Thursday, December 31, 2020

மழை-கண்

ஒரு சிமிட்டலலில்  ஒரு கணம்
தொலைந்து போகுமோ என எண்ணி
சிமிட்டாமலேயே மழையை ரசிக்கிறது கண். 

-சாமி.

மழை

மணலின் மாசை நீக்கும் மழை
மனித மனதின் மாசையும் நீக்கீனால்
உலகம் அன்பால் நிறைந்திருக்கும்.

-சாமி.

வருட கடைசி நாள் மழை.

2020 வருடத்தின் துன்பங்களை
துயரங்களை கழுவ முனைகிறது
மழை.

-சாமி.

புதிதாய் பிறப்போம் உயிர்ப்போடு வாழ்வோம்.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் புதிதுதான்,
ஒவ்வொரு நாளும் ஒரு புதுவருடத்தின் தொடக்கம் தான்,
தாய்பூமி சுற்றும் வட்டத்தில் முதலேது முடிவேது,
நீ என்று உண்மையான மனிதனாக வாழ 
ஆரம்பிக்கிறாயோ அதுதான் உன் வயதின் வருடத்தின் தொடக்கம்,
உன் புகழும் உன் பெயரும் என்றுவரை இவ்வுலகில் நினைவு கூறப்படுகிறதோ அதுதான் உன் முடிவு.

உலக கணக்கின்படி அனைவருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

-சாமி.

Tuesday, December 29, 2020

ரௌத்திரம்

நம் ரத்தம் குடித்து வலியை
ஏற்படுத்தும் கொசுவை நசுக்க
செல்லும் நம் கைதான்
ஓட்டளிக்கவும் போகிறது.

-சாமி.


நம்பிக்கை

நம்மை பிரச்சினைகள் சூழும்போதெல்லாம்,
உலக இருளை கிழித்துக்கொண்டு
வரும் மின்மினி பூச்சியின் ஒற்றை 
ஒளிக்கீற்றுதான் நம்பிக்கை தருகிறது.

-சாமி.

Monday, December 28, 2020

ரொம்ப நல்லவங்க..

நமது துன்பம் 
பகிரும்போது
இரட்டிப்பாகிறது
இன்பமாக சிலருக்கு.

-சாமி.

Sunday, December 27, 2020

தியாகம்

வேரின் வலி உணராமலேயே
கனியை சுவைத்து கொண்டு இருக்கிறோம்.

-சாமி.

Sunday, December 20, 2020

வாழ்க்கை.

நிலையாமை மேடையில்
நிலையான நடிப்பு.

-சாமி.

நடிப்பு

மனம் ஒன்றை நினைக்கிறது
அது கண்களில் தெரிகிறது,
வார்த்தை நேர் எதிராய் வருகிறது
அட என்ன......

-சாமி.

Saturday, December 19, 2020

அழுத்தம்-அழுகை.

அழுத்தத்தை குறைக்கும்
அருமருந்து அழுகை.

-சாமி.

பெயருக்கு .....

சில சமயங்களில்
கேள்விகளால் பதில்கள்
நிர்பந்திக்கப்படுகின்றன.

-சாமி.

Saturday, December 12, 2020

அதிசயம்

என்னோடும் வருகிறது
அவளோடும் செல்கிறது நிலா.

-சாமி.

பிரமாண்டம்

சவாரியிலிருந்து இறங்கியபின்
மனதில் ஏறி நிற்கிறது யானை.

-சாமி.

Monday, December 7, 2020

What is Maturity of Mind ?

*மன முதிர்ச்சி என்றால் என்ன?*

 *What is Maturity of Mind ?*

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு 
    நம்மை திருத்திக்கொள்வது.
1. Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)
    ஏற்றுக்கொள்வது.
2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் 
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் 
    நிரூபிப்பதை விடுவது.
7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் 
என்ற நிலையை விடுதல்.
8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
10. Trying to keep our peace in our mind 
      without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய 
    விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
11. Understanding the difference between the basic needs 
      and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல
     என்ற நிலையை அடைதல்.
12. Reaching the status that happiness is not connected 
      with material things.

*இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்*
*Our life will be simple if only we practice 7 or 8 of the above 12*

Live your Life & Love your Life.

படித்ததில் பிடித்தது.

மறதி

தாய்மொழி எழுத்து மறந்து போகையில்
மறதியை மறக்க நினைக்கிறது மனசு.

-சாமி.

எது வாழ்க்கை

பிடித்ததை செய்வதா?
பிறருக்கு உதவுவதா?
அன்பு செய்வதா?
அறிவு புகட்டுவதா?
பயணப்படுதலா?
பற்றற்று வாழ்வதா?
தேடி திரிவதா?
தேங்கிப் போய் இருப்பதா?
அதன் போக்கில் விடுவதா?
கடிவாளமிட்டு கட்டுப்படுத்துவதா?
காதல் செய்வதா?
கவலையற்று வாழ்வதா?
தோல்வியில் கற்பதா?
வெற்றியில் உழல்வதா?
இயற்கையில் மகிழ்வதா?
இல்லை செயற்கையாய் செயல்படுவதா?
வேடிக்கை பார்ப்பதா?
வீருக்கொண்டு எழுவதா?
நினைத்து மகிழ்வதா?
தோண்டி துவழ்வதா?
வேண்டி திரிவதா?
விதியின் படி போவதா?
இக்கணம் வாழ்வதா?
இல்லை, இப்படியே புலம்புவதா?
எது வாழ்க்கை.

-சாமி.


சுற்றி சுழலும் மனசு

சுற்றும் பூமியை,
சுற்றாமல் சுற்றி சுற்றி வருகிறது மனசு.

-சாமி.

மழை எனும் மந்திரம்

மேலிருந்து கீழ் விழுந்து
என் மனதை கீழிருந்து மேல் நோக்கி
பறக்க செய்கிறது மழை.

-சாமி.

Saturday, December 5, 2020

கருப்புதான் எனக்கு பிடித்த....................

வெண் முகில்கள் அழகு அவ்வளவே,
கரு முகில்கள்தான் கவிழ்த்து விட்டு செல்கின்றன மழையை.

-சாமி.

Friday, December 4, 2020

மழை மனம் மகிழ்ச்சி

ஒவ்வொரு முறை மழையை
பார்க்கும் போதும், 
நான் சிறுவயதில் வேண்டுமென்றே
மழையில் நனைந்ததும் அதன் மகிழ்ச்சியும் குளிர்ச்சியும் மனதை நிறைக்கிறது.

-சாமி.

Monday, November 30, 2020

காக்க வைப்பது கொடுமை

அடுத்தவர்களுக்காக
காத்துக்கொண்டு இருப்பது
மிக துயரமான கடினமான விடயம், 
என்றாவது மிக முக்கியமானோரை நமக்கு மேல் உள்ளோரை காக்க வைத்து இருக்கிறோமா? நிச்சயமாக இல்லை,
இவர்கள் தானே என்று நினைத்து சிலரை காக்க வைக்கிறோம்,
காக்க வைப்பதை தவிருங்கள்.

-சாமி.

Sunday, November 29, 2020

கார்த்திகை தீபம்

நீ ஏற்றிடும் தீபங்கள்
நட்சத்திரங்களுக்கு
போட்டி,
நீயோ நிலவுக்கு போட்டி,
நீ இந்த வானை வென்று விடக்கூடும்
இந்த கார்த்திகை இரவினில்.


கார்த்திகை இரவு

வானின் முகம் பார்க்கும்
கண்ணாடியாய் பூமி.

-சாமி.

Friday, November 27, 2020

மணி பர்ஸ் புயல்கள்

சில நேரங்களில் புயல்கள்
நம் 'மணி பர்ஸ்களில்' மையம்
கொண்டு விடுகிறது.
அவை கரை ஏறுகையில்
நாம் கட(னி)லில் அழுந்தப்படுகிறோம்.

-சாமி.

Thursday, November 26, 2020

நிவர் புயல்

ஒரு கண்,
இரு கண்ணில்
பயத்தை காட்டியநாள் இன்று.

-சாமி

Monday, November 23, 2020

தொட்டா சினுங்கி

தொட்டால் சினுங்கியதை 
சொல்லும் உலகம்,
உடனே மீண்டெலுந்ததை
சொல்வது இல்லை.

-சாமி.

Sunday, November 22, 2020

நெற்க்கதிர்.

தான் தலை குனிந்து
விவசாயியை தலைநிமிர
செய்தது தங்க நெற்க்கதிர்.

-சாமி.

Saturday, November 21, 2020

எதிர்பார்ப்பு.....

எதிர்பார்ப்புக்கும்  ஏமாற்றத்துக்கும்
 இடையே 
மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் 
வைப்பதே மனதின் மாயை.

-சாமி.

Friday, November 20, 2020

சாக்ரடீஸ்

#சிந்திக்கும்நாக்கு

படிப்பின் பயன் என்பது வேலை தேடுவது, சம்பாதிப்பது மட்டுமில்லை; சுயசிந்தனையுடன் தேடலுடன் உலகை புரிந்துகொள்வதாகும். சாக்ரடீஸ் எழுப்பிய கேள்விகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நம்மிடையே எதிரொலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. அது சிந்தனை யின் வலிமையைக் காட்டுகிறது. எது குறித்தும் கேள்வி கேட்டு, அதன் அடிப்படைகளைப் பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீஸின் பாணி.

ஏதென்ஸ் மக்கள் சாக்ரடீஸிடம் பேசினால் தங்களுக்குத் தெளிவு கிடைக்கும் என்று நம்பினார்கள். சாக்ரடீஸ் பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகளைச் சொல்வது இல்லை. மாறாக, பிரச்சினைகளின் காரணத்தை கேள்வியின் மூலம் உணரச்செய்கிறார். அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பகுத்தறிவுகொண்டு சிந்திக்க வைக்கிறார்.

இதனால் பொது மக்கள் பிரச்சினைகள் எதனால் உருவா கிறது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். அதைப் போக்குவதற்குக் குரலும் கொடுத்தார்கள். சாக்ரடீஸ் தனது காலத்திய சமூக பழக்க வழக்கங்களை ஆராய்ந்து கேள்விகள் எழுப்பியதுடன் அரசாங்கத்தை, அதிகாரத்தைக் கடுமையாக விமர்சனமும் செய்தார். அந்தத் துணிச்சல், நேர்மை, மன உறுதியே இன்றளவும் சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டுகிறது.

விஷம் குடித்து சாக வேண்டும் என சாக்ரடீஸ் தண்டிக்கப்பட்டார். அப்போதும் அவர் விஷத்தைக் கண்டு பயப்படவில்லை. கையில் வாங்கி விரும்பிக் குடித்தார். தான் தீர்க்க வேண்டிய கடன் பாக்கியை நினைவுபடுத்திவிட்டே அவர் மரணத்தை சந்தித்தார். சாக்ரடீஸின் மரணத்தைப் பற்றி குறிப்பிடும்போது ‘சாக்ரடீஸ் சிந்திப்பதை நிறுத்தி விட்டார்’ என்றே சீடர்கள் அறிவித்தார்கள். சிந்திப்பதே மனிதனின் சிறப்பியல்பு. ‘மனிதன் என்பவன் மதிப்பீடு களை உருவாக்கிக்கொண்டு வாழும் ஒரு விலங்கு.'

#எஸ்_ராமகிருஷ்ணன்

படித்ததில் பிடித்தது

#டைட்டானிக்’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் காட்டப்படாத ஒரு சம்பவம் இருக்கிறது.
கப்பல் பழுதடைந்து கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும். அவர்களைக் காப்பாற்ற பல படகுகள் வரும். முதலில் கப்பலில் இருந்து படகுக்குப் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அப்படி, கப்பலில் இருந்து படகுக்கு செல்லும்போது ஒரு ஜப்பானியன் பெண்களோடு கலந்துபோய் படகில் ஏறி தப்பித்துக் கொள்கிறார். அந்த நபர் தன்னுடைய நாடான ஜப்பானுக்குச் செல்லும்போது, அந்த மக்களும் நாடும் அவரை வரவேற்கவில்லை. மாறாகப் புறக்கணிக்கிறார்கள்.
அதற்கு காரணம் ஜப்பானியர்களுக்கு ஒரு பண்பாடு உண்டு. அதை விளக்க அங்கிருக்கும் பள்ளிகளில் ஒரு குட்டிக் கதை வைத்திருக்கிறார்கள். ஒரு ராணுவப் படை வீரர்கள் குதிரையில் கும்பலாக வருகிறார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில், இரண்டு கைக்குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும். இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.
இறக்கிவிடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார். ' ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே! அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலிகொடுக்கத் துணிந்தாய்?’ என்று.
அந்த பெண் கண்ணீருடன் சொன்னாள்... 'என் குழந்தைக்கும், பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராணுவம் வந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது. அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்!’ என்று சொன்னாள். அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.
நமக்காக வாழாமல் பிறருக்காக வாழ வேண்டும் என்ற மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான். அந்த நாட்டில் பிறந்த ஒருவர் கோழையாகத் தப்பி வந்ததை அந்த மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இது போன்ற ஏராளமான பாடங்களை வரலாற்றில் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள முடியும்!'' ..


Monday, November 16, 2020

இயல்பாக தானாக வருவதுதான்.....

இப்பொழுதெல்லாம் பொருளை யாசிப்பதைவிட, அன்பை யாசிப்பது அதிகம் ஆகியிருக்கிறது, யாசித்து பெறப்படும் அன்பு , யோசிக்கையில்
வெறும் கானல் நீர்தான்.


-சாமி.

Sunday, November 15, 2020

ENJOY THE EVERY MOMENT OF JOURNEY.

போய் சேரும் இடம் முக்கியமில்லை. பயணமே முக்கியமானது.

 THE JOURNEY IS IMPORTANT THAN DESTINATION. 

Osho.

Friday, November 13, 2020

வாழ்த்துக்கள்.

அனைவருக்கும்
இனிய தீபாவளி
 நல்வாழ்த்துக்கள்.

