Thursday, September 30, 2021

சாலைகள்

சாய்க்கப்பட்ட மலைகள் தான் சாலைகள்
மனசாட்சி உறுத்துகிறது அதன்மீது நடக்கும் போதெல்லாம்.

-சாமி.

Tuesday, September 28, 2021

அடிகள் அல்ல படிகள்

முத்தம்மாள் சத்திர தரை வகுப்பு

தவறு செய்கையில் அறிவியல் அய்யாவின் காது கிள்ளல்

தமிழில் பிழை ஏற்படுகையில்
தமிழ் அய்யா முதுகில் அடித்த அடி

நேரம் தவறி பள்ளி செல்கையில் உடற்பயிற்சி ஆசிரியர் நடக்க சொன்ன வாத்து நடை

வேதியியல் ஆய்வகத்தில் ஆசிட் மாறியதால் கை பழுக்க வாங்கிய அடி

நண்பர்களுடன் சண்டையிட்டதால் தலைமை ஆசிரியர் 
முட்டிப் போடச் சொல்லி பாதத்தில் அடித்த பிரம்பின் அடி

பாடத்தோடு பழக்க வழக்கங்களையும்
சொல்லி கொடுத்த ஆசான்களின் அடிகள் 
இன்னும் இனிப்பாய்தான் இருக்கிறது மனதில்.

-சாமி.

Sunday, September 26, 2021

மனித உறவுகள்

பூக்களின் வண்ணமும் வடிவமும்
பூச்சிகளையும் தேனீக்களையும்
கவர மட்டுமே பயன்படும், ஆனால்
அதன் உறவு நீடித்து நிலைப்பதற்கு பூக்களில் தேன் இருப்பது முக்கியம்.

-சாமி.

Wednesday, September 22, 2021

மயிலிறகும் அதன் குட்டிகளும்

பள்ளி பருவத்தில்
நோட்டு புத்தகத்தில்
வைத்த மயிலிறகும் அதன் குட்டிகளும்
உயிர்ப்புடன் வாழ்ந்து வருகின்றன 
என் மனதில் இதுநாள்வரை.

-சாமி.

Tuesday, September 21, 2021

காத்திருக்கிறேன் கதிரவனே

ஒன்று உன் செங்கதிரை நான் பற்றி
ஏறி வரவேண்டும்,
இல்லையேல்,
என் கரம் பற்றி நீ இறங்கி வர வேண்டும்,
காத்திருக்கிறேன் கதிரவனே
உன்னுடன் ஒரு செல்ஃபி எடுக்க.

-சாமி.
இங்கு எல்லோரும்
தற்கொலைதான் செய்து கொள்கிறார்கள்,
தவணை முறையில்.

கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா.

Monday, September 20, 2021

கொரானா காலம்

இப்பொழுது
தாடிகள் தப்பிக்கிறது
முக கவசத்தின் கருணையால்.

-சாமி.

Saturday, September 18, 2021

நன்றி

நன்றி செய்தவருக்கு வாலாட்டுகிறது ஐந்தறிவு,
நன்றி செய்தவரிடமே வாலாட்டுகிறது ஆறறிவு.

-சாமி.

Friday, September 17, 2021

அக்கறை-ஏமாற்றம்

அக்கரையில் அக்கறை
இக்கரைக்கு ஏமாற்றம்.

-சாமி.
யார் சொல்லியிருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும் 
நானே சொன்னாலும்
உன் புத்திக்கும்
பொது அறிவுக்கும்
பொருந்தாத எதையும் நம்பாதே.

தந்தை பெரியார்.

Thursday, September 16, 2021

முன்னேற்றம்

முன்பெல்லாம் புறக்கணிப்பை முகசுழிப்பு மற்றும் வார்த்தைகள் மூலம் தெரிந்து கொண்ட நாம் இப்பொழுது         " Chat Texting" லேயே தெரிந்து கொள்வது தான் முன்னேற்றம்.

