்பதற்காக அல்ல.

பூமி.சாமி.

Monday, June 10, 2024

Nowadays I am giving TRUE UNEXPECTED LOVE to my closed ones,  whatever they will give accept it and moving on.

- Boomi Saami.

Sunday, June 9, 2024

உன்னுடைய உரையாடல்
வானத்துடனும் விண்மீன்களுடனும்
என்று ஆனபின் எவ்வூரிலிருந்து 
உரையாடினால் என்ன?

பூமி.சாமி.

பிணைப்பை தளர்த்த தெரியவில்லை 
பாசத்தை பாதியாக்க முடியவில்லை
அன்பு அளவிட்டு அளிக்கத் தெரியவில்லை
அதனால் வரும் துன்பத்தையும்
துரத்த தெரியவில்லை.


பூமி.சாமி.


Saturday, June 8, 2024

விவரமற்றவர்கள்
பிறரால் ஏமாற்றப்படுகிறார்கள்

விவரமானவர்கள்
தங்களை தாங்களே
ஏமாற்றி கொள்கிறார்கள்.

பூமி.சாமி.

Friday, June 7, 2024

ஒருவரின் மீது நீங்கள்
அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் போது
அவர் உங்களிடம் முதலில் பொய் சொல்ல ஆரம்பிப்பார் 
பின் ஏமாற்ற ஆரம்பிப்பார் 
பின் உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவார்.

பூமி.சாமி.




Thursday, June 6, 2024

முட்கள் குத்தினாலும்
ரோஜாவின் மீதான
என் அன்பு குறைவதில்லை.
ஏனென்றால் எனக்கு
அன்பு செய்ய மட்டும் தான் தெரியும்.

பூமி.சாமி.

Wednesday, June 5, 2024

படித்ததில் பிடித்தது

நீ இப்போ Free ahh..?
நான் கொஞ்சம் பேசனும்..
"உனக்கு Work இல்லனா சொல்லு நான் வாரன் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.."
"நான் Call பண்ணவா..? கொஞ்சம் பேசனும்.."
"நான் கொஞ்சம் குழப்பத்துல இருக்கன் உன்கூட கொஞ்சம் பேசனும்..?"

இப்பிடி ஒருத்தராச்சும் உங்கக்கிட்ட கேக்க‌ இருந்தா 
நீங்க உங்களுக்கே தெரியாம அவங்க life-ல   ஒரு Important person ah இருக்குறிங்கனு அர்த்தம்..!

மனுசங்களால அவங்க Problems-க்கு தனியாவே தீர்வுகள் எடுக்க முடியும்
அப்பிடி இருந்தும் அவங்க பிரச்சனைகள உங்கக்கிட்ட சொல்லுறாங்கனா நீங்க அவங்களுக்கு Special-னால தான்..!

யாரோ ஒருத்தரோட  வாழ்க்கைல சரி ஒரு கனிவான, அன்பான Person ah இருந்துருங்க

அவங்க அந்த நேரம் நம்மக்கிட்ட எதிர்ப்பாக்குறது அவங்க Problems-க்கு Solution கிடையாது
இந்த இக்கட்டான சூழ்நிலைலயும் நமக்காக
ஒருத்தர் இருக்குறாருன்ற Feel மட்டும் தான்

அதே மாதிரி என்னைக்கோ ஒருநாள் சரி நமக்காக இருந்த மனிதர்களுக்கு 
எப்பவும் நன்றிக்கடன் படுங்க
ஏனா ஒவ்வொருத்தரும் அவங்களுக்காக வாழுற வாழ்க்கைல 
நம்மலையும் ஒருத்தரா மதிச்சி 
நமக்காக நேரம் கொடுக்குறது ரொம்பவே பெரிய விசயம்...❤️🌹🤌


Sunday, June 2, 2024

இரவுதான்
பலரின் இருளான பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பூமி.சாமி.
யார் எக்கேடு கெட்டால் என்ன
என்ன சூழ்நிலை இருந்தால் என்ன
தனக்கு வேண்டியது எப்படியேனும் நடந்தே ஆகவேண்டும் என்பதே சுயநலம்.

பூமி.சாமி.



Saturday, June 1, 2024

வாழ்க்கை

விவேகமும் விவரமும் வேகமாய்
பிடிக்க முயன்றேன் பறந்து போனது.

அன்பாய் அமைதியாய் பொறுமையாய்
அமர்ந்தேன் 
தோளில் வந்து அமர்ந்தது
அந்த வண்ணத்துப்பூச்சி.

Friday, May 31, 2024

யார் யாரையோ
யாருக்குள்ளோ
தேடுவது தான்
இங்கு பிரச்சினை.

பூமி.சாமி.


