Friday, March 31, 2023

படித்ததில் பிடித்தது

*#சாகாவரம்_வேண்டுமா?*

மகா அலெக்சாண்டர் தனது வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இறவா வரம் வேண்டி அலைந்தார். 

எல்லாரும் இப்படியான ஒன்றுக்காகக் காலம் காலமாகத் தேடி அலைபவர்கள்தான். 

அலெக்சாண்டரும் அலைந்தார். 

அதைத் தேடித் தேடிக் கண்டும் பிடித்தார். 

அத்தனை சக்திவாய்ந்தவர் அல்லவா.

ஒரு காட்டில் பயணம் செய்தபோது அங்கு தவம் செய்த ஞானிகளில் ஒருவர், 

ஒரு குகை வழியைக் காட்டி, அதற்குள் உள்ள சுனையில் நீர் அருந்தினால், அருந்துபவர்களுக்கு மரணமே இல்லை என்று கூறினார்

அலெக்சாண்டர் புத்திசாலியாக இருந்திருந்தால், இறவாமைக்கு வழிசொன்ன ஞானி அந்த நீரை அருந்தினாரா என்று நிச்சயமாக கேட்டிருந்திருப்பார். 

ஆனால் கேட்கவில்லை. 
அத்தனை அவசரம். 

அந்தக் குகையைச் சென்றடைவதற்குள் அவர் இறந்துபோய்விட்டால் என்ன செய்வது? 

அதனால் அவசரமாகக் குதிரையை ஓட்டிக்கொண்டு போனார்.

குகையை அடைந்தார். 

அதற்குள் ஓடிக்கொண்டிருந்த நீர்ச் சுனையைப் பார்த்தார். 

குகையின் இருட்டுக்குள் ஸ்படிகம் போல தெள்ளத்தெளிவாக இருந்த நீரைப் பார்க்கும்போதே அது ஜீவ நீர் என்று உணர்ந்து மகிழ்ச்சியடைந்தார். 

சுனையின் முனையில் அமர்ந்து கைகளைச் சேர்த்து நீரை அள்ளிப் பருகப் போனார் அலெக்சாண்டர்.

அந்தக் குகையின் இருட்டு மூலையில் உட்கார்ந்திருந்த காகம் ஒன்று, 

“நிறுத்து… தயவுசெய்து அந்த நீரைப் பருக வேண்டாம்” என்றது.

அலெக்சாண்டர் காகத்தைத் திரும்பிப் பார்த்து, “என்ன சொல்கிறாய்? 

இந்த நீரை நீ பருகியிருக்கிறாயா? 

இதில் என்ன பிரச்சினை?” 
என்று கேட்டார்.

காகம் தன் கதையைக் கூறியது. 

“நான் அந்த நீரைக் குடித்தேன். 

தற்போது எனக்கு மரணமே இல்லை. 

ஆனால் நான் தற்போது இறக்க விரும்புகிறேன். 
ஆனால் என்னால் முடியவில்லை. 

எனது வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது. 

இந்த வாழ்க்கையின் மூலமாக அன்பு என்றால் என்னவென்று தெரிந்துகொண்டேன்.

வெற்றியை அறிந்துகொண்டேன். 

நான் காகங்களின் அரசனாக ஆனேன். 

தற்போது எனக்குத் தெரிய வேண்டியது எதுவுமே இல்லை. 

நான் அறிந்த எனது சகாக்கள் அனைவரும் இறந்து போய்விட்டனர். 

அவர்கள் ஓய்வில் உள்ளனர். 
எனக்கு ஓய்வு இல்லை. 

தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்தேன்.

ஆனாலும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டன. 

நீங்கள் இந்தத் தண்ணீரைப் பருகும் முன் எனது நிலை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். 

அதற்குப் பிறகு நீங்கள் இந்தக் குகையின் நீரைக் குடிக்கலாம்” என்று மாமன்னர் அலெக்சாண்டரிடம் காகம் விண்ணப்பம் வைத்தது.

