Monday, August 31, 2020

நடப்புலகு

நேர்மையாக இருந்துபார்
 நிச்சயம் தண்டிக்கப்படுவாய்.

அன்புடன் இருந்துபார்,
அநியாயமாக காயப்படுவாய்.

உண்மையாக இருந்துபார்
உறுதியாக ஏமாற்றுபடுவாய்.

என்று ஒவ்வொன்றாய்
சொல்லாமல் சொல்கிறது
நடப்புலகு,

நான் எவ்வளவு பட்டாலும் நேர்மையுடனும், அன்புடனும்
உண்மையாகவும் இருப்பேன் 
என்கிறது என்மனது.

சாமியின் சிந்தனை.





Thursday, August 27, 2020

ஒரு சிறு அவமதிப்பு

அன்புக்கு உரியவர்கள் 
தரும் ஒரு சிறு அவமதிப்பு கூட 
பெரிய அளவில் மன அளவிலும்
 உடல் அளவிலும் வலியை ஏற்படுத்திவிடுகிறது.

Monday, August 24, 2020

மனமுதிர்ச்சி

அவமதிக்கப்பட்ட பின்பும்
அன்போடு இருப்பதில் தான்
உறவின் பலமும் மனதின் முதிர்ச்சியும் 
தெரிகிறது.

தேவதை

பிரம்மா வடிவியலில்
வல்லவன் என்பதை
உனைப் பார்த்ததும்
தெரிந்துக் கொண்டேன்.


Saturday, August 22, 2020

ஏமாற்றாதே ஏமாறாதே

ஏமாளிகளை 
வாழ்க்கை
ஒருபோதும்
ஏமாற்றுவதில்லை.

சாமியின் அனுபவம்.

அழகு

மயங்கி விட்டால்
மயக்கம் தீர ஒரே வழி
இறுதி மயக்கம் தானோ.

Wednesday, August 19, 2020

மனம்/பணம்/மகிழ்ச்சி

எல்லாம் உடையோர் மகிழ்வில்லாமல்
இருப்பதும், 
ஒன்றும் இல்லாதவர் மகிழ்வோடு இருப்பதும் சொல்ல வருவது ' மகிழ்ச்சிக்கு காரணம் பொருள் அல்ல மனம் மட்டும் தான்' என்பது தான்.

சாமியின் அனுபவம்.

Saturday, August 15, 2020

வார்த்தை ஜாலங்கள்

அன்பு அக்கறை எல்லாம்
செயல்களால் காட்டப்பட வேண்டும்
வார்த்தைகளால் அல்ல‌.


சாமியின் அனுபவம்.

Friday, August 14, 2020

Read this Article atleast once in a week

உணவை தான் உண்டேன் 
எப்படி. மலம்  ஆனது?
உயிரோடுதானே இருந்தேன்
எப்படி மாண்டு போனேன்?
மலம்தான் உணவாக இருந்ததா?
மரணம்தான்  வாழ்வாய் இருந்ததா?
.
இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?
இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை  கண்கள் வட்டமிட்டது?
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?

இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று  மனைவியும் சுற்றமும் பேசியது. எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !

நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது.
இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன். அனைவருக்கும் பயன்படவேண்டிய  பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன்.

காலம் கடந்த ஞானம்.  பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?
பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்? சந்தனத்தால்  மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?

கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும்,  காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும் , பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் ! 
பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு ,    மண் என்னைப்பார்த்து  , 
" மகனே ! நானிருக்கிறேன் .என் மடியில் வந்து உறங்கு" என்று  என்னை மார்போடு தழுவிக்கொண்டது. 

அருந்தின மலமாம் 
பொருந்தின அழுக்காம்   வெறுப்பன உவப்பாம் 
உவப்பன  வெறுப்பாம் 
உலக பொய் வாழ்க்கை நீ_நீயாக_இரு...

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

அதனால்  வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*

முதுமை என்று எதுவும் இல்லை.

நோய் என்று எதுவும் இல்லை.

இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது.

சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

*நான்... நான்... நான்...*

*நான்* சம்பாதித்தேன்,

*நான்* காப்பாற்றினேன்,

*நான்* தான் வீடு கட்டினேன்,

*நான்* தான் உதவி  செய்தேன்,

*நான்* உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!

*நான்* பெரியவன்,

*நான்* தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன்,

*நான்  நான்  நான்  நான்*  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!

*நான்* தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்* தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா??

*நான்* தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள். 

 *உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.*

*உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*

*எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது*

உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்

உனக்கு கீழே உள்ளவனை  ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.

உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்....
SRI Sri Anna... upanyasa thuligal💪🙏🙏🙏

Wednesday, August 12, 2020

சாதனை

நாம் எல்லாம் ஒன்றை நன்றாக
தெரிந்து வைத்து இருக்கிறோம்,
அது, அடுத்தவர்களை எந்த சொல் அல்லது செயல் கொண்டு தாக்கினால் அதிகம் காயப்படுவார் என்பதே.


Friday, August 7, 2020

அகம்-முகம்

அகத்திற்கு திரையிட நினைக்கும் போதெல்லாம், 
அகம் தன்னை முகத்தில் திரையிட்டு
காட்டுகிறது.

சாமியின் சிந்தனை.

Tuesday, August 4, 2020

நட்பு

நண்பனிடம் 
தோற்பது தான்
  நட்பின்
வெற்றி.
சாமியின் சிந்தனை

Saturday, August 1, 2020

பாத்திரம் அறிந்து.........

கேட்காமல் கிடைப்பதினாலும்,
தட்டாமல் திறப்பதினாலும்,
கிடைப்பதின் மதிப்பும்,
கொடுப்பவரின் மதிப்பும்,
தெரியாமல் போய் விடுகிறது
சிலர்க்கு.

சாமியின் சிந்தனை.