Thursday, May 30, 2024

அலட்சியத்தை எல்லாம் அடுக்கி
வைத்துக்கொள்கிறது அறிவு

அடுத்தமுறை உதவி என்று
கேட்டால் அலட்சியம் செய்ய
வேண்டும் என நினைக்கிறது அறிவு

உதவி என்று குரல் வருகிறது
அலட்சிய அடுக்கின் மேல்
முதல் ஆளாய் ஏறிநின்று உதவ முனைகிறது மனசு.

பூமி.சாமி.


Wednesday, May 29, 2024

பசுமை
பாடல்கள் 
பஸ்
பயணம்
அதிகாலை.

இதைவிட
வாழ்வில்
என்ன
இருக்கிறது.

பூமி.சாமி.

Sunday, May 26, 2024

அன்பின் சொல்படி கேட்பதும்
அடிமையாய் இருப்பதும் 
வேறு வேறு.

பூமி.சாமி‌

Saturday, May 25, 2024

நாம் நம் குழந்தைகளுக்கு
முகமூடிகள் தயாரிப்பதிலும்
அதை அணிவிப்பதிலும்
முன்புறமாய் இருக்கிறோம்
ஏனெனில்
நமது உண்மை முகம்
சில நேரங்களில் குழந்தைகளின்
குணங்களில் செயல்களில் வெளிப்பட்டுவிடுகிறது.

பூமி.சாமி.
நம்மில் சிலர்
பணம் சொத்து சேர்க்கையில்
பாவங்களையும் சேர்த்தே சம்பாதிக்கிறோம்
பிறகு
பாவங்களை போக்க
பணத்தை செலவழித்து
பணம்தான் கரைந்ததே ஒழிய
பாவங்கள் கரையாமல்
சந்ததிகளிடம் சேர்ந்ததுதான்
மிச்சம்.



விவரம் தெரியாத மக்கு
ஒன்றும் தெரியவில்லை
என்று பலமுறை திட்டி இருப்போம்
வெள்ளந்திகளை

ஆனால்  எனக்கு ஒன்றும் மட்டும்
புரியவில்லை
கடவுள் ஏன் எப்போதும் அவர்கள் பக்கமே இருக்கிறார்  என்று.

-பூமி.சாமி.




Wednesday, May 22, 2024

படித்ததில் பிடித்தது

மற்றவர்களின் செயல் உன்னை பாதிக்காத அளவுக்கு உன் மனநிலையைச் வைத்துக்கொள்ள நீ பழகவேண்டும்.

நம்மைச் சுற்றிய நிகழ்வுகள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்ய முடியாது.

ஆனால் அப்படி நம்மைச் சுற்றி நடப்பவைகளுக்கு நீ இப்படித்தான் எதிர்வினை ஆற்ற வேண்டுமென்று முடிவு செய்யும் சுதந்திரம் நம் கையில் இருக்கிறது.

உன் எதிர்வினையின் காரணமாக உன் சூழ்நிலையின்மீது நீ அதிகாரம் செலுத்த முடியும்.

உன் உணர்ச்சிகளை நீயே தேர்ந்தெடு: நீ எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பாய் என்று நீ முடிவு செய்து விட்டால் உன்னை யாரும் துக்கப்பட வைக்க முடியாது.

எதையும் நீ எப்படி எடுத்துக் கொள்கிறாய் என்பதுதான் வாழ்க்கையில் முக்கியம்.

நாம் ஏன் வாழ்கிறோம்? :  இந்த கேள்விக்கு ஒரு பதிலை நாம் கண்டு பிடிக்க வேண்டும். ஹிட்லரின் வதைமுகாமில் இருந்த பலருக்கும் ஒரு குறிக்கோள் இருந்தது. தன் குழந்தைக்காக வாழ வேண்டும்.

தன்னுடைய நிறைவேறாத ஒரு ஆசைக்காக நாம் வாழ வேண்டும். இப்படி வாழ்க்கையில் ஒரு உன்னதமான குறிக்கோளை வைத்திருந்தால் அதன் பொருட்டு நாம் எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் தாங்கிக் கொள்கிற சக்தியை அது கொடுத்து விடும்.

நாம் ஏன் வாழ வேண்டும்? : இந்த கேள்விக்கு ஒரு நல்ல பதிலை வைத்திருப்பவர்கள் எந்த கஷ்டத்தையும் எளிதாகத் தாங்கி விடுகிறார்கள்.

வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வைத்திருப்பவர்கள் வாழ்வின் துன்பங்களை எளிதாக கடந்து விடுகிறார்கள்.

"Man's Search for Meaning" by Victor E Frankl 

காசு காசு என அழைந்து 
காலம் கடந்தும் பின் தான்
புரியும்
வாழ்தல் என்றால் என்ன வென்று
காலத்தையும் காலனையும்
நிறுத்தி வைக்க முடியுமா என்ன.

பூமி.சாமி.

