Thursday, April 30, 2020

இன்று மறைந்த யதார்த்த நடிகர் இர்பானின் இறுதி கடிதம் !!!!!!

இன்று மறைந்த யதார்த்த நடிகர் இர்பானின் இறுதி கடிதம் !!!!!!

வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான். எனக்கு 'நியூரோ எண்டோக்ரைன்' புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் அறிந்து வெகு சில நாட்களே ஆகின்றன.
எனது சொல்வளத்தில் 'நியூரோ எண்டோக்ரைன்' புதிய வார்த்தை. இது அரிய வகை புற்றுநோய் என்றார்கள். அப்படித்தான் போல. ஏனெனில், நான் அது குறித்து தேடியபோது மிக சொற்பமான தகவல்களே கிடைத்தன. அந்த வகை புற்றுநோய் பற்றிய ஆய்வுகளும் குறைவு என்பதால் தரவுகளும் குறைவாகவே இருந்தன. அதனாலேயே அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்பதை கணிக்க இயலா நிலை என்னை சூழ்ந்திருந்தது. கிட்டத்தட்ட நான் முயல்வும் பிழைத்தலுமான சோதனை விளையாட்டில் இருந்தேன் என்றே சொல்ல வேண்டும்.
அந்த நோய் என்னுள் வரும் வரை நான் முற்றிலுமாக மாறுபட்ட விளையாட்டு ஒன்றில் இருந்திருக்கிறேன். ஒரு விரைவு ரயில் பயணத்தில் நானிருந்தேன். எனக்கு கனவுகள் இருந்தன. எதிர்கால திட்டங்களும், இலக்குகளும், ஆசைகளும் இருந்தன. நான் அவற்றால் ஆக்கிரமிக்கப்பட
்டிருந்தேன். அப்போது திடீரென என் தோளை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தால் டிக்கெட் பரிசோதகர். அவர் என்னிடம் "நீ இறங்க வேண்டிய இலக்கு வந்துவிட்டது. கீழே இறங்கு" என்றார். நான் குழம்பிப் போனேன். இது நான் இறங்குமிடம் இல்லை என மறுதலித்தேன். ஆனால், அவர் ஊர்ஜிதமாகச் சொன்னார் "இது தான் இலக்கென்று". வாழ்க்கையில் இப்படித்தான் சில நிகழ்வுகள் நடக்கின்றன.
நான் சற்றும் எதிர்பார்த்திராத அந்த திருப்பம் எனக்கொரு விஷயத்தை உணர்த்தியது. சமுத்திரத்தின் நீரோட்டத்தை நம்மால் கணிக்க முடியாது. அத்தகைய நீரோட்டத்தில் மிதக்கும் ஒரு தக்கை தான் நாம். ஆனால், நாம் வெறும் தக்கை என்பதை உணராமலேயே சமுத்திர நீரோட்டத்தை மீறியும் தக்கையை (நம்மை) கரை சேர்க்க முற்படுகிறோம் என்பதை உணர்த்தியது.
எதிர்பாராத திருப்பமாக நோய் எனக்குக் கொடுத்த அதிர்ச்சியில், அச்சத்தில், பதற்றத்தில் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது அருகிலிருந்த என் மகனிடம் ஏதோ உளறியதாக நினைவு. "நான் என்னிடம் இப்போதைக்கு எதிர்பார்ப்பது இந்த நோயை இதே மனநிலையில் எதிர்கொள்ளக் கூடாது. நான் என் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. அச்சமும், பதற்றமும் என்னை வென்றுவிடக் கூடாது. அது என்னை துயரத்தில் ஆழ்த்திவிடும்" என்று அவனிடம் கூறியிருக்கிறேன்.
ஆம், நோய் தரும் நம்பிக்கையின்மையை வெல்வதே எனது இலக்காக இருந்தது. ஆனால், அந்த வேளையில் தான் என்னை வலி கவ்வியது. அதுவரை நான் அனுபவித்த வலிகள் எல்லாம் அந்த பெரும் வலிக்கு அதன் தன்மைக்கு வீரியத்திற்கான முன்னோட்டம் என்பது போல் இருந்தன என்பதை உணர்ந்தேன். என்னை எதுவுமே சமாதானப்படுத்தவில்லை. எதுவும் ஆறுதலாக இல்லை. எதுவும் ஊக்கமளிப்பதாகவும் இல்லை. என் மனதில், நிலையற்றை தன்மை மட்டுமே நிலையானதாக இருந்தது.
நான் லண்டன் மருத்துவமனையில் பிரவேசிக்கும் போது முற்றிலுமாக சோர்ந்து போயிருந்தேன். சலிப்பு மிகுந்திருந்தது. என் சிறுவயதில் எனக்கு மெக்காவாகத் தோன்றிய லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்துக்கு எதிர்புறத்தில் தான் அந்த மருத்துவமனை இருந்தது. ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளும் நிலையில் நானிருக்கவில்லை. என் வலிகளுக்கு மத்தியில் விவியன் ரிச்சர்ட்ஸின் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தேன். உண்மையில் எனக்கு ஏதாவது நடந்திருக்க வேண்டும். ஆனால், என்னுள் எதுவுமே நடக்கவில்லை. இந்த உலகத்திற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்ற உணர்வு மட்டுமே இருந்தது.
நான் சிகிச்சை பெற்ற அந்த மருத்துவமனையில் நானிருந்த தளத்திற்கு நேர் மேல் தளத்தில் சுயநினைவை இழந்தோருக்கான (கோமா) வார்டு இருந்தது. ஒரு நாள் எனது அறையின் பால்கனியில் நான் நின்றிருந்தபோது, ஒரு திடீர் சிந்தனை என்னை உலுக்கியது.
வாழ்க்கை எனும் விளையாட்டுக்கும் மரணமென்ற விளையாட்டுக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான் உள்ளது என்பதை உணர்ந்த தருணம் அது.
எப்படி நான் சாலையின் ஒருபுறமிருக்கும் மருத்துவமனையில் நோயாளியாக நிற்க மறுபுறம் விளையாட்டு மைதானம் இருந்ததோ, எப்படி அந்த இரண்டையுமே யாரும் தனக்கு நிலையானதாக உரிமை கொண்டாட முடியாதோ அப்படித்தான் மனிதன் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே நின்றுகொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன்.
பேரண்டவெளியின் மதிநுட்பத்தை, மிகப் பிரம்மாண்டமான சக்தியை அதன் தாக்கத்தை உணர்ந்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அமைந்திருந்த இடம் எனக்கு அதை இடித்துரைத்தது. ஆம், நிலையின்மை மட்டும்தான் நிலையானது.
அந்த மெய் உணர் தருணம் என்னை யதார்த்த்தின் முன் சரணையடச் செய்தது. நான் பெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை 4 மாதங்களுக்குப் பின் அல்லது 8 மாதங்களுக்குப் பின் இல்லை இரண்டு வருடங்களுக்குப் பின்னர் என்னை எங்கு கொண்டு சேர்க்கும், விளைவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளை எல்லாம் கடந்து நடப்பவற்றிற்கு என்னை உட்படுத்திக் கொள்ளத் தூண்டியது. அப்போது கவலைகள் பின்னடைவைக் கண்டன. அப்படியே சில நாட்களில் மங்கிப் போயின. அடுத்த சில நாட்களில் என் எண்ண வெளியிலிருந்தே கவலைகள் விலகியிருந்தன.
முதன் முறையாக நான் சுதந்திரத்தை உணர்ந்தேன். முதன்முறையாக சாதனை படைத்ததாக நினைத்தேன். அப்படி ஒரு வெற்றியை முதன்முறையாக சுவைத்தது போல் இருந்தது. அது வெற்றியின் மாயாஜாலம் என்பேன். அண்டவெளியின் மதிநுட்பத்தின் மீதான எனது நம்பிக்கை தீர்க்கமானது. அது என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் புகுந்தது போல் உணர்ந்தேன்.
ஆனால், அது அங்கேயே நிலைத்திருக்கும
ா என்பதை காலம் தான் சொல்லும். இப்போதைக்கு இந்த உணர்வு நன்றாக உள்ளது.
நோயுடனான எனது போராட்டப் பயணத்தில் மக்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பலர் எனக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். நான் அறிந்த நபர்கள் மட்டுமல்லாது, எனக்குப் பரிச்சியமே இல்லாதவர்களும் கூட என் நலன் விரும்புகின்றனர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேர மண்டலங்களில் இருந்து எனக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் அனைவரின் பிரார்த்தனைகள் ஒன்றிணைகிறது. அது ஒரே சக்தியாக, ஒரே உயிரோட்டமாக உருமாறி எனக்குள் புகுந்தது. எனது முதுகெலும்பின் முடிவில் அதை நான் உணர்கிறேன். எனது புத்தியில் வளர்கிறது.
சில நேரம் மொட்டாக, சில நேரம் இலையாக, அப்புறம் தளிராக கிளையாக துளிர்க்கிறது. நான் அதை ரசிக்கிறேன். ஒவ்வொரு பூவும், ஒவ்வொரு கிளையும் கூட்டுப் பிரார்த்தனையால் விளைந்தவை. அவை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. எனக்குள் மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. அதேவேளையில், ஒரு தக்கை சமுத்திரப் பேரலையின் நீரோட்டத்தை தனக்கானதாக தகவமைக்க வேண்டிய அவசியமில்லை என்ற மெய்யை உணரச் செய்கிறது. தக்கை அசைந்தாடுவது இயற்கை. இயற்கை தனது தொட்டிலில் உங்களை மென்மையாகத் தாலாட்டிக் கொண்டிருக்கிறது என்று வாழ்க்கையை ஏற்கவும்.
# இர்ஃபானின் கடைசிக் கடிதம்

