Friday, December 31, 2021

HAPPY NEW YEAR- 2022

WISH
         YOU 
                 A
                       HAPPY  NEW YEAR-2022.

                                                  By Samy & Family.

Friday, December 24, 2021

படித்ததில் பிடித்தது

'குழந்தைகளைத் திட்டுங்கள்' என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்..

இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டுவதே இல்லை என்பதை பெருமையாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், 'டீச்சர் திட்டினார்', 'அம்மா முறைத்தாள்', 'அப்பா அடிக்க கையை ஓங்கினார்' எனச் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தற்கொலை வரை செல்கிறார்கள்..

பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கும் குழந்தைகள், தோல்விகளிலிருந்து தங்களை வேகமாக மீட்டெடுத்துக் கொள்வார்கள்..

தவறு செய்கிற குழந்தைகளைப் பெற்றோர் திட்டித் திருத்துவது, இயல்பான விஷயம். அதனால், உங்கள் குழந்தைகளை வசவுகளுக்குப் பழக்குங்கள்..

அது அவர்களுக்கான மன அழுத்த மேலாண்மை.

'குழந்தைகளைத் திட்டி வளர்ப்பது அத்தனை நல்ல விஷயமா?' என்ற கேள்விக்கு குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி அவர்களின் பதில்...

********************************

ஒரு தலைமுறை முன்புவரை நம்மைப் பெற்றோர் திட்டித்தானே வளர்த்தார்கள். டீன்ஏஜ் வயதிலும் பெற்றவர்களிடம் அடிவாங்கி இருக்கிறோமே. அவர்கள் திட்டி சரிப்படுத்தியதால் என்ன குறைந்துவிட்டோம்? நன்றாகத்தானே இருக்கிறோம்?

பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதற்கு சமம்.

இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாடவேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.

அதைவிடுத்து, 'நான்தான் என் பெற்றோரிடம் வசவும் அடியும் வாங்கி வளர்ந்தேன். என் பிள்ளைக்கு அதெல்லாம் கூடாது' என இருந்தால், உங்கள் குழந்தை மனதளவில் பூஞ்சையாக இருக்கும். இதுதான் நீங்கள் வேண்டுவதா?

சில நாள்களுக்கு முன்பு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், 'அம்மா டி.வி. பார்க்க விடுவதில்லை. ஏன் படிக்கலைன்னு கேள்வி கேட்கிறார். அதனால் அவருக்கு ஒரு லெஸன் டீச் பண்ணணும்னு, ஆரஞ்சு ஜூஸ்ல விஷம் கலந்து தற்கொலை செஞ்சுக்க டிரை பண்ணினேன்' என்று பள்ளிச் சிறுமி சொல்லியிருக்கிறாள். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் தெரியுமா?

சிறு வயதிலிருந்து 'ஏய்' என்கிற அதட்டல்கூட போடாமல் வளர்த்துவிட்டு, திடீரென்று 'பிள்ளை கைமீறிப் போகிறதே' என்ற பயத்தில் தட்டிக் கேட்கும்போது, அவர்கள் மனம் உடைகிறது. அதிர்ச்சியிலும் கோபத்திலும் தவறான முடிவை எடுக்கிறார்கள். அல்லது இந்தச் சிறுமிபோல, பெற்றவர்களையே தற்கொலை என்ற பெயரில் மிரட்டத் துணிகிறார்கள்.

மேலே சொன்ன சிறுமி போல் இல்லாமல்,

பெற்றோரடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக் கொள்வார்கள்.

தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள்.

குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள்.

ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது..

அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுப்பது..
தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது..
மற்றவர்களை மன்னிப்பது..
தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது..

போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் வளர்ப்பது அவசியம்.

இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் புத்திசாலித்தனம். பிள்ளைகள் மரமான பிறகு வேலியைக் கட்டுவது சுலபமில்லை.

எனவே, 'அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க' என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள்.

********************************

என்று பதில் கூறினார்.  எனவே பெற்றோர்களே இதனை மனதில் கொண்டு குழந்தைகளை கண்டித்து வளர்க்கப் பாருங்கள். அளவிற்கு மீறிய சுதந்திரம் ஆபத்தானது. 

இதுபோன்ற உளவியல் செய்திகளால் சிறிதாவது மாற்றம் நிகழட்டும். பகிருங்கள்.

Friday, December 17, 2021

வாடிக்கையாக வாங்கும் 
கீரைக்கார பாட்டியை
ஒரு வாரமாய் வழக்கமான இடத்தில் காணவில்லை எனும் போது
பதை பதைக்கிறது மனது.

-சாமி.

Monday, December 13, 2021

ஓஷோவின் 22 கட்டளைகள் .





ஓஷோவின் 22 கட்டளைகள் ....

1.இது அப்படி ஒரு சிறிய வாழ்வு.ஆபத்துகளை தேர்ந்தெடுங்கள்,சூதாடுபவனாக இருங்கள்.நீங்கள் எதை இழக்க முடியும்?நாம் வெறுங்கையுடன் வந்தோம்,நாம் வெறுங்கையுடன் போகிறோம்.கொஞ்ச நேரம் விளையாட்டாய் இருக்க, ஒர் அழகான பாடலை பாட,அவ்வளவுதான் முடிந்துவிடும் காலம்.ஆகவே ஒவ்வொரு கணமும் மிகவும் மதிப்பு மிக்கது.

2.உலகத்தை துறந்து விடுங்கள் என்று எல்லா மதங்களும் கற்பிக்கின்றன.உலகத்தை மாற்றுங்கள் என்று நான் கற்பிக்கிறேன்.

3.உங்களது பிரச்சனை இந்த உலகமல்ல, உங்களது பிரச்சனை உங்களின் விழிப்புணர்வுயின்மையே. உங்களின் விழிப்புணர்வுயின்மையை துறந்து விடுங்கள்,உலகத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்

4.உங்களது வாழ்விலுள்ள சகல நஞ்சுகளுக்கும் தியானமே நச்சு முறிவு.அதுவே உங்களது ஆதார இயல்பை வளமாக்கும் சத்துமாகும்.

5.மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த பூசாரிகள் கண்டுபிடித்த மிக பழமையான ஒரு தந்திரமே குற்றவுணர்வு. அவர்கள் குற்றவுணர்வை உங்களிடம் ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் மடத்தனமான நீங்கள் நிறைவேற்ற முடியாத கருத்துகளை உங்களுக்கு கொடுக்கிறார்கள்.அதனால் அதன்பின் குற்றவுணர்வு எழுகிறது.ஒரு முறை குற்றவுணர்வு எழுந்ததும், நீங்கள் பொறியில் சிக்கியவர்கள் ஆகிவிடுகிறீர்கள். குற்றவுணர்வே-மதம் என்று கூறி கொள்ளும் நிறுவனங்களின் வியாபார ரகசியமாகும்.

6.மகிழ்ச்சியடையுங்கள்,பாடுங்கள்,ஆடுங்கள். உங்களது ஆணவங்கள் உருகி மறைந்து போகுமளவு முழுமையாக ஆடுங்கள்.ஆடுபவன் அங்கு இல்லாமல் போய்விடுமளவு முழுமையாக ஆடுங்கள். வெறும் ஆடல் மட்டுமே எஞ்சியிருக்கட்டும்.அப்போது நீங்கள் எங்கிருந்தாலும் என்னை காண்பீர்கள்.

7.எல்லா சரியானவையும் ஒருவித ஆழமான ஆணவ பயணங்களே.உங்களை பற்றி மிகவும் சரியானவராகவும்,கொள்கை கோட்பாடு கொண்டவராகவும் நினைத்து கொள்வது என்பது உங்களின் ஆணவத்தை முடிந்த மட்டும் அலங்கரித்து கொள்வதல்லாமல் வேறொன்றுமில்லை.வாழ்க்கை மிக சரியாக அமைந்தது அல்ல என்பதை அடக்கமானவன் ஏற்று கொள்கிறான்.

8.நான் பாலுணர்வுக்கு எதிரானவன் அல்ல. ஏனெனில் பாலுணர்வுக்கு எதிரானவர்கள் எப்போதும் பாலுணர்விலேயே இருப்பார்கள். நான் பாலுணர்வுக்கு ஆதரவானவன்,ஏனெனில் அதில் நீங்கள் ஆழமாக சென்றால் விரைவிலேயே நீங்கள் அதை விட்டு வெளியே வந்து விடுவீர்கள். எவ்வளவு அதிக பிரக்ஜையோடு போகிறீர்களோ,அவ்வளவு விரைவில் நீங்கள் அதிலிருந்து வெளியே வந்து விடுவீர்கள்.ஒருவன் பாலுணர்விலிருந்து முழுமையாக வெளியே வந்து விடும் நாள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகும்.

9.கலவி இன்பத்தில் காலம் மறைகிறது, ஆணவம் மறைகிறது, மனம் மறைகிறது. ஒரு கண நேரம் முழு உலகமும் நின்று போகிறது. இதுவேதான் ஆன்மவுணர்வு இன்பத்தில் மிகப்பெரிய அளவில் நிகழ்கிறது. கலவி கணப்பொழுதானது. ஆன்மவுணர்வு நிரந்தரமானது. ஆனாலும் கலவி ஆன்மவுணர்வின் ஒரு பொறியை உங்களுக்கு கொடுக்கிறது.

10.கடவுள் ஒரு நபர் அல்ல. நீங்கள் கடவுளை வழிபட முடியாது. நீங்கள் தெய்வ நிலையில் வாழலாம், ஆனால் நீங்கள் தெய்வத்தை வழிபட முடியாது. வழிபடுவதற்கு ஒருவரும் அங்கில்லை. உங்கள் எல்லா வழிபாடுகளும் வெறும் மடத்தனம். உங்கள் எல்லா கடவுளின் உருவங்களும் உங்களுடைய படைப்பே. அந்த வகையில் தெய்வம் கிடையாது. ஆனால் கண்டிப்பாக தெய்வீகம் உண்டு-பூக்களில், பறவைகளில், விண்மீன்களில், மக்களின் கண்களில், இதயத்தில், ஒரு பாடல் எழும்போது, கவிதை உங்களை சூழ்ந்து கொள்ளும் போது..... இவையெல்லாம் கடவுளே.

11.எல்லா ஒழுக்கங்களும் ஒழுக்கம் அல்ல. ஒரு நாட்டில் ஒழுக்கமாக இருக்கும் ஒன்று மற்றொரு நாட்டில் ஒழுக்கமற்றதாக இருக்கிறது. ஒரு மதத்தில் ஒழுக்கமாக இருக்கும் ஒன்று மற்றொரு மதத்தில் ஒழுக்கமல்ல. இன்று ஒழுக்கமாக இருக்கும் ஒன்று நேற்று ஒழுக்கமில்லை. ஒழுக்கங்கள் மாறும். ஒழுக்கங்கள் வெறும் மேம்போக்கானவை. ஆனால் பிரக்ஜை நிரந்தரமானது. அது ஒரு போதும் மாறாது. அது பரிபூரணம்-சத்தியம்.

12.தந்த்ரா, கிழக்கத்திய மிகப்பெரிய தத்துவம். அது பாலுணர்வை புனிதம் என்று அழைக்கிறது. மிகமிக முக்கியமான வாழ்வு சக்தி என்று அழைக்கிறது. ஏனெனில் எல்லா உயர் மாற்றங்களும் அந்த சக்தியின் மூலமே நிகழ போகிறது. அதை பழிக்காதீர்கள்.

13.அன்பு ஒரு மாறும் உறவு. அது நிலையானதன்று. ஆகவேதான் திருமணம் ஏற்பட்டது. திருமணம் காதலின் மரணம். ஆமாம் நீங்கள் ஒரு அழகான சமாதியை, பளிங்கு சமாதியை, ஒரு அழகான நினைவாலயத்தை எழுப்புகிறீர்கள். ஆனால் நீங்கள் என்ன சொல்லி அழைத்தாலும் அது புதைக்குழிதான்.

14.தியானமில்லாத வாழ்வு வெறும் தீனி தின்று கொண்டு இருத்தலே. நீங்கள் வெவ்வேறுவிதமான தீனிப்பிண்டங்களாயிருக்கலாம், யாராவது முட்டைகோஸ், யாராவது காளிபிளவர்.....ஒரு காளிபிளவர் என்பது காலேஜ் படித்த முட்டைகோஸ்தான், பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.

15.உண்மையான நபர்களுக்கு மட்டுமே உண்மையான நிகழ்வுகள் நிகழ முடியும். குருட்ஜிப் எப்போதும் சொல்வார்: உண்மையை தேடாதே-உண்மையாக மாறு. ஏனெனில் உண்மை உண்மையான நபர்களுக்கு மட்டுமே நிகழ்கிறது. உண்மையாய் இல்லாத நபர்களுக்கு உண்மையல்லாதவையே நிகழும்.