Tuesday, May 21, 2024

ஏதோ ஒன்றை மற்றவர்களிடம்
எதிர்பார்த்தது காத்து நிற்க்கீறீர்களா
அது அவரிடம் உனக்கு கொடுக்கும்
அளவு இல்லாமல் இருக்கக் கூடும்
காத்து நிற்க்காமல்
நீங்களே அவருக்கு அதை கூடுதலாக
கொடுத்து விடுங்கள்.
அன்பு, நன்றி எல்லாம் அப்படித்தான்.

-பூமி.சாமி.




காரணமான எண்ணத்தை மாற்றாமல்
விளைவுகளுடன் போராடுவது அர்த்தமற்றது.

- ஜேம்ஸ் ஆலன்.

Monday, May 20, 2024

படித்ததில் பிடித்தது

The pain of a good deed and the pleasure of a bad deed are only a few seconds


நற்செயலால் வரும் வலியும் தீச்செயலால் வரும் சுகமும் சில நொடிகளே


உனக்கு வேண்டியது
உனக்கும் தெரிகிறது 
எனக்கும் தெரிகிறது
உரிமையாய் கேட்டு பெற்றுக்கொள்ளுகிறாய்.

எனக்கு தேவையானது
எனக்கும் தெரியவில்லை
உனக்கும் தெரியவில்லை
கேட்கவும் தெரியவில்லை
கிடைக்கப் பெறவும் இல்லை.
ஆனால் மகிழ்வோடு இருக்கிறேன் 
உன்னை பெற்றதனால்.

பூமி.சாமி.
அலங்காரம் ஏதும் இல்லாமல்
அமைதியாய் சலனமே இல்லாமல் வெளிப்படும்
எதிர்பார்பற்ற உண்மையான அன்பு

மிகை அலங்காரத்துடன் 
வெற்று ஆர்பரிப்புடன் 
உய்யாரமாய்
அரிதாரம் இட்டு வரும்
போலியான அன்பு.

பூமி.சாமி.

Thursday, May 16, 2024

மனிதனின்
அறிவை 
சோதிக்கும்
இந்த சமூகம்
அறத்தை சோதிக்க
மறந்ததன்
விளைவை
சந்தித்து கொண்டிருக்கிறது 
இன்னமும் சந்திக்கும்.

பூமி.சாமி. 


Sunday, May 12, 2024

வயல் வரப்பில் அமர்ந்து 
பனை ஓலை தொன்னையில்
தின்ன பழைய சோறு

அதற்கு தொட்டுக்காய் 
சிறு தொன்னையில்
முருங்கை கீரை இட்டு சுண்டிய
பழைய குழம்பு
உளுந்து துவையல் 
வறுத்த சுண்டை மிளகாய் வற்றல்

சொர்க்கத்தில் அமர்ந்து அமுதுண்ண
அற்புத தருணங்கள் இவை

பனை மரங்கள் அற்ற வீட்டு மனைகளாய் வயல்கள்
பழைய சோறுக்கு பதிலாய்
பலநாள் முன் அறைத்த இட்லி மாவு
வெட்ட வெளியிலிருந்து
வீட்டுக்குள் சுருங்கி போன நாம்
சொர்க்கத்தில் நரகத்திற்கு
கொஞ்சம் இடைவெளி தான்
அது பத்து இருபது ஆண்டுகள் தான்.

பூமி.சாமி.






-பூமி.சாமி.


இன்றும்
மீன் குழம்பில்
மீனை தேடும்முன்
என் அம்மா வைக்கும்
குழம்பின்
சுவையையும்
மனத்தையும்
தேடுகிறது மனம்.

பூமி.சாமி.


உலகின் மிக சிறந்த போராளியை
உன்னால் காட்ட முடியுமா

உன்னால் தியாகத்தை உருவகப் படுத்தமுடியுமா

கலப்படமில்லாத அன்பை கண்டதுண்டா

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லா 
அன்பு என்று ஒன்று உண்டா 

கருணை காட்டிய அதே கண்ணால்
கண்டிப்பை காட்ட இயலுமா

வாழ்க்கை திறன்களை நமக்கு கற்று தந்த பல்கலைக்கழகத்தை உனக்கு தெரியுமா

கடவுளை நேரில் தரிசித்தது உண்டா

கடவுள் உன் அருகில் தான்
இருக்கிறார்
உன்னோடு தான் நேரிலோ நினைவாகவே இருக்கிறார் 
உணர்ந்தது உண்டா

அவள்தான் உலகத்தை உள்ளடக்கிய உலகம்.

தினம் தினம் அவளின் தினம்தான்.


அன்னையர் தின வாழ்த்துக்கள்.


Thursday, May 9, 2024

நெருக்கமாய் விலகியிருத்தலும்
விலகி நெருக்கமாய் இருத்தலும்
மனதிற்கும் உறவுக்கும் நன்று.

பூமி.சாமி‌.