Saturday, April 25, 2020

writer S.Ramakrishnan வலைப்பக்கத்திலிருந்து, குறுங்கதை, இது வேறு ஜன்னல்

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
ஏப்ரல் 23 உலகப் புத்தக தினம்

குறுங்கதை 54 
இது வேறு ஜன்னல்

பூங்காவில் அந்த மனிதர் பேசிக் கொண்டிருப்பதை ஒரு இளைஞன் கேட்டுக் கொண்டிருந்தான்.

“ என் வீட்டின் ஜன்னல்களை எண்ணமுடியாது.. ஒவ்வொரு ஜன்னலைத் திறக்கும் போது நான் காணும் காட்சிகள் வேறு வேறானவை. மனிதர்கள் நிறைய ஜன்னல்கள் உள்ள வீடுகளில் வசிக்க வேண்டும். எந்த ஜன்னல் வழியாக உலகை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று தெரியாது. வெட்டவெளி கற்றுத்தராததை ஜன்னல்கள் கற்றுத் தந்துவிடக் கூடியது என்றார் அந்த மனிதர்

“உங்கள் வீடு எங்கேயிருக்கிறது “எனக்கேட்டான் அந்த இளைஞன்

“மாதா கோவில் பின்புறமுள்ள தெரு. கடைசி வீடு. பெரிய மாமரமிருக்கும்“ என்றார்.

“நான் உங்கள் வீட்டிற்கு வரலாமா“ எனக்கேட்டான் இளைஞன்

“கண்டிப்பாக வரலாம்“ எனப் புன்னகைத்தார் அந்த மனிதர்

மறுநாள் மாலை அவரது வீடு தேடிச்சென்றான். வெளியே. மாமரம் தென்பட்டது. அவன் நினைத்தது போலப் பெரிய வீடில்லை. சராசரியான சிறியதொரு வீடு. அதில் ஒரு மாடி. வெளியே இருந்து பார்த்தால் இரண்டே ஜன்னல்கள்.

ஏன் இந்த மனிதர் இப்படிப் பொய் சொன்னார் எனக்குழம்பியபடியே காலிங்பெல்லை அடித்தான். அவரே கதவைத் திறந்தார்

“ஏன் இப்படிப் பொய் சொல்லுகிறீர்கள் “எனச் சற்றே கோபமாகக் கேட்டான் இளைஞன்

“என்ன பொய். எதற்கு இவ்வளவு கோபம். உள்ளே வா தம்பி “என்றார் அந்த மனிதர்

“எண்ண முடியாத ஜன்னல்கள் இருப்பதாகச் சொன்னீர்களே“ எனக்கேட்டான் இளைஞன்

“அதுவா.. ஜன்னல் என்றதும் மரஜன்னல் நினைவிற்கு வந்தால் அதற்கு நானா பொறுப்பு“ எனக்கேட்டுச் சிரித்தார்

“மரமோ கண்ணாடியோ இரும்போ எதுவாயினும் ஜன்னல்கள் வெளியே தெரியும் தானே“ என்றான் இளைஞன்

“வா மாடிக்குப் போகலாம்“ என அழைத்துக் கொண்டு போனார். அங்கே சுவர் முழுவதும் மரரேக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள். எழுதும் மேஜையில், கட்டிலில், தரையில் என வரிசை வரிசையாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன.

“இது தான் நான் சொன்ன எண்ணிக்கையற்ற ஜன்னல்கள். புத்தகம் தான் எனக்கான ஜன்னல். அதைத் திறந்தவுடன் என் வீட்டின் எதிரில் உள்ள காட்சிகள் தெரியாது. ஆனால் தொலைதூர உலகம் தெரியும். அதன் மனிதர்கள் தெரிவார்கள். மாமன்னர்களைக் கூட இருந்த இடத்திலே காண முடியும். ஓராயிரம் குதிரைகள் ஒரு புத்தகத்திற்குள் ஓட முடியும்.

உலகிற்கு இவை வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள். எனக்கோ என் அறிவிற்கான, அனுபவத்திற்கான ஜன்னல்கள்..

மரமும் கல்லும் இரும்பும் கொண்ட வீட்டிற்கே பத்து பன்னிரண்டு ஜன்னல்கள் தேவை என்றால் ,பெருவாழ்க்கை வாழ முற்படும் மனிதனுக்கு எத்தனை ஜன்னல்கள் தேவை.. நீயே யோசித்துப்பார். “

அவன் வியப்போடு ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். ஸ்பினோசாவின் எதிக்ஸ் என்ற புத்தகமது. அதன் முகப்பில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எனக் கையெழுத்துப் போட்டிருந்தது. அவன் வியப்போடு கேட்டான்

“ஐன்ஸ்டீன் படித்த புத்தகமா. “

“பார்த்தாயா. ஒரு புத்தகம் எழுதப்பட்டவனால் மட்டுமில்லை வாசித்தவனாலும் புகழ் பெறுகிறது. இந்தப் புத்தகம் என் பிறந்த நாளுக்கு எனது அமெரிக்க நண்பர் கொடுத்த பரிசு

புத்தகங்களுக்குள் காடும் கடலும், மலையும் அருவிகளும், பாலையும் பள்ளத்தாக்கும் இருக்கின்றன. உலகில் நீ காணும் சகல உயிரினங்களும், சந்திர சூரியர்களும் கூட புத்தகங்களுக்குள்ளே இருக்கிறார்கள். புத்தகங்களுக்குள்ளும் நல்ல மனிதர்கள், கெட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். புத்தகங்கள் சூழ வாழுகிறவனின் மகிழ்ச்சியை உன்னால் புரிந்து கொள்ள முடியாது

பாடப்புத்தகங்களுககு வெளியே எதையும் இதுவரை படிக்கவில்லை இன்றே வாசிக்கத் துவங்கு. உன் ஜன்னல் திறக்கும் போது அதன் புதிய வெளிச்சத்தையும்,காற்றையும்,முன்னறியாத காட்சிகளையும் நீ காணுவாய், உணருவாய். உன்னை விரிவடையச் செய்யும் போது உலகமும் சேர்ந்து விரிவடையும்“

அந்தப் பையன் ஆசையோடு கேட்டான்

“இங்கேயே அமர்ந்து இந்தப் புத்தகத்தைப் படிக்கலாமா“

“சந்தோஷமாக “என்றார் அந்த மனிதர்

அந்த இளைஞன் ஐன்ஸ்டீன் படித்த ஸ்பினோசா புத்தகத்தைப் புரட்டினான்.

நூற்றாண்டு காலம் ஒரு நொடியில் மறைந்து புத்தம் புதியது போலப் புத்தகம் அவனை வரவேற்றது.

சொற்களின் வழியே அவன் பறக்கத் துவங்கியிருந்தான்.

வண்ணத்துப்பூச்சி

நான் திடீரென்று அழகானேன்
என் மீது ஒரு வண்ணத்துப்பூச்சி.
சாமியின் சிந்தனை.

Friday, April 24, 2020

மனித மனதின் ஏக்கம்

உன்னை சார்ந்தோரை ஒருவரையேனும்,
 ஒவ்வொரு நாளும், 
ஏதேனும் அவர்கள் செய்யும் சிறு/குறு  நற்செயல்களுக்காக உற்சாகப்படுத்து, 
அங்கீகாரம் செய், அளவோடு புகழ்ந்து பேசு, ஒவ்வொரு மனித மனமும் இதற்காக ஏங்குகிறது. அது முற்றும் துறந்த முனிவராக இருந்தால்க்கூட.
சாமியின் சிந்தனை.

Thursday, April 23, 2020

புத்தகம்

என்னை உயிர்ப்போடு
வைத்திருக்கும் உயிர்.
சாமியின் சிந்தனை.

உலகப் புத்தகத் திருநாள் வாழ்த்துக்கள்.

உதவிடு.. மகிழ்ந்திடு

உதவிடு
     மறந்திடு
            மகிழ்ந்திடு.