Wednesday, November 11, 2020

நதி போல் போய்க்கொண்டே இரு.

எல்லோரையும் எடைப்போட்டுக் கொண்டே இருந்தால், உனது மனதின்
எடைதான் அதிகமாகும்.

-சாமி.

Sunday, November 1, 2020

உனக்கான முக்கியத்துவம்

உனக்கான  முக்கியத்துவம் என்பது,
உனக்கான நேரம் அவரின் வேலைக்கிடையில்
ஒதுக்கப்படுகிறதா? அல்லது வேலையில்லாத நேரத்தில் ஒதுக்கப்படுகிறதா? என்பதை பொருத்தது.

-சாமி.

Friday, October 30, 2020

பாவம்

பிறர்க்கு உதவவில்லை என்றாலும்
பரவாயில்லை, உதவி பெறும் நிலையில் உள்ளோர்க்கு கிடைக்கும் உதவிகளை மறிக்கவோ   தட்டிப் பறிக்கவோ செய்யாதீர்கள்.

-சாமி.

Thursday, October 29, 2020

உள்ளங்களை உள்ளார்ந்து தேடு

தண்ணீரில் தத்தளிக்கயில்
 தப்பிக்க உதவும் தக்கைகள் ஒன்றும் தங்கம் போன்று மின்னுவதில்லை. 

-சாமி.

Thursday, October 15, 2020

ஆனால் மனிதன்

இதமான நிழல் தந்து,
சுகமான தென்றலால் என்னை வருடி,  அதன் சில்லென்ற பார்வையால்
வரவேற்கிறது, என்னை யார் என்றே தெரியாத பல்கலைக்கழக பெருங்கொன்றை மரம்.

Wednesday, October 14, 2020

உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில்

மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்களும், எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களும் இந்த பதிவு சமர்ப்பணம்.
______________________________________________
 
பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியை பார்த்து கேட்டார்.

"உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"

அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை.  அவர் சந்தோஷமாகவே இருந்தார்.  

ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார்.  கணவர் அதிர்ந்தார்.  ஆனால், மனைவி தொடர்ந்தார்.  

"என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை.  என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை.  ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை.  என்னையே சார்ந்தது.  நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம்."  

"வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு.  அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேனென்றால், நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்."  

"நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.  மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே.  இது ஒரு நீண்ட பட்டியல்."  

"என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு.   நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை.  வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை."

"திருமணத்துக்கு முன்னும் சந்தோஷமாகத்தான் இருந்தேன், பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன்.  என்னை பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்."  

"என் வாழ்க்கையை நான் விரும்ப காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல.  நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால்.  நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு."   

"இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன்.  இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது.  அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது" என்றார்.  

கைதட்டல் ஓயவே இல்லை.  

உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள்.  வெயிலோ, மழையோ, உடல் சரியில்லையா, பணமில்லையோ, காயப்பட்டிருந்தாலோ, விரும்பப்படவில்லையோ உங்கள் மனதில் உள்ள சந்தோஷத்தை விட்டுக்கொடுக்காதீர்கள்.  உங்களை நீங்கள் மனதார மதிக்கும்வரை உங்களுக்குள் நீங்களே சந்தோஷப்பட்டுக்கொள்ளுவீர்கள்.  சந்தோஷம் உள்ளே உள்ளது.  வெளியில் இல்லவே 🙅 👍🏻

என் மனதில்

எவ்வளவு ஆழ அழுந்தி புதைக்கிறாயோ
அவ்வளவு வேகத்தில் மேழெழும்கிறது சில எண்ணங்கள்.

சாமி.

Tuesday, October 13, 2020

வாழ்க்கை

வாழ்க்கை கடினமாக இருக்கிறதா
மலையின் உச்சி நோக்கி முன்னேறி சென்றுகொண்டிருக்கிறாய் அப்படித்தான் இருக்கும்.

வாழ்க்கை இலகுவாக இருக்கிறதா
உச்சியில் இருந்து கீழ் இரங்கிக் கொண்டிருக்ககூடும், பல்லத்தாக்கு கவனம்.

-எங்கோ படித்தது-

பெருந்துயரம்

துன்பங்கள் துயரங்களை சந்திக்கும் போது, அதை நம்பிக்கையுடன் பகிர நல்மனங்களை பெறாததாதுதான் 
துயரத்தில் பெருந்துயரம்.

 -சாமி.

Monday, October 12, 2020

அன்பானவர்களிடம்

சிலநேரங்களில் உதவி கேட்டு கிடைக்காதவர்களின் வலியை விட, 
கேட்டபின் கொடுக்க முடியாதவர்களின் வலி மேலோங்கி விடுகிறது.


சிறந்த நடிப்பு

மனதினில் நினைப்பு கசப்பு
அதுவே முகத்தினில் பிரதிபலிப்பு
பிறகு ஏன் வார்த்தையில் இனிப்பு.

சாமியின் சிந்தனை.

Sunday, September 27, 2020

எதுவும்_நிரந்தரமில்லை

#எதுவும்_நிரந்தரமில்லை

*உலகப்புகழ்பெற்ற #டிசைனர்.  சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்*

+"#மரணத்தை_விட_உண்மையானது_
#இந்த_உலகத்தில்_எதுவுமே_இல்லை. ! "

+  இந்த உலகத்தில் விலை உயர்ந்த #பிராண்டட்_கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது . ஆனால் நான் #சக்கர_நாற்காலியில் அழைத்து 
செல்ல படுகிறேன்.!

+  இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது.  ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய #சிறிய_கவுனில் இருக்கிறேன்.!

+  என் #வங்கி_கணக்கில் ஏராளமான பணம் கிடைக்கிறது ஆனால் எதுவும் எனக்குப்பயன் இல்லையே.!!

+  என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில்  ஒரு சிறு #படுக்கையில் கிடக்கிறேன். 

+  இந்த உலகத்தில் உள்ள ஐந்து #நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன்.  ஆனால் மருத்துவமனையில் உள்ள #ஆய்வகங்களுக்கு  மற்றொரு #லேபிற்க்கும்  மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!

+  நான்தினசரிலட்சக்கணக்கானவர்களுக்குஆட்டோகிராப்போட்டுக்கொண்டிருந்தேன் . ஆனால் இன்று மருத்துவர்களின் பரிந்துரை தான் எனது #ஆட்டோகிராப். !

+   அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள்.  ஆனால் இன்று என் #தலையில்_முடியே இல்லை .

+  உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் #உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !

+  தனியார் #ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன்.  ஆனால் இன்று மருத்துவமனை வராந்தாவிற்கு வருவதற்கு #இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். ?

+   எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை.  எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ! ஆனால் 
சில #அன்பானவர்களின்   #முகங்களும் 
அவர்களது #தொழுதல்களும்  என்னை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. !

பகிர்வு

#நிதர்சனம்

Friday, September 25, 2020

பாடும் நிலா பாலு.

பாடி வந்த நிலா
இனிய பாடப்படும் நிலவாக
வானில் ஒளிரும்.

பரிணாம கோட்பாடு

"மனசாட்சி" என்ற சொல் விரைவில்
வழக்கொழிந்து போகும். 

சாமியின் அனுபவம்.

நல்லவற்றை எண்ணி துணிந்து செயல்படு

"பிறர்  நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்" என்று எண்ணி எண்ணி
செயல்படுவது ஒருவித மனவியாதி.

"நாம் நம்மை பற்றி எவ்வளவு உயர்வாக நினைக்கிறோம் " என்பதே இவ்வுலகம் உனக்கு சொல்ல வைத்திருக்கும் செய்தி.

சாமியின் சிந்தனை.

Thursday, September 24, 2020

விலை மதிப்பிட முடியா பொக்கிஷம்.

வேஷம் போடும் உலகத்தில்
உண்மையான பாசம் காட்டுபவர்களை
எக்காரணம் கொண்டும் தொலைத்து விடாதீர்கள்.

சாமியின் அனுபவம்.

Wednesday, September 23, 2020

எனவே அதிகம் உதவுங்கள் பிறர்க்கு.

ஒருவர் நம் நினைவில் வரும்போதெல்லாம் 
அவர் செய்த உதவிகளும் உபத்திரங்களும்
எடைப் போடப்படுகின்றன.

சாமியின் அனுபவம்.

Friday, September 18, 2020

வயது ஆக ஆக

வயது முன் செல்கிறது
மனது பின் செல்கிறது
அறிவு மேல் செல்கிறது
உடல் கீழ் செல்கிறது
நான் உள் செல்கிறேன்.


சாமியின் சிந்தனை.

Wednesday, September 16, 2020

அன்பில் எதிர்பார்ப்பு முக்கியம் இல்லை தான் ஆனாலும்

அன்பின் முதலீடும்  பங்கு சந்தை முதலீடு
போல்தான்,
சரியான இடத்தில் போட்டால் பல்கி பெருகி வரும்,
தவறான இடத்தில் போட்டால் முதலீடோடு நிம்மதியும் சேர்ந்து பறிபோகும்.

சாமியின் சிந்தனை.

Tuesday, September 15, 2020

நேரத்தை வீணாக்காதீர்கள்.

உங்களின் உழைப்பு மற்றும் நேரத்தின்
மதிப்பரிந்தவர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழையுங்கள்.

சாமியின் சிந்தனை.

Saturday, September 12, 2020

ஓஷோ மொழிகள்

"எப்போதும் பிறர் மூலமாகவே
 மகிழ்ச்சியோ துக்கமோ அடைகிறீர்கள்!!!

அவர்கள் உங்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.
நீங்கள் அவர்களுடைய கை பொம்மை ஆகி விடுகிறீர்கள்.

அவர்களிடம் உங்களை ஆட்டுவிக்கும் ரிமோட் கண்ட்ரோல் உள்ளது .

அவர்கள் சிறிது முகம் சுழித்துப் பார்ப்பது கூட
உங்களை துன்பம் அடையச் செய்யும்.

அதைப்போல அவர்களுடைய ஒரு மகிழ்ச்சியான பேச்சே
ஒரு மகிழ்ச்சியான பார்வையே
உங்களை ஆனந்தத்தில் தள்ளும்.

ஆகவே நீங்கள் அடுத்தவர் கருணையில்தான் வாழ்கிறீர்கள்.

பெரும்பான்மையோர் அடிமை வாழ்வு தான்
வாழ்கின்றனர் .

அவர்கள் உங்கள் மகிழ்ச்சி , துக்கம் , அமைதி , துயரம்
இவற்றை அவர்கள் நிர்ணயிக்கும் போது

நீங்கள் எப்படி அமைதியாக ஆனந்தமாக இருக்க முடியும்?

சுதந்திரமானவராக இருங்கள் .

உங்கள் சந்தோசம் ,மகிழ்ச்சி , ஆனந்தம் எல்லாம்
உங்களைச் சார்ந்தே இருக்கட்டும் .

அப்போது மற்றவர்கள் யாரும் உங்களை
அடிமைப் படுத்த முடியாது"!!!

#ஓஷோ

Wednesday, September 9, 2020

பிடித்த சொல், செயல்

இக்கட்டான தருணங்களில்,
ஒரு மனிதனுக்கு
ஆயிரம் ஆறுதல் வார்த்தைகளை விட
அன்பான ஒரு செயல்
தேவைப்படுகிறது.

சாமியின் சிந்தனை.

Tuesday, September 8, 2020

மகிழ்ச்சி

என் கஷ்டங்கள் சிலருக்கு மகிழ்ச்சி,
அதுவும் எனக்கு மகிழ்ச்சி தான்,
இப்படியேனும் பிறரை தன்னால் மகிழ்விக்க முடிகிறதே என்று.




Saturday, September 5, 2020

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்'

இந்த சமூகம் ஆசிரியர்களுக்கு
சரியான மரியாதை கொடுக்கவில்லையோ என்ற ஆதங்கமும்,
சமூகம் நம்மை மதிக்கும் அளவுக்கு நாம் மதிப்பீடுகளை வளர்த்துக் கொள்ள வில்லையோ என்ற சந்தேகமும் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது.

'இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்'


Friday, September 4, 2020

மன வறுமை

பண வறுமை 
தமக்கு துன்பம்,
மன வறுமை
பிறர்க்கு துன்பம். 

சாமியின் சிந்தனை.

Thursday, September 3, 2020

கசப்பு-இனிப்பு

கசப்பை பிறருடன் பகிர்வதற்கும்
இனிப்பை தானே புசிப்பதற்கும்
எத்தனிக்கிறது மனசு.

சாமியின் சிந்தனை.

Wednesday, September 2, 2020

நகர்கிறது வாழ்க்கை

அன்பினால் அக்கறையினால் 
ஏற்படும் மகிழ்ச்சியையும்
காயங்களையும் எடைப்போட்டுக் கொண்டே நகர்கிறது வாழ்க்கை.

சாமியின் சிந்தனை


Tuesday, September 1, 2020

மனதின் மாயை

மணல் அளவு எதிர்பார்ப்புகள் கூட
மலையளவு ஏமாற்றத்தை தருவது தான்
மனதின் மாயை.

சாமியின் அனுபவம்

Monday, August 31, 2020

நடப்புலகு

நேர்மையாக இருந்துபார்
 நிச்சயம் தண்டிக்கப்படுவாய்.

அன்புடன் இருந்துபார்,
அநியாயமாக காயப்படுவாய்.

உண்மையாக இருந்துபார்
உறுதியாக ஏமாற்றுபடுவாய்.

என்று ஒவ்வொன்றாய்
சொல்லாமல் சொல்கிறது
நடப்புலகு,

நான் எவ்வளவு பட்டாலும் நேர்மையுடனும், அன்புடனும்
உண்மையாகவும் இருப்பேன் 
என்கிறது என்மனது.

சாமியின் சிந்தனை.