Monday, May 6, 2024

👵Written by a 90 year old!!❤️
🤙42 lessons life taught me 💖
It is something we should all read at least once a week! Make sure you read to the end!
Written by Regina Brett, 90 years old, of the Plain Dealer, Cleveland, Ohio.
"To celebrate growing older, I once wrote the 42 lessons life taught me. It is the most requested column I've ever written. My odometer rolled over to 90 in August, so here is the column once more:
1. Life isn't fair, but it's still good.
2. When in doubt, just take the next small step.
3. Life is too short – enjoy it..
4. Your job won't take care of you when you are sick. Your friends and family will.
5. Pay off your credit cards every month.
6. You don't have to win every argument. Stay true to yourself.
7. Cry with someone. It's more healing than crying alone.
8. Save for retirement starting with your first pay check.
9. When it comes to chocolate, resistance is futile.
10. Make peace with your past so it won't screw up the present.
11. It's OK to let your children see you cry.
12. Don't compare your life to others. You have no idea what their journey is all about.
13. If a relationship has to be a secret, you shouldn't be in it...
14 Take a deep breath. It calms the mind.
15. Get rid of anything that isn't useful. Clutter weighs you down in many ways.
16. Whatever doesn't kill you really does make you stronger.
17. It's never too late to be happy. But it’s all up to you and no one else.
18. When it comes to going after what you love in life, don't take no for an answer.
19. Burn the candles, use the nice sheets, wear the fancy lingerie. Don't save it for a special occasion. Today is special.
20. Over prepare, then go with the flow.
21. Be eccentric now. Don't wait for old age to wear purple.💖
22. The most important sex organ is the brain.
23. No one is in charge of your happiness but you.
24. Frame every so-called disaster with these words 'In five years, will this matter?'
25. Always choose life.
26. Forgive but don’t forget.
27. What other people think of you is none of your business.
28. Time heals almost everything. Give time time.
29. However good or bad a situation is, it will change.
30. Don't take yourself so seriously. No one else does..
31. Believe in miracles.
32. Don't audit life. Show up and make the most of it now.
33. Growing old beats the alternative -- dying young.
34. Your children get only one childhood.
35. All that truly matters in the end is that you loved.
36. Get outside every day. Miracles are waiting everywhere. (I love this one)
37. If we all threw our problems in a pile and saw everyone else's, we'd grab ours back.
38. Envy is a waste of time. Accept what you already have not what you need.
39. The best is yet to come...
40. No matter how you feel, get up, dress up and show up.
41. Yield.
42. Life isn't tied with a bow, but it's still a gift.
❤️❤️❤️

படித்ததில் பிடித்தது

💟#அர்த்தமுள்ள_வாழ்க்கை💟

கணவன் மனைவி இருவரும் ...

ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

💟என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....

இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்

💟இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க... அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....

திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க.... அதான்...என்று இழுத்தாள்.

ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.

💟மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க

என்னத்த சொல்ல..

💟ஏதும் சின்னவீடு செட்பண்ணிட்டிங்களா...அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?

போடி லூசு.. அவன் சிரித்தான்.

ஆனால் அதில் உயிரில்லை.

மெதுவாய் சொன்னான்..

நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

💟என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....

அவன் இல்லையென தலையாட்டியபடியே...

அவனது அலுவலக பையை திறந்தான்.

ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

💟என்னங்க இது ..

படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.

அவள் படிக்க தொடங்கினாள் ...

அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.

உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.

ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.

அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.

உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.

அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.

இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.

அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...

நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.

உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.

அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.

உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.

அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.

நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.

நாம தான் விளையாடுவோம்.

அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..

அதுல பாதி பொய் இருக்கும்..

அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.

அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..

அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.

ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.

இப்ப வெளியே போகனும்...

இப்படி வெளியே போகணும்னு..

ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன்.

நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....

நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.

அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.

காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...

இப்ப அவ எப்படி இருக்கானு கூட

அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....

ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்...

அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே

நீ ரொம்ப பிசியாகிட்ட..

நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...

சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..

நான் காத்திட்டு இருந்தேன்.

கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..

ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...

என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...

பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.

ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...

பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.

நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது

அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..

அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.

உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...

அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...

அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.

இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.

இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...

உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...

என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..

ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல

அதான் உன்கிட்ட சொல்றேன்.

நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...

சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..

அதனால தான் இப்ப சொல்றேன்.

உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...

காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..

ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.

அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு அவர் பிசி....

அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..

அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல

ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..

பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத

உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...

இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.

நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.

இன்னும் சொல்லபோனா

நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..

அத கொஞ்சம் குறைச்சிக்கோ..

சீக்கிரம் வீட்டுக்கு வா.

பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...

அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....

ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...

ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?

செய்வேனு நம்புறேன்.

ஏன்னா என்கிட்ட நல்லா பேசின பையன் தானே நீ...

உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள்.

அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.

நிமிர்ந்து அவனை பார்த்தாள்....

இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.

அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

நான் தான்மா.....

ஏன் சும்மா பேசக்கூடாதா?....

என்ன செய்ற...

அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.

ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத்தொடங்கியது.... .

அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.

இனிமே அப்படித்தான்..

இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

Saturday, May 4, 2024

முதலில் 
கோவில் சாவடிகள் வெறிச்சோடி போயின 

அதன் பின் வீட்டு திண்ணைகள் ஆள் அரவமற்று போய் 
பின் திண்ணையும் இல்லாமல் போயின

 இப்பொழுது வீட்டின் வரவேற்பறையும் 
வெறுமையாய்
ஒவ்வொருவரும் ஒரு அறைக்குள் 

கூடி பேசி உறவையும் அறிவையும்  வளர்த்த இனம் 
ஒரு தொடுதிரைக்குள் ஒளிந்தும் ஒழிந்தும் போவதென்னவோ கொடுமை.

பூமி.சாமி.

Friday, May 3, 2024

எடைதாங்கா மேகம் ஒன்று 
என்னருகில் வந்தது
தன் தண்ணீரை இறக்க இடம் கிடைக்குமா என்றது 
நான் கண்ணீரை தருகிறேன் நீ தண்ணீரைத் தா என்றேன் 
பறிமாறிக் கொண்டோம்
வேகமாய் பறந்து செல்லும் மேகம் 
கணம் தாங்க முடியாமல் தனைவாய் தவழ்ந்தே சென்றது
அன்றிலிருந்து மேகங்கள் 
என்னருகில் வருவதே இல்லை.

பூமி.சாமி.

Wednesday, May 1, 2024

ஒருபோதும் உன்னால் சிறந்ததை
அடைய முடியாது

அப்படி அடைந்தாலும்
அடைந்தவுடன்
அது சிறப்பானதாக 
உனக்கு தெரியாது

ஆனால் 

ஒன்றை மட்டும் 
உன்னால் சிறப்பானதாக 
ஆக்க முடியும்
அது 
இத்தருணம் மட்டும் தான்.


Tuesday, April 30, 2024

எல்லா செயல்களுக்கும்
அர்த்தமும் பயணும் இருக்க 
 வேண்டிய அவசியமில்லை

வாழ்க்கையை அர்த்தப்படுத்த
அர்த்தமில்லா சில செயல்களை
மனதின் பொருட்டு செய்ய வேண்டி இருக்கிறது.

பூமி.சாமி.

Saturday, April 20, 2024

நட்பாகையில்
நீ அடிஅடியாய் முன் வர
நானும்  அங்குலம் அங்குலாமாய் நெருங்கி வந்தேன் 

பிரிகையில்
நீ  ஒரு கிலோமீட்டர் பின் சென்றபின்னும்
ஒரு அங்குலம் கூட பின் நகர முடியாமல்
நரகத்தில் நிற்கிறேன் நான்.

பூமி.சாமி.

வாழ்க்கை

மின்தூக்கி சுலபமாய்
வேகமாய் உயர்த்துகிறது
அதைவிட வேகத்தில் கீழ்
இறக்கி விடுகிறது

படிகளில் ஏறி செல்லுதல்
கடினம்தான்.........

பூமி.சாமி.

Sunday, April 14, 2024

உன்னை எனக்கு ' அவ்வளவு' பிடிக்கும்,
என்னை உனக்கு ' எவ்வளவு ' பிடிக்கும்,
என்ற கவலை எனக்கு இல்லை
அது 'எவ்வளவு' இருந்தாலும்
என்னுடைய ' அவ்வளவு ' மாறப்போவதில்லை,
நீ நீயாக இருக்க அனுமதிப்பதும்
அந்த ' அவ்வளவில் ' அடக்கம்.

பூமி.சாமி.
அனைவருக்கும்
          இனிய
தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துகள்.

Monday, April 8, 2024

சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்
சொல்ல நினைத்தது 
சொல்ல வேண்டாம் என்று
தோன்றக்கூடும்.

பூமி. சாமி.
இருவருக்கிடையே
எல்லாம் ஒரு வழிபாதையாகி
போனபின்
புரிதல் எப்படி புலப்படும்.

பூமி.சாமி.




மரத்தை அண்டி வாழும்
பறவைகள் தான்
ஒட்டுண்ணி விதைகளை
மரத்தில் விதைக்கின்றன.


பூமி.சாமி.

உறிஞ்சி வாழும்
ஒட்டுண்ணிகளிடம்
உணர்வை எதிர்பார்ப்பது
மூடத்தனம்.

பூமி.சாமி.

Saturday, March 30, 2024


ஒவ்வொரு செயலை செய்யும்போதும் 
ஒரு கணக்கு மனதில் ஓடுகிறது 

ஒன்றை அன்பால் செய்கையில் கணக்கு
காணாமல் போகிறது

ஒன்றை கணக்குடன் செய்கையில்
அன்பு காணாமல் போகிறது.