Wednesday, April 22, 2020

பூமிநாள்

பூமியின் அன்பு தாயின் அன்புக்கு ஈடானது, நாம் செய்த தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளை சரிசெய்ய அது ஓயாமல் உழைத்துக்கொண்டே நமக்கு ஓய்வை கொடுத்திருக்கிறது.

Tuesday, April 21, 2020

குவாராண்டைன்-கொரானா காலம்.

கடற்கரை சென்று நிலவொளியில் நடக்கிறது,
நகராத உலகத்தில் நகரும் மேகத்தில் ஊர் செல்ல நினைக்கிறது,
இரயிலில் சன்னலோர இருக்கையில் கிராமத்திற்கு சென்று உறவுகளை பார்க்கிறது,
கல்லூரி சென்று வகுப்பெடுக்கிறது,
நண்பர்களிடமும் மாணவர்களிடமும் கதைக்கிறது,
நடுவெயிலில் தேனீர்க்கடைக்கு சென்று சமோசா சாப்பிடுகிறது,
பனிக்கால பேருந்து பயணத்தில் பாடல் கேட்கிறது,
அதிக்காலபொழுதில் பறவைகளின் இசையை கேட்கிறது,
நதியோர நிழலில் பசுமையினோடு நடக்கிறது,
இந்த 144 தடையும் குரோனாவும் உடலுக்குத்தான்,
என் மனம் குறைந்தபட்சம் நிமிடத்திற்கு 288 முறை எங்கும் அலைகிறது கட்டுபாடேயில்லாமல்.
 சாமியின் சிந்தனை.

Monday, April 20, 2020

A Great Article read in whatsapp

Bசிறப்புக் கட்டுரை: 

தவறாமல் படிக்கவும்...

*‘வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள். யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’* -

*கற்பனையில் கூட இப்படி ஒரு சூழல் வருமென்று நாம் யாரும் நினைத்திருக்க முடியாது.*

*சார்த்தர் எழுதிய ‘மீள முடியுமா?’ என்ற நூலில் ஒரு வரி வருகிறது -*

 *‘நரகம் என்பது - மற்றவர்கள் தான்...*’

*பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. சொந்த நாட்டின் மக்கள் அகதிகள் போல நடந்தே ஊருக்குத் திரும்புகிறார்கள். வழியில் பசியால் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்து போகிறார்கள்.*

*பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மிகப்பெரிய இடப்பெயர்வு. உலகத்தையே தலைகீழாகக் கவிழ்த்தியது போல மாற்றங்கள் நிகழ்கின்றன.*

*இன்னும் நாம் கற்பனையே செய்ய முடியாத அரசியல் மாற்றங்கள் உலகில் நிகழப்போகின்றன.*

*இந்த க‌ஷ்டகாலத்திலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.*

 *நாயக பிம்பங்கள், வேஷங்கள், பொய்கள் எல்லாம் கலைகின்றன.*

 *கங்கை நதி குடிநீராக மாறுகிறது... சூழல் மாசு கட்டுக்குள் வந்திருக்கிறது... மதியம் கிளிகளின் சத்தம் கேட்கிறது... இந்த ஏப்ரல் மாத இரவில் சென்னை லேசாகக் குளிர்கிறது...*

*தீவிரமான நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகின்றன. கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு நண்பர் ‘கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது‘ என்கிறார். ‘நீங்கள் எல்லாருமே திருடர்கள். எனவே யாரும் என்னைப் பார்க்க வராதீர்கள்’ என்று கடவுளே தன் வழிபாட்டுத்தலங்களைப் பூட்டச் சொல்லிவிட்டார் என்கிறார் ஒரு முதியவர்.*

*இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், நாடுகளின் பெயரால், சாதிகளின் பெயரால் நாம் கொண்டிருந்த பெருமைகள் எதுவும் நம்மைக் காப்பாற்றாது.*

 *விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் நாம் செய்த கண்டுபிடிப்புகளையெல்லாம் பார்த்து இயற்கை புன்னகைக்கிறது.*

 *வல்லரசுகளே தடுமாறுகின்றன. தனித்திருப்பதைத் தவிர தப்பிக்கும் வழிகள் இல்லை.*

*இந்த வருடம் அமோகமாக இருக்கும் என்ற சோதிடக் கணிப்புகள்தான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை.*

*முடியாது என்று நினைத்த விஷயங்களில் ஒன்று டாஸ்மாக்கை மூடுவது. இன்னொன்று தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவது. இரண்டுமே நடந்துவிட்டது.*

 *கவனித்துப் பார்த்தால் நம் இயல்புக்குப் பொருந்தாத எல்லாம் விடை பெறுகின்றன.*

*மண்டபங்கள் வரும் வரை நம் திருமணங்கள் வீட்டில் நடந்தன. இப்போது திருமணங்கள் எந்த புரோகிதமும் இல்லாமல் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டன. கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அத்தனை டெஸ்ட்டுகள், ஸ்கேன்கள் எடுக்க வேண்டுமென்பது கட்டாயம் என்று வலியுறுத்தும் மருத்துவர்கள் இப்போது அதெல்லாம் தேவையில்லை. வீட்டிலேயே இருங்கள் என்கிறார்கள். தொற்றுக்காகத் தவிர்க்கப்படுகிறது என்றாலும் தவிர்க்கப்படுவதால் ஒன்றும் ஆகாது என்ற உண்மையும் அதில் இருக்கிறது.*

*கிராமத்திலிருந்து வந்தவர்கள் கிராமத்துக்கே திரும்பிவிட்டார்கள்.*

 *‘மகன் வெளிநாட்டில் இருக்கிறான்’ என்று ஒருமாதம் முன்புவரை பெருமையாக இருந்த இந்த விஷயம் இப்போது பெருமையாக இல்லை.*

 *மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தீவிரமாகப் பேசிய வாய்கள் அனைத்தையும் மாஸ்க் மூடிவிட்டது. மதம் பற்றிப் பேசியவர்கள் மலேரியா மாத்திரை குறித்தும் கபசுரக் குடிநீர் குறித்தும் பேசுகிறார்கள்.*

*துறை சார்ந்து அறம் தவறியவர்களாகப் பார்க்கப்பட்ட மருத்துவர்களும் காவலர்களும்தான் உயிரைப்பணயம் வைத்து முன் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில் இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.*

*தேசத்தைக் காப்பதாக எப்போதும் பேசும் அரசியல்வாதிகள் அந்தச் செய்திகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார்கள்.*

*நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் சம்பளத்தில் முப்பது சதவிகிதம் கொடுத்தது செய்தியாகிறது.*

 *என்ன சம்பளம் என்று தெரியாத துப்புறவுத் தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பு மணி அடிக்கிறார்கள். வீட்டுக்குள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது. ‘யாரு?’ ‘குப்பை’. சமூக இடைவெளி மட்டும் எப்போதும் போல அப்படியேதான் இருக்கிறது.*

*ஸ்வீடனில் ஒருவர் தான் சேர்த்துவைத்த பணத்தை எல்லாம் வெளியில் வீசுகிறார். தெரு முழுக்கப் புரளும் பணத்தை எடுப்பதற்கு யாரும் இல்லை.*

 *உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? உங்களுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது? நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். பிரிட்டிஷ் பிரதமராக... ஹாலிவுட் நடிகராக... மருத்துவராகக் கூட இருங்கள். எதுவும் முக்கியம் இல்லை. உங்கள் உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.*

*மதிப்புகள் அனைத்தும் மாறுகின்றன. பிரான்ஸில் 92 வயது மூதாட்டி நான் நன்றாக வாழ்ந்து விட்டேன்.போதும், அவரை வாழவையுங்கள் என்று தனக்குக் கொடுத்த வெண்டிலேட்டரை முப்பது வயது இளைஞருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு நோயுடன் வீடு திரும்புகிறார். கண்கள் கலங்குகின்றன.*

 *வெண்டிலேட்டர் இல்லாத தேசத்தில் சொந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக எத்தனை அணு ஆயுதங்கள் யுத்த விமானங்கள்.*

*கைகளைச் சோப்புப் போட்டுக் கை கழுவுங்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நைஜீரியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த லாகோஸ் நகரில் ஒருமுறை சோப்பு போட்டுக் கைகழுவுவதுகூட ஆடம்பரம் என்கிறது செய்தி.*

*1,400 கிலோமீட்டர் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து ஒரு தாய் நகரத்தில் இருக்கும் தன் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார்.*

*65 வயதுக் கணவர் வலியால் துடிக்கும் தன் மனைவியை சைக்கிளில் வைத்து அழுத்தி கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.*

*ஒரு தாய் நல்லதங்காள் போல தன் ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசுகிறாள்.*

*இவையெல்லாம் வெறும் காட்சிகள் அல்ல. வரும் ஆண்டுகளுக்கான குறியீடுகள்....,*

*பெரும்பாலான நாடுகள் மூத்த குடிமக்களை கைவிட்டு விட்டது. உடல் நலம் சரியில்லை என்றால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலைக்கு அரசுகள் வந்துவிட்டது என்றால் இனி என்ன நடக்கும்.*