16.ரோஜாக்கள் மிக அழகாக பூக்கின்றன.ஏனெனில் அவை, தாமரைகளாக மாற முயலுவதில்லை. தாமரைகள் மிக அழகாக பூக்கின்றன. ஏனெனில் மற்ற மலர்களை பற்றிய கதைகளை அவை கேட்பதில்லை. இயற்கையில் எல்லாமே மிக அழகாக ஒருங்கிணைந்து செல்கின்றன. ஏனெனில் எதுவும் எதுவோடும் போட்டி போடுவதில்லை. எதுவும் மற்றொன்றாக மாற முயல்வதில்லை. எல்லாமே அதனதன் வழியே செல்கின்றன.

சற்றே இதை கவனியுங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள். மேலும் நீங்கள் என்ன செய்தாலும் வேறுவிதமாக ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லா முயற்சிகளும் பயனற்றவையே. நீங்கள் நீங்களாக இருக்க மட்டுமே முடியும்.

17.நேசம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. உண்மையான உறவும் ஒரு கண்ணாடியே. அதில் இரண்டு காதலர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அதன் மூலம் கடவுளை அடையாளம் தெரிந்து கொள்கின்றனர். இது கடவுளை சென்றடையும் ஒரு பாதையே.

18.நேசத்தில் ஒன்றும் ஒன்றும் சேர்ந்து ஒன்றுதான், இரண்டல்ல, ஆழமான அன்பில் இருமைத்தன்மை மறைகிறது. கணக்கு கடந்து செல்லப்படுகிறது, அது அர்த்தமற்று போகிறது. ஆழமான அன்பில் இரண்டு நபர்கள் இரண்டு நபர்களாக இருப்பதில்லை. அவர்கள் ஒன்றாகிவிடுகின்றனர். அவர்கள் உணர்வில், செயலில், ஒரே ஒருவராக, ஒரே உயிராக, ஒரே பேரானந்தமாக செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.

19.தியானத்திற்கு சட்டங்களில்லை. அது ஒரு ஜன்னலோ, கதவோ அல்ல. தியானம் என்பது ஒருமுகப்படுத்துவது அல்ல. அது வெளி கவனிப்பு அல்ல. தியானம் என்பது விழிப்புணர்வு.

20.நீங்கள் பயந்தால், அடுத்தவருக்கு உங்களை பயமுறுத்த நீங்களே சக்தியளிப்பவர் ஆகிறீர்கள் என்பது வாழ்வின் அடிப்படையான ஒரு விதி. பயத்தை பற்றிய உங்கள் எண்ணமே போதும், அடுத்தவருக்கு உங்கள்மேல் துணிச்சலை தோற்றுவித்து விடும்.

21.ஒவ்வொரு கணத்தையும் இதுவே கடைசி கணம் என்பதை போல வாழுங்கள். யாருக்கும் தெரியாது- இதுவே கடைசியாகவும் இருக்கலாம்.

22.புரிதல் இல்லாத நிலையே யோசனை. உங்களுக்கு புரியாததால்தான் நீங்கள் யோசிக்கிறீர்கள். புரிதல் எழும்போது யோசனை மறைந்துவிடும் - ப.அறிவொளி
ஒரு அந்திமாலை பொழுது,
நான் வெள்ளி விண்மீனை பார்க்க,
வெள்ளி விண்மீன் நிலவை பார்க்கிறது,
அது ஒரு முக்கோண காதல் கதை.

-சாமி.

Tuesday, December 7, 2021

நல்லவைகளை எடை போடுவோம்

சிலரை பிடிக்கவில்லை என்று ஒதுக்கினேன் 

சிலரை நம்பிக்கையற்றவர்கள் என்று ஒதுக்கினேன் 

சிலரை நன்றியற்றவர்கள் என்று ஒதுக்கினேன் 

சிலரை நாணயம் அற்றவர்கள் என்றும் சிலரை நேர்மையற்றவர்கள் என்றும் ஒதுக்கினேன்

 சிலரை அக்கறையற்றவர்கள் என்றும் சிலரை  நாகரிகமற்றவர்கள் என்றும் ஒதுக்கினேன்

காடு தோப்பானது

இப்பொழுதும் சிலரை எடை போட்டுக் கொண்டே இருக்கிறேன்

 தோப்பு மரம் ஆகலாம்

கடைசியில் என்னை நானே எடைபோட முயன்றால் இவையெல்லாம் என்னுள்ளும் இருப்பதால் என்னை என்னால் ஒதுக்க முடியுமா.

-சாமி.

Saturday, December 4, 2021

ஆறறிவு - ஐந்தறிவு

எனக்கு புன்னகையை கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு பன்னீர் ரோசா

அன்பை கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு அன்றில் பறவை

நன்றியை கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு நாய் 

பகிர்தலை கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு காகம்

காத்திருத்தலை  கற்றுக் கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு கொக்கு 

பொறுமையை கற்றுக்கொடுக்க நினைத்து தோற்றுப் போகிறது ஒரு ஆமை

இவையாவும் கற்றுக்கொள்ள முடியாத நான், நானே சொல்லிக் கொள்கிறேன் நான் ஆறறிவு என்றும் அவைகள் ஐந்தறிவு என்றும்.

-சாமி.

Friday, December 3, 2021

வாய்ஜாலத்தின் மூலம் உங்களது பிம்பங்களை கட்டமைக்க முயலாதீர்கள்
அது நீர்க்குமிழி போல்தான்.

-சாமி.

Thursday, December 2, 2021

அம்மா அப்பா என்ற சொல் அகராதி(Dictionary)

இவ்வகராதியில் இல்லாத வார்த்தை "எதிர்பார்ப்பு"

பார்க்கும் இடமெல்லாம் காணும் வார்த்தை "தியாகம் "

தேடினாலும் கிடைக்காத வார்த்தை "தன்னலம்"

திரும்பத் திரும்ப வரும் வார்த்தை "அன்பு"

 எப்ப பார்த்தாலும் சொல்லும் வார்த்தை "தன் பிள்ளைகள்"

எல்லா பக்கங்களிலும் உள்ள வார்த்தை "குடும்பம்"

கடின வார்த்தைகளை இலகு வாக்குவது "சொல் அகராதி"

கடின வாழ்க்கையை இலகுவாக்குவது பெற்றோர் என்ற இவ்அன்பு அகராதி.

-சாமி.

Monday, November 29, 2021

இருள்

உலகின் மறைக்கமுடியாத உண்மை நீ
உலகில் உள்ளவைகளை மறைக்க முடிந்தவனும் நீ
இரைச்சல்களை விழுங்கி அமைதியை உமிழ்வாய்
கண் மறைத்து மனதை திறப்பாய்
பகல் பிரச்சினைகளை பேசி தீர்ப்பாய்
இன்பங்களில் சிரிக்க வைத்து ஒலி நிறைப்பாய்
துன்பங்களில் கண்ணீர் மறைப்பாய்
தூக்கம் நிறைப்பாய்
துக்கம் குறைப்பாய்
வலி குறைப்பாய்
மீண்டும் போரிட வல்லமை கொடுப்பாய்

காலையில் எங்கும் நீங்கிடும் நீ
 சிலர் மனங்களில் மட்டும் ஏன் நிரந்தரமானாய்.


-சாமி.

Friday, November 26, 2021

தேன்

அழகை எடுத்து செல்கிறதா
அல்லது கொடுத்து செல்கிறதா.
வண்ணத்துப்பூச்சி மலரை முத்தமிடும் தருணம்.

-சாமி.

Thursday, November 18, 2021

நகர வாழ்க்கை.

 அடுக்கக சன்னலில்,
எவ்வளவோ கை நீட்டி பார்க்கிறேன்
ஒருதுளி மழைத்துளி கூட என் கைத்தொட மறுக்கிறது.


-சாமி.

பேராசை

அன்று மயிலிறகு வைத்த நோட்டு பக்கங்களில்
 இன்று ரூபாய் நோட்டை வைத்து காத்திருக்கிறேன் 
குட்டிப் போடும் என்ற பேராசையோடு.

-சாமி.

Saturday, November 6, 2021

பின்வருவதை யார் எழுதியிருந்தாலும், இது ஒரு அற்புதமான கட்டுரை.*



 
ஒவ்வொரு படத்திற்கும் 50 கோடி அல்லது 100 கோடி வாங்கும் இந்த நடிகர்கள் நடிகைகள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு ஒன்றுமே புரியவில்லை ?


சிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள் போன்றவர்கள் ஆண்டுக்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் நாட்டில், அந்த நாட்டில் ஒரு திரைப்பட நடிகர் ஆண்டுக்கு 10 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.


எல்லாவற்றிற்கும் மேலாக அவர் என்ன செய்கிறார்?


நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு என்ன? 
எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் / அவள் என்ன செய்கிறார், அவர் / அவள் ஒரு வருடத்தில் இவ்வளவு சம்பாதிக்கிறார், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிக்கு 100 ஆண்டுகள் ஆகலாம்!


இன்று, நாட்டின் புதிய தலைமுறையினரைக் கவர்ந்த மூன்று பகுதிகள் சினிமா, கிரிக்கெட், அரசியல்.


இம்மூன்று துறைகளைச் சேர்ந்தவர்களின் சம்பாத்தியமும், கௌரவமும் எல்லா வரம்புகளுக்கும் அப்பாற்பட்டது.


இந்த மூன்று பகுதிகளும் நவீன இளைஞர்களின் இலட்சியங்கள் ஆகும், அதே நேரத்தில் அவர்களின் நம்பகத்தன்மை தற்போது கேள்விக்குறியாக உள்ளது.


அதனால் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பயனில்லை.


பாலிவுட்டில் பல நெறிமுறைகள் இழந்தன, கிரிக்கெட்டில் மேட்ச் பிக்சிங், போக்கிரித்தனம் மற்றும் அரசியலில் ஊழல். 
இதற்கெல்லாம் பணம்தான் முக்கிய காரணம், இந்தப் பணத்தை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது நாம்தான்.


சொந்த பணத்தை எரிப்பதன் மூலம் நமக்கு நாமே தீங்கிழைக்கிறோம். 
இது முட்டாள்தனத்தின் உச்சம்.


70-80 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரபல நடிகர்கள் சாதாரண சம்பளம் பெற்று வந்தனர்.


30-40 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிரிக்கெட் வீரர்களின் சம்பாத்தியமும் சிறப்பாக இல்லை.


30-40 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியலில் இவ்வளவு கொள்ளையடிக்கப்படவில்லை.


மெதுவாக அவர்கள் எங்களை கொள்ளையடிக்க ஆரம்பித்தனர், நாங்கள் மகிழ்ச்சியுடன் கொள்ளையடித்தோம்.
 

இந்த மாஃபியாக்களின் பிடியில் சிக்கி, நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும், நம் நாட்டையும் அழித்துக் கொண்டிருக்கிறோம்.
 

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை, திரைப்படங்கள் இவ்வளவு அசிங்கமாகவும், ஸ்லோவாகவும் எடுக்கப்படவில்லை. 
கிரிக்கெட் வீரர்களும் அரசியல்வாதிகளும் அவ்வளவு திமிர்பிடித்தவர்கள் அல்ல. 
இன்று அவர் நம் கடவுளாக (?) மாறிவிட்டார். 
இப்போது இவர்களை தலையில் இருந்து தூக்கி வசைபாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


ஒருமுறை, அப்போதைய வியட்நாம் அதிபர் ஹோ-சி-மின் இந்தியா வந்தபோது, ​​இந்திய அமைச்சர்களுடனான சந்திப்பில், "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.


இந்த மக்கள் சொன்னார்கள் - "நாங்கள் அரசியல் செய்கிறோம்."


இந்த பதிலை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதனால் அவர் மீண்டும் கேட்டார் - "அதாவது, உங்கள் தொழில் என்ன?"


இந்த மக்கள் சொன்னார்கள் - "அரசியல் எங்கள் தொழில்."

 
ஹோ-சிமின் சற்று எரிச்சலுடன் சொன்னார் - "ஒருவேளை உங்களுக்கு என் அர்த்தம் புரியாமல் இருக்கலாம். நானும் அரசியல் செய்கிறேன், ஆனால் தொழிலால், நான் ஒரு விவசாயி, நான் விவசாயம் செய்கிறேன். விவசாயம்தான் என் வாழ்வாதாரம். காலையிலும் மாலையிலும் நான் 
எனது வயல்களுக்குச் செல்லுங்கள், நான் வேலை செய்கிறேன், பகலில் ஜனாதிபதியாக எனது பொறுப்பை நான் செய்கிறேன்.


ஹோ-சி-மின் மீண்டும் அதையே கேட்டபோது, ​​தூதுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தோள்களைக் குலுக்கி - "அரசியல் எங்கள் தொழில்" என்றார்.


