Saturday, June 29, 2024

இருக்கும்போதே கொண்டாடுவோம்


ஒருவருடைய
நற்குணங்களை
கண்டடைவதற்கும்
கொண்டாடுவதற்கும்
ஒரு விலை 
தேவைப்படுகிறது

அது அவருடைய பிரிவு அல்லது இழப்பு.

பூமி.சாமி.

Thursday, June 27, 2024

ஒரு இறப்பு செய்தி
அவரை தெரிந்த வாட்ஸ்அப் குழுவில்
போட்டேன்
ஒருவர் RIP போட்டார்
இன்னொருவர் ஸ்மைலியோடு நின்றார்
மற்றொருவர் விபரம் கேட்டார்
இன்னொருவர் வருத்தப்படுவதாய் சொன்னார்
சிலர் மட்டும் மாலையோடு
மலர் அஞ்சலி செய்ய
பல பேர் இதற்கும்
நமக்கும் சம்பந்தம் இல்லை
 என இருந்து விட

நம் இறப்புக்கு பின்னும் என்ன
நடக்கும் என்பதை அறியும்
மந்திரசக்தி வந்து விட்டது
எனக்கு.

பூமி.சாமி.


Wednesday, June 26, 2024

என் நேரத்தை கொஞ்சமாய் கொஞ்சமாய் 
உடைத்து ஒவ்வொருக்காய்
கொடுக்கிறேன்,
நான் கொடுப்பவர்கள்
எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட கொடுக்காதவர்கள் தான்,
எனினும் கொடுப்பது தான்
என் வழக்கம் 
யாசிப்பது அல்ல.

பூமி.சாமி.

Sunday, June 23, 2024

எல்லாம் சம்பிரதாயத்திற்காக
சொல்லி சொல்லி
மனப்பூர்வமாக
சொல்லுவது எப்படி என்பது
மறந்தே போய்விட்டது எனக்கு.

பூமி.சாமி.
ஆம் இல்லை க்கு
இடையில்

மௌனம்
என்று ஒரு பதில்
இருக்கத்தான்
செய்கிறது

அது 
பலநேரங்களில் நமக்கு 
வசதியாய்
இருக்கிறது

எப்பக்கமும்
சாய்ந்து விட
ஏதுவாய்
இருக்கிறது.

பூமி.சாமி.




Wednesday, June 19, 2024

போ போ எங்கு சுற்றினாலும்
இங்குதானே வரவேண்டும்
என்று சொல்லி சிரிக்கிறது
இடுகாடு.

பூமி.சாமி.

Tuesday, June 18, 2024

சின்ன சின்ன செயல்களற்ற 
வண்ண வண்ண வார்த்தைகள்
வாசல் தோறும் கிடக்கின்றன.

பூமி.சாமி.

Monday, June 17, 2024

சட்டை பையை துலாவும் போதெல்லாம் 
கொஞ்சம் கடலும் கடற்கரையும்
 கையில் படுகிறது.

பூமி.சாமி.


worthy reading

Why you don’t react to everything

I’m 'Slowly' Learning That I Don’t Have To React To 'Everything' That Bothers Me.

I’m slowly learning that I don’t have to hurt those who hurt me.

I’m slowly learning that maybe the 'ultimate' sign of maturity is walking away instead of getting even.

I’m slowly learning that the energy it takes to react to every bad thing that happens to you drains you and stops you from seeing the other good things in life.

I’m slowly learning that I’m not going to be everyone’s cup of tea and I won’t be able to get everyone to treat me the way I want to be treated 'and that’s okay.'

I’m slowly learning that trying so hard to ‘win’ anyone is just a 'waste' of time and energy and it fills you with 'nothing' but emptiness.

I’m slowly learning that not reacting doesn’t mean I’m okay with things, it just means I’m choosing to 'rise' above it.

I’m choosing to take the 'lesson' it has served and learn from it I’m choosing to be 'the bigger' person.

I’m choosing my 'peace of mind' because that’s what I 'truly' need. I don’t need more drama. I don’t need people making me feel like I’m not good enough. I don’t need fights and arguments and 'fake' connections. I’m slowly learning that sometimes 'not' saying anything at all says everything.'

I’m slowly learning that reacting to things that upset you gives someone else power over 'your' emotions.