*அழுத்தம் தாளாமல் குக்கர் வெடிப்பது போல பல நாடுகளில் புரட்சி வெடிக்கப்போகிறது என்கிறது ஓர் ஆங்கிலக் கட்டுரை. திருக்குறளின் 56ஆவது அத்தியாயத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள்.*

*“உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக உரிய நேரத்துக்குள் கையாளாமல் விட்டால் நாட்டில் பெரும் உணவுப்பஞ்சம் ஏற்படும்.*

 *பஞ்சாபில் ஆயிரக்கணக்கான டன் கோதுமை அறுவடை செய்யப்படாமல் இருக்கிறது. அறுவடை செய்ய வேண்டுமெனில் பிகாரில் இருந்து தொழிலாளர்கள் வர வேண்டும். அறுவடை செய்ததை நிரப்ப மேற்கு வங்கத்தில் கோணிப்பை தொழிற்சாலை திறக்கப்பட வேண்டும். கோதுமை மூட்டைகளை நாடு எங்கும் கொண்டு செல்ல டிரக்குகள் வேண்டும். ஒரு டிரக் டிரைவர் நூறு ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும். எங்கெல்லாம் இறங்குவார்? தொற்று இருந்தால் என்ன நடக்கும்?*

*‘ஒன்றை ஒன்று வெகுவாகச் சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக அனுப்புவதுதான் எங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்’ என்கிறார் இந்தியக் குடிமையியல் அதிகாரி ஒருவர்.*

*‘உங்கள் வாழ்வில் நித்தியமானது மரணம் ஒன்றுதான். அதற்கு தயாராகாமல் நீங்கள் எதெதற்கோ தயாராகிறீர்களே ஏன்?’ என்று புத்தர் கேட்டதையே நோம் சாம்ஸ்கி ’பல வருடங்களாக கிருமி இருந்தும் மருந்து கண்டுபிடிக்காமல் அழகு க்ரீம்களைக் கண்டுபிடிப்பதில் ஏன் கவனம் செலுத்தினீர்கள்?’ என்று கேட்கிறார்.*

*இந்தக் கிருமியின் வளர்ச்சியைப் பற்றி உலகின் நவீன விஞ்ஞானமும், நவீன மருத்துவமும் யோசிக்காததன் காரணம் பல துறைகள் தனியார்வசம் போனதுதான் என்கிறது புள்ளிவிவரம்.*

 *வாழ்வாதாரங்கள் இழந்து எல்லைகளில் நுழைகிற அகதிகளைக் கொன்று கொண்டிருந்தோம். இன்று எல்லைகள் அனைத்தும் கேலிக்குரியவனாகி விட்டன. அமெரிக்காவுக்கு வியட்நாம் மருந்து அனுப்புகிறது.*

*கதவில் இருக்கலாம். கைப்பிடியில் இருக்கலாம். செய்தித் தாளில் இருக்கலாம். பால் பாக்கெட்டில் இருக்கலாம். தும்மினால் மூன்று மணி நேரம் காற்றில் இருக்கலாம். ஒருமுறை இதன் சுற்று முடிந்தாலும் ஆறு மாதங்களில் இதன் மறு சுற்று ஆரம்பிக்கலாம். வதந்திகளும் செய்திகளும் கிருமியைவிட வேகமாகப் பரவுகின்றன.*

 *தொலைக்காட்சிக்கு நாள் முழுக்க பிரேக்கிங் நியூஸ். திகில் படத்துக்கான இசையுடன் மனிதர்கள் இறந்த செய்திகள்.*

*நல்ல வேளையாக இது பறவைகள் மூலம் பரவவில்லை. பறவைகள் மூலம் பரவினால் மனித குலம் பிழைத்திருப்பது கடினம் என்கிறார் ஒரு மருத்துவர்.*

 *இப்போது வௌவால் மூலமும் பரவும் என்கிறார்கள். அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி பழங்குடியினருக்கும் தொற்று பரவிவிட்டது என்கிறது ஒரு செய்தி.*

*மருந்தில்லா கிருமிக்குப் பயந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் பயத்தில் இருக்கிறது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வீட்டில் இருக்க வேண்டும்.*

 *சீன அரசு எல்லாமே தந்தது. வீட்டுக்குள் இருந்தார்கள். இங்கு கூட்டம் கூட்டமாக வெளியில் வருகிறார்களே ஏன்? கிருமியை விடவும் பசியும் வேலையின்மையும் கொடுமையானது....*

 *கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றிய சீனாவில் டிசம்பரில் தொடங்கிய ஊரடங்கை ஏப்ரலில் தான் தளர்த்தினார்கள்.* 

*கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் நம் தேசத்தில் இந்தத் தொற்று கட்டுக்குள் வர எத்தனை மாதங்கள் ஆகும்?*

*ஒரு நாள்., பிறகு 21., பிறகு 19., பிறகு?*

*இது தொடரும்...நிலையில் என்னென்ன நூல்கள் படிக்கலாம், என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் என்று சமூக ஊடகங்களில் வருகிற பொழுதுபோக்குத் திட்டங்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போகும்.*

*முதல் வாரத்தில் கணவர்கள் படும் அவஸ்தைகள் குறித்து வந்த மீம்ஸ்கள் இப்போது குறைந்து விட்டன. குடும்ப வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் குறித்த செய்திகள் அதிகம் வரத் தொடங்குகின்றன.*

*அடுத்த அத்தியாயத்தை இயற்கை எழுதிக் கொண்டிருக்கிறது.*

 *‘ஆட்கள் வேலை செய்கிறார்கள். மாற்றுப் பாதையில் செல்க’ என்ற அறிவிப்பு சாலையில் இருப்பதைப்போல ‘இயற்கை வேலை செய்கிறது. நாம் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.*

*பரிணாம விதிகளில் பொருந்திப் பிழைத்திருக்கும் விதமாக வரும் ஆண்டுகளில் எல்லாமே மாறப்போகிறது என்பது மட்டும் சூசகமாகத் தெரிகிறது.*

*அச்சு ஊடகங்கள் விடை பெறலாம். மக்கள் கூடுகிற வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இன்னும் பல மாதங்களுக்கு மூடி இருக்கும் நிலை வரலாம்.*

*இதெல்லாம் முடிவுக்கு வரும்போது முதல் இரண்டு இடங்களுக்கு மக்கள் ஆர்வமாகத் திரும்புவார்கள்.*

 *ஏனெனில் இந்த இரண்டு இடங்களிலும் மனித இடைவெளி சாத்தியம்.*

 *மூன்றாவதான திரையரங்கு என்னாகும்? யாருமே காப்பாற்ற முடியாது என்ற நிலையில் பயத்துடன் இருந்தவர்களுக்கு அனைவரையும் காப்பாற்றும் நாயகர்களின் படங்கள் என்ன பொருள் தரும்? இணைய தளங்கள் வழியாக இத்தனை வாரங்கள் படங்கள் பார்த்துப் பழகியவர்கள் திரையரங்குக்குத் திரும்புவார்களா?*

*இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து உடனே வெளியேறுங்கள்’ என்று ஒரு அறிவிப்பு வரும். அதற்கு இணையான சூழல்தான் இப்போதும்.* 

*முரண் என்னவெனில் அத்தியாவசியத்தோடு வீட்டுக்குள் இருங்கள் என்பதுதான்.*

*அன்றாட வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை இயற்கை முன் மொழிந்துவிட்டது. தொழில்நுட்பம் அதை வழிமொழியப்போகிறது.*

*சமீப வருடங்களில் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு எதிராக மினிமலிஸம் என்ற ஒரு கருத்து உலகம் முழுக்கப் பரவி வருகிறது.*

 *‘கடந்த ஒரு வருடத்தில் எதை நீங்கள் பயன்படுத்தவில்லையோ அது உங்களுக்கு எப்போதும் பயன்படாது. எனவே, அதைத் தூக்கி எறியுங்கள். பொருட்களைத் துடைக்க, பொருட்களை ஒழுங்கு செய்ய என்று உங்கள் ஆயுளை பொருட்களிடம் செலவழிக்காதீர்கள்’ என்பதுதான் அந்தக் கோட்பாடு. ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம்தான்.*

*இந்த மாதத்தில் எங்கள் வீட்டில் ஒரு பிறந்தநாள் வந்தது. நண்பர்களை அழைத்து, கேக் வெட்டி கொண்டாட்டமாக நடத்துவது சாத்தியமில்லை என்பதால் குழந்தைகள் வாழ்த்து அட்டையைக் கைகளால் வரைந்தார்கள். கேக் இல்லை. கூடி அமர்ந்து கைதட்டி வாழ்த்துச் சொன்னோம். முந்தைய பிறந்தநாட்கள் எல்லாம் நிழற்படங்களாக ஹார்டு டிரைவில் இருக்கின்றன. இந்தப் பிறந்தநாள் முழு வாழ்க்கைக்கும் மனத்தில் இருக்கும்.*