அவரது கேள்விக்கு இந்திய தலைவர்களிடம் பதில் இல்லை என்பது தெளிவாகிறது. 
இந்தியாவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் அரசியலால் ஆதரிக்கப்படுவதாக பின்னர் ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது. 
இன்று இந்த எண்ணிக்கை கோடிகளை எட்டியுள்ளது.


சில மாதங்களுக்கு முன்பு, கொரோனாவால் ஐரோப்பா அழிந்து கொண்டிருக்கும் போது, ​​மருத்துவர்களுக்கு தொடர்ச்சியாக பல மாதங்கள் கொஞ்சம் கூட விடுப்பு கிடைக்காததால், போர்ச்சுகல் மருத்துவர் ஒருவர் கோபமாக கூறினார் - "ரொனால்டோவிடம், நீங்கள் மில்லியன் கணக்கான டாலர்களைக் கொடுப்பீர்கள். 
பார்க்க, நானும் என் குடும்பமும் வாழ்வதற்கு எனக்கு சம்பளமாக சில ஆயிரம் டாலர்கள் மட்டுமே கிடைக்கிறது. எந்த ஒரு ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் நீங்கள் ஒரு பைசா கூட பங்களிக்காத போது, ​​இதுபோன்ற சிகிச்சையை நாங்கள் எப்படி கண்டுபிடிப்போம் என்று எதிர்பார்க்கிறீர்கள்? 
ஒரு கொடிய வைரஸ், ஒரே இரவில். ரொனால்டோ மற்றும் போன்றவர்களிடம் சென்று சிகிச்சைக்காக கேளுங்கள்."


இளம் மாணவர்களின் இலட்சியங்கள் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் அல்ல, ஆனால் நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களாக இருக்கும் நாட்டில், அவர்களுக்கென்று சொந்த பொருளாதார முன்னேற்றம் இருக்கலாம், ஆனால் நாடு ஒருபோதும் முன்னேறாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


சமூக, அறிவு, கலாச்சார, மூலோபாய ரீதியாக நாடு எப்போதும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கும். 
அத்தகைய நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் எப்போதும் ஆபத்தில் இருக்கும்.


எந்த நாட்டில் தேவையில்லாத, சம்பந்தமில்லாத துறைகளின் ஆதிக்கம் வளர்ந்து கொண்டே போகிறதோ, அந்த நாடு நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே இருக்கும். 
நாட்டில் ஊழல்வாதிகள் மற்றும் தேசவிரோதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். 
நேர்மையானவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் மற்றும் தேசியவாதிகள் கடினமான வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.


திறமையான, நேர்மையான, மனசாட்சியுள்ள, போர்க்குணமிக்க மற்றும் தேசப்பற்றுள்ள குடிமக்களாக இருக்கும் சமூக சேவகர்களை வளர்த்து மேம்படுத்துவதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும்.


(ஆசிரியர்: தெரியவில்லை)

🙏🏻🙏🏻🙏🏻

Wednesday, November 3, 2021

இதுவும் அதே வாய்தான்...

பிறரிடம் பேசும் சொற்களை நாம்
காலத்தை மற்றும் தேவையை பொறுத்து மாற்றிக் கொள்கிறோம், ஆனால் கேட்கும் மனிதர்கள் ஒன்று என்பதுதான் நம்மை கொஞ்சம் சங்கடப்படுத்துகிறது.
-சாமி.

Tuesday, November 2, 2021

மழையும் நானும்

கல்லூரியில் வேலை முடிந்து 
வெளியில் வருகிறேன் நான்,

மழை மல்லிகையாய் கொட்டுகிறது,
மழை உடுப்பை மறந்ததை மனம் கொண்டாடுகிறது,

அறிவு ஆஸ்பித்திரியை நினைத்து பயம் கொள்கிறது,

மழையில் நனைந்தபடி பைக்கை செலுத்துகிறேன் நான்,

மழையில் ஒதுங்கி நிற்பவர் எல்லாம்
பாவப்பட்டவராய் தெரிகிறார்கள் எனக்கு,

என்றும் வேகமாய் செல்லும் வண்டி
 மெது மெதுவாய் செல்கிறது இன்று,

மிரட்டுகிறது மின்னல், குளிரில் நடுங்கிறது உடல், அதிலும் நடனம் ஆடுகிறது மனம்,

வெறும் சாலையில் நானும் மழையும் மட்டுமே செல்கிறோம்,

வீடு வருகிறது, இன்றுதான் வீடு இவ்வளவு அருகில் ஏன் இருக்கிறது என்ற நினைப்பும் வருகிறது,

மனைவி திட்டலுக்கு பின் தந்த தேனீர் இதமாய் இருக்கிறது,

தலை துவட்டியபின் மண்டையைவிட்டு இறங்கிய மழை இன்னும் மனதைவிட்டு இறங்க மறுக்கிறது.


-சாமி.


Monday, November 1, 2021

புகழுரைகள்

விமர்சனங்களை கூட ஒரளவுக்கு
எதிர்க்கொள்ள தெரிந்த நமக்கு,
புகழுரைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என தெரியவில்லையோ என்று தோன்றுகிறது.

-சாமி.


Monday, October 25, 2021

உண்மையான வலி நிறைந்த வரிகள்

பிரபஞ்சனின் துணைவியார் பிரமீளா
சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து 
போனார். அவரது முதாலண்டு நினைவின்

போது பிரபஞ்சன் ஒரு கட்டுரை எழுதினார்.
அந்த கட்டுரயை படித்து கண்கலங்கிப்போனேன்.
அது நம் அனைவருக்குமான அறிவுரை என்றே
சொல்வேன்.

அந்தக் கட்டுரை இப்படி முடிகிறது.

எனக்கு முன் என் துணைவர் இறந்தது எனக்கு
மகிழ்ச்சியைத் தருகிறது. மரணம் எனக்கு
நேர்ந்து, அவர் பூமியில் தங்க நேர்ந்திருந்தால்,
மிகுந்த அவமானங்களைச் சந்தித்து இருப்பார்.
அவமானத்தின், புறக்கணிப்பின் நிழல் கூடப் 
படக்கூடாத ஆத்மா அவர். இவை போன்ற
சிறுமைகள் எல்லாம் எனக்கே உரியவை.

நட்சத்திரக் கணக்குப்படி, அவர் இறந்து இந்த 16
மார்ச்சோடு சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது.
அவரது இல்லாமை இப்போதுதான் என்னைத்
தாக்கத் தொடங்கி இருக்கிறது. இளமையில் துணை 
இல்லாமல் இருந்துவிடலாம். முதுமையில்தான்
துணையின் அவசியம் கூடுதலாக உணர
முடிகிறது.

நிறைந்த கனவுகளும், லட்சியங்களும் கண்களில்
மிதக்க, ஆனந்தமாகப் பறந்து திரிய வேண்டிய,
அறிவும் ஞானமும் பொலிந்த, மகத்தான மானுட
உணர்வுகள் கொண்ட பெண்மணிகளை மனைவியாக் 
கொண்டு, அவர்களைக் கீழிறக்கி, ஒளி இழக்கச் 
செய்த , செய்து கொண்டிருக்கும் கோடி கோடி 
ஆண்களின் வரிசையில் நானும் சேர்ந்து இருக்கிறேன்.
என்கிற குற்றவுணர்வு மட்டும் எப்போதும் என்னுடன்
இருந்து தீரும் அதிலிருந்து நான் தப்ப முடியாது.

-எஸ்.ராமகிருஷ்ணன்
சொற்களின் புதிர்பாதை

Monday, October 18, 2021

மனப்பரண்

தினம் தினம் கீழ்இறக்கி, மகிழ்ந்து,
மீண்டும் மனப்பரணில் போட்டு வைக்கிறேன் குழந்தை நினைவுகளை.
-சாமி.

Saturday, October 16, 2021

மதியாதார் வாசல் மிதியாதே

கேட்காமல் யாருக்கும் அறிவுரைகள் இல்லை,

மதிப்பில்லாத இடத்தில் காட்டும் அக்கறையும் இல்லை,

ஆர்வகோளரால் அழைக்கும் அலைபேசி 
அழைப்புகளும் இல்லை,

வலியப் போய் செய்யும் 'whatsapp chat '--ம் இல்லை,

இப்பொழுது,

எதிர்பார்ப்பும் இல்லை
ஏமாற்றமும் இல்லை
வெந்த புண்ணில் பாயும் வேலும் இல்லை.

-சாமி.

Friday, October 15, 2021

முதுமை

'Money' க்காக மணிப்பார்க்காமல்
ஓடும் உலகில், 
அலைபேசி மணி அடிக்குமா பேசுவதற்கு என ஏங்கி நகர்கிறது முதுமை.

-சாமி.

Thursday, October 14, 2021

படித்ததில் பிடித்தது:ரத்தன் டாடா சொன்ன வரிகள் .

ரத்தன் டாடா சொன்ன வரிகள் .

                           இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இதேதான் நமக்கும்.

          நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது.

                   நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை.எந்த வெற்றியும் நிலையானது இல்லை .

         எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம்.

             நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும்.

        எனக்கு எப்பொழுதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்பொழுதெல்லாம் இத்தகைய மனிதர்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். காய்ச்சல் வந்துவிட்டது .

      உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களை தேடுகிறவர்களுக்கு இவரைப் போன்றவர்கள்தான் டானிக் பாட்டில்கள்.

        என்னதான் ஆகிவிடும்..? ஒரு கை பார்த்துவிடலாம். இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? எறும்பிலிருந்து யானை வரைக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பிரச்சினைகள் தான்.

          மனிதர்கள்தான் எல்லாவற்றையும் மண்டையில் ஏற்றி நாளை எப்படிச் சமாளிப்பது..? நாளைக் கழித்து எப்படிச் சமாளிப்பது..? 

            அடுத்த ஆண்டு என்ன செய்வது என்று ஆயிரத்தெட்டுக் குழப்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிறோம். எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கி வைத்துப் பார்ப்போம். இன்றைய கணத்தை வாழ்ந்து பார்க்கலாம்.

                இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். நாளை நடப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம்.

        செத்துப்போவது பெரிய காரியமே இல்லை. ஒன்றரை நிமிட வேலைதான். அதோடு எல்லாம் முடிந்தது. 

        ஆனால் இனி எந்தக் காலத்திலும் இந்த பூமியில் வாழ்வதற்கான வாய்ப்பே கிடைக்கப் போவதில்லை. அவ்வளவு சீக்கிரமாக முடித்துக் கொள்வதற்காக இவ்வளவு சிரமப்பட்டோம்?

               நம் அத்தனை சுமைகளையும் துன்பங்களையும் தூக்கி நம்மைச் சார்ந்தவர்களிடம் கொடுத்துவிட்டுப் போவதுதான் நம் பிறப்பின் அர்த்தமா?

       ஓர் எறும்பைப் பிடித்துத் தண்ணீரில் போட்டால் அது கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிட்டுத்தான் சாகிறது. ஒரு மீனைத் தூக்கி தரையில் வீசினால் அதுவும் கடைசி மூச்சு வரைக்கும் தம் கட்டி பார்த்து விடுகிறது. 

           மனிதர்கள் நமக்கு என்ன? நாம் மட்டும் ஏன் இடையிலேயே மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்?

                நம்மிடம் உயிர் இருக்கிறதா..? தெளிவான சிந்தனை இருக்கிறதா? அது போதும். எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். யார் எதிர்த்தாலும் மோதிப் பார்த்துவிடலாம்.

                  நம்பிக்கைதான் வாழ்க்கை. கடைசி வரைக்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டேன் இனி வாய்ப்பில்லை என்று சொல்வதே கூட அவநம்பிக்கை தான்.

             அதை உடைத்து நொறுக்கினால் போதும். அந்தச் சுவருக்கு அப்பால் காத்திருக்கும் வெற்றி நமக்குத்தான்.

Wednesday, October 13, 2021

அதிகாரம்/Chapter: துறவு / Renunciationகுறள் 341

:

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.




ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.


Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.

Saturday, October 9, 2021

இறையன்பு Ias..அருமையான பதிவு

இறையன்பு Ias..
அருமையான பதிவு

*இன்றைய இளம் வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது.*

*ஆனால்  பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.!!!*
   
*கைப்பேசி அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது.*

 *ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது!!!*.
   
*ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும் வித்தை தெரிகிறது.*

*எதிரே அமர்ந்திருக்கும் பயணியைப் பார்த்து புன்னகைக்கத்தான் தெரிவதில்லை!!!*.
   
*வாட்ஸ்அப் குரூப்பில் அன்பு சொட்டச்சொட்ட நண்பர்களிடம் தகவல் பரிமாற முடிகிறது.*

 *சொந்தப் பெற்றோரிடம் தூக்கியடிப்பது போல பேசத்தான் முடிகிறது!!!*.
 