Thursday, August 27, 2020

ஒரு சிறு அவமதிப்பு

அன்புக்கு உரியவர்கள் 
தரும் ஒரு சிறு அவமதிப்பு கூட 
பெரிய அளவில் மன அளவிலும்
 உடல் அளவிலும் வலியை ஏற்படுத்திவிடுகிறது.

Monday, August 24, 2020

மனமுதிர்ச்சி

அவமதிக்கப்பட்ட பின்பும்
அன்போடு இருப்பதில் தான்
உறவின் பலமும் மனதின் முதிர்ச்சியும் 
தெரிகிறது.

தேவதை

பிரம்மா வடிவியலில்
வல்லவன் என்பதை
உனைப் பார்த்ததும்
தெரிந்துக் கொண்டேன்.


Saturday, August 22, 2020

ஏமாற்றாதே ஏமாறாதே

ஏமாளிகளை 
வாழ்க்கை
ஒருபோதும்
ஏமாற்றுவதில்லை.

சாமியின் அனுபவம்.

அழகு

மயங்கி விட்டால்
மயக்கம் தீர ஒரே வழி
இறுதி மயக்கம் தானோ.

Wednesday, August 19, 2020

மனம்/பணம்/மகிழ்ச்சி

எல்லாம் உடையோர் மகிழ்வில்லாமல்
இருப்பதும், 
ஒன்றும் இல்லாதவர் மகிழ்வோடு இருப்பதும் சொல்ல வருவது ' மகிழ்ச்சிக்கு காரணம் பொருள் அல்ல மனம் மட்டும் தான்' என்பது தான்.

சாமியின் அனுபவம்.

Saturday, August 15, 2020

வார்த்தை ஜாலங்கள்

அன்பு அக்கறை எல்லாம்
செயல்களால் காட்டப்பட வேண்டும்
வார்த்தைகளால் அல்ல‌.


சாமியின் அனுபவம்.

Friday, August 14, 2020

Read this Article atleast once in a week

உணவை தான் உண்டேன் 
எப்படி. மலம்  ஆனது?
உயிரோடுதானே இருந்தேன்
எப்படி மாண்டு போனேன்?
மலம்தான் உணவாக இருந்ததா?
மரணம்தான்  வாழ்வாய் இருந்ததா?
.
இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?
இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை  கண்கள் வட்டமிட்டது?
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?

இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று  மனைவியும் சுற்றமும் பேசியது. எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !

நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது.
இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன். அனைவருக்கும் பயன்படவேண்டிய  பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன்.

காலம் கடந்த ஞானம்.  பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?
பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்? சந்தனத்தால்  மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?

கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும்,  காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும் , பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் ! 
பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு ,    மண் என்னைப்பார்த்து  , 
" மகனே ! நானிருக்கிறேன் .என் மடியில் வந்து உறங்கு" என்று  என்னை மார்போடு தழுவிக்கொண்டது. 

அருந்தின மலமாம் 
பொருந்தின அழுக்காம்   வெறுப்பன உவப்பாம் 
உவப்பன  வெறுப்பாம் 
உலக பொய் வாழ்க்கை நீ_நீயாக_இரு...

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

அதனால்  வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*

முதுமை என்று எதுவும் இல்லை.

நோய் என்று எதுவும் இல்லை.

இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது.

சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

*நான்... நான்... நான்...*

*நான்* சம்பாதித்தேன்,

*நான்* காப்பாற்றினேன்,

*நான்* தான் வீடு கட்டினேன்,

*நான்* தான் உதவி  செய்தேன்,

*நான்* உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!

*நான்* பெரியவன்,

*நான்* தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன்,

*நான்  நான்  நான்  நான்*  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!

*நான்* தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்* தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா??

*நான்* தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள். 

 *உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.*

*உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*

*எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது*

உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்

உனக்கு கீழே உள்ளவனை  ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.

உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்....
SRI Sri Anna... upanyasa thuligal💪🙏🙏🙏

Wednesday, August 12, 2020

சாதனை

நாம் எல்லாம் ஒன்றை நன்றாக
தெரிந்து வைத்து இருக்கிறோம்,
அது, அடுத்தவர்களை எந்த சொல் அல்லது செயல் கொண்டு தாக்கினால் அதிகம் காயப்படுவார் என்பதே.


Friday, August 7, 2020

அகம்-முகம்

அகத்திற்கு திரையிட நினைக்கும் போதெல்லாம், 
அகம் தன்னை முகத்தில் திரையிட்டு
காட்டுகிறது.

சாமியின் சிந்தனை.

Tuesday, August 4, 2020

நட்பு

நண்பனிடம் 
தோற்பது தான்
  நட்பின்
வெற்றி.
சாமியின் சிந்தனை

Saturday, August 1, 2020

பாத்திரம் அறிந்து.........

கேட்காமல் கிடைப்பதினாலும்,
தட்டாமல் திறப்பதினாலும்,
கிடைப்பதின் மதிப்பும்,
கொடுப்பவரின் மதிப்பும்,
தெரியாமல் போய் விடுகிறது
சிலர்க்கு.

சாமியின் சிந்தனை.

Tuesday, July 28, 2020

பிரிவு

சில மரங்கள்
அதன் வேர்களை
மனதில்
ஊன்றி விடுகின்றன.

அன்பு

அன்பு என்பதும் ஒரு சிறைதான்,
ஆனால் இங்கு வெளியே அனுப்பும்போது தான்
தண்டனை தொடங்குகிறது.

சாமியின் சிந்தனை.

அன்பு

அன்பை காட்டி ஏமாற்றுபவர்களுக்கு
அரசியல் சாசனத்தில் ஒரு பிரிவு இருந்து இருக்கலாம் 
அன்பால் தண்டனை வழங்க.

சாமியின் சிந்தனை.

Thursday, July 23, 2020

உலகில் வேதனையான விடயம்.

ஒருவர் மேல் உள்ள அளப்பரிய அன்பினால் அவரை பற்றி எழுதுகிறோம் அல்லது பேசுகிறோம்,
அதற்கு அவரிடம் இருந்தே அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், உலகில் அதைவிட மனதிற்கு மிக வேதனை தரக்கூடிய விடயம் இல்லை.

Tuesday, July 21, 2020

வாழ்க்கையை எப்படி வாழ்வது!!!!

#ஜென்தத்துவம்!!!

#வாழ்க்கையை எப்படி வாழ்வது!!!!

இளைஞன் ஒருவன் " வாழ்க்கை வாழ்வது எப்படி" என்ற கேள்விக்கு விடையை அறிந்து கொள்ள ஜென்குருவை தேடி மலையேறி மூச்சிரைக்க நடந்து வந்தான்.

ஜென்குருவை சந்திக்கும் ஆர்வத்தில் ஒருவழியாக மலையேறி வந்து விட்டான்.

ஆஸ்ரமத்துக்கு வந்ததும் அங்கு ஒரு இளம் துறவி இருந்தார். 

அவரிடம் " வணக்கம் ஐயா வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக குருவைப் பார்க்க வந்திருக்கிறேன் " என்றான்.

" ஓ..... அப்படியா குரு தியானத்தில் இருக்கிறார் . முன் அறையில் அமருங்கள் வருவார். " என்றவர் ஒரு கோப்பை நிறைய சூடான தேனீரை ஊற்றிக் கொடுத்தார் அந்த இளைஞகனுக்கு .

இயற்கை எழில் கொஞ்சும் மலையையும் , குளிர்ந்த காற்றையும் ,சில்வண்டுகளின் சத்தத்தில் குயிலோசையையும் மடாலயத்தின் மௌனத்தையும்,ரசித்துக் கொண்டிருந்ததில் சூடான தேனீரை குடிக்க மறந்தே போய்விட்டான் . தேனீர் ஆறிபோய்விட்டது.

சிறிது நேரத்தில் குரு அவனை நோக்கி வந்தார் . அவன் எழுந்து வணங்கினான் .
குருவின் கண்களில் கனிவும் மென்மையும் தெரிந்தது.

"வாழ்க்கையை எப்படி வாழ்வது? என்ற கேள்விக்கு விடை கேட்டு வந்தேன்" என்றான் .

குரு லேசாக புன்னகை செய்தார் .பின்னர், " உன் கோப்பையில் உள்ள தேனீர் ஆறிப்போய் இருக்கிறதே!. அதை வெளியில் கொட்டிவிடு " என்றார். 

அவன் அப்படியே செய்தான். பின்னர் குரு அந்த கோப்பையில் சூடான தேனீரை ஊற்றி நிரப்பினார்.

அவன் அதை குடிக்க ஆரம்பிப்பதற்குள் குரு விடை கூறாமல் மீண்டும் தியானம் செய்ய சென்றுவிட்டார் .

அவன் மிகுந்த ஏமாற்றத்துடன் கீழிறங்கி வந்து கொண்டிருந்தான். அப்போது மீண்டும் அந்த இளம் துறவியை பார்த்தான்.

"உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததா?" என்று கேட்ட துறவியிடம் நடந்ததை கூறினான்.

அதற்கு அந்த துறவி "குரு உங்கள் கேள்விக்கு சரியான பதிலை கூறிவிட்டாரே"!! என்றார்.

"ஜென் என்றால் அந்தந்த நொடியில் வாழ்வது என்று பொருள். மனம் என்னும் கோப்பையில் பழைய ஆறிப் போன எண்ணங்களை கொண்டு வாழாமல் , இந்த அப்பொழுதில் சுடச்சுட வாழ்வதுதான் வாழ்க்கையை வாழும் முறை . இதைத்தான் குரு உனக்கு செய்து காட்டி இருக்கிறார்."

வாழ்க்கையை எப்படி வாழ்வது என்னும் முறையை புரிந்து கொண்டான் . அந்த நொடியில் வாழத்தொடங்கினான் மகிழ்ச்சியுடன் ... !!!

கோபம் உறவை கொல்லும்

அடித்தால் அடிப்பட்டவனுக்குதானே வலிக்கவேண்டும்,
ஆனால் கோபத்தில் திட்டினேன் 
இருவருக்குமே வலிக்கிறது இங்கு.

சாமியின் சிந்தனை.

Sunday, July 19, 2020

மழைக்கு பின்

பெரும்மழையில்,
சிறு மழைத்தேக்கி,
என்மேல் பொழிந்தது 
மரம்.

சாமியின் சிந்தனை.

Saturday, July 18, 2020

"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"

கவிஞனோ அல்லது புலவனோதான்
இந்த பலமொழியை கண்டுபிடித்து இருக்கவேண்டும்.

சாமியின் சிந்தனை

தஸ்தாயெவ்ஸ்கி பற்றி S. இராமகிருஷ்ணன்

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும். தஸ்தாயெவ்ஸ்கியைப் படிக்கும் போது நமது அந்தரங்கம் மிக நெருக்கமா அடையாளம் காட்டப்படுகிறது.  நமது மனதை திறந்து அதன் உள்ளே ரகசியங்கள் அவமானங்கள் என்று நாம் மூடிமூடி வைத்துள்ள அத்தனையும் மறுபரிசீலனை செய்வதற்காகவே அவரை வாசிக்க வேண்டியிருக்கிறது. நம்மில் பெரும்பான்மையினரின் பிரச்சனைகளே தஸ்தாயெவ்ஸ்கியின்  கதாபாத்திரங்களின் மனஇயல்பு. அதாவது பேசமுடியாத ஆனால் நிறைய பேச வேண்டும் என்று ஆசைப்படும் இளைஞர்களே அவரது முக்கிய கதாபாத்திரங்கள்.

- எஸ்.ராமகிருஷ்ணன்

Thursday, July 16, 2020

GIVE HONEY

அக்கறை காட்டுவதில் அமுதசுரபி நீ,
அன்பில் ஈர்ப்பதில் பூமித்தாய் நீ,

அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் உள்ளது என உணர்த்தியவள் நீ, 
அப்படி பார்க்கையில் பேரழகி நீ,

அக்கறை என்னும் அமிழ்தினில் மூழ்கடிகத்தவள் நீ,
சில நேரங்களில் அது கிடைக்காமல்
என்னை அதிகம் அழ வைத்தவளும் நீ,

நம் குடும்பம் உன்னை சூரியனாய் வைத்து சுற்றிவர உன் அக்கறை என்ற ஈர்ப்புவிசை தான் காரணம்,
அதில் பல நேரங்களில் மெர்குரியாய் இருக்க ஏங்கி இருக்கிறேன் நான்,

உன் அக்கறையை பெறும் பொழுது உச்சக்கட்ட பாசமும், அது கிடைக்காத பொழுது உச்ச கோபமும் வருகிறது எனக்கு,

எனக்கு ஒரு ஆசை உண்டு அது உன் அக்கறை மழையில் வாழ்நாள் எல்லாம் நனைய வேண்டும் என்பது,
ஒரு பேராசையும் உண்டு அது ...........



Sunday, July 12, 2020

அப்பா .படித்ததில் பிடித்தது

அப்பா........🙏🙏🙏🙏🙏🙏🙏

சக்திவேல்  எழுபது   வயதைக் கடந்த தாத்தா.  ஒருநாள் அவர் ஒரு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிருந்தார். 

பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம்.  

மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம்.  
இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார்  சக்திவேல். 

வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல்,  பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது.  

அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை.   

அந்த சமயத்தில் ஒருவர் சக்திவேலின்  பக்கத்தில் 
வந்து அமர்ந்தார்.

"மிஸ்டர் சக்திவேல்!  
நான் தான் கடவுள்.  உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன" என்றார் அவர் (கடவுள்).

ஆச்சரியப்பட்டார் சக்திவேல்.  
யோசித்தார்.  
பிறகு பேசினார்.

""கடவுளே!  என் அப்பாவை நான் பார்க்க வேண்டும்.  அவரை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?""
என்று கேட்டார் சக்திவேல்..

""மிஸ்டர் சக்திவேல்!  நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு.   இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள்.

''கடவுளே!  ஆம். ... அவருக்கு நிகர் யாருமில்லை'' என்றார் சக்திவேல்..