*பிறரைப் பார்த்து பிரதியெடுத்த போலியான கொண்டாட்டங்கள் அனைத்தும் விடை பெறுகின்றன.* 

*குப்பை உணவுகள் போய் வீட்டுச் சமையலில் கீரையும், மிளகு ரசமும் வந்துவிட்டது. நாகரிகம் என்ற பெயரில் நாம் மறந்த மரபுகள் அனைத்தையும் ஒரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது.*

*இத்தனை நாளும் பணத்தின் பின்னால், அதிகாரத்தின் பின்னால் பெருமைகளின் பின்னால் நீங்கள் ஓடிக்கொண்டிருந்தால் உங்கள் சக்கரங்களை நிறுத்துங்கள்.*

 *உங்கள் அருகில் ஒரு குடும்பம் இருக்கிறது. அதில் குழந்தைகள் இருக்கிறார்கள். உங்கள் ஓட்டம் இவர்களுக்காகத்தான் எனில் அவர்களின் உண்மையான தேவை என்ன?*

*எதிர்மறை உணர்வுகளும், பயமும், அவ நம்பிக்கையும் சூழ்ந்த இந்தக் கடினமான நாட்கள் சீக்கிரமே முடிந்துவிடும்.*

*இது போல பல நூறு தொற்றுக்களைப் பார்த்த மனிதகுலம் ஆரோக்கியமாக மீண்டு எழுந்து வரும்.*

 *இது மாதிரியான தனிமை உங்கள் வாழ் நாளில் திரும்பவரப் போவதில்லை. எனவே தனித்திருங்கள். பல வருடங்கள் கழித்து இதையெல்லாம் நம் சந்ததியினருக்கு ஒரு கதையாகச் சொல்ல முடியும்.*

*தொற்று தொடங்கிய முதல் வாரத்தில் எதிர்வீட்டில் ஒன்று நடந்தது. ஆண்டன் செகவ் பார்த்திருந்தால் ‘பால் பாக்கெட்’ என்று ஒரு சிறுகதை எழுதி இருப்பார். பக்கத்து ஃப்ளாட்காரர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கதவில் இருக்கும் பால் பாக்கெட்டை கைபடாமல் ஒரு குச்சியின் உதவியால் எடுத்து எப்படி மஞ்சளும் உப்பும் கலந்த வாளியில் போட்டார் என்பதுதான் கதை.*

 *இதுபோல என் மனைவி இரண்டாவது மாடியிலிருந்து தக்காளி வாங்கிய கதையும் இருக்கிறது.*

*‘கடுமையான நெருக்கடிக்குள்தான் காமெடி இருக்கிறது’ என்று சாப்ளின் சொல்லுவார்.*

*நெருக்கடி மிகுந்த இந்த நாட்களை மன அழுத்தமில்லாமல் எளிதாகக் கடந்து வருவோம். இந்தச் சூழலில் நமக்குத்தேவை நம்பிக்கை.*

*சக மனிதனுக்கு நம்பிக்கையையும் நம்மால் முடிந்ததையும் கொடுப்போம்.*

*ஸ்பார்டகஸ் நாடகத்தில் ...
‘மண்ணிலிருந்து வந்தேன். மண்ணுக்கே திரும்புகிறேன்’*

 என்று ஒரு வரிவரும். அதன் வெவ்வேறு அர்த்தங்களை யோசித்துப் பார்க்கிறேன்.

 *‘நமக்கான உணவை நாமே உருவாக்கும் அளவுக்கு ஒரு தற்சார்புப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால் போதும். எத்தகைய வீழ்ச்சியில் இருந்தும் நம்மால் மீண்டு எழுந்துவிட முடியும் என்கிற நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.*

*இந்தப் பேரிடரை முன்வைத்து  மரபு சார்ந்த வாழ்வை, விவசாயத்தை, மரபு சார்ந்த மருத்துவத்தை நாம் புதுப்பிக்க வேண்டும். நம் கலாச்சாரம் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.*

*தனித்திருப்போம். கைகளைக் கழுவிக்கொண்டே இருப்போம். ஏனெனில் நம் கைகளில் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கிறதோ இல்லையோ பல வருடங்களாக நாம் கொன்ற இயற்கையின் ரத்தம் கறையாக இருக்கிறது.*                           🙏🏻🙏🏻🙏🏻

Sunday, April 19, 2020

கொரொனா

இயற்கை இயங்குகிறது,
செயற்கை செயலற்று கிடக்கிறது.

Saturday, April 18, 2020

அன்பு

தூய அன்பு என்ற சுமை  என்மீது ஏற்றப்படும் போதெல்லாம், நான் இலேசாகி மேலும் மேலும் உயர்ந்து பறக்கிறேன். 
சாமியின் சிந்தனை.

Friday, April 17, 2020

ஒரு துளி கண்ணீர்

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
குறுங்கதை 50 
ஒரு துளி கண்ணீர்

“சிரமம் வேண்டாம் வெளியிலே சாப்பிட்டுக் கொள்கிறேன்“ என்றான் நாதன். ஆனால் பழனி கேட்கவேயில்லை. “எப்போதும் வெளியே தானே சாப்பிடுகிறீர்கள். இன்றைக்கு என் வீட்டிற்கு மதியம் சாப்பிட வாருங்கள்“ என்றார். எவ்வளவோ மறுத்தும் பழனி கேட்கவில்லை.

மதியம் ஒரு மணிக்குச் சாப்பிட வருவதாக ஒத்துக் கொண்டான். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தார்கள். முப்பத்தியெட்டு வயதாகியும் நாதன் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியறை எடுத்துத் தங்கியிருந்தான். பழனி புறநகரில் குடியிருந்தார்.

தெரிந்தவர் வீட்டில் போய்ச் சாப்பிடுவது கூச்சமானது. எதைச் சாப்பிடுகிறோம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று கவனமாக இருக்க வேண்டும். எதையாவது பிடிக்கவில்லை என்று ஒதுக்கினால் மனக்கஷ்டம் உண்டாகிவிடும். ஹோட்டலில் அந்த நெருக்கடி கிடையாது.

நாதன் வழக்கமாக ஒரு மெஸ்ஸில் தான் சாப்பிட்டான். ஞாயிற்றுக்கிழமை காலையில் எப்போதும் சாப்பிடுவது கிடையாது. ஆகவே பனிரெண்டு மணிக்கெல்லாம் மதியச்சாப்பாட்டினை முடித்துவிடுவான். ஆனால் அடுத்த வீட்டில் பனிரெண்டு மணிக்குச் சாப்பாடு எதிர்பார்க்க முடியாது தானே.

ஒரு மணிக்குச் சாப்பிட வருவதாகச் சொன்ன போதும் நாதன் போன போது மணி ஒன்றரை ஆகியிருந்தது. வீட்டின் காலிங்பெல்லை அடிக்கும் போது உள்ளே ஏதோ உரத்த சப்தம் கேட்டது.

“யாருனு பாருங்க“ என்று ஒரு பெண் குரல் கேட்டது. “ஏன் கத்துறே“ எனச் சொல்லியபடியே பழனி கதவைத் திறந்தார்.

நாதனைக் கண்டதும் பொய் சிரிப்புடன் உள்ளே அழைத்துப் பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்தார். சமையல் அறையினுள் எழுந்த புகை ஹால் வரை பரவியிருந்தது.

“அப்பளம் பொறிச்சிட்டா சாப்பிடலாம்“ என்றார் பழனி. டீப்பாயில் கிடந்த வார இதழைப் புரட்டிக் கொண்டிருந்தான். பழனி உள்ளே போய் ஏதோ கேட்பது தெரிந்தது. மணி இரண்டைக் கடந்த பிறகும் சாப்பாடு தயாராகி முடியவில்லை. நாதன் பொறுமையாகக் காத்திருந்தான்.

இலை போட்டு உப்பு வைத்து அந்தப் பெண் சோறு பரிமாறினாள். அப்போது தான் அவளை முதன்முறையாகப் பார்த்தான். நெற்றியில் நீளமான தழும்பு, களைத்துப் போன முகம். அந்தப் பெண் சோற்றுக் கரண்டியினை உயர்த்தும் போது  தன்னை அறியாமல் அவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் உதிர்ந்து சோற்றில் விழுந்தது. பழனி அதைக் கவனித்தானா எனத் தெரியவில்லை.

அந்தப் பெண் சோற்றில் விழுந்த கண்ணீரைப் பார்த்தபடியே சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். கண்ணீர் துளி விழுந்த சோற்றை எப்படிச் சாப்பிடுவது என நாதன் கவலை கொண்டான்.