 *எந்த இடத்திலும் ஒரு நிமிடம் தாமதமானால் கோபம் கொப்பளித்துக் கொள்கிறது.*

*ஆனால்*
 *அவர்களுக்காகக் காத்திருக்கும் பெற்றோரின் வலி* *புரிவதில்லை.!!!*
  
*எதைப் பெற்றாலும் உரிமையென எண்ணும் அவர்களுக்கு கடமைகளும் இருக்கின்றன என்பது ஒருபோதும் உரைப்பதில்லை.!!!*
                  
~ *இறையன்பு.IAS*

அருமையான பதிவு 👍

Thursday, October 7, 2021

ஏரிக்கரை ஆலமர ஊஞ்சல்

ஏரிக்கரை ஆலமர விழுதில் ஊஞ்சல் ஆட
என் நிழல் தண்ணீரில் மீனோடு சேர்ந்து ஓடும்.

-சாமி.

Monday, October 4, 2021

முழுநிலவு

தொடுதிரையில் செயலியை நகர்த்துபோல் 
மேகத்தை விரலால் விலக்கி பார்க்க முயல்கிறேன் முழு நிலவை
மீண்டும் மீண்டும் மறைந்து கொள்கிறது இன்னொரு மேகத்திற்கு பின்னால்
நகர்த்துவதை நிறுத்துகிறேன்
அதுவாய் எட்டிப்பார்கிறது என்னை.

-சாமி.

Sunday, October 3, 2021

நாக்கு உடற்பயிற்சி-அல்சைமர்

படித்ததில் பயனுள்ளது

அமெரிக்காவிலிருந்து வந்த செய்தி, ஸ்ரீ.சதிரெட்டி கரு, அவருடைய மகன் ஒரு டாக்டராக இருக்கிறார்:

 50 வயதிற்குப் பிறகு
 ஒருவர் 
 பல வகையான நோய்கள் அனுபவிக்கலாம். 
  ஆனால் நான் மிகவும் கவலைப்படுவது அல்சைமர் தான்.
 என்னை நானே கவனிக்க முடியாது என்பது மட்டுமல்ல,
 ஆனால் அது
 குடும்ப உறுப்பினர்களுக்கு நிறைய அசகரியங்கள் ஏற்படுத்தும் ...

 ஒரு நாள், என் மகன் ராகுல்
 வீட்டிற்கு வந்து என்னிடம் கூறினார்
 ஒரு மருத்துவர் நண்பர்
 நாக்கைப் பயன்படுத்தி அவருக்கு ஒரு பயிற்சியைக் கற்றுக் கொடுத்தார்.

 அல்சைமர் வருவதைக் குறைக்க நாக்கு உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும், மேலும் குறைக்க / மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும்

 *1* உடல் எடை
 *2* உயர் இரத்த அழுத்தம்
 *3* மூளையில் இரத்த-உறைவு
 *4* ஆஸ்துமா
 *5* தொலைதூர பார்வை
 *6* காது ஒ(வ)லி
 *7* தொண்டை தொற்று
 *8* தோள்பட்டை / கழுத்து தொற்று
 *9* தூக்கமின்மை

 நகர்வுகள் மிகவும் எளிமையானவை மற்றும் கற்றுக்கொள்வது எளிது ....

 ஒவ்வொரு காலையிலும், உங்கள் முகத்தை கழுவும்போது, ​​கண்ணாடியின் முன், கீழே உள்ள உடற்பயிற்சியைச் செய்யுங்கள்:
 
 * உங்கள் நாக்கை நீட்டி வலதுபுறமாக பின் இடதுபுறமாக 10 முறை நகர்த்தவும் *

 நான் தினமும் என் நாக்கை உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதிலிருந்து, எனது மூளைத் தக்கவைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டது.

 என் மனம் தெளிவாகவும் புதியதாகவும் இருந்தது, மேலும் பிற மேம்பாடுகளும் இருந்தன ...

    1 தொலைநோக்கு பார்வை
         குறைவாக
    2 முட்டாள்தனம் இல்லை
    3. மேம்பட்ட ஆரோக்கியம்
    4. சிறந்த செரிமானம்
    5. குறைந்த காய்ச்சல் / சளி

 நான் வலிமையானவன், சுறுசுறுப்பானவன்.

  *குறிப்புகள்*

 நாக்கு உடற்பயிற்சி அல்சைமர்ஸைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவுகிறது ...
 நாக்குக்கு பெரிய மூளையுடன் தொடர்பு இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.  நம் உடல் பழையதாகவும் பலவீனமாகவும் மாறும்போது, ​​தோன்றுவதற்கான முதல் அறிகுறி என்னவென்றால், நம் நாக்கு விறைப்பாகி விடுகிறது, பெரும்பாலும் நாம் நம்மைக் கடிக்க முனைகிறோம்.

 உங்கள் நாக்கை அடிக்கடி உடற்பயிற்சி செய்யுங்கள்
 மூளையைத் தூண்டும்,
 நம் எண்ணங்களை சுருங்குவதைக் குறைக்க உதவுகிறது, இதனால் ஆரோக்கியமான உடலை அடையலாம்.
 🙏
 👨👨👨👨‍🔬 மூத்த குடிமக்களுக்கு 👨👨👨👨‍  தயவுசெய்து இதை அனுப்பவும் 

Saturday, October 2, 2021

கல்லூரி நாட்கள்

புளியமர கிளை
புங்கைமர நிழல்
சாய்ந்து வளர்ந்த பனை மரம்
தூங்கும் மூஞ்சி மர வேர்
ஏரிக்கரை
வயல் வரப்பு
இங்கு அமர்ந்து படித்தது எல்லாம் மறந்து போயின, 
படித்த இடங்கள் மட்டும் ஞாபகத்தில்.


-சாமி.

மின்னல்

மின்னலாய் ஒரு நொடியில் 
என் மனதில் உள் நுழைந்த நீ,
மறைவதற்கு ( மறப்பதற்கு)
ஏன் என் முழு ஆயுளையும் எடுத்து கொள்கிறாய்.

-சாமி.


Friday, October 1, 2021

புதைக்கப்பட்ட ரகசியம்

நீ உன் மனதில் புதைத்து வைப்பதாக ஒப்புக்கொண்டால்,
உன்னிடம் நாள் முழுவதும் பகிர ஆயிரம்
உணர்வுகள் இருக்கிறது என்னிடம் ரகசியமாய்.


Thursday, September 30, 2021

சாலைகள்

சாய்க்கப்பட்ட மலைகள் தான் சாலைகள்
மனசாட்சி உறுத்துகிறது அதன்மீது நடக்கும் போதெல்லாம்.

-சாமி.

Tuesday, September 28, 2021

அடிகள் அல்ல படிகள்

முத்தம்மாள் சத்திர தரை வகுப்பு

தவறு செய்கையில் அறிவியல் அய்யாவின் காது கிள்ளல்

தமிழில் பிழை ஏற்படுகையில்
தமிழ் அய்யா முதுகில் அடித்த அடி

நேரம் தவறி பள்ளி செல்கையில் உடற்பயிற்சி ஆசிரியர் நடக்க சொன்ன வாத்து நடை

வேதியியல் ஆய்வகத்தில் ஆசிட் மாறியதால் கை பழுக்க வாங்கிய அடி

நண்பர்களுடன் சண்டையிட்டதால் தலைமை ஆசிரியர் 
முட்டிப் போடச் சொல்லி பாதத்தில் அடித்த பிரம்பின் அடி

பாடத்தோடு பழக்க வழக்கங்களையும்
சொல்லி கொடுத்த ஆசான்களின் அடிகள் 
இன்னும் இனிப்பாய்தான் இருக்கிறது மனதில்.

-சாமி.

Sunday, September 26, 2021

மனித உறவுகள்

பூக்களின் வண்ணமும் வடிவமும்
பூச்சிகளையும் தேனீக்களையும்
கவர மட்டுமே பயன்படும், ஆனால்
அதன் உறவு நீடித்து நிலைப்பதற்கு பூக்களில் தேன் இருப்பது முக்கியம்.

-சாமி.

Wednesday, September 22, 2021

மயிலிறகும் அதன் குட்டிகளும்

பள்ளி பருவத்தில்
நோட்டு புத்தகத்தில்
வைத்த மயிலிறகும் அதன் குட்டிகளும்
உயிர்ப்புடன் வாழ்ந்து வருகின்றன 
என் மனதில் இதுநாள்வரை.

-சாமி.

Tuesday, September 21, 2021

காத்திருக்கிறேன் கதிரவனே

ஒன்று உன் செங்கதிரை நான் பற்றி
ஏறி வரவேண்டும்,
இல்லையேல்,
என் கரம் பற்றி நீ இறங்கி வர வேண்டும்,
காத்திருக்கிறேன் கதிரவனே
உன்னுடன் ஒரு செல்ஃபி எடுக்க.

-சாமி.
இங்கு எல்லோரும்
தற்கொலைதான் செய்து கொள்கிறார்கள்,
தவணை முறையில்.

கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா.

Monday, September 20, 2021

கொரானா காலம்

இப்பொழுது
தாடிகள் தப்பிக்கிறது
முக கவசத்தின் கருணையால்.

-சாமி.

Saturday, September 18, 2021

நன்றி

நன்றி செய்தவருக்கு வாலாட்டுகிறது ஐந்தறிவு,
நன்றி செய்தவரிடமே வாலாட்டுகிறது ஆறறிவு.

-சாமி.

Friday, September 17, 2021

அக்கறை-ஏமாற்றம்

அக்கரையில் அக்கறை
இக்கரைக்கு ஏமாற்றம்.

-சாமி.
யார் சொல்லியிருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும் 
நானே சொன்னாலும்
உன் புத்திக்கும்
பொது அறிவுக்கும்
பொருந்தாத எதையும் நம்பாதே.

தந்தை பெரியார்.

Thursday, September 16, 2021

முன்னேற்றம்

முன்பெல்லாம் புறக்கணிப்பை முகசுழிப்பு மற்றும் வார்த்தைகள் மூலம் தெரிந்து கொண்ட நாம் இப்பொழுது         " Chat Texting" லேயே தெரிந்து கொள்வது தான் முன்னேற்றம்.

கடவுள்-நாம்

கடவுள் நம்மை மன்னிக்க வேண்டும்
ஆனால் நாம் யாரையும் மன்னிக்க தயாராக இல்லை,

கடவுள் நம்மிடம் கருணை காட்ட வேண்டும் ஆனால்
 நாம் யாரிடமும் கருணை காட்ட தயாராக இல்லை,

நாம் வேண்டும் அனைத்தையும் கடவுள் தரவேண்டும் ஆனால்
 நாம் யாருக்கும் எதையும் தர தயாராக இல்லை,

உண்மையில்,
கல்லாக இருக்கும் கடவுள் உயிரோடு இருக்கிறார்,
உயிரோடு இருக்கும் நாம் கல்லாக இருக்கிறோம்.

-சாமி.

Wednesday, September 15, 2021

current world

If you will be easily available to somebody
Definitely they will not realise your value and importance.

Tuesday, September 14, 2021

புறக்கணிப்பு

'புறக்கணிப்பு' என்பது மிகுந்த கொடுமையானது வலித்தரக்கூடியது,
இறைவனும் இயற்கையும் நம்மை எதர்க்காகவும் எந்நிலையிலும் புறக்கணிப்பதில்லை,
எனவே யாரையும் எதர்காகவும் புறக்கணிக்காதீர்கள்.

-சாமி.

பலித்தீர்ப்பு

பிறரை பலி தீர்ப்பதாய் நினைத்து
பலி தீர்த்துக் கொண்டேன் என் மனசாட்சியை,
காலத்திற்கும் அகல மறுக்கிறது அப்பலி.

-சாமி.

நன்றி

என் நண்பன் ஒரு உதவி செய்தபொழுது
சொன்னான், நன்றி மறவாதே நண்பா என்று,
இப்பொழுது அந்நண்பனையே மறந்து போனேன் நன்றி எல்லாம் எம்மாத்திரம்.

-சாமி.

Monday, September 13, 2021

அன்பும் அக்கறையும்

ஒருவர் அவரது நேரத்தை கொடுக்கிறார் என்றால் அவர் வேலையின்றி இருக்கிறார் என்று அர்த்தமில்லை,
அவர் உங்கள் மீது அக்கறையுடனும் அன்புடனும் இருக்கிறார் என்று அர்த்தம்.
மேலும் அவரது நேரத்தை தருவதன் மூலம் அவரின் வாழ்வின் ஒரு சிறு பகுதியை உங்களுக்கு தருகிறார் என்பதை உணருங்கள்.

-சாமி.