பூமி.சாமி.



உனக்கு தேவை எனும்போது 
வலிய எடுத்துக்கொள்கிறாய்
எனக்கு தேவை எனும் போது
அது உன் உள்ளங்கையில்
இருந்தாலும் மூடிக் கொள்கிறாய்.

பூமி.சாமி.


Tuesday, March 19, 2024



நீ அக்கறையின் அதிசய தேவதை
உன் அன்பு சொற்கள் மனமருந்து 
உன் புன்னகை துன்பத்தை துடைத்தெறியம் மழை
உனக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கிறது
இவ்வளவு நேரம் அக்கறை காட்ட
உன் நிம்மதியை இழந்து
அடுத்தவருக்கு நிம்மதியை கொடுக்கும் அட்சயப் பாத்திரம் 

நேத்ராவை பெற்றெடுத்த நேத்ரம்
எங்கள் சுமைகளை தாங்கி
கவலைகளை கரைத்துவிடும் கடல்
உன்னை அனைவருக்கும் பிடிக்க உன் சிரிப்பொன்றே போதும்.
வாழ்க வளமுடன் (ஹனி)தா.










Monday, March 18, 2024

என்னுடைய சுமையை
நீங்கள் சுமக்க வேண்டாம்
என்னுடைய சோகங்களில்
பங்கேற்க வேண்டாம்
என்னுடைய கஷ்ட நேரங்களில்
கூட இருக்க வேண்டாம்
நான் உடலாலும் மனதாலும்
அடிப்பட்டு வரும் நேரங்களில்
நான் உன்னோடு இருக்கிறேன்
என்று கண்ணால் உணர்த்துங்கள்
அதுபோதும் எனக்கு.




Thursday, March 14, 2024

கிடைக்கும் இடத்தில்
பெற மனமில்லை
கிடைக்கா இடத்தில்
யாசித்து காயப்படுகிறோம்,
அன்பு.

பூமி.சாமி.

Tuesday, March 12, 2024

படித்ததில் பிடித்தது

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம். நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.

நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.

எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.

பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.

சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.
சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள். சமாதானம் செய்யுங்கள்.

நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...

படித்ததில் பிடித்தது..!

Saturday, March 2, 2024

அன்பு செய்தல் நல்ல விசயம்தான்
ஆனால்
நீர் நெல்லுக்கு பாய்கிறதா
புல்லுக்கு பாய்கிறதா
என்பதில் கவனமாக இருங்கள்.

பூமி.சாமி.

Thursday, February 29, 2024

நமது மனதிற்குள்
சில எதிர்பார்ப்புகள் உள்ளது
இதை சில பிடித்தவர்களிடம் 
எதிர்ப்பார்க்கிறோம்
அதை அவர்கள் செய்யாதபோது
அவர்களை Judge செய்கிறோம்
அதனால் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வதும் மிக கடினமாக இருக்கிறது.

எதிர்ப்பார்ப்புகளை குறைத்து கொள்வதுதான் இதுக்கு தீர்வாக அமையும்.

பூமி.சாமி.

Wednesday, February 28, 2024

நிறை குறைகளுடன் மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும்
மனிதர்களிடம் எந்தவித எதிர்பார்ப்பின்றி 
இருப்பதும் மிக கடினமாக இருக்கிறது.

பூமி.சாமி.

எல்லாவற்றிற்கும் கணக்கு
பார்த்து
கணக்காய் வாழ்ந்து
கணக்கு முடியப்போகும் போதுதான்
தெரியும்
கணக்கிட முடியாததது வாழ்க்கை என்று.

பூமி.சாமி.

Monday, February 26, 2024

எனக்கு பெரிய பேரரசை என்று 
ஒன்றும் இல்லை
இத்தருணத்தை  இந்த நொடியை
முழுவதும் வாழ்ந்து
விடவேண்டும் என்று
ஆனால் இதுநாள் வரை முடியவில்லை.

பூமி.சாமி.

Sunday, February 25, 2024

அன்புக்கு பதில் அன்பு மட்டும் இல்லை
வெறுப்புக்கு பதில் வெறுப்புதான் என்றில்லை
எந்த பதிலானலும் உண்மை இருக்கட்டும் எந்த வேசமும் வேண்டாம் 
விஷமே ஆனாலும் கலப்படம் வேண்டாம்.

பூமி.சாமி.



இயல்பாய் இருந்து விடுங்கள்

நல்ல பெயர் எடுக்க 
அதிபுத்திசாலி தனமாய் 
செய்யும் செயல்கள்
எடுத்துக் கொடுக்கிறது
கெட்டப் பெயரை.

பூமி.சாமி.

