Wednesday, March 31, 2021

கற்கும் வரைதான் வாழ்க்கை

இன்றுடன் 
16 வருடம்
கற்றல் கற்பித்தல்
நிறைகிறது.

Wednesday, March 24, 2021

புற்றுநோய்_என்பது_ஒரு_நோய்_அல்ல,#_

#புற்றுநோய்_என்பது_ஒரு_நோய்_அல்ல,#_மயக்க_மருந்து! 

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஓஷ் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் புற்றுநோயியல் நிபுணர். புற்றுநோய் ஒரு கொடிய நோய் அல்ல, ஆனால் மக்கள் அலட்சியத்தால் மட்டுமே இறக்கின்றனர் என்று குப்தா பிரசாத் ரெட்டி (பி.வி) கூறுகிறார்.
 அவரைப் பொறுத்தவரை, இரண்டு முறைகளை மட்டுமே பின்பற்றினால் புற்றுநோயை அகற்ற முடியும். முறைகள்: -

 1_ முதலில் அனைத்து வகையான சர்க்கரை உணவையும் விட்டு விடுங்கள். ஏனெனில், உங்கள் உடலில் சர்க்கரை கிடைக்காவிட்டால், புற்றுநோய் செல்கள் இயற்கையாகவோ அல்லது இயற்கையாகவோ இறந்து விடும்.

 2. பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை கலக்கவும். இந்த எலுமிச்சையுடன் கலந்த வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் காலையில் 3 மணிக்கு சாப்பிடுவதற்கு முன் குடிக்கவும். புற்றுநோய் நீங்கும்.
 மேரிலாந்து மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில், இது கீமோதெரபியை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று கண்டறியப்பட்டது.

 3. தினமும் காலையிலும் இரவிலும் மூன்று தேக்கரண்டி கரிம தேங்காய் எண்ணெயை சாப்பிட்டால் அது புற்றுநோயை குணப்படுத்தும்.

 நீரிழிவு நோயைத் தவிர்த்து பின்வரும் இரண்டு சிகிச்சையில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். புற்றுநோயால் உங்களை காயப்படுத்த முடியாது. இருப்பினும், அலட்சியம் அல்லது அலட்சியம் என்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை.

 புற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க என்பதை நினைவில் கொள்க. குப்தா பிரசாத் கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு வழிகளில் இந்த தகவல்களை பரப்புகிறார்.

 அனைவருக்கும் தெரிந்துகொள்ள வாய்ப்பு அளிக்க தகவல்களை பரப்ப வேண்டும் என்று கேட்டார்.
  அவர், "நான் என் வேலையைச் செய்தேன். இப்போது உங்கள் வேலையைச் செய்து உங்களைச் சுற்றியுள்ளவர்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்றுங்கள்! புற்றுநோயியல் நிபுணர் குப்தா பிரசாத் ரெட்டி ஒரு மருத்துவர் மட்டுமல்ல, ஒரு மேசியாவும் கூட!"

Tuesday, March 23, 2021

நோய் நம் உடலில் இல்லைஅது நம் மனதில்தான் இருக்கிறது

2020 இதே நாளில் பகிர்ந்தது...💐💐💐

💐💐💐ஓஷோ💐💐💐

நோய் நம் உடலில் இல்லை
அது நம் மனதில்தான் இருக்கிறது

உங்களுக்கே தெரியாத உங்களை பற்றிய சில உளவியல் உண்மைகளை நச்சென்று புரிய வைக்கும் ஒரு கதை!!

ஒரு பெரிய நாட்டின் மன்னன் தனது 
நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான் .

ஒரு நாள் இரவு... தொலைதேசத்தில் ஒரு ராணுவப்பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது .

திடுக்கிட்டு எழுந்தான் .

காதில் இருந்த பூச்சியை எடுக்க
மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள் 

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை

சில வீரர்களை அழைத்துக்கொண்டு தலைநகரத்திற்குத் திரும்பினான் மன்னன் .

ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் .

அவரும் எவ்வளவோ பாடுபட்டார் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன 

 மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள். 

எதற்கும் பலன் இல்லை .

மன்னனின் காதில் உள்ள பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரம்மாண்டமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள், ஆனால் யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை .

மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்ததால்,
அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை 

உணவு சாப்பிடுவது குறைந்து  
மன்னன் தன் பொலிவு இழந்தான் .

ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன் ,
இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப் போல் காணப்பட்டான் 

எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான் .

தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதாக உணர்ந்தான் .

பதினான்கே வயதான அவனுடைய மூத்த மகனுக்கு அவசர கதியில் வாள்பயிற்சி, குதிரையேற்றம் எல்லாம் கற்பிக்கப்பட்டது .

இந்த நேரத்தில் இமய மலையிலிருந்து
ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன .

பட்டத்து ராணி அந்தத் துறவியைப் பார்க்க சென்று அவருடைய காலில் விழுந்து கதறினாள்.

தன் கணவனை எப்படியாவது  காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினாள் 

அரண்மனைக்கு வந்து சேர்ந்த துறவி 
மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார் .

பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார். 

அன்று மாலை அரசனையும் அரசியையும் தனியாகச் சந்தித்துப் பேசினார் 

"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே!

நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது .

இங்கிருந்து நூறு மைல் தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும் .

இன்றே என் சீடர்களை அனுப்பி அந்த மூலிகையை கொண்டு வர செய்கிறேன்,
அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்." என்றார்.

அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லி,
தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி 

அவர்களுக்குக் குதிரையேற்றம் தெரியுமாதலால் அவர்கள் பயணத்திற்குச் சிறந்த அரபிக் குதிரைகளைக் கொடுத்து அனுப்பினான் மன்னன் .

கூடவே, அவர்கள் பாதுகாப்பிற்காகச் சில வாளேந்திய வீரர்களையும் அனுப்பி வைத்தான் .

மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள். 

அது 'ராஜ மூலிகை' என்பதால் 
அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார் .

மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் 
பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது 

அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது .

மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி .

துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன். 

சில நாட்கள் அரண்மனையில் தங்கியிருந்தார் துறவி 

மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான் .

நன்றாக உண்டான்,
பழைய பொலிவு திரும்பி விட்டது 

துறவி விடை பெற்றுக்கொண்டார் .

அவருக்கும் அவரது சீடர்களுக்கும் 
உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன் 

அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும்
துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான் 

""குருதேவா...!!! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...!!!''

மற்றொரு சீடனின் கேள்வி வேறு விதமாக இருந்தது .

"மூலிகையைவிட அந்தப் பூச்சி இன்னும் அற்புதமாகத் தோன்றுகிறது .

ஒரு மனிதனின் காதிற்குள் புகுந்து அத்தனை நாள் உயிருடன் இருந்து 
அவனைப் பாடாய்ப் படுத்தி வைத்தது என்றால், அது மிகவும் விசேஷமான பூச்சியாக இருக்க வேண்டும்.. 

அதைப் பற்றிச் சொல்லுங்களேன்  என்றான்

'துறவி புன்னகை பூத்தார் !

"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?

மன்னனின் செவிக்குள் .

அதுதான் இல்லை 

மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம் .

போன சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும்,
இல்லை வெளியே வந்திருக்கும் 

அந்தச் சிறிது நேரத்தில் 
அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது .

அந்த மன்னனின் மனதில் அது குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதிந்துவிட்டது 

எனவே அந்தப் பூச்சி காதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான் 

"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே...???''

மனோவியாதியை அப்படி எளிதாகக் குணப்படுத்திவிட முடியாது அப்பனே....!!! 

பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக்  கொண்டிருந்தான் .

அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன் .

அந்த மூலிகை நம் ஊரில் சாதாரணமாக விளையும் திருநீற்று பச்சிலைதான் .

ஆனால் அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன் 

பின் ஒருநாள் பூஜை செய்து 
காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு 
ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன் .

மன்னன் நம்பி விட்டான் 

அவன் நோயும் தீர்ந்தது.

சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.

இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் 
பெரும்பான்மையானவை 

நம் மனங்களில் தான் இருக்கின்றன. 

காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டாலும், மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது 

இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையை தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"எங்கப்பாகிட்ட மட்டும் பணம் இருந்தா,
நான் பெரிய ஆளாகியிருப்பேன்'' 
என்று எத்தனை பேர் ஜம்பமடிக்கிறார்கள் பாருங்கள் 

ஆனால் இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும்,
காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள் தான் .

பிரச்னை நம் பெற்றோரிடமோ, 
நம் ஆசிரியரிடமோ, 
நம் பள்ளி-கல்லூரியிடமோ, 
நம் சூழ்நிலையிலோ இல்லை .

அது நம் மனதில் இருக்கிறது 

பூச்சி காதில் இல்லை ,மனதில் இருக்கிறது .

ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில்
மதிய உணவு இடைவேளையில் அதிகாரிகள் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருந்தார்கள் 

ஒருநாள், அவர்களுக்குள் ஒரு போட்டி. 

கனமான ஒரு பொருளை (மேஜையில் காகிதங்கள் பறக்காமல் இருக்க வைக்கப்படும் பேப்பர் வெயிட்) தலையில் வைத்தபடி சிறிது தூரம்நடக்க வேண்டும் .

