மீண்டும் ஒரு 365 நாட்கள் உங்கள் கைகளில் கொடுக்கப்பட இருக்கிறது, ஒவ்வொரு நாளும் ஆக்கப்பூர்வமாக, பயனுள்ளதாக, அன்பு பாராட்டுவதாக, உதவி செய்வதாக இருக்கட்டும். கடந்த வருடத்தில் பெற்றவைகளை பாடமாகவும், நல்ல இலக்குகளை கொண்டு, ஒவ்வொரு நிகழ்கால தருணங்களையும் திட்டமிட்டு வாழ்வோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.💐💐💐. இரா.ரெங்கசாமி மற்றும் குடும்பத்தினர்.
Monday, December 31, 2018
Saturday, December 29, 2018
நீ . . .நீயாக இரு
#நீ . . .நீயாக இரு !தங்கம் விலை அதிகம்தான் . . .தகரம் மலிவு தான் . . .ஆனால் தகரத்தைக் கொண்டுசெய்யவேண்டியதைதங்கம் கொண்டு செய்யமுடியாது . . .அதனால் தகரம் மட்டமில்லை . . .தங்கமும் உயர்ந்ததில்லை . . .எனவே நீ . . .நீயாக இரு !கங்கை நீர் புனிதம் தான் . . .அதனால் கிணற்று நீர் வீண் என்றுஅர்த்தமில்லை . . .தாகத்தில் தவிப்பவருக்குகங்கையாயிருந்தால் என்ன ?கிணறாகயிருந்தால் என்ன ?நீ . . .நீயாக இரு !காகம் மயில் போல் அழகில்லை தான் . . .ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !நீ . . .நீயாக இரு !நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !நீ . . .நீயாக இரு !பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !நீ . . .நீயாக இரு !ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !நீ . . .நீயாக இரு !நேற்று போல் இன்றில்லை . . .இன்று போல் நாளையில்லை . . .அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !எனவே நீ . . .நீயாக இரு !அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !அதில் பாபம் ஏதுமில்லை !அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !உன்னை உரசிப் பார் . . .உன்னை சரி செய்து கொண்டே வா . . .நீ . . .நீயாக இரு !உலகம் ஒரு நாள்,உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !நீ . . .நீயாக இரு !உலகம் ஒரு நாள்உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !நீ . . .நீயாக இரு !உலகம் ஒரு நாள்,உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !நீ . . .நீயாக இரு !உலகம் ஒரு நாள்,உன் வழி நடக்கும் ! ! !நீ . . .நீயாக இரு !நீ . . .நீயாகவே இரு !...
படித்ததில் பிடித்தது.
தன்னம்பிக்கை_மாவீரன்
#தன்னம்பிக்கை_மாவீரன் #நெப்போலியன்
பிரான்ஸின் ஒதுங்கிய பகுதியில் இருந்த கார்ஸிகா என்ற ஒரு தீவில் பிறந்தவன் நெப்போலியன் போனவெர்ட், ஓர் எளிய போர்வீரனின் மகன். மிக மிக எளிமையான ஏழ்மையான குடும்பப் பின்னணியில் அவன் பிறந்திருந்தான். சிறுவனாக இருந்தபோது ஓர் இராணுவப் பள்ளியின் முன்னால் ஒரு பெண்மணி குழந்தைகளுக்குத் தேவைப்படும் திண்பண்டக் கடை ஒன்றை நடத்தி வந்தாள். வளமான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் அந்தக் கடைக்குச் சென்று விரும்பியதை வாங்கித் தின்றுகொண்டிருந்தார்கள். வாங்கித்தின்ன எந்த வசதியும் இல்லாத நெப்போலியன் மற்றவர்களை வேடிக்கைபார்த்து ஏங்கியபடி கடையின் முன்னால் இருப்பார். பரிதாபப்பட்டு அந்தக் கடைக்காரப் பெண்மணி அவர் தின்பதற்கென்று அவ்வப்போது எதையாவது கொடுப்பது வழக்கம். அவனும் அதைப் பெற்றுக் கொண்டு தின்பான்.
அந்தக் கடைக்காரப் பெண்மணி ஒருநாள் நெப்போலி யனிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள். “தம்பி, நீ படிச்சு என்ன வேலைக்குப் போகப் போகிறாய்?” அதற்கு அவன் உடனடியாகப் பதில் சொன்னான்; “நான், பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாகப் போகிறேன்!” அந்தப் பெண்மணிக்குச் சிரிப்புத்தாள முடியவில்லை. அடக்கிக் கொண்டே மீண்டும் கேட்டாள். “நீ சக்கரவர்த்தியானால் என்னை வந்து பார்ப்பாயா?”, “கண்டிப்பாக தவறாமல் வந்து பார்ப்பேன்!” அவன் பதில் சொன்னான்.
அந்தப் பெண்மணி வியப்புடன் சிரித்ததற்குக் காரணம் இருந்தது. பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சக்கரவர்த்தியாக முடியும். அதுதான் அன்றைய உலகின் நடை முறை வழக்கம். அதை மீறுவது எந்த வகையிலும் எவருக்கும் சாத்தியமில்லை. ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவே அந்தப் பெண்மணி கருதினாள்.
நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை பிரெஞ்சுக்காரரான எமில் லூட்விக் எழுதியிருக் கிறார்கள். அதில் அவனுடைய இயல்பான பழக்கத்தை அவர் குறிப்பிடுவார். இராணுவம், போர்முறை பற்றிய புத்தகங்களை நெப்போ லியன் ஓயாமல் படித்துக் கொண்டிருப்பதைப் குறிப்பிட்டுச் சொல்வார். நெப்போலியன். தன்னுடைய மனவெளியில் போர்க்களங்களை உருவாக்கிப் போரிடும் முறைகளைக் கற்பனை யில் வடிவப்படுத்திக் கொண்டே இருப்பான். அந்தப் பயிற்சிதான் அவனை எல்லாப் போர் முனைகளிலும் வெற்றி பெறச் செய்தது. அதனாலேயே பின்னாளில் நெப்போலியன் சொன்னார். “என்னுடைய அகராதியில் முடியாது என்ற வார்த்தைக்கு இடமில்லை” அந்த அளவிற்கு நெப்போலியனுக்குத் தன்னுடைய முயற்சிகளில் தன்னம் பிக்கை இருந்தது.
பின்னாளில் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் வம்சாவழி வரலாற்றை மாற்றி அமைத்ததோடு மட்டுமல்லாமல் உலக வரலாற்றின் திசைப்போக்கையும் முழுக்க முழுக்க மாற்றி அமைத்தான்.
நெப்போலியன் பிரான்ஸின் சக்கரவர்த்தி யான பிறகு, தன்னுடைய வாக்குறுதியை நினைவில் வைத்திருந்தான். அந்தக் கடைக்காரப் பெண்மணியைத் தேடி அவன் கல்வி பயின்ற இராணுவப்பள்ளி இருந்த ஊருக்குச் சென்றான். அந்தப் பெண்மணி முதுமைப் பருவத்தில் அதே கடையை அப்படியே நடத்திக் கொண்டிந்தாள். நெப்போலியனை அவள் அடியோடு மறந்து போயிருந்தாள்.
பிரான்ஸின் சக்கரவர்த்தி அவளைப் பார்க்க வருவதாக அவளிடம் தெரிவித்தபோது அவள் பயந்து பதைபதைத்துப் போனாள். பரபரப்புடன் அவள் காத்துக் கொண்டிருந்தாள்.
நெப்போலியன் அந்தப் பெண்மணியைச் சந்தித்துத் தன்னை நினைவிருக்கிறதா என்று கேட்டான். பார்வை மங்கிய அந்தப் பெண்மணி அவனை மறந்து போய்விட்டதாகச் சொன்னாள். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டும் அவளுக்கும் அவளுடைய குடும்பத்தினருக்கும்
தேவைப்பட்டதைச் செய்தான். இது, நெப்போலி யனின் வாழ்க்கை நிகழ்வு.
மாமனிதனாக உலக வரலாற்றில் இடம் பெற்றான் நெப்போலியன்.
உலக அளவில் புகழ்பெற்ற மாமனிதர் களின் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் ஏராளமாகவே உள்ளன. வாழ்க்கையில் உயர் வடைய வேண்டும் என்று உண்மையிலேயே விருப்பம் உடையவர்கள் அவரவர் தளங்களில் இலக்குகளை அடைவது இயல்பு. மனித மனம் அளவற்ற ஆற்றலை உடையது. அதை எந்த அளவிற்கு ஒருவர் வெளிப்படுத்துகிறாரோ அந்த அளவிற்கு அவர் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்.
Tuesday, December 25, 2018
Saturday, December 22, 2018
எப்படி வாழ வேண்டும்.
அன்பர்: நான் ஒரு கேள்வி கேட்கலாமா? ஒருவர் தன் அன்றாட வாழ்க்கையை எந்த முறையில் வாழ வேண்டும்?
கிருஷ்ணமூர்த்தி: உயிர் வாழ அந்த ஒரே ஒரு நாள் மட்டுமே, ஒரே ஒரு நேரம் மட்டுமே இருப்பதாக எண்ணி வாழ வேண்டும்.
அன்பர்: எப்படி?
கிருஷ்ணமூர்த்தி: ஒரே ஒரு மணி நேரம் தான் உயிரோடு இருக்கப் போகிறீர்கள் என்ற நிலையில் என்ன செய்வீர்கள்?
அன்பர்: எனக்குத் தெரியவில்லை.
கிருஷ்ணமூர்த்தி: உயில் எழுதுவது போன்ற உங்கள் வாழ்க்கையின் இன்றியமையாத விவகாரங்களையெல்லாம் செய்து முடிக்க ஏற்பாடுகளை செய்ய மாட்டீர்களா?
உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து நீங்கள் அவர்களுக்கு தீங்கு இழைத்ததாக நினைத்தற்கு, அவர்களிடம் மன்னிப்பை கேட்க மாட்டீர்களா? அதுபோலவே, அவர்கள் உங்களுக்கு தீங்கு செய்துவிட்டதாக நீங்கள் எண்ணியதற்கு அவர்களை மன்னித்து விட மாட்டீர்களா?
மனதில் போட்டு வைத்த விஷயங்களுக்கும் ஆசைகளுக்கும் உலக விவகாரங்களுக்கும் பூரணமாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க மாட்டீர்களா?
இதுபோன்ற செயல்களை வாழ்க்கையில் ஒரு மணி நேரத்திற்கு உங்களால் செய்ய முடியுமென்றால், எஞ்சியுள்ள நாட்களுக்கும் வருடங்களுக்கும் அவைகளை செய்ய முடியாதா என்ன?
அன்பர்: இவ்வாறு செயல்படுவது உண்மையிலேயே சாத்தியம் தானா?
கிருஷ்ணமூர்த்தி: முயற்சி செய்து பாருங்கள் உங்களால் கண்டுகொள்ள முடியும்.
J Krishnamurti
COMMENTARIES ON LIVING SERIES III CHAPTER 55 'SORROW FROM SELF-PITY'