You can’t control what others do but you can control how you respond, how you handle it, how you perceive it and 'how much of it' you want to take personally. I’m slowly learning that most of the time, these situations say nothing about you and a lot about the other person.

I’m slowly learning that even if I react, it won’t change anything, it won’t make people suddenly love and respect me, it won’t magically change their minds.

Sometimes it’s better to just let things be, let people go, 'don’t' fight for closure, 'don’t' ask for explanations, 'don’t' chase answers and 'don’t' expect people to understand where.

Sunday, June 16, 2024

அப்பா

நாங்கள் சட்டை போட வேண்டும் என்பதற்காக
அவர் சட்டை அணிந்ததில்லை

நாங்கள் காரில் செல்ல வேண்டும் என்பதற்காக
அவர் மிதிவண்டியை தாண்டி யோசித்ததில்லை 

நாங்கள் மெட்ரோ நகரங்களுக்கு நகர வேண்டும் என்பதால்
அவர் கிராம எல்லையை தாண்டியதில்லை 

ஒவ்வொரு முறையும் அவர் சாப்பிடும்போதும்
ஒவ்வொருவரையும் சாப்பிட்டாயா என்று  கேட்க மறப்பதில்லை 

வீட்டுக்கு வந்த எவரையும் வெறும் வயிராய் அனுப்பியதில்லை 

கல்வி மட்டும் கொடுத்து விட கனவோடும் கடனோடும் அலைந்தவர் அவர்

எவ்வளவு துன்பம் வந்த போதும் ஒரு முறை கூட வாழ்வை சலித்துக் கொண்டது இல்லை 

நம் குழந்தைகள் ஆனாலும் மரியாதையும் சுதந்திரமும் கொடுக்க வேண்டும் என்ற கற்றுக் கொடுத்தவர் அவர்

 எங்களில் ஒருவரையும் ஒருபோதும்
 கை நீட்டி அடித்ததில்லை என்றாலும்
ஆறில் ஐவரை அரச அதிகாரியாய் ஆக்கியவர் 


உலகமே விடிந்து விழுந்தாலும் 
வீட்டில் ஒரு டம்ளர் விழுந்தது போல் வாழ்வில் எதிர்கொள்ளும் பக்குவம் அவர் 

தனக்கு ஒரு பைசா செலவு செய்யாமல் ஊருக்கு ஒன்றென்றால் உடனே உதவிடுபவர் அவர் 

வாழ்வில் ஒளி ஏற்றிடும் கடவுளுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் என்று விளக்களித்தவர் அவர்

நடந்தே எங்கும் செல்பவர் 
அவரது ஒவ்வொரு அடியும் 
எங்களின் வாழ்வின் படியானது 

ஒரு துண்டும் ஒரு கைலியுடனும் கடவுளை பார்த்து விட முடியுமா?
முடியும், அவர்தான் எங்கள் அப்பா.

பூமி.சாமி.


Saturday, June 15, 2024

 மாத்திரை
விழுங்க நிமிர்ந்தேன்,
முழு நிலா.

பூமி.சாமி.

Friday, June 14, 2024

THE GOOD YOU DO TODAY, PEOPLE WILL OFTEN FORGET TOMORROW, DO GOOD ANYWAY.

Thursday, June 13, 2024

எனக்கு ஒன்று
அவளுக்கு ஒன்று
நாற்காலிகள் எதிரெதிரே
உரையாடுவதற்கு

நான் அமர்ந்து உரையாடினேன்
கடைசிவரை காலி நாற்காலியுடன்.

பூமி.சாமி.

Wednesday, June 12, 2024

பல கேள்விகளுக்கு
மௌனம்தான்
சரியான பதிலாகிறது.

பூமி.சாமி.
மயில்
குயிலாகவும்,
குயில் 
மயிலாகவும்
மாற நினைப்பதில்லை

மனிதன் மட்டும் தான் மற்றவர்கள்
போல் வாழ நினைத்து 
தன் அடையாளம் தொலைத்து
மடிந்து போகிறான்.

பூமி.சாமி.

Tuesday, June 11, 2024

உன்னுடன் சண்டையிடுவது
நீ வேண்டும் என்பதற்காகத்தான்
வேண்டாம் என்பதற்காக அல்ல.

பூமி.சாமி.

Monday, June 10, 2024

Nowadays I am giving TRUE UNEXPECTED LOVE to my closed ones,  whatever they will give accept it and moving on.