மரணம் என்ற முடிவு இல்லையெனில் வாழ்க்கை என்பது தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றாக மாறிவிடும். 

அன்பிற்கு எதிர்மறையான ஒன்று இல்லாவிடில், அன்பு என்பதே தாங்க முடியாத ஒன்றாக மாறிவிடும்.

இது புனைவுக்கதையாக இருந்தாலும், இந்தக்கதை உணர்த்தும் உண்மை சிந்திக்க வைக்கிறது.

அன்பானவர்களிடமிருந்து பிரியும்போதுதான் அந்த உறவு அர்த்தமுள்ளதாக 
மாறும். 

இல்லையெனில் எல்லா விஷயங்களும் சலிப்பாகிவிடும். 

வாழ்க்கை, எதிரெதிரான அம்சங்களில்தான் இருக்கிறது. 

அதனால்தான் அது மிக சுவாரசியமாகவும் இருக்கிறது.

Tuesday, March 28, 2023

உன் மீது நான் வைத்திருப்பது உலகப் பெரு பிம்பம்,
அது உடைந்து போகையில் நானும் உடைந்து போகிறேன்.

உனது அக்கறை கரையில்லாத கடல், அதில் கறை காண்கையில் கலங்கித் தான் போகிறேன்.

என் தவறை பலமுறை மன்னித்த உன்னை,
ஒருமுறை மன்னிக்க மனமில்லாமல் கலங்கி நிற்கிறேன்.

உன்மேல் மலைபோல் வைத்திருந்த நம்பிக்கை மண்ணாகி போனதனால்
உன்னை மன்னிக்ககூட முடியவில்லை இந்த முறை,
என்னை மன்னித்து விடு மறுபடியும்.

-பூமி.சாமி

Sunday, March 26, 2023

பணம் இருக்கிறது
பரிகாரம் செய்ய
என்று பாவம் மேல் பாவம் 
செய்பவர்களை
என்ன செய்ய

-பூமி.சாமி.


Friday, March 24, 2023

உண்மை!

சண்டாளி! உன் வசந்தத்தால் 
எனக்கு இலையுதிர் காலம்.

-கவிக்கோ அப்துல் ரகுமான்.

Thursday, March 23, 2023

அடிமேல் அடி
வலிமேல் வலி
மனம் கலங்கத்தான் செய்கிறது

துயரங்களை சொல்ல வார்த்தை இல்லாமல் மௌனம் ஆவதும்

துயரங்களை பகிரும் செவிகளை இழப்பதும்

துயர நேரங்களில் சாயும் தோள்களை
தொலைப்பதும்

ஆறுதல் கூறும் 
மனங்கள், மறுப்பதும்

துயரத்தின் மேல் துயரம்.


-பூமி.சாமி.
ஆயிரம் வார்த்தைகள்
தராத ஆறுதலை அளிப்பது
அதிகாலை அழுகை.

-பூமி.சாமி

Tuesday, March 21, 2023

மனிதர்கள் என்னை ஒதுக்கி
தள்ளினாலும்
 என்னோடு கூட்டு சேர்வதற்கு இங்கு சில குருவிகளும் மரங்களும் இருக்கின்றன
அவைகள் என்னை ஒருபொழுதும் புறந்தள்ளுவது இல்லை.

-பூமி.சாமி‌

Sunday, March 19, 2023

சில சமயங்களில், 
என் சொல்லிலும் செயலிலும்
ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது
மன எண்ணத்தில் உள்ள அழுக்கு.


பூமி.சாமி.

Thursday, March 16, 2023

When we get more distance between our words and actions, it's automatically exposed ourselves.

-Boomi.Saami

Tuesday, March 14, 2023

அன்று
அல்லிகளுக்கு இடையே நீந்தி
அக்கரையை அடைந்த நான்
இன்று 
நட்சத்திரங்களுக்கு
இடையே நீந்தி தொலைந்து போகிறேன்.

-பூமி.சாமி.

Saturday, March 11, 2023

நன்றாக இருக்கிறாயா?
சாப்பிட்டாயா?