‘அப்படியா!' என்றார் கடவுள்.

''அப்பா பலமுறை என்னிடம் கோபப்பட்டுள்ளார்.  தண்டித்திருக்கிறார்.  அப்போதெல்லாம் எனக்கும் கோபம் வரும்.  மனத்திற்குள் திட்டித் தீர்த்திருக்கிறேன்.  ஆனால், நானும் ஒரு அப்பாவாக மாறிய பிறகு அப்படிப்பட்ட கோபத்தில் இருக்கும் நியாயம் எனக்கு புரிந்தது.  அதனால் இந்த நிலையில் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார் சக்திவேல்.

''அதெல்லாம் சரி!  
உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை?'''
என்று கேட்டார் கடவுள்.

‘அப்பாவா? அம்மாவா?இதில் யார் தவிர்க்க முடியதவர் என்ற போட்டி தற்போது நடக்கவில்லை.  திருமணமான பிறகு மனைவி அம்மாவின் இடத்தில் பாதியை நிரப்பிவிட்டார்.  ஆனால், அப்பாவின் இழப்பை இதுவரை யாரும் நிரப்பவில்லை.  அதனால்தான் அப்பாவை பார்க்க விரும்பினேன்''', என்றார் சக்திவேல்..

''சரி! உன் அப்பா என்னை விட சிறந்தவரா? என்று கேட்டார் கடவுள்

''என் அப்பாவிடம் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்து  விடுவார்.  ஆனால், என் அப்பாவையே கேட்டால், அது உங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.  

அந்த வகையில் நீங்கள்தான் சிறந்தவர்.  ஆனால், அப்பா, என்னை ஒரு நல்ல தகப்பனாக உருவாக்கியிருக்கிறார்.  

நான் என் மகனை அவனது  பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக  உருவாக்குவேன்.  

ஆனால், நீங்கள் ஒரு நல்ல கடவுளை உருவாக்கியிருக்கிறீர்களா?  உங்களால் முடியாததை செய்த என் அப்பாதான் சிறந்தவர்தானே?''
என்று கேட்டார் சக்திவேல்.   

அமைதியானார் கடவுள்.  
மீண்டும் சக்திவேல் பேசினார்.

''‘ராமன் காட்டுக்குப் போனான் என்றவுடன் உயிரை  விட்டார் தசரதன், 

இந்திரஜித் இறந்தவுடனே பிணமாய் வாழ்ந்து உயிரை விட்டான் இராவணன், 

பிள்ளைக்கு சாகாவரம் பெற்றுத் தந்தார் துரோணர்.   

இப்படி பிள்ளைகளுக்காக வாழ்ந்த அப்பாக்கள் ஏராளம்.  அந்த அப்பாக்கள் தவிர்க்க விரும்பிய விஷயம் ‘புத்திர சோகம்'.  

ராமனை பிரிந்தவுடன் உயிரைவிட்டார் தசரதன்.  ஆனால், தசரதன் இறந்த பின் ராமன் இறக்கவில்லை.  அதுதான் மகன் மீதான அப்பாவின் பாசத்திற்கும், அப்பாவின் மீதான மகனின் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம்', என்றார் சக்திவேல்.

ஆச்சர்யமாக பார்த்தார் கடவுள்.   
'''‘ம்..... மேலே சொல்'' என்றார் கடவுள்.

''ஒருமுறை ஆபிஸுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டி ருந்தேன்.  பக்கத்தில் ஒரு பெண்.  என் முன்னால் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டிருந்தார்.  

அடிக்கடி அவளுடைய முகத்தை பார்த்தேன்.  ஒவ்வொரு முறையும் ஒரு புன்சிரிப்பு தென்பட்டது.  

அவளின் விரல்களில் ஒரு சிகப்புக் கல் வைத்த மோதிரம் இருந்தது.  என்னை அறியாமல் அந்த சிகப்புக் கல்லை தொட்டுப் பார்த்தேன்.   வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டார்.  அப்போதுதான் அது தவறு என்று புரிந்தது.   

அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண் இறங்கத் தயாரானார்.  கிளம்பிய பெண் சட்டென்று திரும்பி அந்த மோதிரத்தை என் கைகளில் திணித்துவிட்டு கிளம்பினார்.  அது ஒரு இன்ப அதிர்ச்சி.  பஸ் கிளம்பியது.  அந்தப் பெண் தூரத்தில் சென்று மறைந்தாள்.  

அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.  எதிரில் அப்பா வந்து கொண்டிருந்தார்.  அவரிடம் சென்று பஸ்ஸில் நடந்ததை அப்படியே ஒரு வரி மாறாமல் சொன்னேன்.  மோதிரத்தை அவரிடம் காட்டினேன்.  அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை.  ''நாளைக்கு அந்த மோதிரத்தை அவளிடம் திருப்பி கொடுத்துடு''என்று சொல்லிவிட்டு வாக்கிங்கை தொடர்ந்தார்.  

வீட்டில் யாரிடமும் அவர் இதைப் பற்றி பேசவில்லை', என்று சொல்லிவிட்டு அமைதியானார் சக்திவேல்..

''அந்த மோதிரத்தை அடுத்த நாள் திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டீர்களா?'' என்று கேட்டார் கடவுள்.

சிரித்தார் சக்திவேல்.

‘இந்தக் கேள்வியை அப்பா என்னிடம் கேட்கவில்லை.  ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள்.  
அடுத்த நாள் அந்த மோதிரத்தை திரும்ப கொடுத்துவிட்டேன்.  ஆனால், அதைக்கூட அப்பாவிடம் சொல்லவில்லை.  
அவரும் அந்த பதிலுக்காக காத்திருக்கவில்லை.    

எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது.  அதனால்தான் சொல்கிறேன் என் அப்பா உங்களை விட சிறந்தவர்', என்றார் சக்திவேல்..

கடவுள் சிரித்தார்.  

‘கடவுளே!  அப்பா என்பது உன்னதமான உறவு.   நம்மைச் சுற்றி நடக்கும் உண்மை நிலையை புரிந்துகொள்ளும் அற்புதமான நடைமுறை உலகத்து உறவு.   

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 
அப்பா என்பவர் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரிந்த முதிர்ந்த நண்பர்', என்றார் சக்திவேல்.

':அதெல்லாம் சரி!  அப்பாவிடம் எதையாவது மறைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் கடவுள்.

‘ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறேன்.  நான் ஒரு பெண்ணை ஐந்து வருஷமாய் காதலித்து  வந்தேன். பிறகுதான் தெரிந்தது அவளுடைய அப்பாவிற்கும் என் அப்பாவிற்கும் ஆகாது என்று.  அதனால் காதலை அத்தோடு நிறுத்திக் கொண்டோம்.  அது வலி நிரம்பிய பிரிவு', என்று சொல்லும் போது சக்திவேலுவின் கண்களில் கண்ணீர் சேர்ந்தது.  

‘மிஸ்டர் சக்திவேல்!  நீங்க இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை உங்க அப்பா கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.  

இதோ அப்பா நிற்கிறார்.  இன்னும் சில நிமிடங்கள் அவர் உங்களோடு இருப்பார்.  பேசிக்கொள்ளுங்கள்', என்று சொன்னார் கடவுள்.

சக்திவேல் ஓடிச் சென்று அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டார்.  இருவர் கண்களிலும் கண்ணீர்.

''மகனே!  என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? 
என் வரட்டு பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திட்டு அந்த பெண்ணையே திருமணம் செய்து வைச்சிருப்பேனே!', என்றார் அப்பா.  

மெளனம் மட்டுமே பதிலாய் தந்தார் சக்திவேல்.  

அப்பா பேசினார்.

''ஒரு அப்பாவிற்கு கிடைத்த பெரிய வரம் என்ன தெரியுமா?  
அவர் மற்றவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதுதான்.  

அந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்.  இதைவிட சிறந்த வரம் ஒரு அப்பாவிற்க்கு இருக்க முடியாது', என்றார் அப்பா.

‘அப்பா! நீங்க என் கூடவே தங்கிடுங்கப்பா!' என்று கெஞ்சினார் சக்திவேல்.

‘அது முடியாதுப்பா!   என்னோட கதை முடிந்த கதை.  வாழ்க்கையில ஒரு அப்பாவின் பங்கு என்ன என்பதை நீ நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய்.  அதை உன் மகனுக்கும் புரிய வைத்திருக்கிறாய்.  அவன், அவனுடைய மகனுக்கும் புரியவைப்பான்.   இதன் விளைவாக உலகம் நல்ல தகப்பன்களை உருவாக்கும்.  அது நல்ல குழந்தைகளை உருவாக்கும்.  இதை விட பெருமை எந்த தகப்பனுக்கும் கிடைக்காது.  நான் பாக்கியசாலி.  நான் கிளம்பறேன்', என்று சொல்லிவிட்டு சற்று தூரம் நடந்து மறைந்து போனார்.    
 
சக்திவேல் அழத்தொடங்கினார்.

‘என்ன மிஸ்டர் சக்திவேல்!  போதுமா?  நான் கிளம்பட்டுமா?' என்று கடவுள் கேட்டார்.

‘கடவுளே!  நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாளை என்றுமே மறக்க முடியாது.  கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்து மரத்தடி பள்ளிக்கூட வகுப்பறையில் இறக்கிவிட்டு டாட்டா காண்பித்துவிட்டு கிளம்பினார் அப்பா.   

நான் அழத் தொடங்கினேன்.  யார்யாரெல்லாம் சமாதானம் சொல்லியும் விம்மலும், அழுகையும் நிற்கவில்லை.   
அப்பா சென்ற வழியை பார்த்து அழுதுகொண்டே யிருந்தேன், அப்பா அந்த வழியே வருவார் என்ற நம்பிக்கையோடு....   

அதே நேரத்தில் அப்பா சற்று தொலைவில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நான் என்ன செய்கிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.    

நிச்சயமாக அவரும் அழுதிருப்பார்.  ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பா வந்தார்.என்னை தூக்கிகொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.  அவர் தோளில் சாய்ந்த நான் அப்படியே தூங்கிப்போனேன்.  இது என் முதல் நாள் பள்ளி ஞாபகம்'.  

சக்திவேல் மீண்டும் பேசினார்.

‘கடவுளே!  இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறேன்.  என்னை விட்டுச் சென்ற அப்பா மீண்டும் வரமாட்டாரா? என்று அவர் சென்ற வழியிலேயே காத்துக் கொண்டிருக்கிறேன்.  

இப்போது அப்பா எந்த மரத்தடியில் ஒளிந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.   அவர் தோளில் தூங்கினால் என்னுடைய எல்லாக் கவலைகளும் பறந்துபோகும்.  அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?' என்று கேட்டுவிட்டு அழுதார் சக்திவேல்..
  
( சக்திவேலுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும்   மனச்சுமையை நீக்கும் அப்பாவின் தோள் கிடைக்குமானால், நம்மைவிட  அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது.   அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட கற்பக விருட்சம்)
ஆகவே அப்பா.............. இருந்தால்.................... மதியுங்கள்.................... 
அப்பா........................ இல்லையேல்....... ..........
நினையுங்கள்..... ............
 அப்பாவின் நினைவாகவே......

Friday, July 10, 2020

எது தியானம்.

தியானம் செய்து கொண்டிருந்தேன்,
குழந்தை என்னை எழுப்பியது தன்னோடு விளையாடுவதற்காக.

சாமியின் சிந்தனை.

Thursday, July 9, 2020

பபுல்ஸ் விளையாட்டு

குழந்தை பபுல்ஸ் ஊதிக்கொண்டுக்கிறது,
ஒவ்வொரு குமிழியின் உள்ளும்
மூச்சுபிடித்து  பறக்கிறேன் நான்.

Tuesday, July 7, 2020

கன்னத்தின் கோடுகள்

கன்னத்தில் பாயின் கோரை வரைந்திருக்கும் இருக்கும் கோடுகள்,
இரவு தூக்கத்தின் ஆழத்தையும் 
கண்ட கனவின் அழகையும்
ஞாபகப்படுத்துக்கின்றன.

Sunday, July 5, 2020

நடிப்பு

நடிப்பு உண்மையாகிறது
உண்மை நகைப்பாகிறது.

சாமியின் சிந்தனை.

முகம் - முகமூடி

முகமூடி அணிந்து அணிந்து
முகமூடியே முகமாகிப்போனது.

சாமியின் சிந்தனை.

Friday, July 3, 2020

கடந்த காலம்

நாட்காட்டியில் தேதியை கிழிக்கவும்
கசக்கவும் தயங்கி அப்படியே விட்டுவிட நினைக்கிறது மனசு.

பறவைகள் இசை

பறவைகள் போடும் மெட்டுக்கும் இசைக்கும், பாடல் வரிகள் கிடைக்காமல் அல்லாடுகிறது மனசு.

சாமியின் சிந்தனை.

ஆசை

முழுநிலவொளியில் முழு இரவு முழுவதுமாய் முடிந்த அளவு நடந்தே
ரசிக்க நினைக்கிறது மனசு.

பின் குறிப்பு: முடிந்தால் மதி மயக்கத்துடன் சிறிது மது மயக்கமும் கூட.

சாமியின் சிந்தனை.

Wednesday, July 1, 2020

எங்கும் உன் முகமே

கண்ணாடியில் என் முகம் பார்க்க நினைத்து, 
உன் முகத்தில் என் முகம் பார்த்தேன்
அங்கும் தெரிந்ததும் உன் முகமே.

சாமியின் சிந்தனை.

மரம் மகத்தானது.

வெட்ட  நினைத்து குனிந்து வேர் தேடி சென்ற என்னை,
என் தலை வருடி தன் சிறுகிளைகளால் ஆசிர்வதித்தது மரம்.

சாமியின் சிந்தனை.

Monday, June 29, 2020

சில உறவுகள் மற்றும் சில நட்புகள்

தடம் பார்த்து நடந்தாலும் பாதத்தை
பதம் பார்த்து விடுகின்றன சில முட்கள்.