- Boomi Saami.

Sunday, June 9, 2024

உன்னுடைய உரையாடல்
வானத்துடனும் விண்மீன்களுடனும்
என்று ஆனபின் எவ்வூரிலிருந்து 
உரையாடினால் என்ன?

பூமி.சாமி.

பிணைப்பை தளர்த்த தெரியவில்லை 
பாசத்தை பாதியாக்க முடியவில்லை
அன்பு அளவிட்டு அளிக்கத் தெரியவில்லை
அதனால் வரும் துன்பத்தையும்
துரத்த தெரியவில்லை.


பூமி.சாமி.


Saturday, June 8, 2024

விவரமற்றவர்கள்
பிறரால் ஏமாற்றப்படுகிறார்கள்

விவரமானவர்கள்
தங்களை தாங்களே
ஏமாற்றி கொள்கிறார்கள்.

பூமி.சாமி.

Friday, June 7, 2024

ஒருவரின் மீது நீங்கள்
அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் போது
அவர் உங்களிடம் முதலில் பொய் சொல்ல ஆரம்பிப்பார் 
பின் ஏமாற்ற ஆரம்பிப்பார் 
பின் உங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவார்.

பூமி.சாமி.




Thursday, June 6, 2024

முட்கள் குத்தினாலும்
ரோஜாவின் மீதான
என் அன்பு குறைவதில்லை.
ஏனென்றால் எனக்கு
அன்பு செய்ய மட்டும் தான் தெரியும்.

பூமி.சாமி.

Wednesday, June 5, 2024

படித்ததில் பிடித்தது

நீ இப்போ Free ahh..?
நான் கொஞ்சம் பேசனும்..
"உனக்கு Work இல்லனா சொல்லு நான் வாரன் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.."
"நான் Call பண்ணவா..? கொஞ்சம் பேசனும்.."
"நான் கொஞ்சம் குழப்பத்துல இருக்கன் உன்கூட கொஞ்சம் பேசனும்..?"

இப்பிடி ஒருத்தராச்சும் உங்கக்கிட்ட கேக்க‌ இருந்தா 
நீங்க உங்களுக்கே தெரியாம அவங்க life-ல   ஒரு Important person ah இருக்குறிங்கனு அர்த்தம்..!

மனுசங்களால அவங்க Problems-க்கு தனியாவே தீர்வுகள் எடுக்க முடியும்
அப்பிடி இருந்தும் அவங்க பிரச்சனைகள உங்கக்கிட்ட சொல்லுறாங்கனா நீங்க அவங்களுக்கு Special-னால தான்..!

யாரோ ஒருத்தரோட  வாழ்க்கைல சரி ஒரு கனிவான, அன்பான Person ah இருந்துருங்க

அவங்க அந்த நேரம் நம்மக்கிட்ட எதிர்ப்பாக்குறது அவங்க Problems-க்கு Solution கிடையாது
இந்த இக்கட்டான சூழ்நிலைலயும் நமக்காக
ஒருத்தர் இருக்குறாருன்ற Feel மட்டும் தான்

அதே மாதிரி என்னைக்கோ ஒருநாள் சரி நமக்காக இருந்த மனிதர்களுக்கு 
எப்பவும் நன்றிக்கடன் படுங்க
ஏனா ஒவ்வொருத்தரும் அவங்களுக்காக வாழுற வாழ்க்கைல 
நம்மலையும் ஒருத்தரா மதிச்சி 
நமக்காக நேரம் கொடுக்குறது ரொம்பவே பெரிய விசயம்...❤️🌹🤌


Sunday, June 2, 2024

இரவுதான்
பலரின் இருளான பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பூமி.சாமி.
யார் எக்கேடு கெட்டால் என்ன
என்ன சூழ்நிலை இருந்தால் என்ன
தனக்கு வேண்டியது எப்படியேனும் நடந்தே ஆகவேண்டும் என்பதே சுயநலம்.

பூமி.சாமி.



Saturday, June 1, 2024

வாழ்க்கை

விவேகமும் விவரமும் வேகமாய்
பிடிக்க முயன்றேன் பறந்து போனது.

அன்பாய் அமைதியாய் பொறுமையாய்
அமர்ந்தேன் 
தோளில் வந்து அமர்ந்தது
அந்த வண்ணத்துப்பூச்சி.