Sunday, June 16, 2024

அப்பா

நாங்கள் சட்டை போட வேண்டும் என்பதற்காக
அவர் சட்டை அணிந்ததில்லை

நாங்கள் காரில் செல்ல வேண்டும் என்பதற்காக
அவர் மிதிவண்டியை தாண்டி யோசித்ததில்லை 

நாங்கள் மெட்ரோ நகரங்களுக்கு நகர வேண்டும் என்பதால்
அவர் கிராம எல்லையை தாண்டியதில்லை 

ஒவ்வொரு முறையும் அவர் சாப்பிடும்போதும்
ஒவ்வொருவரையும் சாப்பிட்டாயா என்று  கேட்க மறப்பதில்லை 

வீட்டுக்கு வந்த எவரையும் வெறும் வயிராய் அனுப்பியதில்லை 

கல்வி மட்டும் கொடுத்து விட கனவோடும் கடனோடும் அலைந்தவர் அவர்

எவ்வளவு துன்பம் வந்த போதும் ஒரு முறை கூட வாழ்வை சலித்துக் கொண்டது இல்லை 

நம் குழந்தைகள் ஆனாலும் மரியாதையும் சுதந்திரமும் கொடுக்க வேண்டும் என்ற கற்றுக் கொடுத்தவர் அவர்

 எங்களில் ஒருவரையும் ஒருபோதும்
 கை நீட்டி அடித்ததில்லை என்றாலும்
ஆறில் ஐவரை அரச அதிகாரியாய் ஆக்கியவர் 


உலகமே விடிந்து விழுந்தாலும் 
வீட்டில் ஒரு டம்ளர் விழுந்தது போல் வாழ்வில் எதிர்கொள்ளும் பக்குவம் அவர் 

தனக்கு ஒரு பைசா செலவு செய்யாமல் ஊருக்கு ஒன்றென்றால் உடனே உதவிடுபவர் அவர் 

வாழ்வில் ஒளி ஏற்றிடும் கடவுளுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் என்று விளக்களித்தவர் அவர்

நடந்தே எங்கும் செல்பவர் 
அவரது ஒவ்வொரு அடியும் 
எங்களின் வாழ்வின் படியானது 

ஒரு துண்டும் ஒரு கைலியுடனும் கடவுளை பார்த்து விட முடியுமா?
முடியும், அவர்தான் எங்கள் அப்பா.

பூமி.சாமி.


No comments:

Post a Comment