அதன்படி ஒரு அதிகாரியின் தலையில் பேப்பர் வெயிட்டை வைத்தார்கள் 

அந்த அதிகாரி பாவம், தலையில் இருக்கும் பொருள் கீழே விழுந்துவிடப் போகிறதே என்ற பயத்தில் வளைந்து நெளிந்து நடந்து கொண்டிருந்தார் .

பாதி தூரம் கடந்தவுடன் 

"என்னால டென்ஷன் தாங்க முடியலப்பா'' என்று போட்டியிலிருந்து விலகிக்கொண்டார் 

கூட இருந்த மற்ற அதிகார்கள் 
"உன் தலையில வச்ச பேப்பர் வெயிட்ட நீ நடக்க ஆரம்பிக்கும் முன்பே நைசாக  எடுத்துவிட்டோம் .

இல்லாத ஒரு பொருளுக்காக நீங்க உடம்பை வளைத்து வளைத்து நடந்த காட்சி இருக்கிறதே..!!! 

ஹ ஹ ஹ ஹ ஹா.. என்று சொல்லி சிரித்தார்கள்.

.''இது நகைச்சுவை அல்ல; 

இது நமது இன்றைய வாழ்வியல் கருத்தை நச்சென்று சொல்லும் விளக்கம் .

காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்ட மன்னன் போல
இல்லாத பிரச்னையை, 
இருப்பதாக நினைத்துக்கொண்டு,
நம்மில் பலபேர் நமது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
 
ஓஷோ...💐💐💐

Saturday, March 20, 2021

(ஹனி) தா

 நீ  சுறுசுறுப்பில் தேனீ
அன்பில் 'தேன்' நீ
அக்கறையின் தாய் நீ
பாசம் பொழிவதில் மழை நீ

-சாமி.

Thursday, March 18, 2021

பணத்தின் மீதான அன்பு

அன்பின் மதிப்பறியார்
பணத்தின் மதிப்பு அறிந்தவராயிருப்பர்
பல நேரங்களில்.

-சாமி.

Wednesday, March 17, 2021

உதவி

நாம் செய்தால் மலையாய் நிலைக்கிறது,
நாம் பெற்றால் மழையாய் மறைகிறது,  மனதில்.

-சாமி.

மணமில்லா மனம்

 பணம் பற்றியே  எண்ணும்
மனிதனின் மனதிடம் மணம் குணம் எதிர்பார்ப்பது மடத்தனமானது.

சாமி.

Saturday, March 13, 2021

மேகமா? குடையா?

சில நட்புகள், உறவுகள் மேக நிழலாய்
வந்து போவதுண்டு, 
குறைவான நேரம் நமக்கு நிழல் தரும் பின் வேறிடம் சென்று வேறு ஒருவருக்கு நிழல் தரும்,
சில நட்புகள் உறவுகள் குடை நிழலாய் கடைசி வரை பின் வருவதும் உண்டு,
நாம் குடையை பற்றியிருப்போம் அது நம்மை பற்றியிருக்கும்,
எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.

-சாமி.

Thursday, March 11, 2021

காலக்கொடுமை

நடிப்பால் திரைப்படம் மட்டுமல்ல,
வாழ்க்கையும் நன்றாக ஓடுகிறது சிலருக்கு.

Wednesday, March 10, 2021

வாழ்க்கை வாழ்வதற்கே...!

வாழ்க்கை வாழ்வதற்கே...!!!

கை குலுக்கும் பொழுது உறுதியாக கை குலுக்குங்கள்...

கண்ணைப் பார்த்து பேசுங்கள். அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசவும்...

யாருடனாவது மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டால் எப்பொழுதும் முதலில் இறங்கி போய்  பேசி சரி செய்வது நீங்களாக இருங்கள்...

எப்பொழுதும் துணிச்சலை இழக்காதீர்கள் பயம் உங்கள் தொண்டையை அடைக்கும் பொழுதும் கூட துணிச்சலுடன் இருங்கள் அல்லது இருப்பது போல் நடிக்கவாவது செய்யுங்கள்...

வாழ்க்கை துணை அல்லது காதலியை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். ஏனெனில் உங்களது வாழ்க்கையில் 90% நிகழ்வுகள் இவரை சார்ந்தே அமைகிறது...

உங்களுக்கு தெரியாத நபருக்கும் உதவி செய்ய தயாராக இருங்கள்...

உங்கள் புத்தக தொகுப்பிலிருந்து எதையும் கடனாக கொடுக்காதீர்கள்...

குழந்தைகளோடு விளையாடும் பொழுது அவர்களை வெற்றி பெற விடுங்கள்...

இந்த உலகத்தில் துக்கப்படும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சனை கிடையாது பிறக்கும் பொழுதும் வெறும் கையோடு தான் வந்தோம் போகும் பொழுதும் வெறும் கையோடு தான் போக போகிறோம் எனவே எப்பொழுதும் மன மகிழ்வுடனேயே இருங்கள்...