அவர்களுக்குள் என்ன சண்டை. எதற்காக அழுகிறாள். தன் பொருட்டுத் தான் சண்டையா, எதுவும் விளங்கவில்லை. அவன் சோற்றில் கைவைக்காமல் அமர்ந்திருந்தான். அந்தப் பெண் எதுவும் நடக்காதவள் போலச் சோற்றில் சாம்பார் ஊற்றினாள். கண்ணீர் அதில் கரைந்து போனது. மெல்லிய குரலில் சாப்பிடுங்கள் என்று சொன்னாள்

கண்ணீர் துளி கலந்த சோற்றைச் சாப்பிடுவது மனதைக் கனக்கச் செய்தது. பழனி அவளை நோக்கி “சாருக்கு நெய் போடு“ என்றார். நாதன் வேண்டாம் என்றபோதும் அவள் நெய் போட்டாள். அவள் முகத்தில் விவரிக்க முடியாத வேதனை படிந்திருந்ததைக் காண முடிந்தது.

சோற்றைப் பிசைந்து சாப்பிட்டான். ஒரு துளி கண்ணீர் சாப்பாட்டின் ருசியை மாற்றிவிடுகிறது. அவனால் அச் சோற்றைச் சாப்பிட முடியவில்லை. ஆனால் சாப்பிடாமல் போனால் நிச்சயம் அந்தப் பெண்ணைப் பழனி திட்டுவார். சண்டை போடுவார். அது அப்பெண்ணிற்கு மேலும் துயரம் என்பதால் விருப்பமேயில்லாமல் சாப்பிட்டான்.

இனி ஒரு போதும் யார் வீட்டிற்கும் சாப்பிடப் போகக்கூடாது என்று மனதில் ஒரு குரல் எழுந்து கொண்டேயிருந்தது.

சாப்பிட்டு முடித்து இலையை மடக்கிய போது பழனி கேட்டார்

“சாப்பாடு பிடிக்கலையா . சரியாவே சாப்பிடலை“

“அப்படியெல்லாம் இல்லை நல்லா சாப்பிட்டேன்“ என்றான்

கைகழுவுவதற்காக அவர்கள் பின்கட்டிற்குப் போனார்கள்

அந்தப் பெண் எச்சில் இலையைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. கையைத் துடைத்தபடியே வந்த பழனி என்ன என்று கோபமாக அவளிடம் கேட்டார். அவள் பதில் சொல்லவில்லை. சில நிமிடங்களில் கிச்சனில் இருந்த ரேடியோ பாட ஆரம்பித்தது. பழனியிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு நாதன் தன் அறைக்கு வந்தான். பெருங்குற்றவுணர்ச்சி அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.

அதன் சில நாட்களில் நாதன் மாற்றல் வாங்கிக் கொண்டு வேறு ஊருக்குப் போய்விட்டான். ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் சோற்றைக் காணும் போதெல்லாம் ஒரு துளி கண்ணீரின் நினைவு வருவதை மட்டும் அவனால் தவிர்க்க முடியவேயில்லை

Wednesday, April 15, 2020

அவ (ள்)நம்பிக்கை

அவளின் சொல்லில் 
நம்பிக்கை இருந்தது.
சாமியின் சிந்தனை.

Tuesday, April 14, 2020

காலமாற்றம்

இப்பொழுதெல்லாம் கேட்டவுடன் யோசிக்காமல் வருவது பொய்யாகவும்,  யோசித்தப்பின் வருவது மெய்யாகவும் உள்ளது. சாமியின் சிந்தனை.

Sunday, April 12, 2020

கொரானா காலம்

காக்கை குடும்பத்துடன் வந்து என்னை சன்னல் வழியே பார்க்கும்போதெல்லாம், நான் குடும்பத்துடன் மிருகக்காட்சி சென்றது நினைவுகளில் வந்து செல்கிறது. சாமியின் சிந்தனை.

Thursday, April 9, 2020

கடன்வாங்கப்பட்ட #கருத்துக்கள், #தத்துவங்கள் உங்களது தலையில் இருக்கும்.

"ஒரு கதை!!!

ஒரு தத்துவாதி கிழிந்த காலணியை  சரிசெய்வதற்கு செருப்பு தைப்பவரிடம் சென்றார் . 

அவர்  இந்தவொரு ஜோடி காலணி மட்டுமே வைத்திருந்ததால் நான் காத்திருக்கின்றேன் .தைத்துக் கொடுங்கள் என்றார்.  

உடனே கடையை சாத்திவிட்டு நடையை கட்டுகிற நேரம். நாளை வாருங்கள் தைத்து வைத்திருக்கின்றேன் என்றார்.  

இல்லையில்லை என்னிடம் இந்த காலணிகள்தான் உள்ளது. ஆகவே தைத்துக்கொடுங்கள் என்று வற்புறுத்தினார்.  

 முடியாது.  நேரமாகிவிட்டது.  உங்களுக்காக என்னிடம் உள்ள காலணியைத் தருகின்றேன். இப்போது போட்டுக்கொண்டு செல்லுங்கள். நாளை வரும்போது நான் கொடுத்த செருப்பைக் கொடுத்துவிட்டு சரிசெய்த செருப்பைப் போட்டுக் கொள்ளலாம் என்றார்.  

அடுத்தவர்கள் போட்டுத் தேய்த்த செருப்பை நான் போடுவதா? நான் யாரென்று நினைத்தீர்கள்.  என்றார் கோபத்துடன் தத்துவவாதி.  

மற்றவர்களுடையக் கருத்துக்களை நீங்கள் கடன் வாங்கி உங்களது மண்டையில் வைத்துக் கொள்கின்றபோது மற்றவர்கள் அணிந்துகொண்ட இந்த செருப்பை அணிந்துகொள்வதில் தவறு ஒன்றுமில்லை என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.  

ஆகவே, இன்று ஒருநாள்  இந்த செருப்பைப் போட்டுக்கொண்டு செல்லுங்கள் என்றார்.  

அது உங்களது காலில் இருக்கும்.  மற்றவர்களிடமிருந்து கடன்வாங்கப்பட்ட  #கருத்துக்கள், #தத்துவங்கள் உங்களது தலையில் இருக்கும்.  

ஆகவே, மற்றவருடைய செருப்பை அணிந்துகொள்வதில் தவறு ஒன்றுமில்லை என்றார். 

#ஓஷோ

படித்த கதை

சிறுகதை


பாசப் போராட்டம்



என்னங்க மூட்டை

ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன்

ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார்

ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு

ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க

இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன்

அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே

வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன்

அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. 1000 வா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க


எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி போவீங்க.

சைக்கிள் ல போவேன்

ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்து சாகுறதுக்கா

நல்ல வார்த்தையே பேச மாட்டியா நீ

இப்ப போக வேணாம் நாளைக்கு காலைல போய் குடுத்துக்கலாம்

இல்லல்ல நான் இப்பவே கிளம்புறேன்

போங்க. போலீஸ்காரன் சாமானையும் சைக்கிளையும் புடுங்கி வச்சுகிட்டு, உங்களை தோப்புக்கரணம் போட சொல்லுவானோ, குட்டிக்கரணம் போட சொல்லுவானோ. நடந்து தான் வரப் போறீங்க

நல்ல வார்த்தையே பேச மாட்டியா

அய்யய்யோ துரை போருக்கு போறாரு. நல்ல வார்த்தை சொல்லி அனுப்பனும்.

சரி கிளம்பனும் பழைய சோறு இருந்தா கொடு

அதான் மக வீட்டுக்கு போறீங்கள்ள. உங்க மக சமைச்சு வச்சிருப்பா. அங்கே போய் சாப்பிட்டு வாங்க

சரி நான் கிளம்புறேன்

சொன்னா கேக்க மாட்டீங்க. பட்டா தான் உங்களுக்கு புத்தி வரும்.போலீஸ்காரன் உங்கள அடிச்சு உதைச்சு அனுப்பும்போது தான் நான் சொன்னது ஞாபகத்துக்கு வரும்

அவர் சைக்கிளில் எல்லா மளிகை சாமான்களையும் மூட்டையாக கட்டி, பின்பக்கம் வைத்துக் கொண்டு கிளம்பினார்

ஒரு ஐந்து கிலோமீட்டர் வந்திருப்பார்.அங்கே சாலையில் தடுப்பு அமைத்து ஜிப்போடு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
மனைவி சொன்னது போல் போலீஸ்காரர்கள் சாமானையும் சைக்கிளையும் பிடிங்கி கொள்வார்களோ. தோப்புக்கரணம் போடச் சொல்லி போட்டோ எடுத்து டிவியில் போடுவார்களோ.தெரியாமல் வந்து விட்டோமோ.
பயம் தொற்றிக் கொண்டது.