கடவுள்-நாம்

கடவுள் நம்மை மன்னிக்க வேண்டும்
ஆனால் நாம் யாரையும் மன்னிக்க தயாராக இல்லை,

கடவுள் நம்மிடம் கருணை காட்ட வேண்டும் ஆனால்
 நாம் யாரிடமும் கருணை காட்ட தயாராக இல்லை,

நாம் வேண்டும் அனைத்தையும் கடவுள் தரவேண்டும் ஆனால்
 நாம் யாருக்கும் எதையும் தர தயாராக இல்லை,

உண்மையில்,
கல்லாக இருக்கும் கடவுள் உயிரோடு இருக்கிறார்,
உயிரோடு இருக்கும் நாம் கல்லாக இருக்கிறோம்.

-சாமி.

Wednesday, September 15, 2021

current world

If you will be easily available to somebody
Definitely they will not realise your value and importance.

Tuesday, September 14, 2021

புறக்கணிப்பு

'புறக்கணிப்பு' என்பது மிகுந்த கொடுமையானது வலித்தரக்கூடியது,
இறைவனும் இயற்கையும் நம்மை எதர்க்காகவும் எந்நிலையிலும் புறக்கணிப்பதில்லை,
எனவே யாரையும் எதர்காகவும் புறக்கணிக்காதீர்கள்.

-சாமி.

பலித்தீர்ப்பு

பிறரை பலி தீர்ப்பதாய் நினைத்து
பலி தீர்த்துக் கொண்டேன் என் மனசாட்சியை,
காலத்திற்கும் அகல மறுக்கிறது அப்பலி.

-சாமி.

நன்றி

என் நண்பன் ஒரு உதவி செய்தபொழுது
சொன்னான், நன்றி மறவாதே நண்பா என்று,
இப்பொழுது அந்நண்பனையே மறந்து போனேன் நன்றி எல்லாம் எம்மாத்திரம்.

-சாமி.

Monday, September 13, 2021

அன்பும் அக்கறையும்

ஒருவர் அவரது நேரத்தை கொடுக்கிறார் என்றால் அவர் வேலையின்றி இருக்கிறார் என்று அர்த்தமில்லை,
அவர் உங்கள் மீது அக்கறையுடனும் அன்புடனும் இருக்கிறார் என்று அர்த்தம்.
மேலும் அவரது நேரத்தை தருவதன் மூலம் அவரின் வாழ்வின் ஒரு சிறு பகுதியை உங்களுக்கு தருகிறார் என்பதை உணருங்கள்.

-சாமி.

Friday, September 10, 2021

நினைவில் கொள்ளுங்கள்

பிம்பங்கள் போற்றப்படுகிறது
உண்மை மறைக்கப்படுகிறது
கட்டாயம் ஒரு நாள் 
பிம்பங்கள் உடைபடும்
உண்மை வெளிப்படும்.

-சாமி.

Thursday, September 9, 2021

மிக கடினமான நேரங்களில்
நம்மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் நம்மோடு நேரம் செலவழிக்க முடியாது எனில் அது 
அது நம் துயரத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.


Tuesday, September 7, 2021

சிந்திக்க தூண்டும் வரிகள்

வாழ்வதாக சொல்கிறோம்
ஆனால் உண்மையில் வாழ்கிறோமா?

-புதுமை பித்தன்.

எப்பாதை நம்மின் பாதை

மனதின் பாதை, 
மலர்கள் தூவிய பாதை, முடிவு நரகம்.
அறிவின் பாதை, 
முட்கள் நிறைந்த பாதை, முடிவு சொர்க்கம்.

-சாமி.

Sunday, September 5, 2021

ஆசிரியர் தின வாழ்த்துகள்

நான் இன்று இருக்கும் நல்நிலைக்கு
என்னுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தியாகங்களே காரணம்.

அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.

Saturday, September 4, 2021

இதுதான் கடவுள் தன்மை

உனக்கு  உதவி செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றால்,
 கடவுள் உன்னில் இறங்கி
மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறார் என்று அர்த்தம், 
செய்து முடி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்.

-சாமி.

Thursday, September 2, 2021

கண்ணீர்

துன்ப கடலால் ஆர்ப்பரிக்கும் மனதை ஆற்றுப்படுத்தி விடுகிறது 
ஒரு துளி கண்ணீர்.

-சாமி.