Saturday, February 24, 2024

அப்பா
அம்மா
கணவன்
மனைவி
பிள்ளைகள்
உடன்பிறந்தவர்கள்
யாரேனும் தியாகத்தின்
 உருவமாக உன் வாழ்வில் இருக்கக்கூடும்
அவரை இழந்து விடாதே
அவர்தான் இந்த உலகம்
உனக்கு கொடுத்த உன்னத
பரிசாக இருக்கக்கூடும்.

பூமி.சாமி.

Thursday, February 22, 2024

கல்லூரி முடித்து
ஒரிரு வருடம் கழித்து 
மாணவர்கள் தொலைபேசியில்
அழைப்பதுண்டு

ஒருவர் கேட்பார்
மதிப்பெண்
பட்டியல் வந்துவிட்டதா என்று

மற்றொருவர் கேட்பார் 
பட்டமளிப்பு விழா எப்போதென்று

இன்னொருவர் கேட்பார்
ஏதாவது வேலை வாய்ப்பு
இருந்தால் சொல்லுங்கள் என்று

இதுவரை ஒருவரும் கேட்டதில்லை
" தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்" என்று

-பூமி.சாமி.

Tuesday, February 13, 2024

பிடிவாதமாய் இருந்து
நான் வெற்றி பெறும் போதெல்லாம்
நம்மிடையே உள்ள உறவு 
தோற்று போகிறது.

-பூமி.சாமி.

Sunday, February 11, 2024

மின் கம்பி -தத்துவம்

முத்தமிட்டது 
யார் என்பது
பிரச்சினை இல்லை
உயிர்ப்போனது என்னவோ
பறவைக்கு தான்.

பூமி.சாமி

Friday, February 9, 2024

அறிவால் அறிந்தது எல்லாம்
நினைவில் இல்லை
மனதால் உணர்ந்ததை எல்லாம்
மறக்க முடியவில்லை.

பூமி.சாமி.

Thursday, February 8, 2024

எல்லாவற்றையும் சொல்லி விடுவதில்
ஆரம்பித்து 
இதை சொல்லலாமா வேண்டாமா என்பதில்
முடிந்துவிடுகிறது
எல்லா உறவும் நட்பும்.

பூமி.சாமி.

Wednesday, February 7, 2024

இலையுதிர் காலங்களில்
இலைகள்  மண்ணை
வளமாக்குகிறது

வாழ்வின் இலையுதிர் காலங்களில்
இன்னல்கள்  
மனதை திடமாக்குகிறது..

பூமி.சாமி

Sunday, January 28, 2024

நான் இவ்வளவு
காயப்பட காரணம்
உங்கள் மீது
வைத்த அன்பு
சற்று கூடுதல்
அவ்வளவுதான்.

அன்பும்
காயப்படுதலும்
ஒரு நாணயத்தின்
இரு பக்கங்கள்.

பூமி.சாமி.

இவ்வளவு வாய்ஜாலம் தேவையில்லை
இவ்வளவு பொய்கள் தேவையில்லை
இவ்வளவு நடிப்பு தேவையில்லை
என்னை ஏமாற்ற 
இவ்வளவு மெனக்கெடு
தேவையில்லை

சிறிது அன்பும் அக்கறையும்
காட்டி சுலபமாய் ஏமாற்றிவிடலாம்
என்னை.

பூமி.சாமி.


Saturday, January 27, 2024

ஆயக்கலைகள் அறுபத்து மூன்றெல்லாம்
வேண்டாம்
நடிக்க மட்டும் கற்றுக்கொள்ளுங்கள்
வாழ்ந்து விடலாம்
இல்லையெனில்
வாழ்வது போல் நடித்துனாலும் ஓட்டிவிடலாம்.

பூமி.சாமி

Friday, January 26, 2024

என் மௌனத்தில் உறைந்து கிடக்கிறது
பகிரமுடியாத ஆயிரம் வார்த்தைகள்

என் மௌனத்தில் உறைந்து கிடக்கிறது
என் இயலாமைகள்

என் மௌனத்தில் உறைந்து கிடக்கிறது
சொல்ல முடியாத சோகங்கள்

என் மௌனத்தில் உறைந்து கிடக்கிறது
மலையளவு உணர்வுகள்

உடல் உயிர் உணர்வு உறவு பேனுவதற்கு 
மௌனமாய் இருத்தல் நல்லது.

பூமி.சாமி


Wednesday, January 24, 2024

நேரம்

என்னிடம் இருக்கும்
கொஞ்சத்தில் நிறைய கொடுக்கிறேன் உனக்கு

உன்னிடம் நிறைய இருப்பதில்
கெஞ்சமாய் கொடுக்கிறாய் எனக்கு.

பூமி.சாமி.

Sunday, January 21, 2024

ஒன்றோ இரண்டோ 
முடிந்தால் நான்கோ ஐந்தோ கூட
குறைத்தே சொல்லுகிறேன்
பிறர் என் வயதை கேட்கும் போதெல்லாம்.

பூமி.சாமி.

