Sunday, September 29, 2019

THE PREGNANT DEER

THE PREGNANT DEER – such a beautiful story !

In a forest, a pregnant deer is about to give birth.
She finds a remote grass field near a strong-flowing river.
This seems a safe place.
Suddenly labour pains begin.

At the same moment, dark clouds gather around above & lightning starts a forest fire.
She looks to her left & sees a hunter with his bow extended pointing at her.
To her right, she spots a hungry lion approaching her.

What can the pregnant deer do?
She is in labour!

What will happen?
Will the deer survive?
Will she give birth to a fawn?
Will the fawn survive?
Or will everything be burnt by the forest fire?
Will she perish to the hunters’ arrow?
Will she die a horrible death at the hands of the hungry lion approaching her?

She is constrained by the fire on the one side & the flowing river on the other & boxed in by her natural predators.

What does she do?
She focuses on giving birth to a new life.

The sequence of events that follows are:

– Lightning strikes & blinds the hunter.
– He releases the arrow which zips past the deer & strikes the hungry lion.
– It starts to rain heavily, & the forest fire is slowly doused by the rain.
– The deer gives birth to a healthy fawn.

In our life too, there are moments of choice when we are confronted on αll sides with negative thoughts and possibilities.

Some thoughts are so powerful that they overcome us & overwhelm us.

Maybe we can learn from the deer.
The priority of the deer, in that given moment, was simply to give birth to a baby.

The rest was not in her hands & any action or reaction that changed her focus would have likely resulted in death or disaster.

Ask yourself,
Where is your focus?
Where is your faith and hope?

In the midst of any storm, do keep faith on the Creator always. He will never ever disappoint you. NEVER.

Remember, He neither slumbers nor sleeps…

Friday, September 27, 2019

மனசு லேசானது


மலை ஏறியபொழுது, மனதில் மலை ஏறியது.
மலை இறங்கியபின்பும் மலை மட்டும் மனதில் இருந்து இறங்க மறுக்கிறது.

Thursday, September 26, 2019

சுற்றுலா

    இயற்கை மனிதர்களுக்குள் புரிதல் ஏற்படுத்தும் என்று உணர்த்திய நாட்கள்,
    மலை, மரம், பனி, மேகம் இவைகளோடு  நாமும் உறைந்த நாட்கள்,
   கற்பித்தல் மறந்து உங்களிடமும் கற்க நிறைய இருக்கிறது என்று உணர்ந்த நாட்கள்,
   மணிக்கணக்கில் உங்களை பேசவிட்டு சிரித்து மகிழ்ந்த நாட்கள் ,
   வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுப்பது வகுப்பறை மட்டுமல்ல என்று உணர்ந்த நாட்கள்,
   மறக்க முடியாத, யாரும் பறிக்க முடியாத உன்னத நினைவுகளை தந்த நாட்கள்,
   அந்த நாட்கள் நாம் சுற்றுலா சென்ற நாட்கள்,
   உன்னத உணர்வுகளை தந்த அனைவருக்கும் நன்றி.

Tuesday, September 24, 2019

மிகுந்த இனிப்பில் எங்கோ ஒரு சிறு கசப்பு இருத்தல் போல, மிகுந்த இன்பத்தில் எங்கோ ஒரு ஒரு சிறு துன்பம் இருக்கும். சாமியின் சிந்தனை.

Friday, September 20, 2019

நம்பிக்கையின்மைக்கும், நன்றியின்மைக்கும் இடையே, இதெல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில் நகருகிறது வாழ்க்கை.  சாமியின் சிந்தனை.

Wednesday, September 11, 2019

நீ என்னை வெறுமனே நம்பிக் கொண்டிருக்கிறாய்..... அதில் எந்த ஆழமோ, ஆர்வமோ கிடையாது,

ஆனந்தா என்பவர் கௌதம புத்தரின் சித்தப்பா மகன்..... 

அவரும் புத்தரின் சீடர்களில் ஒருவர்..... 