Friday, September 10, 2021

நினைவில் கொள்ளுங்கள்

பிம்பங்கள் போற்றப்படுகிறது
உண்மை மறைக்கப்படுகிறது
கட்டாயம் ஒரு நாள் 
பிம்பங்கள் உடைபடும்
உண்மை வெளிப்படும்.

-சாமி.

Thursday, September 9, 2021

மிக கடினமான நேரங்களில்
நம்மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் நம்மோடு நேரம் செலவழிக்க முடியாது எனில் அது 
அது நம் துயரத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.


Tuesday, September 7, 2021

சிந்திக்க தூண்டும் வரிகள்

வாழ்வதாக சொல்கிறோம்
ஆனால் உண்மையில் வாழ்கிறோமா?

-புதுமை பித்தன்.

எப்பாதை நம்மின் பாதை

மனதின் பாதை, 
மலர்கள் தூவிய பாதை, முடிவு நரகம்.
அறிவின் பாதை, 
முட்கள் நிறைந்த பாதை, முடிவு சொர்க்கம்.

-சாமி.

Sunday, September 5, 2021

ஆசிரியர் தின வாழ்த்துகள்

நான் இன்று இருக்கும் நல்நிலைக்கு
என்னுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தியாகங்களே காரணம்.

அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.

Saturday, September 4, 2021

இதுதான் கடவுள் தன்மை

உனக்கு  உதவி செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றால்,
 கடவுள் உன்னில் இறங்கி
மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறார் என்று அர்த்தம், 
செய்து முடி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்.

-சாமி.

Thursday, September 2, 2021

கண்ணீர்

துன்ப கடலால் ஆர்ப்பரிக்கும் மனதை ஆற்றுப்படுத்தி விடுகிறது 
ஒரு துளி கண்ணீர்.

-சாமி.

Tuesday, August 31, 2021

மகிழ்ச்சியாக வசிக்க உதவும்❤️ஜப்பானியர்களின் ஆச்சரியமான ஆராய்ச்சி ...

🔥அனைவரும் ஒருமுறை வாசிக்கவும்🔥
       ❤️மகிழ்ச்சியாக வசிக்க உதவும்❤️
ஜப்பானியர்களின் ஆச்சரியமான ஆராய்ச்சி ...

 1. *அமிலத்தன்மை* உணவினால் மட்டும் உருவாவதில்லை , *மாறாக மன அழுத்தம்* காரணமாக உடலில் அதிக அமிலத்தண்மைஆதிக்கம் உருவாகிறது.

 2. *உயர் இரத்த அழுத்தம்* உப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்ல, முக்கியமாக *எதிர் மறை உணர்ச்சிகளை மனம் அதிகம் சிந்திப்பதால்* .

 3. *கொழுப்பு* கொழுப்பு நிறைந்த உணவுகளால் மட்டுமல்ல, *அதிகப்படியான சோம்பல்* அல்லது உட்கார்ந்த வாழ்க்கை முறையும் அதிக காரணம்.

 4. *ஆஸ்துமா* நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் இடையூறு ஏற்படுவதால் மட்டுமல்லாமல், பெரும்பாலும் *சோகமான உணர்வுகள்* நுரையீரலை நிலையற்றதாக ஆக்குகின்றன.

 5. *நீரிழிவு நோய்* குளுக்கோஸை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்ல,
*பிடிவாதமான அணுகுமுறை* கணையத்தின் செயல்பாட்டை சீர்குலைக்கிறது.

 6. *சிறுநீரக கற்கள் : கால்சியம் ஆக்ஸலேட் வைப்பு மட்டும் இல்லை, ஆனால்  உணர்ச்சிகளையும் வெறுப்பையும்* மனதின் ஆழத்தில் வைத்திருப்பதாலும் ஏற்படுகிறது.

 7. *ஸ்பான்டைலிடிஸ் *: எல் 4 எல் 5 அல்லது கர்ப்பப்பை கோளாறு மட்டுமல்ல;   நடப்பு காலாத்தில் உள்ள  சுமையும்  எதிர்காலத்தைப் பற்றிய அதிக கவலையும்* காரணமாக அமைகின்றன.

 நாம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் முதலில்

 1) *உங்கள் மனதை சரிசெய்யவும்*

 2) வழக்கமான *உடற்பயிற்சிகளை* செய்யுங்கள்,

 2) *நகரத்தை* சுற்றி வாருங்கள்,

 3) *தியானம்* செய்யுங்கள்

 4) *மனதார சிரிக்கவும்* மற்றவர்களையும் சிரிக்க வைக்கவும்.

 5) *நல்ல நண்பர்களை உருவாக்குங்கள்*

 இந்த நடவடிக்கைகள் உங்கள் ஆன்மா, மனம் மற்றும் உடலை வலுப்படுத்த உதவும் ...

 *ஆரோக்கியமாக இருங்கள், உங்கள் வாழ்க்கையை அனுபவிக்கவும்.*
 *உயர்வை உயர்த்துங்கள்*

 *ஆன்மீக ரீதியில் சக்தி யோகிகள்* மேற்கூறியவற்றை நன்றாகவே புரிந்து கொள்வார்கள்...
 ஏனெனில் சக்தி வர்மம் பயிற்ச்சியில் உடலுக்கும் உணர்வுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு நன்றாகவே விளக்கப்பட்டுள்ளது.

 கோவிட் வைரஸ் 5.5 ஹெர்ட்ஸ் அதிர்வுகளைக் கொண்டுள்ளது மற்றும் 25.5 ஹெர்ட்ஸுக்கு மேல் இறக்கிறது.

 அதிக அதிர்வு கொண்ட மனிதர்களுக்கு, தொற்று என்பது ஒரு சிறிய எரிச்சலாகும், அது விரைவில் அகற்றப்படும்!

 *குறைந்த அதிர்வு இருப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:*

 பயம், 
சந்தேகம். 
துக்கம்,
கவலை, 
மன அழுத்தம், 
பதற்றம்.
பொறாமை, 
கோபம், 
ஆத்திரம்
வெறுப்பு, 
பேராசை
மற்றும் வலி

 *அதனால் ...... நம் உடலிலும் மனதிலும் அதிக அதிர்வுகளை ஏற்படுத்த நாம் முயற்ச்சி செய்ய வேண்டும், இதனால் குறைந்த அதிர்வெண் கொண்ட வைரஸ்கள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தாது.*

 இன்று பூமியின் அதிர்வெண் 27.4 ஹெர்ட்ஸ்.  ஆனால் இதுபோன்ற அதிர்வுறும் இடங்கள் உள்ளன:
 மருத்துவமனைகள்
 உதவி மையங்கள்.
 சிறைகள்
 நிலத்தடி போன்றவை.
 இங்கு அதிர்வு 20 ஹெர்ட்ஸ் அல்லது அதற்கும் குறைவாக குறைகிறது.
 குறைந்த அதிர்வு கொண்ட மனிதர்களுக்கு, வைரஸ் ஆபத்தானது.
 வலி 0.1 முதல் 2 ஹெர்ட்ஸ் வரை.
 பயம் 0.2 முதல் 2.2 ஹெர்ட்ஸ் வரை.
 எரிச்சல் 0.9 முதல் 6.8 ஹெர்ட்ஸ் வரை.
 சத்தம் 0.6 முதல் 2.2 ஹெர்ட்ஸ்.
 பெருமை 0.8 ஹெர்ட்ஸ்.
 மேன்மை 1.9 ஹெர்ட்ஸ்.

 மறுபுறம் அதிக அதிர்வு என்பது பின்வரும் நடத்தையின் விளைவுவாக ஏற்படுகிறது: 

 ♦️ *தாராள மனப்பான்மை 95 ஹெர்ட்ஸ்*

*♦️நன்றியுணர்வு 150 ஹெர்ட்ஸ்*
 
*♦️இரக்கம் 150 ஹெர்ட்ஸ் அல்லது அதற்கு மேற்பட்டது.*

 *♦️அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு மற்றும் இரக்கத்தின் அதிர்வெண் 150 ஹெர்ட்ஸ் மற்றும் அதற்கு மேற்பட்டது*.

*♦️205hz இலிருந்து நிபந்தனையற்ற மற்றும் உலகளாவிய காதல் ..*

 அப்படியானால்  போகலாம் வாருங்கள் ...

♦️ *உயர் அதிர்வை பெற நமக்கு எதெல்லாம் உதவுகிறது?*

 *அன்பு, புன்னகை, ஆசீர்வாதம், நன்றி, விளையாடுவது, ஓவியம், பாடுவது, நடனம், யோகா,  தியானம், சூரியனில் நடப்பது, உடற்பயிற்சி செய்வது, இயற்கையை ரசிப்பது போன்றவை.*

  *பூமி நமக்கு அளிக்கும் உணவுகள்:*
 *விதைகள்* *தானியங்கள்* 
*பருப்பு வகைகள் பழங்கள் மற்றும் காய்கறிகள்*
*குடிநீர்* ஆகவே உயர்ந்த அதிர்வை இவ்வையகம் பெற உதவுங்கள் ..... !!!*

 *பிரார்த்தனையின் அதிர்வு மட்டும் 120 முதல் 350 ஹெர்ட்ஸ் வரை செல்லும்*

 எனவே *பாடுங்கள், சிரிக்கவும், நேசிக்கவும், தியானிக்கவும், விளையாடுங்கள், நன்றி சொல்லுங்கள், வாழ்க!*

 _ *அதிகமாக அதிர்வுறுவோம் ... !!* _
இதன் முழுமையான கருத்தை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்
"*கச்சிதமாக இக்கணத்தில் நாம் அனுபவித்துக் கொண்டு இருப்பது மீண்டும் , ஒரு போதும் நிகழப்போவதில்லை, அதனால் நாம் ஒவ்வொரு கனத்தையும் ஒர் அழகிய பொக்கிஷமாக மதிக்க ரசிக்க வேண்டுகின்றோம்..
(நன்றி- நாட்டு மருந்து)

முகம் தெரியாதவருக்கு ஆற்றிய உதவி.

மீண்டும் ஒருமுறை கடவுளின்
கைகளில் காணிக்கை செலுத்த
முடிந்தது. நன்றி.

Friday, August 27, 2021

துயரத்திலும் துயரம்

நூறு நண்பர்களை சமூக வலைதளங்களில் கொண்ட ஒருவனுக்கு,
துயரங்களில் தோள் சாய்ந்து அழ ஒரு உண்மை நண்பணோ உறவோ இல்லாமல் இருப்பது தான் துயரத்திலும் துயரம்.





Wednesday, August 25, 2021

வணங்க தக்கவர்கள்

சொல்லால் ஆறுதல் சொல்ல,
மனதால் பரிதாப பட பல பேர் இங்குண்டு,
ஆனால் செயலால் உதவி செய்ய சில பேர் மட்டுமே உண்டு. 

Tuesday, August 24, 2021

வாழ்க்கை

தோல்வியுரும்போது
இருள் நீங்கி பகல் வரும் என்பதையும்,
வெற்றியின் மமதையில் இருக்கையில்
பகலுக்கு பின் இருள் என்பதையும்,
பகலும் இரவும் சேர்ந்ததுதான் ஒரு நாள் என்பதும்,
வெற்றியும் தோல்வியும் இணைந்ததுதான் வாழ்க்கை என்பதையும் புரிந்துக் கொள்ளுங்கள். 

-சாமி.

Sunday, August 22, 2021

உணர்ந்து செய்

வலிய சென்று செய்யும் உதவி மற்றும் அன்பு பெரும்பாலும் மதிக்கப் படுவதில்லை.

Saturday, August 21, 2021

இன்னுமாடா உலகம் உங்கள நம்புது

சில பேர் வாழ்க்கையில் நடிக்கிறார்கள்
சிலர் வாழ்க்கையே நடிக்கிறதுதான்
நான் நடிகர்கள சொல்லல.

உறவு பலமாகும்

தேவை ஏற்ப்பட்டால் மட்டும் பேசும் மனிதர்களை யாருக்கும் பிடிப்பதில்லை,
எனவே உங்கள் அன்பானவர்கள் எனில் அவர்களின் தேவை ஏற்படாத நேரங்களில் கூட அவர்களின் நலம் விசாரியுங்கள் தொடர்பில் இருங்கள்.

-சாமி.

When to retire? - A study by Dr. Sing Lin.

When to retire? - A study by Dr. Sing Lin.

This study is worth reading again and again 
 
It carries a weighty title: "Optimum Strategies for Creativity and Longevity", and was the hard work of a Dr Sing Lin, a member of National Council of the Chinese Institute of Engineers , USA/Greater New York Chapter.
 
According to the academic, pension funds in many large American corporations (e.g., Boeing, Lockheed Martin, AT&T, Lucent Technologies, etc.) have in recent years been "over funded" because many retirees who work into their old age and retire after 65 tend to diewithin two years of retirement.
 