அவர் அருகில் சென்றபோது ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்

என்னா பெருசு எங்க கிளம்பிட்டே

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. மக வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

சைக்கிளை ஓரமாக நிறுத்து.  அந்த மூட்டைய தூக்கிட்டு வா

அவ்வளவுதான் 1,400 ரூபாய் மளிகை சாமான் போக போவுது

மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு, மளிகை சாமான் மூட்டையை இறக்கி கீழே வைத்தார்

யோவ் பெருசு அந்த ஜீப்புக்குள்ள இன்ஸ்பெக்டர் உக்காந்திருக்காரு அவரை போய் பாரு

அவர் போலீஸ் வண்டியை நோக்கி நடந்தார். வண்டியில் வாட்டசாட்டமாய் கூலிங் கிளாஸ் போட்ட பெரிய மீசை வைத்திருந்த அந்த இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்

என்ன பெரியவரே எங்க கிளம்பிட்டீங்க

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. பொண்ணு அங்க இருக்கு.  மாப்பிள்ளை டிரைவரா இருக்காரு. வேலை இல்ல. அதான் கவர்மெண்ட் கொடுத்த ஆயிரம் ரூபாயில கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

ஊர்ல தடை போட்டுருக்காங்க தெரியாதா பெரியவரே

தெரியுங்கய்யா. ஆனா நாலு உசுரு அங்க சோத்துக்கு இல்லாம கஷ்டப்படுமே. அதனாலதான் இத போயி கொடுத்துட்டு வந்துடலாம்னு கெளம்பினேய்யா

என்ன வயசு ஆகுது பெரியவரே உங்களுக்கு

63 வயசு ஆகுதுங்கய்யா

அருகில், நடு சாலையில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இவருக்கு மனசு பிசைந்தது. நடுக்கம் வந்தது.

கான்ஸ்டபிள் வந்தார்.

சார் இந்த ஆள் கொண்டு வந்த மூட்டைய சீஸ் பண்ணிட்டேன் சார்

உன் வயசென்னை அவரு வயசு என்ன ஆளுன்ற

சாரி சார்

அந்த கான்ஸ்டபிள் தள்ளி போய் நின்று கொண்டார்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

இல்லீங்க சார்

கான்ஸ்டபிள் அந்த சாப்பாடு பொட்டலத்துல ஒண்ணு  எடுத்து குடு

ஐயா எனக்கு வேண்டாய்யா. நான் மகள் வீட்டுல போய் சாப்பிடுகிறேன்

 சாலையில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன் ஏதோ சொல்ல,

சட்டமா பேசறே என்று ஒரு கான்ஸ்டபிள் அவனை முதுகில் அடித்தார்

அங்க போய் கறியும் சோறும் தின்னுங்க.  இது சும்மா பிரிஞ்ஜி தான்.  சாப்பிட்டுக்கங்க. வெயில்ல எப்படி சைக்கிள் மிதிப்பீங்க

சாப்பிட்ட பின் தோப்புக்கரணம் போட சொல்வார்களோ

ஜீப் மைக் கர கரவென்று பேசிக்கொண்டே இருந்தது.

நாளைக்கு காலையில் சீக்கிரமா கிளம்பி போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்.
கான்ஸ்டபிள் எடுத்து வந்து கொடுத்த ஒரு பொட்டலத்தையும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டார்.

பெரியவரே அதோ ரூம் இருக்குல்ல. அங்க உக்காந்து சாப்பிடுங்க.
இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்

பெரியவரே நல்லா சாப்பிடுங்க இன்னொரு பொட்டலம் வேணுமா

இன்ஸ்பெக்டர் கேட்க, அவர் வேண்டாம் என்று தலையாட்டினார்.

சாப்பிட்டு தண்ணீர் குடித்து கை கழுவினார். பரவாயில்லை வயிறு ரொம்பிடுச்சி. இப்ப முட்டி போடலாம். தோப்புக்கரணம் போடலாம்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

சாப்பிடங்கய்யா

ஜீப்ல கொண்டு வந்து உங்க மகள் வீட்டுல விடட்டுமா

ஐயா வேண்டாங்கய்யா நான் போயிடுவேங்கய்யா

சரி இந்த பனியனை போட்டுக்கோங்க. இந்த தொப்பிய போட்டுக்கோங்க. இது வாலண்டியர்ஸ்  போட்டுக்கறது. அரசாங்கம் கொடுக்கிற பணத்தை வாங்கினமா தண்ணி அடிச்சமா தலைகுப்புற விழுந்தமான்னு இல்லாம, நாலு உசுருக்கு சோறு போட சாமான் வாங்கிட்டு போறீங்களே. நீங்க தான் உண்மையான வாலண்டியர்.
 இந்த பனியனை  போட்டுக்கோங்க. பத்திரமா போயிட்டு வாங்க.

அது கனவா நனவா என்று நம்ப முடியாமல் பனியனை வாங்கி மாட்டிக்கொண்டார்.

இன்ஸ்பெக்டருக்கு இரண்டு கை குவித்து வணக்கம் வைத்தார்.
 சைக்கிளில் ஏறி, மகள் வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.
*
அப்பா எப்படி வந்தீங்க. எதுக்குப்பா சைக்கிள்ல வந்தீங்க. கை கழுவுங்க. 

பேரன்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள்.

பேரன்களை அணைத்து உடனே தள்ளிப் போகச் சொன்னார்.

மகள், அவர் வாங்கி வந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு

என்னப்பா தனியா வந்துருக்கீங்க அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல

இல்லம்மா. இன்னொரு நாளைக்கு  கூட்டிட்டு வரேன். நான் கிளம்பட்டுமா. இங்க இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லம்மா. நான் வீட்டுக்கு போயிடுறேன். உங்க அம்மா தனியா இருக்கும்.

அப்பா சாப்பிட்டு போங்கப்பா. சாப்பாடு ரெடியா இருக்குப்பா

நான் சாப்பிட்டேன்மா

ஏதுப்பா இந்த பனியன் நீங்க வாலண்டியரா இருக்கீங்களா

நடந்த எல்லா விஷயங்களையும் மகளிடம் சொன்னார்

பேரன்களை அழைத்து அவர்களுக்கு காசு கொடுத்து விட்டு கிளம்பினார்

மகள் ஒரு பையோடு வந்தாள்.

அப்பா  பையில கொஞ்சம் பழங்கள் இருக்கு. எடுத்துட்டு போயி அம்மாகிட்ட கொடுங்கப்பா. அம்மாவுக்கு ரோட்ஹெலர் மெஷின் வாங்கினேன். அத கொடுத்துடுங்கப்பா.  அம்மாவுக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கி இருக்கேன் அதையும் மறக்காம குடுத்துடுங்கப்பா.

பையை வாங்கிக்கொண்டார்.

மாப்பிள்ளை எங்கம்மா

அப்பா அரசாங்கத்துல  காய்கறி எல்லாம் வண்டியில் போய் விக்க சொல்லியிருக்காங்க. அதான் ஒரு காய்கறி வண்டியில டிரைவரா போயிருக்காருப்பா

இந்த ஆஸ்துமா மெஷினுக்கும்,'ஆஸ்துமா மாத்திரைக்கும் ஏதும்மா காசு

போன மாசம் சம்பளத்திலேயே இது இரண்டும் வாங்கி வச்சுட்டேன் பா

அவர் சைக்கிளை எடுக்க வீட்டை விட்டு வெளியே வந்தபோது மகள் ஓடிவந்து அவர் சட்டைப்பையில்  இரண்டு ஐநாறு ரூபாய் நோட்டுகளை வைத்தார்

அப்பா எங்களுக்கும் நேத்துதான் அரசாங்கத்திலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. நேத்து நைட்டு உங்க மாப்பிள்ளை சொல்லிட்டாரு, உங்க அப்பா அம்மாக்கு கொடுத்துடு. நம்ம ஏதாவது வேலை செஞ்சி சம்பாரிச்சுக்கலாம். வயசானவங்க என்ன பண்ணுவாங்கன்னு சொன்னாருப்பா.

சரிம்மா. மாப்பிள்ளைய கேட்டேன்னு சொல்லு. பத்திரமா இருங்கம்மா.

அவர் உயிரை தன் மகள் வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் ஏறி தன் வீட்டை நோக்கி மிதிவண்டியை இயக்க ஆரம்பித்தார்.

*- புஷ்பா ராஜ்குமார்*

Thursday, April 2, 2020

கொரோனா எச்சரிக்கை-படித்ததில் பிடித்தது.

கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள் அலறல்கள் கதறல்கள் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியமானது

ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு சொல்கின்றது

1950க்கு பின் வேகமாக மாறிய உலகிது அதுவும் 1990க்கு பின் பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவு நிலமை மாறியது

குறிப்பாக இத்தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி , ஞானசிந்தனை என எதுவுமில்லை. அவர்களின் சிந்தனையும் மனமும் குணமும் பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருந்தது

உலகின் உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது உலகம், அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் என நம்பியது

இதோ மாநகரங்களின் இன்னொரு பக்கம்

ஆம் பப்கள் என இரெல்லாம் குடியும் ஆட்டமும் பாட்டமுமான மையங்கள் காலியாய் கிடக்கின்றன, மசாஜ் சென்டர் என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்த மையம் மூடி கிடக்கின்றது

மது குடி மையங்கள் மூடிகிடக்கின்றன, விபச்சாரிகள் சும்மாவே வந்தாலும் வாடிக்கையாளன் தலைதெறிக்க ஓடுகின்றான், கடன் சொல்ல கூட தோன்றவில்லை

மது ஆலைகள் சானிட்டைசர் தயாரிக்கின்றன‌

இளம் தலைமுறையிடம் பெரும் கலாச்சார சீர்கேட்டை விளைவித்த தமிழக திரையுலகம் மூடி கிடக்கின்றது, தாங்கள் கடவுளுக்கு நிகர் என கருதிய நட்சத்திரங்கள் மல்லாக்க கிடக்கின்றன‌

அவர்களை ஆட்டிவைத்த சக்திகள் அஞ்சி ஒடுங்கி இருக்கின்றன‌

ஐரோப்பிய நிலை இன்ன்னும் மோசம்

ஆயுத கம்பெனிகள் அடைபட்டு கிடக்கின்றன, போதை மருந்து பித்தர்கள் தனித்திருந்து தங்களை தாங்களே குணமாக்குகின்றனர்

அட குடிக்கவில்லை என்றால் சாகமாட்டோமா என சிந்திக்கின்றது குடிகார தலைமுறை

பியூட்டி பார்லர் செல்லாமல் மேக் அப் செய்யாமல் வாழமுடியுமா? அது சாத்தியமா அட ஆமாம் ஆமாம் என ஒப்புகொள்கின்றது மங்கையர் இனம்

அரை டவுசர் போடும் வெள்ளைகாரி முதல் புடவைக்காய் சுற்றும் தமிழச்சி வரை எல்லா நாட்டு மங்கையருக்கும் அவரவருக்கான உண்மை தேவை புரிகின்றது

ஆடம்பரம், ஆட்டம்பாட்டம் , வெட்டி பந்தா, நிலையா அழகு , வற்றிவிடும் செல்வம் பின்னால் ஓடிய கூட்டம் ஞானத்தை மெல்ல உணர்கின்றது

பணம் , பணம் என ஓடிய தாயும் தந்தையும் அருகிருக்க கண்டு மகிழ்கின்றது மழலை கூட்டம், 

நெடுநாளைக்கு பின் தன் மக்கள் நலம் விசாரித்து ஊட்டிவிடுவதில் கண்ணீர் விடுகின்றது முதியோர் கூட்டம்

பாவகாரியங்கள் விலக்கபடுகின்றன., பாவத்தின் கொண்டாட்ட மையங்கள் மூடபடுகின்றன‌

தொழிற்சாலை இயக்கமில்லை, விமானமும் ரயிலும் இயக்கமில்லை என்பதால் காற்றின் தரம் உயர்ந்தாயிற்று

அண்டார்டிக்கா பனிபாறைகளுக்கு புது இறுக்கம் கிடைத்தாயிற்று

ஆட்டமும் பாட்டமுமாய் நான் காண்பதே உலகம், தெய்வம் எனக்கு கைகட்டி வழிவிடும் என சவால்விட்டவனை எல்லாம் அஞ்சி ஒடுங்கி துப்பாக்கி முனையில் அமர வைத்துவிட்டது காலம்

தனித்திருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஞானம் பிறக்கின்றது

உணவு முதல் தொழில்வரை தன் பாரம்பரியத்தை நினைத்து பார்க்கின்றான், எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் என்பதை உணர்கின்றான், உண்மையில் எது தேவை என்பது அவனுக்கு தெரிகின்றது

 கொரோனாவினை அனுப்பிய சக்தி அதில் சிரிக்கின்றது

தன் திட்டம் கனவு வேகம் ஆசை எதிர்பார்ப்பு எல்லாம் கண்முன் உடைந்து அதெல்லாம் வெறும் மாயை என உணர்ந்து அடங்கி இருக்கின்றான் மனிதன்

பிரமாண்ட இயற்கை முன்னால் தான் தூசு என்பதும், நீர்குமிழி வாழ்வு எப்பொழுதும் உடையும் என்பதும் மானிடனுக்கு புரிகின்றது

அடங்கா யானையினை தனி செல்லில் பட்டினி போட்டு அடித்து வழிக்கு கொண்டுவரும் பாகனை போல மனிதனை கட்டிவைத்து பாடம் சொல்லிகொடுக்கின்றது காலம்

ஜல்லிகட்டு காளையாக வலம் வந்த அவனுக்கு சரியான மூக்கணங்கயிறு போட்டு கட்டுகின்றது காலம்

தமிழகம் முருக பெருமானையும் அம்மனையும் ஒவ்வொரு வீட்டிலும் வணங்குகின்றது

ஐரொப்பாவோ எல்லாம் கோவில்களை காலியாக்கிய பாவம் என கண்களை துடைத்து ஆலயம் திறக்கும் நாளை எதிர்பார்கின்றது

சிரிய துருக்கி போர், சவுதி ஏமன் போர் கூட நின்றிருக்கின்றது, எல்லோருக்கும் பொதுவான காலம் அடிக்கும் அடியில் அடங்கி நிற்கின்றது போர்வெறி கூட்டம்

காலமோ இயற்கையோ கடவுளோ அனுப்பிய கொரோனா மானிட சமூகத்துக்கு ஞானத்தின் எச்சரிக்கை. காலம் நினைத்திருந்தால் இதை விட கொடிய நோய் அனுப்பி மானிட சமூகத்தை சரித்து போட சில நாழிகை ஆகியிருக்காது

ஆனால் எச்சரிக்கின்றது, ஆம் இது எச்சரிக்கை, மானிட இனத்தை மெல்ல எச்சரிக்கின்றது காலம்

அதில் மெல்ல ஞானம் பெற்றுகொண்டிருகின்றான் மனிதன், அந்த ஞானம் நிலைக்காவிட்டால் மறுபடி இதைவிட வலுவாக அடிக்க காலத்துக்கு தெரியாதா என்ன?

Wednesday, April 1, 2020

20 Remote Learning Management tools for Schools and Colleges

20 Remote Learning Management tools for Schools and Colleges during time of COVID-19

1.Gotomeeting https://www.gotomeeting.com/en-in
Host or manage a video, audio or web meeting from a conference room  
2. Easyclass –  https://www.easyclass.com/
Easyclass is a platform that allows educators to create online classes whereby they can store the course materials online; manage assignments, quizzes and exams; monitor due dates; grade results and provide students with feedback all in one place.

3. Zoom Classroom –https://zoom.us/education
Zoom helps universities and schools improve student outcomes with secure video communication services for hybrid classrooms

4. Microsoft Teams https://www.microsoft.com/en-us/education/products/teams
Build collaborative classrooms, connect in professional learning communities, and connect with colleagues when you get Office 365 – which includes Microsoft Teams and is free for your entire school. 
5 .BlueJeans  https://www.bluejeans.com/use-cases/education
Extend the classroom for more dynamic learning  
6. Hypersay – https://hypersay.com/live-presentations/
Run in-person or remote presentations, Share your slides using QR codes, Interactive polls, quizzes, surveys

7. Webex https://www.webex.co.in/  
See each other with video. Show people what’s on your screen

8. Google Hangouts Meet – https://meet.google.com/  
 Connect with your team from anywhere. With easy-to-join video calls, you can connect face-to-face with team members around the world.  
9. QualCampus http://enquiry.qualcampus.com/landingpage/qualcampus  
Distribute and grade assignments in a paperless way, Interactive polls, quizzes, surveys, digital repository

10. Nearpod– https://nearpod.com/  
The classroom solution for colleges and universities worldwide.
 
11. Google Classroom –https://edu.google.com/products/classroom  
Classroom helps students and teachers organize assignments, boost collaboration, and foster better communication.

12. Mentimeter –https://www.mentimeter.com/Create interactive presentations & meetings, wherever you are
13. Edmodo – https://new.edmodo.com/?go2url=%2Fhome  
Send messages, share class materials, and make learning accessible anywhere. Save yourself time by bringing all your classroom tools together.

14. Remind https://www.remind.com/
Communication for the school, home, and everywhere in between.
15. Video Ask https://www.videoask.com/   
Engage your audience in a way that feels more like a one-to-one interaction.   

16. Flipgrid – https://info.flipgrid.com/  
 Engage and empower every voice in your classroom or at home by recording and sharing short, videos

17.Slido https://blog.sli.do/category/education/
a package for educators to power up interaction during their lectures and virtual classes.
18. Edufow – https://www.eduflow.com/  
Make learning and teaching more effective with active participation and student collaboration  
19 . Brainpop – https://www.brainpop.com/  Make Any Room a Classroom- help you and your curious learners stay informed and on-track with free access during school closures.

20. Buncee https://app.edu.buncee.com/schools
One tool to help students, teachers and administrators