Friday, January 19, 2024

படித்ததில் பிடித்தது

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன…….
வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள்.
அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.
அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை.
புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.
நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். 
அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்.
பேசிக்கொண்டே நடப்பது, 
பேச்சின் மூலம் அன்பை, 
நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
நீண்ட தூரம் நடந்த படி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும்.
இது ஒரு அருமையான அனுபவமும் கூட.
நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.
சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். 
இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். 
இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.
அதே போல ஒரு ஆணை நேசிக்க தொடங்கி விட்டால் அவனின் புறத்தோற்றம் பற்றி கவலை படுவதும் இல்லை என்பது நிதர்சன உண்மை.
இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும்.
உன் அழகு உருவத்தில் இல்லை, 
மனதில்தான் இருக்கிறது, 
உனது பேச்சுதான் உனக்கு அழகு, 
உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.
அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். 
அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்

Sunday, January 14, 2024

இனிய பொங்கல்
திருநாள் வாழ்த்துக்கள்💐💐💐

போகி பண்டிகை

இந்த போகியில் புகையில்லாமல்
எரித்து விடுத்தான்
நினைக்கிறேன்

என் கோபத்தை
என் பயங்களை
என் பொறாமையை
என் அகந்தையை
என் அகங்காரத்தை

மனதின் அடி ஆழத்தில் இருக்கும்
அன்பு பொங்கி எழ 
அழுத்தி இருக்கும் இவைகளை
எரித்து விடுத்தான் நினைக்கிறேன்.

பூமி.சாமி.









Friday, January 12, 2024

சில நேரங்களில், 
முல்லை கொடி என்று நினைத்து முற்க்கொடிக்கு தேரை கொடுத்து விடுகிறோம்.    
வள்ளலுக்கு எல்லா கொடியும் ஒன்றுதான், 
முற்க்கொடிக்கு எல்லா வள்ளலும் ஒன்றுதான், குத்தத்தான் செய்யும். 

பூமி.சாமி.

Wednesday, January 10, 2024

நீ பகிரவில்லை என்றாலும்
உன் வலியை
சுமக்கிறேன்

நீ வாங்க வில்லை என்றாலும்
என் ஆறுதலை 
உன்னிடம் கொடுக்கிறேன்

நீ சாயவில்லை என்றாலும்
என் தோள் கொடுக்கிறேன்

நீ சட்டை செய்யவில்லை என்றாலும்
உன் அருகிலேயே நிற்கிறேன் 

ஏன் என்றால் துயரங்களில்
உடனிருப்பதே அன்பென்று உணர்ந்திருக்கிறேன் நான்.

பூமி.சாமி.

Monday, January 8, 2024

Innocence to Intellectual is Easy
But
Intellectual to Innocence is Difficult.

-Boomi.Saami.

படித்ததில் பிடித்த கவிதை

விலகிச் செல்ல நினைப்பவர்களை 
விடாமல் பின்தொடராதே
வேண்டாமென மறுதலிப்பவர்களை
வலியச்சென்று அழைத்து வராதே
பாதி வழியில் தொலைபவர்களை
கண்ணீருடன் தேடியலையாதே

அவர்கள் 
செல்லட்டும் 

சிலர் 
உன் வாழ்விற்குள்
வருவதுதான்
வரமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்

சமயங்களில்
சிலர் 
உன் வாழ்விலிருந்து
விலகிச்செல்வது கூட 
ஓர் ஆசிர்வாதமே

ஆதலால் 
விலகிச் செல்ல நினைப்பவர்களை 
வேண்டாமென மறுதலிப்பவர்களை
பாதி வழியில் தொலைபவர்களை
அப்படியே
விட்டுவிடு 

அவர்கள் 
செல்லட்டும்
இனி ஒருபோதும் மனம் மாறி
திரும்பவியலா பாதைகள் 
வழியே

-ரிஸ்கா முக்தார்-

வாட்சப் உரையாடல்

பல வார்த்தைகளை 
விற்று
ஒரு எமோஜி ஐ வாங்குகிறேன்.

பூமி.சாமி.

Sunday, January 7, 2024

புத்தகத்துடன் ஐன்னல் ஓரமாக
அமர்கிறேன்

"கா கா" என்ற காகத்தின் கரைதல் 
தொந்தரவாக

ஐன்னலை மூடிவிட்டேன் 

மீண்டும் தொந்தரவாக கரைதல்

பிறகு ஜன்னலை திறந்துவிட்டு
புத்தகத்தை மூடிவிட்டேன்

கரைதலில் கரைதல்தான்
கற்றல் என்பதை அறிந்து கொண்டேன்.

பூமி.சாமி.

Friday, January 5, 2024

நாம் வாழ்த்து சொல்லி
பிறர் நன்றாக வாழ்ந்து விடுவார்களோ
என்று அஞ்சியே 
பலர் வாழ்த்து
சொல்வதில்லை பிறர்க்கு.

பூமி.சாமி.