Many of these late retirees, he observes, do not live long enough to collect their pension money.
 
Dr Sing Lin says statistics gathered from several corporations indicated that the longer you work, the shorter your life will be.
 
If people retire at 50, their average life span is 86. If they stop work at 65, their average life span is only 66.8.
 
An important conclusion from his study is that for every year one works beyond the age of 55, one loses an average of two years of life.
 
The Boeing experience seems to confirm this: Employees retiring at 65 receive pension checks for only 18 months, on average, prior to death.
 
Similarly, at Lockheed, employees retiring at 65 receive pension checks for only 17 months, on average, before they die.
 
Dr David T. Chai, another academic, whom Dr Sing Lin quotes in his research, says the Bell Labs experience is similar to those of Boeing and Lockheed. Chai bases this on his casual observation from newsletters on Bell Lab retirees.
 
Hardworking retirees apparently place too great a burden on their aging bodies and minds, such that they become stressed out, says Dr Sing Lin.
 
This leads to serious health problems which will force them to stop work.
 
With such long-term stress-induced health problems, they die within two years of their retirement.
 
On the other hand, people who retire at 55 tend to live long and well into their 80s and beyond.
 
Dr Sing Lin acknowledges that early retirees are probably wealthier or more able to plan and manage their health and career, and this is probably why they can afford to stop work and still live comfortably.
 
His observations also reveal that many early retirees do not idle their way into old age. They continue to do part-time work at a more leisurely pace, which reduces stress.
 
He concluded his research with this advice: Plan your career path and save enough so you can retire comfortably at the age of 55 or earlier to enjoy a long and happy retirement life into your 80s and beyond.
 
"If you are not able to get out of the pressure-cooker or the high-speed battleground at 55 and have to keep on working until the age of 65 or older, you will probably die within 18 months of retirement," he writes.
 
"By working in the pressure cooker for 10 extra years beyond the age of 55, you give up, on average, at least 20 years of your life."

Wednesday, August 18, 2021

Like-Dislike

எங்கோ உள்ளவரின் பதிவிற்கு நீங்கள் போடும் ஒவ்வொரு 'Like' கிற்கும்
உங்கள் அருகில் இருக்கும் அன்பானவர் உங்களுக்கு ஒரு 'Dislike' போடக்கூடும்.

-சாமி.

Thursday, August 12, 2021

படைப்பின் ரகசியம்.

ஒரே நிகழ்வு 
எல்லோருக்கும்
ஒரே வலியை
ஏற்படுத்துவதில்லை.



-சாமி.

Saturday, August 7, 2021

நாம் எவ்வகையில் சேரப்போகிறோம்

இறந்தபின் இருப்பவரும் உண்டு
இறந்தது போல் இருப்பவரும் உண்டு.

-சாமி.

Friday, August 6, 2021

பேசாத வார்த்தைகள்

சொல்லிய வார்த்தைகளை விட
சொல்லாமல் மனதில் புதைத்த
வார்த்தைகளே அதிகம்.

-சாமி.

Thursday, August 5, 2021

What is the difference between an Ordinary Thief (OT) and a Political Thief (PT)?*

THIS ONE IS REALLY GOOD. 

WONDER WHO WROTE THIS? FROM AFRICAN POLITICS? 

*What is the difference between an Ordinary Thief (OT) and a Political  Thief (PT)?* 

1.The *Ordinary Thief* steals your money,  
bag, 
watch, 
gold chain etc.

But,

The *Political Thief* steals your future, 
career, 
education, 
health and business !

2. The hilarious part is: ..
The *Ordinary Thief* will choose whom to rob. 
But, you yourself choose the *Political Thief* to rob you.

3. The most ironic one: ..
Police will chase and nab the *Ordinary Thief.*

But,

Police will look after and protect the *Political Thief!*
That’s the travesty and irony of our current society !

And,

we blindly say we are not blind !

4. The stupid part of the whole issue is that we insult and fight the *Ordinary Thief* but we Fight each other for the *Political Thief*

👍 Too good for  share.

Tuesday, August 3, 2021

நமக்கு வெட்கமே இல்லை

செய்நன்றி மறக்கிறோம்
தேவை ஏற்படின் மீண்டும் நிற்கிறோம்
அதே இடம்.

Friday, July 30, 2021

வேதனையானது.

நம்முடன் இருபது முப்பது ஆண்டுகள் ஒன்றாக பணியாற்றி இச்சமூத்திற்கு சேவை ஆற்றி விட்டு, ஓய்வு பெறுபவருக்கான  இணைய வழி விழாவில் கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு நேர நெருக்கடியில் இருப்பது உண்மையில் வேதனையானது.

வாழ்க்கை

உங்களுடைய அத்தனை அறிவையும் தூக்கி குப்பையில் போடுங்கள் 
அதையெல்லாம் தாண்டி விசித்திரமானது வாழ்க்கை.

-ஆண்டன் செக்காவ்.

Friday, July 23, 2021

நம்பிக்கை நன்றி

ஒருவனுடைய திறன்களை கண்டறிந்து
அவனுக்கு அவன்மேல் நம்பிக்கை ஏற்படுத்தி விடுங்கள், அவன் அந்நம்பிக்கை கைக்கொண்டு முன்னேறுவான் அதேநேரம்
 அவன் வாழ்நாள் முழுவதும் உங்களை மறக்க மாட்டான்.

-சாமி.

Tuesday, July 20, 2021

இளமை-இனிமை

பெட்டி கடைக்கு செல்கையில் வேல் தாத்தா தரும் இலவச பொட்டுக்கடலை வெல்லம்,

நண்பன் திருட்டு தனமாய் மரமேறி வெட்டிக் கொடுத்த நுங்கு,

காலை எழுந்தவுடன் ஓடி சென்று முதல் ஆளாய் பொருக்கி தின்னும் விளாம்பழம்,

பள்ளி சென்று திரும்புகையில் வயலில் தெரியாமல் பிடுங்கி தின்னும் கடலை,

பள்ளி செல்லும்போது நண்பர்களுடன் சேர்ந்து ரிக்சா மிதித்தது

வயிற்று வலி என்று பொய் சொல்லி பள்ளி செல்லாமல் இருந்தது,

பணம் கட்டவில்லை என்று பள்ளியில் இருந்து நண்பர்களுடன் திரும்பி நடந்து வந்தது,

உச்சி வெயிலில் வயலுக்கு ஓடிச் சென்று 
மாட்டு வண்டி ஓட்டி வந்ததது,

இரவில் நெற்க்கட்டுகளின் மேல் காவலுக்காக படுத்து உறங்கியது,

மாடுகள் பூட்டிய ஏர் கலப்பையை பிடித்து
உழவு செய்தது,

வரிசையாய் பூட்டிய மாடுகளை கொண்டு நெற்போர் அடித்தது,

பனந் தொன்னைகளில் வயல் வரப்பில் அமர்ந்து பசியாறியது,

நண்பர்களுடன் சேர்ந்து நாற்று அரிப்பது,  அண்டை வெட்டுவது, நாற்று விசுறுவது,

இப்படி எவ்வளவோ சுவையான இளமை நினைவுகள்,

இதில் ஏதாவது ஒன்றிரண்டு நினைவுகள் தினமும் என்னை அறியாமல் தூக்கி செல்கிறது மீண்டும் இளமைக்கு. 

-சாமி.

Saturday, July 17, 2021

நன்றி சொல்வதற்கு

நமக்கு உதவி தேவைப்படும்போது 
நம் கண்முன் வரும் முகம்,
பெரும்பாலும், உதவியின் பொருட்டு பலன் ஏற்படும்போது வருவதில்லை.

-சாமி.

காலம்

கடந்தகால கசப்புகளையும் வலிகளையும் மறக்க வைக்கும் காலம் எனும் மாமருந்து, சில நேரங்களில்
நல்லவைகளையும் நல்லவர்களையும் கூட மறக்க செய்துவிடுகிறது.

-சாமி.

Tuesday, July 13, 2021

ஏனெனில் நமது பயணம் குறைவு.

* நம் பயணம் குறுகியது *

* ஒரு வயதான பெண் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார். அடுத்த நிறுத்தத்தில், ஒரு வலிமையான இளம் பெண் மேலே ஏறி, வயதான பெண்ணின் அருகில் அமர்ந்து, அவள் லக்கேஜை வைத்து நெருக்கடி கொடுத்தாள். *

* வயதான பெண் அமைதியாக இருப்பதைக் கண்டதும்,  பெண் தன் பைகளால் அடித்தபோது ஏன் புகார் கொடுக்கவில்லை என்று நடத்துநர் கேட்டார். *

* வயதான பெண் ஒரு புன்னகையுடன் பதிலளித்தார்: "நமது பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதால், முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவோ ​​அல்லது அற்பமான ஒன்றைப் பற்றி விவாதிக்கவோ தேவையில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகிறேன் என்று சொன்னார் ." *

* இந்த பதில் தங்க எழுத்துக்களால் எழுதப்பட வேண்டியது: "இவ்வளவு அற்பமான ஒன்றைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நாம்  ஒன்றாக பயணம் செய்வது மிகவும் குறுகியகாலம்மட்டுமே." *

* இந்த உலகில் நம்முடைய வாழும் நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். பயனற்ற வாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவற்றால் அதை இருட்டடிப்பது நேரத்தையும் சக்தியையும் கேலிக்குரியதாக்கும். *

* யாராவது உங்கள் இதயத்தை உடைத்திருக்கிறார்களா? அமைதியாய் இருங்கள். நம் பயணம் மிகக் குறைவு. *

* யாராவது உங்களை காட்டிக் கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா அல்லது அவமானப்படுத்தினார்களா? ஓய்வெடுங்கள். மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். நம் பயணம் மிகக் குறைவு. *

* யாராவது உங்களை காரணமின்றி அவமதித்தார்களா?  அதை புறக்கணிக்கவும்.நம் பயணம் மிகக் குறைவு. *

* உங்களுக்குப் பிடிக்காத  பக்கத்து வீட்டுக்காரர் உங்களைப் பற்றிய கருத்து தெரிவித்தாரா? ஆழ்ந்த மூச்சு விடுங்கள். அவரை / அவளை புறக்கணிக்கவும். மன்னித்து மறந்து விடுங்கள். நம் பயணம் மிகக் குறைவு. *

* யாராவது உங்களை எந்த பிரச்சனையில் கொண்டு வந்தாலும், நம் பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். *

* நமது பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. எந்த நிறுத்தத்தில் அது முடியும் என்பது யாருக்கும் தெரியாது.  பயணம் குறுகியது. *

* நண்பர்களையும் குடும்பத்தினரையும் பாராட்டுவோம். *
* நாம் மரியாதைக்குரியவர்களாகவும், கனிவானவர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்போம். *
*  நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் நிறைந்திருப்போம்

* உங்கள் புன்னகையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் நமது பயணம் மிகவும் குறுகியது ... *

_ ஆசிரியர் தெரியவில்லை ஒரு சிந்தனையைத் தூண்டும் செய்தி

படித்ததில் பிடித்தது.

Monday, July 12, 2021

முதலில்நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்ப்போம்.

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

 கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால்
 அதுல பதிலை எழுதுங்க.

 ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது.

ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது.

 உங்களால முடியலேன்னா
 அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க.

அதுவும் முடியலியா….

 படிச்சிகிட்டே போங்க….

ரெடியா.....

1.
உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..

2.
2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

3.
சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள்
ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க….

4.
நோபல் பரிசு வாங்கிய
 உங்களுக்கு தெரிந்த
ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க…..

5.
கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய
ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா?

 இல்லே தானே?

நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ
 அல்லது
தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை.

 இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல.

அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள்.

 மிகப் பெரிய சாதனையாளர்கள்.

ஆனால்……?

 கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன.

சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன.

விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.

இப்பொழுது இன்னொரு ஐந்து கேள்விகள் கேட்கிறேன்

பதில் உடனே கி்டைக்குதா என்று பாருங்கள்

1)
உங்கள் பள்ளிக் காலத்தில்
மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்கள் பெயரை சொல்லுங்கள்.

2)
உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…

3)
உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…

4)
உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை கூறுங்கள்….

5)
நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ
அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…

சில மணித்துளிகளில்
விடைகளை
பட்டென்று எழுதி குவித்திருப்பீர்களே.......

இதிலிருந்து என்ன தெரிகிறது?

உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்
 பணக்காரர்களோ,
 புகழ்பெற்றவர்களோ
அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல.

உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே.

மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.

பணம் பட்டம் பதவி
இவற்றின் மூலம் பெறும் புகழோ
 வெற்றியோ நிலையானதல்ல.

 பிறருக்கு உதவி செய்து,
பிறர் மீது அக்கறை கொண்டு
ஒருவர் பெறும் புகழே
வெற்றியே நிலையானது.