சாமியின் சிந்தனை.

Saturday, June 27, 2020

சருகுகள்

உயிரின்றி உதிர்ந்தபின்னும் உயிர் தரும் மண்ணுக்கு.

சாமியின் சிந்தனை

Sunday, June 21, 2020

உலக தந்தையர் தினம்

ஒருநாள் கொண்டாடக்கூடிய உறவா அது, வாழ்வின் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டிய உன்னத உறவு அது,

உழைத்து உழைத்து தன்னை தேய்த்து நம்மை உயர்த்தியவர்,

தான் பெறமுடியாத கல்வியை, வசதியை, வாழ்க்கையை, தன் வாழ்க்கையை வயதை இழந்து வாங்கி கொடுத்தவர்,

எப்பொழுதும் நம் மகிழ்வையே தன் மகிழ்வாக நினைத்து வாழ்பவர்,

கண்டிப்பை சொல்லில் வைத்து கனிவை மனதில் வைத்திருப்பவர்,

 நாம் வாழ்வில் ஓங்கி வளர தன்னை மறைத்து  தாங்கிப்பிடித்து வேராய் இருப்பவர்,

எனக்கு மிகவும் பிடித்த சொல் 'அப்பா'
பிடித்த செயல்  'உன் கண்டிப்பு',

தந்தையே உன் மறுபெயர் உழைப்பு, உணர்வு, உண்மை, உன்னதம், உயிர்ப்பு எல்லாவற்றிற்கும் மேல் என்னுயிர் உருவாக்கிய என்னுயிர் நீ.

சாமியின் சிந்தனை.

Saturday, June 20, 2020

கொரானா காலம்

ஒவ்வொரு வருடமும் வருவாயா 
கொரானா என்று குழந்தைகள் கேட்கிறார்கள்,
இன்று குழந்தைகளுக்கு கொரானாவைவிட கல்விமுறையின் மேல் அச்சம் அதிகமாகிவிட்டதேயே இது காட்டுகிறது.

Friday, June 19, 2020

You need to stop yourself from stopping yourself

I remembered this one. Thought you would like it. 
*Martina Navratilova* was once asked, “How do you maintain your focus, physique and sharp game even at the age of 43?"

 She gave a humble reply, “The ball doesn’t know how old I am”. You need to stop yourself from stopping yourself. Every game in life is actually played on a 6 inch ground – the space between your two ears. 

We don't live in bungalows, duplexes or flats. We live in our mind which is an unlimited area. Life is great when things are sorted and uncluttered there.

 Keeping the mind messy with hatred growing on the table, regrets piling up in corner, expectations boiling in kitchen, secrets stuffed under the carpet and worries littered everywhere ruins this real home.  

The key factor to performing well in life and in every arena, is the ability to control the quality and quantity of your “internal dialogue”. Performance is potential minus internal interference. 

Let's Live in peace !!

🙏🙏

Monday, June 15, 2020

குயில்- மயில்

என்னருமை தோழியிடம் செல்பேசினேன்,
என்னருகில் குயிலொன்று கானம் பாடத் தொடங்கியது,
ஓ இந்த முனையில் குயில், அந்த முனையில் மயில், 
அவர்கள் பாடி ஆடட்டும் என் நான் விலகி வந்துவிட்டேன்.

சாமியின் சிந்தனை.

வாழ்க்கை

வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டேன்?
கேள்வியைக் கேட்டு ஒரு அருமையான தருணத்தை தவறவிட்டு விட்டாயே  என்றது வாழ்க்கை.

வாழ்க்கை

வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டேன்? 
பல நூறு விடைகளை விழுங்கியப்பின்னும், 
அந்த வினா மட்டும் அப்படியே இருந்தது.

சாமியின் சிந்தனை.

கொடுத்துப்பார்/பெற்றுப்பார் தெரியும்.

என்னை பொருத்தவரை 'அன்பு' என்பது பெயர்ச்சொல் அல்ல வினைச்சொல்.

சாமியின் சிந்தனை.

Saturday, June 13, 2020

படித்ததில் பயனுள்ளது: மனித உளவியல்

*மனிதம் பற்றிய உளவியல் தகவல்*

1. ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.

2. அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.

3. எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்களாம்.

4. குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்.

5. நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்.

6. உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்.

7. சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.

8. மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம்.

9. முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.

10. இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.

11. ஒருவர் ஒரு விடயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால் அதை அவர் செய்திருக்கலாம் என்று
 உளவியல் கூறுகிறது.

12. ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம். 

13. ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்.

14. ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விடயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விடயங்களும் காத்திருக்கும்.

15.  ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

16. ஒருவர் அடிக்கடி *Mobile phone* யை பார்த்துக் கொண்டிருப்பது or *Mobile சத்தம் *(Notification tones)* கேட்டால் உடனடியாக அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார். என்று அர்த்தம்.

17. ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும். (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.

18. ஒருவர் அதிகமாக  *Negative Thoughts* ( முடியாது/கிடைக்காது/இயலாது) கதைப்பவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் *Negative Thoughts* கதைப்பவராக இருப்பார்.👆👆👆☹️☹️☹️

Tuesday, June 9, 2020

Humanity

TN Seshan told the story in a management seminar. While he was the Chief Elect Commissioner,  he and his wife were traveling in a car in UP. They saw a sprawling mango garden wherein they saw large, beautiful numbers nests  of sparrows. His wife was so much interested to get two numbers of the nests for their house.  The police man who was accompanying them approached a boy who was was rearing cows,  for the same. He was offered 10 rupees initially. He refused to accept. Then,  TN Seshan said he will pay 50 rupees for which also he refused and said he will not do the same for whatsoever amount. His reason was, he said, there could be the little ones, chicks,  inside the nest. In the evening, when the  mother sparrow come back with food for the chicks, she will find her chicks are  missing and it will start crying. The boy said I can't bear the same. TN Seshan and his wife were stunned at this sentence.  He says all my positions, IAS etc melted in front of the boy as nothing. I became a small  grain of mustard in front of the boy. I left the desire to get the nest. 
Education, coat and suit  are never the  measures of humanity.

Monday, June 8, 2020

நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி கொள்ள. படித்ததில் பிடித்தது.

நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி கொள்ள

எதிர்மறை எண்ணங்கள் தோன்ற காரணமாக இருப்பது என்ன என்பதை கண்டறிந்து அதனை நீக்கி விட்டாலே போதும் Positive thoughts மனதில் உதயமாகிவிடும்.

எதிர்மறை எண்ணங்கள் உருவாக முக்கிய காரணம், தன்னம்பிக்கை இல்லாமை.

தன்னம்பிக்கை உருவாக உங்களை நீங்கள் பெருமையாகவும் கர்வமாகவும் எண்ணும்படி நடந்துகொள்ள வேண்டும்.எல்லா செயல்களையும் எல்லோராலும் செய்யமுடியும்.ஆனால் அப்படி முடிகிறதா? ஒரு சிலரே அதற்கு சாத்தியப்பட்டவர்களாக உள்ளனர், அந்த சிலர் தன்னமிக்கை கொண்ட பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.

1. முதலில் எதையும் உங்களால் செய்ய முடியும் என்பதை வலுவாக நம்புங்கள். நம்பிக்கையூட்டும் வாசகங்களை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

2. எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்,எதையும் எதிர்கொள்ளலாம் என்ற பக்குவத்திற்கு மனதை ஆயத்தப்படுத்துங்கள்.

3. ஒரு விஷயத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும் போது,உங்களது எண்ணங்களும் செயல்களும் உங்களது கட்டுபாட்டில் வருகிறது.

4. உன்னால் முடியாது,உனக்கு தகுதியில்லை போன்ற எதிர்மறையான பேச்சுக்களை பேசுபவரிடம் இருந்து தள்ளியிருங்கள்.

5. தினமும் உங்களை நினைத்து பெருமை கொள்ளும் ஏதோ ஒரு செயல்களை செய்யுங்கள். உதாரணத்திற்க்கு நேற்றைய தினத்தை விட இன்றைய தினத்தில் அதிக வேலை செய்யலாம். யாருக்காவது சிறுசிறு உதவிகள் செய்யலாம்.

6. மனதை திடமாக வைத்துக்கொள்ள யோகா போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

7. ஒரு எண்ணத்தை திரும்ப திரும்ப நினைக்கும் போது ஒரு நாளில் அது நடந்து விடும்.அது பாசிட்டிவான எண்ணங்களாக இருப்பின் ஒவ்வொரு நாளும் அந்த எண்ணங்கள் உங்களை வழிநடத்தும்.ஒரு நாளில் அது நடந்து விடுகிறது.

8. அதே எண்ணம் நெகட்டிவாக இருப்பின் இப்படி நடந்துவிடுமோ என்ற எண்ணத்திலே உங்களது செயல்களும் அதை நோக்கி நகரும் ஒரு கட்டத்தில் நடந்துவிட கூடும்.

Positive thoughts:எண்ணம் போலவே வாழ்க்கை என்பது 100% உண்மை.என்ன நினைக்கிறோமோ அந்த எண்ணமே மனதில் வலுவாகி எதிர்காலத்தில் நடக்க கூடும்.கீதையில் கூட ஒருவரி உண்டு,என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகின்றாய்.ஆக,இனி வாழ்வில் எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளலாக இருக்கட்டும்....வாழ்த்துக்கள்..

Sunday, June 7, 2020

புன்னகை செய்

ஏ பெண்ணே, உன் புன்னகை என்னவானது, விற்றுவிட்டாயா?
ஆனால் அதை வாங்கும் அளவுக்கு செல்வம் இவ்வுலகில் இல்லையே,

இல்லை திருடிவிட்டார்களா?
ஆனால் உன்னை பாத்த மாத்திரத்தில் திருடன் அவன் தொழிலை மறந்திருப்பானே!

புன்னகையின் அரசியே,  உன் புன்னகையை யாராலும் எதுவும் செய்யமுடியாது என எனக்கு தெரியும், புன்னகை செய், வாழ்ந்து போகட்டும் இவ்வுலகு.

சாமியின் சிந்தனை.

உழைப்பு

உழைக்காமல் வரும் ஊதியம் கூட 
ஊழல் பணம் போல் தான்.

சாமியின் சிந்தனை

கதை-கவிதை

கதையினால் மனம் கவிதையாகும்
கவிதையினால் மனதின் கதைகளெல்லாம் கவிதைகள் ஆகும்.

சாமியின் சிந்தனை.

Saturday, June 6, 2020

பயணம்

தினமும் காலையில் வைக்கும்
சிறு தீனிக்காக மூடியிருக்கும் சன்னலை கொத்தி கொத்தி பார்க்குமே பறவை என்று நினைப்பாகவே இருக்கிறது பயணம் முழுவதும்.

சாமி.

Friday, June 5, 2020

மண்ணை முத்தமிடும் மழைத்துளி

மழைத்துளி மண்ணை முத்தமிட்டு
துள்ளி குதிப்பதை பார்த்தால் , தாய்வீடு வந்திருக்கும்  மகளின் மனம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

சாமியின் சிந்தனை.

Monday, June 1, 2020

திருமண நாள்

அந்த மூன்று முடிச்சு என்னவோ 
இறுகி கொண்டே தான் இருக்கிறது
14 ஆண்டுகள் கடந்த பின்பும்.

Sunday, May 31, 2020

தினம் தினம் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி?

தினம் தினம் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி?

1.பத்து நிமிடங்கள் முன்னதாக:

காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

2.பத்து நிமிடங்கள் மௌனமாக:

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் தியானம் பழகுங்கள். அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது மௌனத்தில் இருங்கள்.

3.முப்பது நிமிடங்கள்:

ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி.

4.உணவிலும் ஒழுங்கு:

வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள்.

5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:Day Task.

6.அடைசல்கள் அகற்றுங்கள்:

அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது.

7.மனிதர்களை நெருங்குங்கள்:

இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

8.அடுத்து என்ன? இதுவே மந்திரம்:

வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். (WHAT NEXT?) இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:

ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.

10.நன்றி அறிவிப்புத் தீர்மானமும் போடுங்கள்:

ஒவ்வொருநாள் இரவும் உறங்கப் போவதற்கு முன்னால், (நீங்கள் பி.பி.ஓ. ஆசாமியாய் இருந்தால், ஒவ்வொரு பகலும் உறங்கப் போவதற்கு முன்னால்) நடந்து முடிந்த வேலைகளுக்காக, கடவுளுக்கும் துணை நின்றவர்களுக்கும் மனசுக்குள்ளேயே நன்றி சொல்லுங்கள்.

11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:

உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அது தானாகவே பெருகும்.

12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:

உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.

13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:

இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்துவிடும்.

14.மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம்:

மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதல் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – மகிழ்ச்சியாய் – வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுங்கள்.

பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.
படித்ததில் பிடித்தது.

மனசு

பேருந்தில் நீண்ட பயணம்
என் அருகில் காலி இருக்கை
அதில் தனக்கு பிடித்தவர்களை உட்கார வைத்து மகிழ்கிறது மனது.

சாமியின் சிந்தனை.

Saturday, May 30, 2020

படித்ததில் பிடித்தது:பெற்றோர்களுக்கு

All parents must understand this reality.

 அவசியம் முழுதாகப் படிக்கவும் ! 

குழந்தைகளை படிக்க வைக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு... 

 நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?

என்னை மிகவும் ஆழமாக சிந்திக்க வைத்த பதிவு. பெற்றோர்களே கொஞ்சமாவது சிந்தியுங்கள். உங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக உங்கள் சொந்த வீடு உள்ள இடத்தில் குடிபெயர்ந்து நல்ல பள்ளி அருகினில் வீடு வாகை எடுத்து நீங்கள் சம்பாதிப்பதை எல்லாம் வீட்டு வாடகைக்கும் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கும் தான் செலவு செய்கிறீர்கள். 

