Friday, February 27, 2026

மலையிலிருந்து இறங்கியவுடன் 
நினைவுகள் எல்லாம் 
ஏறி அமர்ந்து கொள்கிறது
மனதில்.

-பூமி.சாமி.
சில நேரங்களில் 
இருப்பவைகளையும்
இருப்பவர்களையும்
தாண்டி 
இல்லாதவர்களையும்
இல்லாதவைகளையும்
நினைத்து கணக்கிறது மனசு.

-பூமி‌.சாமி.

Wednesday, February 18, 2026

அடிமையாய் இருக்கிறோம் 
என்று உணராமலேயே
மீசையை மட்டும் முறிக்கிக் கொண்டு 
முடிந்து விடுகிறது 
சிலரது வாழ்க்கை.

-பூமி.சாமி.

Monday, February 9, 2026

எப்படி அந்த அழகிய ரோஜாவை பறித்து 
கடவுளுக்கு காணிக்கை ஆக்க முடிந்தது சகி,
கடவுளிடம் கேட்டிருந்தால் கூட பறிக்க வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பார்.

-பூமி.சாமி.

Sunday, February 8, 2026

நீ எவ்வளவு 
கொடுத்திருக்கிறாய் எனக்கு

அவமானம் 
அலட்சியம் 
ஏமாற்றம் 
அவமதிப்பு 
திமிர்த்தனம்

ஆனால் 
உனக்கு கொடுக்க 'அன்பு '
மட்டுமே இருக்கிறது என்னிடம்.

யாரிடம் என்ன இருக்கிறதோ
அதைதானே கொடுக்க முடியும்.

-பூமி.சாமி.