உங்கள் மாணவர்கள்
 நண்பர்கள்
 மற்றும்
 உறவினர்கள்

 சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு
 அவர்கள் ஒருவராவது
 விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்…

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.

எனவே

அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால்

எப்போதும் நல்லதே நினையுங்கள்.
எல்லோருக்கும்
 நல்லதையே சொல்லுங்கள்.
 நல்லதையே செய்யுங்கள்.

கோவிலுக்கு போய் விழுந்து கும்பிட்டு
கடவுள் மனசுல இடம்பிடிக்கிறது இருக்கட்டும்.

முதலில்
நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்ப்போம்.
❤️❤️❤️

கடவுள் தானா தன் மனசுல இடம் கொடுப்பார்.
✿ பிடிச்சா லைக் பண்ணுங்க...!
   ✿ ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்க...!
   ✿ சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்க...!

Sunday, July 11, 2021

வீழ்வேன் என்று நினைத்தாயோ

பேரிருளை பிளந்து வரும் மின்மினி நான்

கல்தரையை உடைத்து துளிர் விடும் ஒற்றை விதை நான்

இரைச்சலை  தாண்டி கானம் பாடும் கருங்குயில் நான்

அதிகாலையில் ஒற்றை ஆளாய் ஒளி வீசும் வெள்ளி விண்மீன் நான்

புயலை எதிர்த்து போராடும் நாணல் நான்

நீர் வீழ்கையில் மேலெழும் நீர் சாரல் நான்

காரிருளை பிளக்கும் மின்னல் நான்

லட்சம் உயிர் அணுக்களில் முந்தி முதல் ஆளாய் வந்தவன் நான்.

-சாமி.

Thursday, July 8, 2021

உங்களுக்கான நேரம் முக்கியம்

பெண்களே
PHD பண்றீங்களோ இல்லையோ பட்டப்படிப்பு படிக்கிறீங்களோ இல்லையோ இத படிங்க முதல்ல

வாழ்க்கை வாழவே...வாழ்ந்துவிடுங்கள்...

எங்கள் தோழி...

50 வயதைக்  கடந்தவள்..

அவள் பிறந்த நாளுக்கு சரியாக 8 நாட்கள் கழித்து வாட்சப் குழுமத்தில் அவளின்  மரண செய்தி... 

பேரதிர்ச்சி எங்களுக்கு..

அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும் தொழிலில் இருப்பவன்.. அதனால் வீட்டின் அத்தனை பொறுப்புக்களையும் அவள்தான் பார்த்துக் கொண்டாள்..பிள்ளைகளின் படிப்பிலிருந்து, வீட்டிற்கு சாமான்கள் வாங்கி வருவதிலிருந்து, அவளின் வயதான மாமியார் மாமனாரைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை சமாளிக்கும் வரை  அத்தனையையும், அத்தனையையும் அவள்தான் ஒருத்தியாக பார்த்துக் கொண்டாள்...

எப்போதாவது பேசும் சந்தர்ப்பம் அமைகையில் சொல்வாள் ,"என் குடும்பத்திற்கு அவசியம் நான் தேவை,  எனது நேரம் தேவை, என் கணவருக்கு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாது, நான் இல்லை என்றால் அவர்கள் தடுமாறிப் போவார்கள்...
ஆனால் இவ்வளவு செய்தும் எனக்கு எந்தப் பாராட்டும், எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று..

அதில் தொனித்த வேதனையை  எங்களால் இனம் காண முடிந்தது..

அவள் இறந்து 1 மாதமாயிற்று...

பாவம் அவள் கணவர்...

இப்போது எப்படி சமாளிக்கிறாரோ?? பயணம் செய்யும் பணியில் இருந்து கொண்டு பிள்ளைகளை, தன் வயதான தாய் தந்தையரை எப்படி கவனிக்கிறாரோ என வருத்தம் தோன்ற, எதாவது உதவி செய்ய முடிந்தால் செய்யலாம் என அவரை அலைபேசியில் அழைத்தேன்.. 

பதிலில்லை. அரை மணி கழித்து அவரே அழைத்து, தான் நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்படியே அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் , அதனால்தான் உடன் அழைப்பை ஏற்க வில்லை என மன்னிப்பு கோரினார்.. 

எப்படி இருக்கிறீர்கள் என்றேன்..

பயணம் செய்யும் பொறுப்பிலிருந்து மாற்றல் வாங்கிக் கொண்டு ஊரிலிருந்தே வேலை செய்யும் பொறுப்பிற்கு மாற்றிக் கொண்டிருக்கிறாராம்..

வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன்.

சமையல் செய்வதற்காக ஒருவரை நியமித்து அவரே கடையிலிருந்து பொருட்களை வாங்கி வருமாறும் பணித்திருக்கிறாராம்..தன் தாய் தந்தையரை பார்த்துக் கொள்ள செவிலியர்களை நியமித்திருக்கிறாராம்..

பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டேன்..

"பிள்ளைகள் நலம்..நான் பார்த்துக் கொள்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் சுமூக நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறோம்.." என்றார்..

சிறிது நேரம் பேசிவிட்டு, முடித்தேன் ...

என் கண்கள் குளமாகியது. என் தோழி நினைவிற்கு வந்தாள். பள்ளி தோழிகள் சந்திப்பிற்கு அவள் வரவில்லை, காரணம் அவள் மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை. அவளின் அண்ணன் மகள் திருமணத்திற்கு அவளால் போக முடியவில்லை , காரணம் அவள் வீட்டில் ரிப்பேர் நடந்து கொண்டிருந்தது, எங்கள் தோழியின் மகள் திருமணத்திற்கு வரவில்லை, காரணம் அவள் பிள்ளைகளுக்கு தேர்வு..நாங்கள் அனைவரும் இணைந்து சென்ற  திரைப்படத்திற்கு அவள் வரவில்லை, காரணம் இரவு உணவு சமைக்க வேண்டும்..

இப்படி எத்தனை இனிமையான தருணங்களை அவள் இழந்திருக்கிறாள்..
அவளுக்காக அவள் வாழவே இல்லை..
மற்றவர்களுக்காக மட்டுமே  வாழ்ந்திருக்கிறாள்..இறுதி வரை அவள் எதிர்நோக்கிய பாராட்டும் அங்கீகாரமும் இத்தனை செய்தும் கூட அவளுக்கு கிடைக்கவே இல்லை..

இப்போது அவளிடம் சொல்ல துடிக்கிறேன், 
இந்த உலகத்தில் யாரும் இன்றியமையாதவர்கள் அல்ல, யாரை இழந்தாலும் அவரைச் சார்ந்திருப்போர் சிறிது நாட்களில் அவரின்றி வாழ பழகி விடுவார்கள்.. தன்னைப் பார்த்துக் கொள்வதுதான் அவளது முதல் கடமை என மற்றவர்கள் நினைப்பதும், அவளும் அவர்களுக்கு முதல் உரிமை கொடுத்து விட்டு  இரண்டாவதாக தன்னைப் பார்த்துக் கொள்வதும்,  நான் இல்லை என்றால் என் வீடு தடுமாறி விடும் என்றெல்லாம் நினைப்பது நம் மனதின் அறியாமை...அப்படி நினைத்து ஒரு நாள் கூட அவள் அவளுக்காக வாழவில்லை..
ஆனால் இதையெல்லாம்  சொல்வதற்கு அவள் இப்போது உயிருடன் இல்லை...

தோழிகளே...

எத்தனை பொறுப்புகள் இருந்தாலும், எத்தனை பணிகள் இருந்தாலும்
உங்களுக்கென்று ஒரு நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.. 

அது உங்கள் நேரம்..

உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள்...ஆடுங்கள், பாடுங்கள், என்னவெல்லாம் பிடிக்குமோ அத்தனையும் செய்யுங்கள் 

பள்ளி கல்லூரி தோழிகளிடம் பேசுங்கள்,பகிருங்கள், சிரியுங்கள்..வாழ்க்கையை அனுபவியுங்கள்..

இது உங்கள் வாழ்க்கை.. உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள்.. 

உங்களுக்கான இன்பத்தை  மற்றவர்களுக்காக தொலைத்து விடாதீர்கள்..

நீங்கள் மகிழ்வாய் இருந்தால் மட்டுமே, மற்றவர்களை மகிழ்விக்க முடியும்..

இறுதியாக ஒரே ஒரு வார்த்தை..

வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்...

அனுபவித்து வாழுங்கள்.

வாழ்க்கை அழகானது..

(தோழிகள் வாட்சப் குழுமத்தில் வந்த தகவல் மனதை மிகவும் தொட்டதால்) உங்களுடன் ....

Tuesday, July 6, 2021

தோற்றம் வைத்து எடை போடாதே.

ஒடித்தால் மடக் என ஒடியும்
முருங்கையில் தான் இரும்பு (ஒடிக்கமுடியாத) சத்து
இருக்கிறது.


-சாமி.

Sunday, July 4, 2021

Sky Watch

இரவில் மொட்டை மாடியில்
மல்லாந்து படுத்துக் நட்சத்திரங்களுக்கிடையே கண்கள் அலைகையில் 
என்னையும் சில வேற்றுகிரக கண்கள் 
பார்ப்பதாய் உணர்கிறேன்.

-சாமி.

Saturday, July 3, 2021

தங்கம்-தகரம்

தங்கத்தை அருகில் வைத்துக் கொண்டு
தகரத்தை தங்கம் என நினைத்து ஒடும் ஒரு கூட்டமே இங்கு இருக்கிறது. இழந்தப்பின்தான் அருகில் இருந்ததுதான் தங்கம் என தெரிகிறது அந்த மூடர் கூட்டத்துக்கு.

தங்கம் தன்னை ஒருபோதும் தங்கம் என சொல்லிக் கொள்வது இல்லை. அப்படி சொன்னால் அது தகரம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

-சாமி.

Saturday, June 19, 2021

ஒரு ரூபாய்

பல ஆயிரங்கள் பார்த்த பின்னும்
குழந்தை பிராயத்தில் பாட்டி
கொடுத்த 'ஒரு ரூபாய்' மனதை விட்டு
இறங்கி மறுக்கிறது.

-சாமி.

பிரசவம்

அதிகாலை 3 மணி
தூக்கம் வரவில்லை
புரண்டு படுக்கிறேன்
எழுந்து உட்காருகிறேன்
எழுந்து நடக்கிறேன்
மீண்டும் திரும்பி படுக்கிறேன்
ஊகூம் இப்படியே போகிறது
காலை 6 மணி
பிரசவிக்கிறேன் ஒரு
கவிதையை.

-சாமி.


Wednesday, June 16, 2021

#நாவடக்கம்..🙂

*_படித்ததில் பிடித்தது_*

👇 #நாவடக்கம்..🙂

முடி வெட்ட எவ்வளவு..? சவரம் பண்ண எவ்வளவு..? என்றார் பண்டிதர்..

அவரும் .. *முடிவெட்ட  நாலணா.. சவரம் பண்ண  ஒரணா சாமி !* என்று பணிவுடன் கூறினார்..

 பண்டிதர் சிரித்தபடியே,
*அப்படின்னா..! என் தலையை சவரம் பண்ணு* என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் பண்டிதர்..

வயதில் _*பெரியவர்*_ என்பதால், நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..

 வேலையை ஆரம்பித்தார் நாவிதர்..

_*நாவிதர் கோபப்படுவார்*_ என்று எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு.. சற்று ஏமாற்றந்தான்..

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்..

*ஏன்டாப்பா.. உன் வேலையோ..!  முடி வெட்டுறது.. உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே.. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம..* *உன்னை நாக்கோட சம்மந்தப்படுத்தி  "நாவிதன்னு" சொல்றாங்க..?*

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார் பண்டிதர்.. ஆனால், நாவிதர் முகத்திலோ புன்னகை..
*நல்ல சந்தேகங்க சாமி.. நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்தட்டாம இருக்க, "நாவால" இதமா நாலு வார்த்தை  பேசுறதனால தான்..!  நாங்க நாவிதர்கள்..*
*எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா சாமி..?*

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது..

அடுத்த முயற்சியைத் துவங்கினார்.. *இதென்னப்பா, கத்தரிக்கோல்னு  சொல்றீங்க.. கத்தரி மட்டுந்தானே இருக்கு.. கோல் எங்கே போச்சு..?*

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிடமிருந்து..
 
*சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..* என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் நாவிதர்..

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.. அடுத்து கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்..

*எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குறீயே..! ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..?.!*

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது..

அவர் முகத்தில் கொஞ்சம்  வித்தியாசம்..

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்..

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்..

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்..

பண்டிதரின் "பிரியமான மீசையைத்" தொட்டுக் காட்டிக் கேட்டார்..
*சாமிக்கு இந்த மீசை வேணுங்களா..?*
பண்டிதர் உடனே, *ஆமாம்* என்றார்..