அந்த கல்வி வருங்காலத்தில் அவனை ஒரு பணம் சம்பாதிக்கும் கருவியாகத்தான் மாற்றுமே தவிர நல்ல மனிதனாக ஒருபோதும் மாற்றாது என்பதனை நினைவில் வைத்துக்கொண்டு கிழே உள்ளவற்றை படிக்க தொடங்கவும்

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது.

 தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர். மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். 

இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலைபார்க்கிறார்கள்.

 இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.
அவரது பிரச்சினை தனிமைதான். மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு.

 பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள். 

அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. 

வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள். அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்துமணிநேரம் பெற்றோரிடம் செலவழித்தால் அதிகம்

‘உங்கள் நூல்களை இங்கே வரும்போது என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச்செல்கிறான். நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார் அவர். 

இம்மாதிரி குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியபோது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.

அவர் மகன் ஒருவாரம் கழித்து மிகநீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். 

என்னை பலகோணங்களில் சிந்திக்கவைத்த கடிதம் அது. ‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன். 

ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை. இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன். 

ஆனால் அவர்களைப்பற்றி ஒரு நல்ல நினைவுகூட இல்லை’ என்றார் அவரது மகன். 

அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்கவேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார். 

அதுவும் அவர் எல்.கெ.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே.
ஒவொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக்கொடுப்பதுண்டு.

 பள்ளிக்கூடப்படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை.

 ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறைநாட்களில் முழுக்கமுழுக்க பாடங்கள்தான். கோடைவிடுமுறை முழுக்க ஆங்கிலமொழியறிவுக்கும் கணிதத்திறமைக்கும் வகுப்புகள். தீபாவளி, பொங்கல் தினங்களில்கூட கொண்டாட்டம் இல்லை.

 படிப்புதான்.சிலசமயம் இரவில் படுத்து சிந்திப்பேன். இளமைக்காலத்தைப்பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று. 

எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சிகூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒருமுறை எண்ணிக்கொண்டேன். சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று. 

அந்த நினைவுகள் வழியாகக்கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புபடுத்திக்கொள்ளலாமே என்று. அப்படியும் ஒரு நினைவு கிடையாது.

 படிப்பு படிப்பு படிப்புதான்’
‘வீட்டைவிட மோசம் என் பள்ளி’ என அவரது மகன் எழுதியிருந்தார். 

’தனியார் பள்ளி அது. மிக உயர்மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி. 

அங்கே பிள்ளைகளைச் சேர்க்க வரிசையில் நிற்பார்கள்.பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள். 

பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான்’
அந்தப்படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை.

 ‘பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை. யாருமே எனக்கு இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை. 

நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்’ என்று எழுதியிருந்தார்.

அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத் தெரிந்தது மனிதவாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று. 

பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கியவாசிப்பு, இசை. அவர் எழுதினார் ’ எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது.

 அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம். எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் பிடித்திருக்கின்றன. 

திருச்சி எனக்கு அன்னிய ஊராகத் தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது’
‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு.

 அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணிநேரம் என்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது.

 இருபத்திரண்டுவருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான். 

அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். 

அவர்களின் மனம் எனக்குப்புரிந்திருக்கவேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள்போல தெரிகிறார்கள்’
‘இருபத்திரண்டு வருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை.

 படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்போது அவர்கள் பேசநினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை. 

இப்போதுகூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய், என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம்காட்டமட்டுமே அவர்களால் முடிகிறது. புத்தகம் வாங்காதே, பயணம்செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்ததுபோல என்னை வாழச்சொல்கிறார்கள்’

‘நீங்களே சொல்லுங்கள், அரைமணிநேரம்கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவுதான் செயற்கையாக முயன்றாலும் பேசிக்கொண்டிருக்கமுடியுமா? 

முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவுநாள் வாழமுடியும்? மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம். 

அதற்குமேல் என்ன செய்வது?’ என்று மகன் கேட்டார் ‘என் இளமைப்பருவம் முழுக்க வீணாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்’
அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். ’இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லிவிடமுடியாது’ என்றேன். 

அவர் புரிந்துகொள்ளாமல் ‘நன்றிகெட்டதனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார். 

மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச்சொல்லமுடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்

‘தீபாவளி என்பது இளமையில் கொண்டாடவேண்டிய ஒரு பண்டிகை. அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும். வளர்ந்தபின் அந்த நினைவுகளைத்தான் கொண்டாடிக்கொண்டிருப்போம். 

உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக்கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன்.

 அவர் மீண்டும் பதில் போடவில்லை.
வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதுதான்.

 அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன. 

நாளை முக்கியம்தான், இன்று அதைவிட முக்கியம்.

All parents - do read it and share it

Sunday, May 24, 2020

நினைவுகள் என்னவோ கல்லாய்

நன்றி

பிறரிடம் பெரிதும் எதிர்பார்ப்பது,
நாம் வசதியாய் மறந்து போவது.

Thursday, May 21, 2020

உண்மையாக ஆசிரியர் யார்.

நகம் கடித்தல் என்ற தீயப்பழக்கத்தின் தீங்கை எடுத்துச் சொல்லி விடச்சொன்ன மாணவன்,

நான் உடல்நலிவுற்று இருந்து பொழுது 'உடுக்கை இழந்தவன் கைப்போல ' உதவிய மாணவன்,

தனக்கு கிடைத்த உதவியை வேண்டாம் என்று சொல்லி பிறருக்கு உதவச் சொன்ன மாணவி,

தனது இரண்டு நாள் பட்டினியால் எனக்கு வறுமை உணர்த்திய மாணவி,

வகுப்பில் நீங்கள் நுழையும்முன் உங்கள் புன்னகை நுழைய வேண்டும் எனச் சொன்ன மாணவன்,

நடக்கும் போது நிமிர்ந்து நடந்தால் உங்கள் மேல் நம்பிக்கை கூடும் என்று கற்றுத்தந்த மாணவி,

என்னை கண்டிக்க வேண்டும் ‌என்றால் தனியே கூப்பிட்டு கண்டியுங்கள் என்று போதித்த மாணவன்,

தாயை தந்தையை இழந்த பின்னும் இந்த உலகை நம்பிக்கையோடு பார்க்கும் சில மாணவிகள்,

பணவருமை இருந்தாலும் மனவருமை இல்லாமல் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் மாணவ/மாணவிகள்,

இது மட்டுமல்லாமல் நிறைய அவர்களிடம் கற்றும் கற்றக்கொண்டிருக்கும் நான் இன்னமும் சொல்லிக்கொள்கிறேன்  'நான் தான் அவர்களின் ஆசிரியர் என்று'.

  சாமியின் சிந்தனை.

கண்கள்

உண்மை முகத்தை மறைக்க
எவ்வளவோ முகமூடிகள் போட்ட பின்பும், 
காட்டி கொடுத்து விடுகின்றன கண்கள்.

சாமியின் சிந்தனை.

Wednesday, May 20, 2020

ஒரு சந்தேகம்

உணவுக்காக மீனைப் கொத்துவதால் அது மீன்க்கொத்தி,
புழுவுக்காக மரத்தை கொத்துவதால் அது மரங்கொத்தி,
உணர்வின் வெளிப்பாடால் ஒரு மனிதனை கொத்தும் இன்னொரு மனிதனை மனிதக் கொத்தி என்று அழைக்கலாமா?

சாமியின் சிந்தனை.

Tuesday, May 19, 2020

Magic of Appreciation- பாராட்டுங்கள் பாராட்டபடுவீர்கள்

Monday, May 18, 2020

HAPPY HORMONES


A Talk about Happy Hormones

கதை: மறுசந்திப்பு.

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து

குறுங்கதை 81 
மறுசந்திப்பு

நாற்பது வருஷங்களுக்குப் பிறகு அவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மறுமுறை சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அப்படி ஒரு நிகழ்வினை முன்னெடுத்தவன் மகேந்திரன்.

அவனே ஒரு வாட்ஸ்அப் குரூப் துவங்கி அதில் பழைய மாணவர்களின் தொலைபேசி எண்களைக் கண்டறிந்து அவர்களுடன் பேசி தேதி குறித்து அந்தச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தான். பல்வேறு மாவட்டங்களிலும் பணிக்காகத் தங்கியிருந்தவர்கள் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் பங்கேற்க ஆர்வம் காட்டினார்கள்

டேனியலுக்கு அந்தச் சந்திப்பிற்குப் போவதில் விருப்பமிருந்தாலும் நாற்பது வருஷங்களுக்குப் பிறகு அந்தப் பள்ளியினைப் பார்ப்பதில் என்ன இருக்கிறது என்றும் தோன்றியது.

வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படங்களைப் பார்த்த போதே காலம் ஒவ்வொருவரையும் எவ்வளவு உருமாற்றியிருக்கிறது என்பதை அறிந்து வியப்பாக இருந்தது.

பள்ளி வயதில் மனதில் பதிந்து போன உருவம் அழிந்து போய்விட்டதே என்று டேனியல் வருத்தப்பட்டார்.

அவருடன் படித்த சிலரது பெயர்கள் மட்டுமே நினைவிலிருந்தது. முகம் மறைந்து போயிருந்தது. ஆனாலும் என்ன. அந்தப் பெயர்களை எங்கே கேட்டாலும் பள்ளி வயது நினைவில் வந்து தானே போகிறது.

அவர்களை நேரில் சந்தித்துப் பேசினால் அந்த நினைவு மறைந்து போய்விடுமோ என்றும் யோசனை செய்தார்.

என்றோ மழையில் நனைந்த ஒருவன் மறுபடி அதே ஈரத்தை நினைவு கொள்ள முடியுமா என்ன.

பள்ளி வயதில் நடந்த நிகழ்வுகள் நிறைய மறந்துவிட்டன. நினைவில் இருப்பது பெரும்பாலும் கசப்பான விஷயங்கள். அல்லது காதலித்த பெண்ணோடு தொடர்பான விஷயங்கள். இவை தவிர ஆசிரியர்கள் காட்டிய அன்பின் அடையாளமான சில நிகழ்வுகள் இவ்வளவு தான் ஞாபகத்தில் மிச்சமிருக்கின்றன.

பள்ளிக்கூடக் குரூப் போட்டோவில் டேனியல் கண்ணை மூடிக் கொண்டிருந்தார். இனி ஒரு போதும் அதை மாற்ற முடியாது தானே.

பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் மறுபடி சந்திப்பதைப் பெரிய கொண்டாட்டம் போல மகேந்திரன் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். ஏனோ டேனியல் போகவேண்டாம் என்று முடிவு செய்திருந்தார்.

ஆனால் முந்திய நாள் இரவு மகேந்திரன் அனுப்பிய பழைய புகைப்படத்தில் டேனியல் ஹாக்கி மட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அதைக் காணும் போது நெகிழ்ச்சியாக இருந்தது..

ஆசையாக விளையாடிய ஒரு விளையாட்டினை ஏன் வாழ்க்கையில் கைவிட்டோம் என அவராக வருந்திக் கொண்டார்.

மறுநாள் காலை எழுந்து பேருந்தில் பயணம் செய்தபோது பள்ளி வயதின் யூனிபார்ம் நினைவில் வந்து போனது. மைக்கறை படிந்த வெள்ளை சட்டையைப் பற்றி நினைத்தபடியே பயணம் செய்தார்

பள்ளிக்குச் செல்லும் பாதை மாறியிருந்தது. பள்ளி கட்டிடத்தின் முகப்பு புதிய வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது. அவரது மனதிலிருந்த சித்திரம் எதுவும் இப்போதில்லை. முன்பு பள்ளியின் வலதுபுறமிருந்த சைக்கிள் ஸ்டாண்ட் இப்போது பள்ளியின் பின்புறம் மாறியிருந்தது. பள்ளியின் பெயர் மட்டுமே மாறாமல் இருந்தது

ஒவ்வொருவராக வரத்துவங்கினார்கள். பால்யகால நண்பர்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கைகளைப் பற்றிக் கொண்டார்கள். அது பள்ளிச்சிறுவர்கள் போலப் பொய்யாக நடித்துக் கொள்வது போலவேயிருந்தது. அவரது வகுப்பிலிருந்த நாற்பத்து ஆறு பேரில் இரண்டு பேர் இறந்துவிட்டிருந்தார்கள். மற்றவர்கள் ஒன்று கூடி அவரவர் மனைவி பிள்ளைகள் பற்றிப் பேசிக் கொண்டார்கள். பிறகு தாங்கள் படித்த வகுப்பறையைப் பார்வையிடச் சென்றார்கள்.

அந்த வகுப்பறையிலிருந்த மரப்பெஞ்சுகள் இப்போது இல்லை. ஆசிரியர் நின்று வகுப்பெடுக்கும் மேடை அப்போது கிடையாது. முன்பு எந்த இடத்தில் அமர்ந்தார்களோ அங்கே போய் அமர்ந்து கொண்டார்கள். டேனியல் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டார். அந்த ஜன்னல் அப்படியே இருந்தது. மாறவேயில்லை.

பள்ளியின் ஜன்னல் வழியே தெரியும் உலகமும் அந்த ஜன்னல் வழியாக உருவான கனவுகளும் மனதில் ஒளிரத் துவங்கின. தனது இருக்கையை விட்டு எழுந்து ஜன்னலின் அருகே போய் நின்று வெளியே எட்டிப்பார்த்தார். சிறுவயதில் வசீகரித்த தொலைவும் அங்கே தென்படும் மனிதர்களும் அப்படியே மாறாமல் இருந்தது போல உணர்ந்தார். அந்த ஜன்னலை விட்டு நகர மனம் வரவில்லை.

உடன் வந்தவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக மைதானத்திற்குப் போனார்கள். டேனியல் மைதானத்திற்குப் போன போது பழைய மைதானத்தில் புதிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பிளாக் உருவாகியிருந்தது.