எல்லா பூட்டுகளும் சாவிகளோடு தான் தயாரிக்கப்படுகின்றன அது போலவே எல்லா மோசமான சூழ்நிலைகளும் அதற்கான தீர்வுகளோடு தான் வருகின்றன...

இதற்கு மேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றிருக்கும் நபரோடு மோதாதீர்கள்...

நீங்கள் விரும்பும் நபரை எந்தளவுக்கு விரும்புகிறீர்கள் என கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தெரிவிக்க மறவாதீர்கள்...

நண்பர்களோ உறவினர்களோ உடல் நலமில்லாமல் இருந்தால் நேரில் சென்று நலம் விசாரிக்க தவறாதீர்கள்...

அவ்வப்பொழுது புதிய இடங்களுக்கு பயணம் செய்யுங்கள்...

தூங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு சிறிய நோட்டையும் பேனாவையும் வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றி போடக்கூடிய யோசனைகள் பெரும்பாலும்  படுக்கையில் இருக்கும் பொழுது தான் வரும்...

வங்கி வாசலில் நிற்கும் காவலாளியாக இருக்கட்டும் டீ போட்டு கொடுக்கும் மாஸ்டராக இருக்கட்டும் ஒரு வணக்கத்தை தெரிவிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்...

குழந்தைகள் போகும் பள்ளிபேருந்தை பார்த்தால் டாடா சொல்லுங்கள் சிறு குழந்தைகளை பார்த்தால் புன்னகைக்க மறக்காதீர்கள்...

வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டுமென எண்ணாதீர்கள் வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் அடுத்த நொடி மர்மம் தான்....!!!

படித்ததில் பிடித்தது

Marketing

இதுவல்லவோ சாமர்த்தியம்...!
.
இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு சாமர்த்தியமான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான்.
.
இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக்கொண்டார்.
.
குண்டூசி முதல் விமானம் வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.
.
முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது".
.
இளைஞன், ஒருவருக்கு விற்பனைசெய்ததாக சொன்னான்.
.
முதலாளிக்கு கோபம் வந்துவிட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். சீக்கிரம் உன்னுடைய விற்பனையை அதிகரிக்காவிட்டால், உன் வேலை பறிபோய்விடும்" என்று எச்சரித்தார்.
.
"சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?"
.
இளைஞன் சொன்னான், "933005 பவுண்டுகள்".
.
அதிர்ச்சியடைந்த முதலாளி, "அப்படி என்ன விற்றாய்"
.
வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."
.
"ஆனால், அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?" இது முதலாளி.
.
"உண்மைதான். இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்க படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால், நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஒரு இருபது அடி நீள படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4 x 4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்கு தங்க இடம் இல்லாததால், மிகப்பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்"
.
"அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார்.
.
"இல்லை, அவர், தனக்கு தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான், தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுதுபோக்கு என்று சொன்னேன்."
.
முதலாளி கேட்டார், "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?"
.
"அங்கு எல் ஐ சி யில் ஏஜென்ட் ஆக இருந்தேன், ஏன் ?"
.
"இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்த கடையை பார்த்துக்கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்துவிட்டு வருகிறேன்"

Saturday, March 6, 2021

வாழ்வின் எதார்த்தம்

பிறர் உடுக்கை இழந்தபோதெல்லாம்
இடுக்கண் களைந்தாய்,
ஆனால் நீ மட்டும் இப்போது
நிர்வாணமாய்.


-சாமி.

தேனீக்கள்

தேன் சுமப்பவைதான்
ஆனாலும் கொட்டினால்
இனிக்குமா?


-சாமி.

Thursday, March 4, 2021

த(க)ண்ணீர்

அழுத்தம் (pressure) குறைய குறைய
நீராவி நீர்த்திவலையாகும்,
(மன)அழுத்தம் அதிகமாக அதிகமாக
மனக்கவலை கண்ணீராகும்.

-சாமி.

நம்பிக்கைதான் வாழ்க்கை

வாழ்க்கை சில நேரங்களில்
பட்டாம்பூச்சியின்மீது பாறாங்கல்லை
வைத்தது போல் உள்ளது,
ஆனாலும் மென் சிறகுகளால் வன் பாறையை தூக்கி எறிந்து
மீண்டும் சிறகடிக்க முடியும்
என்ற நம்பிக்கையும் தருகிறது வாழ்க்கை.


-சாமி.

Tuesday, March 2, 2021

அன்பு

உயிரின் வரமிது
மனிதனின் தரமிது
மனதின் மருந்திது
வாழ்வின் பிடியிது
உள்ளத்தின் அழகிது
ஊடுருவி செல்வது
உலகை பிணைப்பது
எங்கெங்கு இருப்பினும் மதிப்பு மிகுந்தது
உண்மையில் உலகை ஆள்வது.

-சாமி.