ஒரு சமயம் ஆனந்தாவிற்கு புத்தரிடம் தீட்சை எடுக்கும்படி  உள்ளுணர்வு தூண்டியது..... 

ஆனந்தா புத்தரைவிட வயதில் மூத்தவர்..... 

ஆகவே, தீட்சை எடுப்பதற்கு முன், அவர் புத்தரிடம்
“இப்போது நான் உனக்கு அண்ணன்,  உன்னைவிட வயதில் மூத்தவன். நான் எதுவும் சொல்லி நீ செய்ய முடியும்....... 
அதை நீ ஏற்றுக்கொண்டு நடக்கலாம்.  இது ஒரு பழைய சம்பிரதாயம்.... 
ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் உன்னிடம் தீட்சை பெறப் போகிறேன்..... 
அதன் பிறகு நான் உன்னுடைய அதிகாரப்பூர்வமான சீடராகி விடுவேன்.... 

அதன்பிறகு இங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான சீடர்களில் நானும் ஒருவனாகி விடுவேன்....
ஆகவே, தீட்சை எடுப்பதற்கு முன் நான் மூன்று நிபந்தனைகளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்”  என்று சொல்லி.......

மேலும் அவர்,
"அந்த நிபந்தைனைகளில் முதலாவது, நான் எப்பொழுதும் உன் கூடவே இருக்க வேண்டும்.... 
புத்த மதத்தை பரப்பும் எந்த குழுவோடும் என்னை சேர்த்து அனுப்பக்கூடாது.... 
நான் உன் உடல் தேவைகள், உணவு, மருந்து போன்றவற்றை கவனித்துக்கொள்ள வேண்டும்..... 
அடுத்து, நான் ஏதாவது கேட்டால், பொறுமையாக இரு, சரியான நேரம் வரட்டும் என்று சொல்லக்கூடாது.  எனக்கு உடனே பதில் கூற வேண்டும்..... 
அடுத்து ஒரு சிலர் உன்னை சந்திக்க வேண்டும் என்று நான் விரும்பினால், நடு இரவில் கூட அவர்களை அழைத்து வருவேன். அப்போது அவர்களை சந்திக்க மறுப்பு ஏதும் சொல்லக்கூடாது”  என்றார்.... 

புத்தர் -
“இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. நான் உங்கள் நிபந்தனைகளை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பேன்” என்றார்....

அதைப்போல ஆனந்தா புத்தருடன் தொடர்ந்து நிழல் போல 42  வருடம் கூடவே இருந்தார்..... 
அவரை கண் இமைப்போல பாதுகாத்தார். 
ஆனாலும், அவர் ஞானம் அடையவில்லை..... 

அவருக்கு பிற்பாடு வந்தவர்கள் எல்லாம் ஞானம் பெற்று சென்று கொண்டிருந்தார்கள். அதனால் ஆனந்தா குழப்பம் அடைந்தார்..... 

பிறகு அவர் புத்தரிடம்
“நான் என்ன தவறு செய்தேன்...???
எனக்கு பிற்பாடு வந்த பலர் ஞானம் அடைந்து குருக்களாக சென்று விட்டார்கள்..... 
நான் உன் கூடவே 42 வருடம் இருக்கிறேன். எனக்கு ஞானத் தன்மையின் அ, ஆ-ன்னா கூட தெரியாது..... 
இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றார்..... 

அப்போது புத்தர்
‘'நான் என்றைக்கு இந்த உலகத்தை விட்டு நீங்குகிறேனோ அன்றைக்கு நீ ஞானம் அடைவாய்”  என்றார்..... 