விளையாடும் இடம் சுருங்கியிருந்தது. புகைப்படம் எடுத்து முடித்துக் கொண்டு எல்லோரும் சாப்பிடுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்

டேனியல் மட்டும் மறுபடியும் அந்தப் பள்ளியின் ஜன்னலைக் காணுவதற்காகப் படியேறினார். யாருமில்லாத வகுப்பறையில் நுழைந்து ஜன்னலைப் பார்த்தபடியே இருந்தார். அது ஏதோ கேள்வி எழுப்புவது போல உணர்ந்தார். அதே ஜன்னலைப் பிடித்தபடியே ஆதங்கமாகத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்

“நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. எதையோ பற்றிக் கொண்டு வாழ்க்கையை ஒட்டிவிட்டேன். அவ்வளவு தான் “

ஏனோ மனது கனக்கத்துவங்கியது. கீழே இறங்கி வந்த போது அனைவரும் சாப்பிடத் துவங்கியிருந்தார்கள். அந்த உற்சாகம். சந்தோஷம் நிஜமில்லை. ஒரு முறை அடைந்த சந்தோஷத்தை மறுமுறை அடையவே முடியாது என்பது போலவே அந்தச் சந்திப்பை உணர்ந்தார்.

எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் நோக்கிப் பயணிக்கத் துவங்கினார். தான் இன்று சந்தித்த எவரும் தனக்குத் தெரிந்தவரில்லை, யாரோ வயதான ஆட்கள் என்று ஏனோ வழியில் தோன்றியது.

படித்ததில் பிடித்தது.

செய்நன்றி

யாரோ ஒருவன் தான் ஏறிப்போனபின்
எட்டி உதைத்ததில் தரையில் கிடக்கிறது ஏணி, யாருக்கும் பயனில்லாமல்.

சாமியின் சிந்தனை.

Sunday, May 17, 2020

காதல் மனம்

காலையில் 
காகத்தின் கரைதல்
கூட கானமாய் கேட்கிறது
காதலுக்கு.

சாமியின் சிந்தனை.

Saturday, May 16, 2020

இப்படிக்கு மனம்.

கடமையை செய்,
பாராட்டை எதிர்பார்.

சாமியின் சிந்தனை.

நீலவண்ண தேவதை

மொட்டை மாடியிலிருந்து வெகு தூரத்தில் தெரியும் கடல்,
நெருங்கி நெஞ்சம் நிறைத்து விடுகிறது ஒரு நொடியில்.

சாமியின் சிந்தனை.

நட்பு/உறவு

வெட்டப்படுவதோ ஓர் நொடியில்,
வேதனை வாழ்நாள் எல்லாம்.

சாமியின் சிந்தனை.

Friday, May 15, 2020

Important Reference for e- learning

How to Create Google Forms?
https://youtu.be/F4buURwcdwE


How to give assignment through quiz in Google Classroom?
https://youtu.be/2N0Puofos-E

How to record a Powerpoint Presentation and export as a Video File?....
https://youtu.be/5w4zUrZ4KSo

 

How to use Screen Recorder App to record a PowerPoint presentation in Smart Phone?
https://youtu.be/seVMqcMzk5A

 

Google Meet Integration in Google Classroom.-Meet Integration with Classroom?
https://youtu.be/1DblFIk1gvc

 

How to Grade Assignment in Google classroom?
https://youtu.be/YPxV5o3bhR8


How the Student will submit an assignment in Google classroom?
https://youtu.be/RihBqe84rPw

 

How to generate Participation E Certificate using Google forms?
https://youtu.be/LbnmcdrRwdE

 


How to generate E Certificate using Google forms?
https://youtu.be/kxwXr3aiCzQ


How to generate E Certificate using custom templates?
https://youtu.be/6csDdjSWiuY


.How to Search for UGC Care listed journals?Scopus/SCI
https://youtu.be/fGi6l3g4Bbo


.How to Create ORCID I'd and link with Scopus?
https://youtu.be/rnLyerOn7Xg


How to Manage Citations Using Mendeley Reference Manager?
https://youtu.be/UHYI-jccxEs

 👍👍👍

Oxygen Radical Absorbance Capacity

ORAC

ORAC is Oxygen Radical Absorbance Capacity. Higher ORAC, Better will be oxygen carrying capacity of blood & Lungs oxygen capacity. 

In the Future, our survival will be based on our Immunity 

Why spices are important for our Life? Look at their ORAC Values....👍🙏

Clove       : 314,446 ORAC 
Cinnamon : 267,537 ORAC 
Coffee.  : 243000  ORAC
Turmeric  : 102,700 ORAC 
Cocoa    : 80,933    ORAC 
Cumin    : 76,800  ORAC 
Parsley  : 74,349 ORAC 
Tulsi       : 67,553 ORAC 
Thyme    : 27,426ORAC
Ginger     : 28,811 ORAC 

Extracts of Ginger , Tulsi, Turmeric are at least 10 times higher ORAC Values. That's how they become effective.

OXYGEN CARRYING CAPACITY OF THE BLOOD CAN BE ENHANCED USING NATURAL FRUITS, VEGETABLES, SPICES, HERBS ....THAT HAVE HIGH ORAC VALUE!
OXYGEN RADICAL ABSORBANCE CAPACITY

PREVENTS: CANCERS, NEURO - DEGENERATIVE DISORDERS, DIABETES, & SO MANY CHRONIC CONDITIONS

Nature boosts immunity ...

 
High ORAC foods and Nutrients such as iron, vitamin C, Zinc, omega 3, Magnesium and Vitamin D helps boost our body's defence mechanism. 

Apart from Tulsi, Ginger, Pepper, Turmeric, Cinnamon. Clove... herbs like Brahmi, Ashwagandha, Shatavari, Mulethi, Arjunarishtam, Peppermint, coriander seeds, cumin black seeds are catching attention of Scientists.  

So, this is more than any vaccine one need for self immunity. Without any side effects. 

Since 80% of Corona positive patients had no symptoms at all , leaves uncertainity for all of us!
Testing 130 crore population is next to impossible. Even if we test daily 100000 people, we will need over 35 years to just test!

This suggests .... our future is our immunity.... just like intel inside in computers, we have to inbuilt immunity inside!

THIS IS WHAT AYURVEDA HAS BEEN TEACHING ALL ALONG!!

Thursday, May 14, 2020

ஊர் திருவிழா

எங்கள் கிராமத்தின் ஒற்றுமையை காக்கும் இரும்பு சங்கிலி,
எங்களையெல்லாம் தன் அருளால் காக்கும் தெய்வ சங்கொலி,
எங்கள் மனதில் இருக்கும் தங்க சங்கதி,
அருள்மிகு மலையேறியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா தள்ளிப்போயிருக்கிறது கொரானாவால். 

இந்த தருணத்தில் என் நினைவில் நடத்திக்கொள்கிறேன் அத்திருவிழாவை,

காப்பு கட்டுவதில் தொடங்கும் கொண்டாட்டம்,
வெளியூர்களில் வசிக்கும் கிராமவாசிகளால் நடத்தப்படும் மண்டகப்படிகள், பூஜைகள்  கலைநிகழ்ச்சிகள் ஊரை கோலாகலம் ஆக்கும்,

தேரில் பவனிவரும் தேவியால் தினம் தினம் கொண்டாட்டம்,
தேரில் பின் வரும் தேவதைகள் அதை காண வரும் தேவன்களின் கூட்டம்,

உறவினர்கள் நண்பர்களால் வீடுகள் பொங்கி வழியும்,
குழந்தைகளால் அல்லோலப்படும் தெருக்கள்,
அன்பாலும் அருளாலும் பொங்கி வழியும் கிராமம்,
உலகில் எங்கு இருந்தாலும் வந்து குவியும் ஊர்க்காரர்கள்,

இளைஞர் இளைஞிகளுக்கு இயல்பான வரன் பார்க்கும் படலம்,
எங்கு பார்த்தாலும் அன்னதானம்,

முத்தமிழில் மூன்றாம் தமிழை வாழ வைக்க நாடக இரவு,
எப்பதவியில் இருப்போரும் படித்தோரும் பாமரரும் தரையில் அமர்ந்து நாடகம் பார்க்கும் சமரசம்,

குழந்தைகள் அடிக்கும் கிட்டி சத்தம் வான் பிளக்கும்,
பெண்கள் போடும் மாவிளக்கு மற்றும் பஞ்சாமிர்தம் ஊரே மணக்கும்,
வாணவேடிக்கைகள், வண்ணவிளக்குகள் ஊரை வானவில்லாக்கும்,
சாலையில் போடப்படும் கோலங்கள் ஊரை வண்ண மயமாக்கும்,

மிட்டாய் கடைகள், பலூன் கடைகள், ராட்டினங்கள்  மேலும் பல விளையாட்டுகள் எல்லோரையும்  கட்டிப்போடும்,

உறவுகளை பேணிப் பாதுகாக்க பாக்கு வைக்கும் வைபவம்,
குழந்தைகளுக்கு உறவினர்கள் தரும் திருவிழா காசு சில நூறை எட்டியிருக்கும்,

பறை, மேளம் மற்றும் கொம்பின் ஓசை விண்ணை அதிரவைக்கும்,
விவசாயத்தில் விளைந்த பொருட்க்களைக் கொண்டு அம்மனுக்கு மதுக்காட்டும் படையல்,
பக்தர்களால் காவடியாட்டம் பால்குடம் முடியிரக்குதல் எவ்வளவோ அன்பின் பொருட்டு,

இந்த ஒரு வாரம் எங்கு பார்த்தாலும் மனித தலைகள் அன்பின் வெளிப்பாடுகள் விசாரிப்புகள் எல்லாம் இயல்பாய் நடக்கும்,
கடைசி நாளில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன்,
காப்பு களைதலில் முடியும் எல்லாம்,
அன்று எல்லோர் மனதிலும் வலி, ஏன் எல்லாம் இவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று,
சிறு பிள்ளையாருக்கையில் அந்த கடைசி நாளில் அழுதிருக்கிறேன் யாருக்கும் தெரியாமல்,

எனக்கு ஒரு பேராசை மட்டுமே உண்டு இறைவா என் வாழ்வில், அடுத்த பிறவி ஒன்று எனக்கு உண்டெனில் , நான் என் ஊரிலேயே திரும்ப பிறக்க வேண்டும் என்பதே அது.

சாமியின் நினைவலைகள்

Tuesday, May 5, 2020

ஆதவனின் வேலை

தன்னில் உள்ள எல்லாவற்றையும்
காட்டிய பின்னும், 
வற்றவைக்கப்பட்டது குளம்.

சாமியின் சிந்தனை.

நம்பிக்கை அழகு

வானம் நட்சத்திரங்களையும்,
நட்ச்சத்திரம் வானத்தையும்
முழுமையாக நம்புகின்றன.
சாமியின் சிந்தனை.

எது அழகு

மண்ணுக்குள் 
இருக்கும் மலர், வேர்.
சாமியின் சிந்தனை


Sunday, May 3, 2020

மகிழ்ச்சிகரமாக_வாழ40_வழிகள்

#மகிழ்ச்சிகரமாக_வாழ40_வழிகள்!!!

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான  எண்ணங்களை உங்களின் மனதில் தினமும்  ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். 

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். 

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம்,   கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.  

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப்  பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும்  உங்களை என்றென்றும் காப்பாற்றுவார்  என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள்.  அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.  

30. உங்களுக்கு  மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக  இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி  விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு  அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு  முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள். 

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து  இறங்குங்கள். 

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

வாழ்க வலிமையுடன்!!!

Astro Bakthavachalam...

கொரானா காலம்

எனக்கு நானே முடித்திருத்த முயற்சி செய்தேன்,
என் அகந்தை அழிந்தது.
சாமியின் சிந்தனை.

Thursday, April 30, 2020

இன்று மறைந்த யதார்த்த நடிகர் இர்பானின் இறுதி கடிதம் !!!!!!

இன்று மறைந்த யதார்த்த நடிகர் இர்பானின் இறுதி கடிதம் !!!!!!

வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான். எனக்கு 'நியூரோ எண்டோக்ரைன்' புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் அறிந்து வெகு சில நாட்களே ஆகின்றன.
எனது சொல்வளத்தில் 'நியூரோ எண்டோக்ரைன்' புதிய வார்த்தை. இது அரிய வகை புற்றுநோய் என்றார்கள். அப்படித்தான் போல. ஏனெனில், நான் அது குறித்து தேடியபோது மிக சொற்பமான தகவல்களே கிடைத்தன. அந்த வகை புற்றுநோய் பற்றிய ஆய்வுகளும் குறைவு என்பதால் தரவுகளும் குறைவாகவே இருந்தன. அதனாலேயே அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்பதை கணிக்க இயலா நிலை என்னை சூழ்ந்திருந்தது. கிட்டத்தட்ட நான் முயல்வும் பிழைத்தலுமான சோதனை விளையாட்டில் இருந்தேன் என்றே சொல்ல வேண்டும்.
அந்த நோய் என்னுள் வரும் வரை நான் முற்றிலுமாக மாறுபட்ட விளையாட்டு ஒன்றில் இருந்திருக்கிறேன். ஒரு விரைவு ரயில் பயணத்தில் நானிருந்தேன். எனக்கு கனவுகள் இருந்தன. எதிர்கால திட்டங்களும், இலக்குகளும், ஆசைகளும் இருந்தன. நான் அவற்றால் ஆக்கிரமிக்கப்பட
்டிருந்தேன். அப்போது திடீரென என் தோளை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தால் டிக்கெட் பரிசோதகர். அவர் என்னிடம் "நீ இறங்க வேண்டிய இலக்கு வந்துவிட்டது. கீழே இறங்கு" என்றார். நான் குழம்பிப் போனேன். இது நான் இறங்குமிடம் இல்லை என மறுதலித்தேன். ஆனால், அவர் ஊர்ஜிதமாகச் சொன்னார் "இது தான் இலக்கென்று". வாழ்க்கையில் இப்படித்தான் சில நிகழ்வுகள் நடக்கின்றன.
நான் சற்றும் எதிர்பார்த்திராத அந்த திருப்பம் எனக்கொரு விஷயத்தை உணர்த்தியது. சமுத்திரத்தின் நீரோட்டத்தை நம்மால் கணிக்க முடியாது. அத்தகைய நீரோட்டத்தில் மிதக்கும் ஒரு தக்கை தான் நாம். ஆனால், நாம் வெறும் தக்கை என்பதை உணராமலேயே சமுத்திர நீரோட்டத்தை மீறியும் தக்கையை (நம்மை) கரை சேர்க்க முற்படுகிறோம் என்பதை உணர்த்தியது.
எதிர்பாராத திருப்பமாக நோய் எனக்குக் கொடுத்த அதிர்ச்சியில், அச்சத்தில், பதற்றத்தில் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது அருகிலிருந்த என் மகனிடம் ஏதோ உளறியதாக நினைவு. "நான் என்னிடம் இப்போதைக்கு எதிர்பார்ப்பது இந்த நோயை இதே மனநிலையில் எதிர்கொள்ளக் கூடாது. நான் என் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. அச்சமும், பதற்றமும் என்னை வென்றுவிடக் கூடாது. அது என்னை துயரத்தில் ஆழ்த்திவிடும்" என்று அவனிடம் கூறியிருக்கிறேன்.
ஆம், நோய் தரும் நம்பிக்கையின்மையை வெல்வதே எனது இலக்காக இருந்தது. ஆனால், அந்த வேளையில் தான் என்னை வலி கவ்வியது. அதுவரை நான் அனுபவித்த வலிகள் எல்லாம் அந்த பெரும் வலிக்கு அதன் தன்மைக்கு வீரியத்திற்கான முன்னோட்டம் என்பது போல் இருந்தன என்பதை உணர்ந்தேன். என்னை எதுவுமே சமாதானப்படுத்தவில்லை. எதுவும் ஆறுதலாக இல்லை. எதுவும் ஊக்கமளிப்பதாகவும் இல்லை. என் மனதில், நிலையற்றை தன்மை மட்டுமே நிலையானதாக இருந்தது.
நான் லண்டன் மருத்துவமனையில் பிரவேசிக்கும் போது முற்றிலுமாக சோர்ந்து போயிருந்தேன். சலிப்பு மிகுந்திருந்தது. என் சிறுவயதில் எனக்கு மெக்காவாகத் தோன்றிய லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்துக்கு எதிர்புறத்தில் தான் அந்த மருத்துவமனை இருந்தது. ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளும் நிலையில் நானிருக்கவில்லை. என் வலிகளுக்கு மத்தியில் விவியன் ரிச்சர்ட்ஸின் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தேன். உண்மையில் எனக்கு ஏதாவது நடந்திருக்க வேண்டும். ஆனால், என்னுள் எதுவுமே நடக்கவில்லை. இந்த உலகத்திற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்ற உணர்வு மட்டுமே இருந்தது.
நான் சிகிச்சை பெற்ற அந்த மருத்துவமனையில் நானிருந்த தளத்திற்கு நேர் மேல் தளத்தில் சுயநினைவை இழந்தோருக்கான (கோமா) வார்டு இருந்தது. ஒரு நாள் எனது அறையின் பால்கனியில் நான் நின்றிருந்தபோது, ஒரு திடீர் சிந்தனை என்னை உலுக்கியது.
வாழ்க்கை எனும் விளையாட்டுக்கும் மரணமென்ற விளையாட்டுக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான் உள்ளது என்பதை உணர்ந்த தருணம் அது.
எப்படி நான் சாலையின் ஒருபுறமிருக்கும் மருத்துவமனையில் நோயாளியாக நிற்க மறுபுறம் விளையாட்டு மைதானம் இருந்ததோ, எப்படி அந்த இரண்டையுமே யாரும் தனக்கு நிலையானதாக உரிமை கொண்டாட முடியாதோ அப்படித்தான் மனிதன் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே நின்றுகொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன்.
பேரண்டவெளியின் மதிநுட்பத்தை, மிகப் பிரம்மாண்டமான சக்தியை அதன் தாக்கத்தை உணர்ந்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அமைந்திருந்த இடம் எனக்கு அதை இடித்துரைத்தது. ஆம், நிலையின்மை மட்டும்தான் நிலையானது.
அந்த மெய் உணர் தருணம் என்னை யதார்த்த்தின் முன் சரணையடச் செய்தது. நான் பெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை 4 மாதங்களுக்குப் பின் அல்லது 8 மாதங்களுக்குப் பின் இல்லை இரண்டு வருடங்களுக்குப் பின்னர் என்னை எங்கு கொண்டு சேர்க்கும், விளைவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளை எல்லாம் கடந்து நடப்பவற்றிற்கு என்னை உட்படுத்திக் கொள்ளத் தூண்டியது. அப்போது கவலைகள் பின்னடைவைக் கண்டன. அப்படியே சில நாட்களில் மங்கிப் போயின. அடுத்த சில நாட்களில் என் எண்ண வெளியிலிருந்தே கவலைகள் விலகியிருந்தன.
முதன் முறையாக நான் சுதந்திரத்தை உணர்ந்தேன். முதன்முறையாக சாதனை படைத்ததாக நினைத்தேன். அப்படி ஒரு வெற்றியை முதன்முறையாக சுவைத்தது போல் இருந்தது. அது வெற்றியின் மாயாஜாலம் என்பேன். அண்டவெளியின் மதிநுட்பத்தின் மீதான எனது நம்பிக்கை தீர்க்கமானது. அது என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் புகுந்தது போல் உணர்ந்தேன்.
ஆனால், அது அங்கேயே நிலைத்திருக்கும
ா என்பதை காலம் தான் சொல்லும். இப்போதைக்கு இந்த உணர்வு நன்றாக உள்ளது.
நோயுடனான எனது போராட்டப் பயணத்தில் மக்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பலர் எனக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். நான் அறிந்த நபர்கள் மட்டுமல்லாது, எனக்குப் பரிச்சியமே இல்லாதவர்களும் கூட என் நலன் விரும்புகின்றனர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேர மண்டலங்களில் இருந்து எனக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் அனைவரின் பிரார்த்தனைகள் ஒன்றிணைகிறது. அது ஒரே சக்தியாக, ஒரே உயிரோட்டமாக உருமாறி எனக்குள் புகுந்தது. எனது முதுகெலும்பின் முடிவில் அதை நான் உணர்கிறேன். எனது புத்தியில் வளர்கிறது.
சில நேரம் மொட்டாக, சில நேரம் இலையாக, அப்புறம் தளிராக கிளையாக துளிர்க்கிறது. நான் அதை ரசிக்கிறேன். ஒவ்வொரு பூவும், ஒவ்வொரு கிளையும் கூட்டுப் பிரார்த்தனையால் விளைந்தவை. அவை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. எனக்குள் மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. அதேவேளையில், ஒரு தக்கை சமுத்திரப் பேரலையின் நீரோட்டத்தை தனக்கானதாக தகவமைக்க வேண்டிய அவசியமில்லை என்ற மெய்யை உணரச் செய்கிறது. தக்கை அசைந்தாடுவது இயற்கை. இயற்கை தனது தொட்டிலில் உங்களை மென்மையாகத் தாலாட்டிக் கொண்டிருக்கிறது என்று வாழ்க்கையை ஏற்கவும்.
# இர்ஃபானின் கடைசிக் கடிதம்

Saturday, April 25, 2020

writer S.Ramakrishnan வலைப்பக்கத்திலிருந்து, குறுங்கதை, இது வேறு ஜன்னல்

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
ஏப்ரல் 23 உலகப் புத்தக தினம்

குறுங்கதை 54 
இது வேறு ஜன்னல்

பூங்காவில் அந்த மனிதர் பேசிக் கொண்டிருப்பதை ஒரு இளைஞன் கேட்டுக் கொண்டிருந்தான்.

“ என் வீட்டின் ஜன்னல்களை எண்ணமுடியாது.. ஒவ்வொரு ஜன்னலைத் திறக்கும் போது நான் காணும் காட்சிகள் வேறு வேறானவை. மனிதர்கள் நிறைய ஜன்னல்கள் உள்ள வீடுகளில் வசிக்க வேண்டும். எந்த ஜன்னல் வழியாக உலகை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று தெரியாது. வெட்டவெளி கற்றுத்தராததை ஜன்னல்கள் கற்றுத் தந்துவிடக் கூடியது என்றார் அந்த மனிதர்

“உங்கள் வீடு எங்கேயிருக்கிறது “எனக்கேட்டான் அந்த இளைஞன்

“மாதா கோவில் பின்புறமுள்ள தெரு. கடைசி வீடு. பெரிய மாமரமிருக்கும்“ என்றார்.

“நான் உங்கள் வீட்டிற்கு வரலாமா“ எனக்கேட்டான் இளைஞன்

“கண்டிப்பாக வரலாம்“ எனப் புன்னகைத்தார் அந்த மனிதர்

மறுநாள் மாலை அவரது வீடு தேடிச்சென்றான். வெளியே. மாமரம் தென்பட்டது. அவன் நினைத்தது போலப் பெரிய வீடில்லை. சராசரியான சிறியதொரு வீடு. அதில் ஒரு மாடி. வெளியே இருந்து பார்த்தால் இரண்டே ஜன்னல்கள்.

ஏன் இந்த மனிதர் இப்படிப் பொய் சொன்னார் எனக்குழம்பியபடியே காலிங்பெல்லை அடித்தான். அவரே கதவைத் திறந்தார்

“ஏன் இப்படிப் பொய் சொல்லுகிறீர்கள் “எனச் சற்றே கோபமாகக் கேட்டான் இளைஞன்

“என்ன பொய். எதற்கு இவ்வளவு கோபம். உள்ளே வா தம்பி “என்றார் அந்த மனிதர்

“எண்ண முடியாத ஜன்னல்கள் இருப்பதாகச் சொன்னீர்களே“ எனக்கேட்டான் இளைஞன்

“அதுவா.. ஜன்னல் என்றதும் மரஜன்னல் நினைவிற்கு வந்தால் அதற்கு நானா பொறுப்பு“ எனக்கேட்டுச் சிரித்தார்

“மரமோ கண்ணாடியோ இரும்போ எதுவாயினும் ஜன்னல்கள் வெளியே தெரியும் தானே“ என்றான் இளைஞன்

“வா மாடிக்குப் போகலாம்“ என அழைத்துக் கொண்டு போனார். அங்கே சுவர் முழுவதும் மரரேக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள். எழுதும் மேஜையில், கட்டிலில், தரையில் என வரிசை வரிசையாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன.

“இது தான் நான் சொன்ன எண்ணிக்கையற்ற ஜன்னல்கள். புத்தகம் தான் எனக்கான ஜன்னல். அதைத் திறந்தவுடன் என் வீட்டின் எதிரில் உள்ள காட்சிகள் தெரியாது. ஆனால் தொலைதூர உலகம் தெரியும். அதன் மனிதர்கள் தெரிவார்கள். மாமன்னர்களைக் கூட இருந்த இடத்திலே காண முடியும். ஓராயிரம் குதிரைகள் ஒரு புத்தகத்திற்குள் ஓட முடியும்.

உலகிற்கு இவை வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள். எனக்கோ என் அறிவிற்கான, அனுபவத்திற்கான ஜன்னல்கள்..

மரமும் கல்லும் இரும்பும் கொண்ட வீட்டிற்கே பத்து பன்னிரண்டு ஜன்னல்கள் தேவை என்றால் ,பெருவாழ்க்கை வாழ முற்படும் மனிதனுக்கு எத்தனை ஜன்னல்கள் தேவை.. நீயே யோசித்துப்பார். “

அவன் வியப்போடு ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். ஸ்பினோசாவின் எதிக்ஸ் என்ற புத்தகமது. அதன் முகப்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எனக் கையெழுத்துப் போட்டிருந்தது. அவன் வியப்போடு கேட்டான்

“ஐன்ஸ்டீன் படித்த புத்தகமா. “

“பார்த்தாயா. ஒரு புத்தகம் எழுதப்பட்டவனால் மட்டுமில்லை வாசித்தவனாலும் புகழ் பெறுகிறது. இந்தப் புத்தகம் என் பிறந்த நாளுக்கு எனது அமெரிக்க நண்பர் கொடுத்த பரிசு

புத்தகங்களுக்குள் காடும் கடலும், மலையும் அருவிகளும், பாலையும் பள்ளத்தாக்கும் இருக்கின்றன. உலகில் நீ காணும் சகல உயிரினங்களும், சந்திர சூரியர்களும் கூட புத்தகங்களுக்குள்ளே இருக்கிறார்கள். புத்தகங்களுக்குள்ளும் நல்ல மனிதர்கள், கெட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். புத்தகங்கள் சூழ வாழுகிறவனின் மகிழ்ச்சியை உன்னால் புரிந்து கொள்ள முடியாது

பாடப்புத்தகங்களுககு வெளியே எதையும் இதுவரை படிக்கவில்லை இன்றே வாசிக்கத் துவங்கு. உன் ஜன்னல் திறக்கும் போது அதன் புதிய வெளிச்சத்தையும்,காற்றையும்,முன்னறியாத காட்சிகளையும் நீ காணுவாய், உணருவாய். உன்னை விரிவடையச் செய்யும் போது உலகமும் சேர்ந்து விரிவடையும்“

அந்தப் பையன் ஆசையோடு கேட்டான்

“இங்கேயே அமர்ந்து இந்தப் புத்தகத்தைப் படிக்கலாமா“

“சந்தோஷமாக “என்றார் அந்த மனிதர்

அந்த இளைஞன் ஐன்ஸ்டீன் படித்த ஸ்பினோசா புத்தகத்தைப் புரட்டினான்.

நூற்றாண்டு காலம் ஒரு நொடியில் மறைந்து புத்தம் புதியது போலப் புத்தகம் அவனை வரவேற்றது.

சொற்களின் வழியே அவன் பறக்கத் துவங்கியிருந்தான்.