இதுபோல் அர்த்தம் இல்லாத
அவசியம் இல்லாத கேள்விகள் தான்
நம் உறவை அர்த்தப்படுத்தும் அழுத்தப்படுத்தும்.

பூமி.சாமி.

Friday, March 10, 2023

கடந்த காலங்களை கிளரும்போது
மனதில் கீறல் ஏற்படத்தான் செய்யும்.

-பூமி-சாமி.

Wednesday, March 8, 2023

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

ஒரு நாள் கொண்டாடிவிட்டு ஓடி  விடுவார்கள், கவனம்
ஒவ்வொரு நாளும் கொண்டாடப் பட வேண்டும் 

அன்பின் அடையாளம் என்று சொல்லி அடக்கி வைக்கப் பார்ப்பார்கள், கவனம்

கருணையின் பிறப்பிடம் என்று சொல்லி கருணையில்லாமல்  நடத்துவார்கள், கவனம் 

எது நமக்கு தேவை இக்கணம் 
ஒன்று சம உரிமை மற்றது சுதந்திரம்

எப்படி கிடைக்கும் இவைகள் 
ஒரே வழி கல்வி 
படி படி படி 
படிப்படியாய் முன்னேறுவாய்
கடினமாக படி கவனமாக படி
அறிவு வந்து சேரும் 
சிந்தனை சிறகடிக்கும் 
பொருள் வந்து சேரும்
அதோடு சேர்ந்து உரிமையும் சுதந்திரமும் வந்து சேரும்

சுதந்திரம் என்பது கட்டற்று நடப்பதல்ல கவனமாய் நடப்பது , கவனத்தில் கொள் 

பட்டம் உயர உயர பறக்க கையில் இருந்து நூல் கொஞ்ச கொஞ்சமாய் விடப்பட வேண்டும்
நூலருந்த பட்டங்கள் வீழும் என்பதை கவனத்தில் கொள் 

பெண்கள் பற்றிய ஆண்களின் வார்த்தைகளில் ஆணாதிக்கம் கட்டாயம் இருக்கும் 
என் வார்த்தையிலும் இருக்கலாம் 
சிந்தித்து செயல்படு.


இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 

-பூமி-சாமி.

Sunday, March 5, 2023

உன் பிரச்சினைக்கு
தீர்வு என்னிடம் இல்லை

ஆனால்

என்னிடம் பொறுமை இருக்கிறது
அதை காது கொடுத்து கேட்க

எனது தோள் இருக்கிறது நீ
சாய்ந்து கொள்ள

என்னிடம் வார்த்தைகள் இருக்கிறது
உன்னை தேற்றுவதற்கு

என்னிடம் மனம் இருக்கிறது உன்னிடம் கருணை காட்ட

எனது கைகள் இருக்கிறது
உன்னை கைக்கோர்த்து அழைத்து செல்ல

இதில் ஏதோ ஒன்று
உன் பிரச்சினையை நீயே தீர்ப்பதற்கு
தைரியம் கொடுக்க கூடும்


-பூமி_சாமி




Friday, March 3, 2023

That's Life

Beautiful words Written by  Sophia Loren (Italian Actress)...  _" When I got enough confidence, the stage was gone…..  When I was sure of Losing, I won…….  When I needed People the most, they Left me…….  When I learnt to dry my Tears, I found a shoulder to Cry on……  When I mastered the Skill of Hating, Someone started Loving me from the core of the Heart……  And, while waiting for Light for Hours when I fell asleep, the Sun came out…..   That’s LIFE!! No matter what you Plan, you never know what Life has Planned for you……  Success introduces you to the World……. But Failure introduces the World to you……. ……Always be Happy!!  Often when we lose Hope and think this is the end…   God smiles from above and says, “Relax Sweetheart; It’s just a Bend, not the End..!"_  WORTH READING  AGAIN AND AGAIN.

Wednesday, March 1, 2023

சிலரின் விசாரிப்புகள்
அக்கறையா ஆதங்கமா
என தெரிந்து கொள்வதற்குள்
முடிந்துவிடுகிறது வாழ்க்கை