மேலும் புத்தர் “இதற்கு காரணம் வேறு ஒன்றுமில்லை..... 
நீ என்னை உன் ஆழ் மனதில் இன்னமும் உன்னுடைய தம்பியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறாய்..... 
அது மாத்திரமல்ல, என் தம்பி என்னை ஞானம் அடைய செய்யாமல் விட மாட்டான் என்று மிகவும் நம்பிக் கொண்டு இருக்கிறாய்..... 
நீ ஞானம் அடையாமல் விட்டுவிட என்னால் முடியாது..... 
ஆகவே நான் சொல்வதை எல்லாம் நீ தீர்க்கமாக செய்வதில்லை..... 
நீ என்னை வெறுமனே நம்பிக் கொண்டிருக்கிறாய்..... 
அதில் எந்த ஆழமோ, ஆர்வமோ கிடையாது, அதற்கு நான் என்ன செய்ய முடியும்...???  
நான் என் கையை மட்டும்தான் அந்த திசையை நோக்கி காட்ட முடியும்..... 
உனக்காக நான் ஞான நிலையை அடைய முடியாது”  என்றார்.....

புத்தர் சொன்னது போலத்தான் பிற்பாடு ஆனந்தாவிற்கு நேர்ந்தது..... 

என்றைக்கு காலையில் புத்தர் இறந்தாரோ, அன்றைக்கு மாலையில் ஆனந்தா ஞானம் அடைந்தார்..... 

புத்தரின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது கூட ஆனந்தா கண்களை மூடி அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.....

அவர் மட்டும் அந்த தருணத்தை தவற விட்டிருந்தால் பிறகு புத்தர் போன்ற ஒரு ஞானியை அடைய எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ என்று யாருக்கு தெரியும்.....???

*#ஓஷோ*

Sunday, September 8, 2019

புகைப்படம்


எதிர்காலத்தில் கடந்த காலத்தை பார்க்க விரும்பி நிகழ் காலத்தை தவறவிடுவது. By Samy

Sunday, September 1, 2019

காது கொடுத்து கேளுங்கள்

💜❤💙💚❤💜💙இன்றைய சிந்தனை.. ( 01.09.2019)..
……………………………………

'' காது கொடுத்து கேளுங்கள்..''..
.....................................

உங்களிடம் வந்து யாராவது தனக்கொரு பிரச்னை என்று வந்தால்.,அவர்களைப் பேசவிட்டு அவர்கள் பேசுவதை கொஞ்சம் காது கொடுத்து கவனமாகக் கேளுங்கள்.

மற்றவர்களின் துன்ப துயரங்களில் ஆழ்ந்த அக்கறை காட்டுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

ஆம்.,அதுமாதிரியான நிகழ்வுகள் நமக்கும் வரலாம்.அடுத்த முறை நம்முடையதாகவும் கூட இருக்கலாம்.

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.வளையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.

வீட்டின் பண்ணையாளரும். அவரது மனைவியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டு இருந்தார்கள்.ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப் பொறி.அதைப் பார்த்ததும எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது.,"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது என்றது..

அதற்கு அந்த கோழி,'' உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய செய்திதான்..''..நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது.,

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே செய்தியை போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு ."நான் எலிப்பொறியை எல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.

மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே செய்தியை சொல்லியது.
ஆடும் அதேபதிலைச் சொல்லியது.. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை..,"எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு விட்டுக்காராரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானி அம்மாளைக் கடித்து விட்டது. எஜமானி அம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள்.

விஷத்தை முறிக்க ஊசி போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு காய்ச்சல் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி.," பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு கோழி ரசம் வைத்துக் கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது ஆப்பு... கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் காய்ச்சல் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் அந்த அம்மவின் உடல் நலம் தேறியது.பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.
இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது..

பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்கு காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.எலி தப்பித்து விட்டது..

ஆம்..,நண்பர்களே..,

மற்றவர்களின் குறைகளை, அக்கறையுடன் கேளுங்கள்; ஆறுதல் சொல்லுங்கள்;

நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. நாலு வார்த்தை ஆதரவாக பேசுங்கள்..இன்பத்தை விட, துன்பத்தில் கரம் பற்றி உடன் இருப்பதே நல்ல நட்பு...🌺🌹💐