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின்  மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து..
*மீசை வேணுமுன்னிங்களே சாமி..! இந்தாங்க..* என்றார்

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய் கையில்..

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்..

நாவிதரோ, அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்..

அவரது "அடர்த்தியான புருவத்தில்" கை வைத்தபடிக்கேட்டார்,
*சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா..?*

இப்போது பண்டிதர் சுதாரித்தார்..
_வேணும்னு சொன்னா..! வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்_ என்ற பயத்தில், உடனே சொன்னார்..
*இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்..* என்றார் பண்டிதர்..

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்..

*சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல..? அதைக் குப்பைல போட்டுடுறேன்..*

*சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..* என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்..

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்..

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த  அடர்த்தியான புருவமும் இல்லாமல்..

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது..

கண்கள் கலங்க, குனிந்த தலை நிமிராமல், ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு.. விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்..

*நம்முடைய அறிவும் - ஆற்றலும் - திறமையும் - அதிகாரமும் -  அந்தஸ்தும் - பொருளும் -  மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர.. மட்டம் தட்ட அல்ல..*

*இதை உணராதவர்கள் -
 இப்படித்தான் அவமானப்பட நேரும்..

Saturday, June 12, 2021

மழை

நுகர மண்வாசனை, காண தங்க மழைத்துளி, உணர குளிர்ந்த காற்று, 
கேட்க சர சர எனும் சாரல் ஓசை, சுவைக்க மணக்கும் தேனீர்.
உண்மையில் மழை பெய்கையில் தேனீர் அருந்துதல் ஒரு தவம்.

-சாமி.

உதவி செய்

உதவி செய்யவோ அல்லது பரிசளிக்கவோ நினைத்தால் உடனே செய்துவிடுங்கள்,
இல்லையேல் 
மனம் பல பணக் கணக்குகளையும் அதை செய்யாமல் இருப்பதற்கான நியாயப்படுத்துதலையும் கொண்டு அதை நிறுத்திவிடும்.

-சாமி.

இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ.....

எனக்கு மிகவும் பிடித்தவை.
மரம், மழை, பூமி, கதிரவன், நிலா, நட்சத்திரங்கள், கடல், குழந்தை, யானை.............இப்படி போய்க் கொண்டே இருக்கிறது மனிதனை தவிர.

-சாமி.

The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி

மகிழ்ச்சிக்கான பாதை எது?

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?

இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

சந்தோஷத்தின் வழி’யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. “சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்கள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்...

Saturday, June 5, 2021

ஒரு செயல் பல சொல்லை விட மேலானது

வீணாக மின்விளக்கு மின்விசிறி இயங்கினால் அணைத்து விடுகிறேன்,
நீர் வீணாகாமல் தவிர்த்து விடுகிறேன்,
வருடத்திற்கு ஒரு செடியேனும் வளர்த்து விடுகிறேன்,
குறைந்த தூரமெனில் நடந்தோ மிதிவண்டியிலயோ போகிறேன்,
தேவையில்லாமல் ஒலி எழுப்பமாட்டேன்,
கடைக்கு சென்றால் துணிப்பையொடு செல்கிறேன்,
எனவே எனக்கு ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழல் நாள் தான்.

-சாமி.


Friday, June 4, 2021

காலம்-காகம்-மனிதன்

பகிர்ந்துண்ணும் காகத்தையே
பக்கா தான்திண்ணியாக மாற்றியிருக்கிறது காலம்,
இந்த 'பகுத்தறிவு மனிதன்' எல்லாம்  எம்மாத்திரம்.

-சாமி.

Thursday, June 3, 2021

பொன் வண்டு.

கொன்றை மரத்தை பார்க்கும் பொழுதெல்லாம் பொன்வண்டைத் தேடித் தோற்கிறேன். இன்னும் சில வருடங்களில் கொன்றை மரத்தையும் 
தேட வேண்டும் போலிருக்கிறது.

-சாமி.

Saturday, May 29, 2021

நம்பிக்கைதான் வாழ்க்கை

இந்த சூழ்நிலையில் எல்லோரும் ஏதோ ஒரு மன நெருக்கடிக்கு மன பதட்டத்திற்கு
உள்ளாகி இருக்கிறோம் என்பது நன்றாக தெரிகிறது. எனவே முடிந்தவரை வீட்டில் உள்ளோரிடம் உரையாடுங்கள்,  வெளியில் உள்ள உங்கள் அன்புக்கு உரியவர்களிடம்  தொலைபேசியில் உரையாடுங்கள் உங்கள் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துங்கள். உதவி தேவைப்படுவோர்க்கு முடிந்தால் உதவுங்கள்.




Friday, May 28, 2021

தோல்வி-வெற்றி

வாழ்க்கையில் போராடி தோற்றுப்போவதும், ஒருவகையில் வெற்றிதான் ஏனென்றால் அதுதான்
வாழ்க்கையை புரிந்துக் கொள்ள உதவுகிறது.

-சாமி.

Monday, May 24, 2021

சிந்தித்து செயல்படு

நாம் பிறந்துவிட்டாலே மரணத்திற்கான
வரிசையில் நின்றுதான் ஆகவேண்டும்
ஆனால் நாம் நிற்க வேண்டிய வரிசை எண் நம்முடைய செயல்களால் தீர்மானிக்க படுகின்றன விதியால் அல்ல.

-சாமி.

Wednesday, May 19, 2021

WHY ME?by Arthur Ashe – Tennis Legend

The legendary Wimbledon Player who was dying of AIDS, which he got due to Infected Blood he received during a Heart Surgery in 1983!
 
During his illness, he received letters from his fans, one of which conveyed:
 
” Why did God have to select you for such a bad disease?”
 
To this Arthur Ashe replied :
⁃ 50 Million children started playing Tennis,
⁃ 5 Million learnt to play Tennis,
⁃ 500 000 learnt Professional Tennis,
⁃ 50 Thousand came to Circuit,
⁃ 5 Thousand reached Grand Slam,
⁃ 50 reached Wimbledon,
⁃ 4 reached the Semifinals,
⁃ 2 reached the Finals and
 
When I was holding the cup in my hand, I never asked God:
“Why Me?”
 
So now that I’m in pain how can I ask God:
“Why Me?”
 
Happiness … keeps you Sweet!
Trials … keep you Strong!
Sorrows … keeps you Human!
Failure … keeps you Humble!
Success … keeps you Glowing!
But only, Faith … keeps you Going!
 
Sometimes you are not satisfied with your life, while many people in this world are dreaming of living your life.
 
A child on a farm sees a plane fly overhead dreams of flying, while a pilot on the plane sees the farmhouse and dreams of returning home.
 
That’s Life!
 
Enjoy yours … If wealth is the secret to happiness, then the rich should be dancing on the streets.
But only poor kids do that!
 
If power ensures security, then VIP’s should walk unguarded.
But those who live simply, sleep soundly.
 
If beauty and fame bring ideal relationships, then celebrities should have the best marriages!
Live simply, be happy! Walk humbly and love genuinely!
 
WHY ME?
by Arthur Ashe – Tennis Legend #RIP

Inspired Quotes

I do not agree with what u have to say but I will defend to the death your right to say it.
Voltaire.

Monday, May 17, 2021

கல்வி வள்ளல் மறைவு

கல்வி வள்ளல் தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரி தலைவர் அய்யா துளசி அய்யா வாண்டையார் மறைவு.
என்னுடைய அஞ்சலி.

கல்வி தந்த  தாயும் தந்தையும் நீ.

ஒழுக்கத்தின் பிறப்பிடம் நீ.

இறையின் உறைவிடம் நீ.

முல்லைகொடிக்கு பாரியின் தேர் போல்
ஆயிரமாயிரம் குடி உயர கல்வித்தேர் தந்த வள்ளல் நீ

அன்பையும் ஒழுக்கத்தையும் கல்வியுடன் குழைத்து கொடுத்தவன் நீ

உண்மையான தானம் கல்விதான்
என உணர்ந்து எங்களை உயர்த்திவிட்டு போனவன் நீ

பகுத்தறிவு உள்ளவனும் உன்னை பாதம் தொட்டு வணங்கும் உன்னதன் நீ

நீ மறைந்தாலும் நீயிட்ட கல்வி விதைகள் உன்னை போற்றிக் கொண்டே இருப்போம்.

அய்யா நீங்கள் சாதா மனிதம் அல்ல சகாப்தம்.

இதயப்பூர்வமான இரங்கல்கள்.

மிகுந்த வருத்தத்துடன்
இரா.ரெங்கசாமி, கண்ணந்குடி மேற்கு.

Friday, May 14, 2021

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை: படித்ததில் பிடித்தது.

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…

♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

♥யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

♥10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

Wednesday, May 12, 2021

வாழ்க்கையின் ஆசான்கள்.

வகுப்பெடுக்கும் ஆசான்கள் எல்லாம்
வாழ்க்கையின் ஆசான்களாக இருப்பதில்லை.

-சாமி.

*🌹அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.!*🌹

*🌹அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.!*🌹

*🟪அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது.🟪*

*🟣தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்...*🟣

*🟢1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.*

*🟢2. ஐஸ் போட்ட பானத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.*

*🟢3. சூடான தண்ணீரை குடிக்கவும்.*

*🟢4. சூடான நீரில் ஆவி பிடிக்கவும்.*

*🟢5. முட்டைகளை சாப்பிடுங்கள்.*

*🟢6. அத்திப்பழங்களை சாப்பிடுங்கள்.*

*🟢7. பாதாம் சாப்பிடுங்கள்.*

*🟢8. கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை காபி குடிக்கவும்.*

*🟢9. மட்டன் சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.*

*🟢10. நாட்டுக்கோழி  சூப் குடிக்கவும், மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்க்கவும்.*

*🟢11. கால்ஷியம் உள்ள உணவு அல்லது கால்ஷியம் மாத்திரைகளை சாப்பிடுங்கள்.*

*🟢12. அதிக தண்ணீர் குடியுங்கள்.*

*_🟦பிறருக்கு பயன்படும்  என்ற நோக்கத்துடன் இத்தகவலை குழுவில் பகிர்வதும் தொண்டுதான்...!_🟦*


*💜என்றும் சமூக அக்கறையுடன் ..💜

Thursday, May 6, 2021

கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*

கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள்*

வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்*

இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்*.

*1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைக்க பழகுங்கள்.*

*அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல் சொல்லும் முதல் பாடம்.*

*2) காலையில் எழுந்தவுடன் குளித்து இறைவனைத் வணங்குங்கள்.*

*உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது பாடம்.*

*3) முடிந்தால், சமயலறையில் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின், கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும் மூன்றாவது பாடம்*.

*4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும். இல்லையென்றால்அலம்பும் இடத்தில் வைக்கவும். இது நமக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள உதவும். இது நமக்கான  நான்காவது பாடம்.*

*5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள். அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் வர வேண்டும்.*

*6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் , குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும். இது ஆறாவது பாடம்.*

*7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா? என்று. குழந்தைகளை கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் .*

*8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பண மிச்சம், கஞ்சத்தனம் என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால், நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம். இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.*

*9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி. அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள். மின்சார கட்டணம் கண்டிப்பாக* *குறையும். குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும் ஒன்பதாவது பாடம்.*******************Who Will Cry When You Die?"ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.*

*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*
*“நீ பிறந்த போது, அழுதாய்...*
*உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*

*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.

*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங் களுக்காக அதிக நேரம் செலவழிக் காதீர்கள்.*

*3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகள் குறித்து சிந்தியுங்கள்.*

*4. அதிகாலையில் எழப்பழகுங்கள்*. 
*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*

*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*
*அது நல்ல ஆரோக்கியத் தையும், நண்பர்களையும் பெற்று தரும்.*

*6. நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள்.* 
*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*

*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வும் இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*

*8. உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக் கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*

*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.

*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*

*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*

*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*

*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களை கொண்டவனே பணக்காரன்*.

*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*

*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.

*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*

*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*

*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*

*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையான வர்களே!*
*"ஆணவம் ஆயுளைக் குறைக்கும்...*"

*மேற்கண்ட *கருத்துக்களை பின் பற்றி,*
*ஆனந்தமாக வாழுங்கள்* *நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.....!!!!வாழ்க வளமுடன்*!

*இதை அறுபது வயதிற்கு பின் ஆரம்பித்த என்னால் முடியும் போது, கண்டிப்பாக உங்களால் முடியும். வசதிகள் இருந்தும், வசதி தேவை இல்லை என்று நினைத்து, வசதியை உபயோகப் படுத்தாமல் வாழ்வதே ஒரு பெரிய யோகம்*.

*படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.*