Tuesday, October 31, 2023

படித்ததில் பிடித்த கவிதை

பேரன்பெல்லாம் 
வேண்டாம்
அவ்வளவு அன்பை என்னால் கையாள முடிவதில்லை 
அவ்வளவு அன்பை என்னால்  திருப்பிச்செலுத்திட இயலவில்லை

புழங்கியது போக 
மிச்ச அன்பெல்லாம்
பரண் மேல் கிடந்து
பாழாய்ப்போகும் சோகமெல்லாம் 
பாவம்
இந்த பேரன்பில்தான் 
நிகழ்கிறது 
 
பின்னும்
கொடுப்பதாயின் 
மனமுவந்து சிறிய அன்பினையேத் தாருங்கள்
எனக்கு 

கைக்கு அடக்கமாய் 
கையாள எளிதாய்
இன்னும் 
நான் திருப்பி செலுத்திட ஏதுவாய் 
இருக்கட்டும்
அவை

பேரன்பின் 
பெரும் மூச்சு முட்டல்களின்றி
ஒரு சிறிய புன்னகையில் 
ஒரு சிறிய நலன் விசாரிப்பில்
ஒரு சிறிய தலைகோதலில்
தொடரட்டும் 
அவை

-ரிஸ்கா முக்தார்-

Saturday, October 28, 2023

படித்ததில் பிடித்தது -Pareto Principle

*இத்தாலிய மேதை* *pareto* *என்பவரின்* *தத்துவம்.*  அவரது தத்துவம் 80/20 என்ற பெயரிலும் விளக்கப் படுகிறது.

   பொதுவாக 80% விளைவுகளுக்கு (result) 20% செயல்களே காரணம் (cause) ஆக இருக்கிறது .

  அதாவது நீங்கள் 20%உழைப்பை கொடுத்து 80% பயன்களை பெறலாம்.        இப்படித்  தான் புத்திசாலிகள் செயல் படுகிறார்கள்.

   உலகில் உள்ள 80% செல்வம் 20%மக்களிடம் தான் இருக்கிறது.80% மக்களி டம் 20% செல்வமே இருக்கிறது.

  80%மக்களின் உழைப்பை 20%மக்கள் அனுபவிக்கிறார்கள். நீங்கள் செய்யும் வேலையில் 20%வேலையே 80% பலனை தருகிறது.

  நமது கடையில் 20% நேரத்தில் தான்  80%வியாபாரம் நடக்கிறது. மீதி 80% நேரத்தில் வெறும் 20% வியாபாரமே நடை பெறுகிறது.

 சாதாரணமாய் மக்கள் 20% நேரம் நல்ல வியாபாரம் நடக்கிறது என்று அதில் கவனம் செலுத்துவதில்லை.

  80% வியாபாரம் இல்லாத நேரத்தில் மாங்கு மாங்கு என்று உழைப்பார்கள். இது தவறு.

  உங்கள் வாழ்க்கையில் 20% நேரம் தான் முக்கியமானது. அதுவே உங்களது 80% வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

   அந்த 20% நேரத்தை சிறப்பாக பயன்படுத்தினால் 80%வாழ்கை மிகவும் அற்புத மாக இருக்கும்.

   பொதுவாக மக்களின் மனநிலை அது தான் 20% நல்லா இருக்கே .அதுல ஏன் மேற் கொண்டு கவனம் செலுத்தணும்.

  சிறப்பாக இல்லாத 80% ஐ தான் சரிபண்ணனும் என்று அதில் தான் கவனம் செலுத்துவார்கள்.இதுவே மனித இயல்பு.

   80%ஐ சரி செய்வதற்காக கடுமையாக உழைப்பார்கள். அதனால் நமக்கு 20% பலனே கிடைக்கப் போகிறது என்பதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

   இந்த கடின உழைப்பு நம்மை களைப்படைய செய்து விடும். அதனால் 80% பலன் தரக்கூடிய மீதி  20% இல் நாம் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

  ஸ்மார்ட் ஒர்க் என்பது இந்த    20%ஐ நன்கு கவனமாக முழு ஈடுபாட்டுடன் உழைத்து 80% பலனை அதிகப் படுத்துவதே.

  கடின உழைப்பில் (hard work ) ஈடுபட்டு 20% பலனை பெறுவது நல்லதா. அல்லது திறமையையாக  செயல்பட்டு (smart work ) 80% பலனை பெறுவது நல்லதா என்று சிந்தித்து பாருங்கள்.

  கடின உழைப்பு கமலையில் தண்ணீர் இறைப்பது போன்றது. ஸ்மார்ட் ஒர்க் என்பது மோட்டாரை தட்டி விட்டு தண்ணீர் பாயும்வரை புத்தகம் படிப்பதோ அல்லது வேறு ஏதேனும் வேளைகளில் ஈடுபடுவதோ என்று எளிதாக இருத்தல்.

  சாலைகளில் பீக் டைம் என்று சொல்கிற காலை,மாலை என்று ஒரு 20% நேரத்தில் தான் அத்தனை வாகனங்களும் செல்லும். பஸ்களுக்கு அப்போது தான் 80% வருமானம்.

  T.V சானல்களில் primetime என்று இதை சொல்வார்கள். இரவு7முதல்10 மணிவரை . அப்போது தான் சிறந்த தொடர்களை ஒளி பரப்புவார்கள். அதிக விளம்பரங்கள். அதற்கு அதிக கட்டணம் என்று அள்ளி விடுவார்கள்.

  எல்லா வற்றிலும் 80/20 தத்துவம் சரியாக செயல்படுகிறது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பட்ட ஒன்று .

இந்த தத்துவத்தை உங்கள் வாழ்வில் அனைத்து துறைகளிலும் பயன் படுத்தி மகிழ்வாக இருங்கள். இதுவே ஸ்மார்ட்டா வாழ்றது.

  உங்கள் வாழ்வின் 20% prime time எது என்று கண்டு பிடியுங்கள். அதில் கூடுத ல் கவனம் செலுத்தி  80% பலனை பெறுங்கள்.

   முக்கியத்துவம் இல்லாத 80% செயல்களில் அதிகம் கவனம் செலுத்தி உங்கள் உழைப்பை வீண் செய்து சோர்வடையாதீர்கள்.

நாம் எப்போதும் 20% ஐ நிராகரித்து விட்டு முக்கியத்துவம் இல்லாத 80%இல் அதிக கவனம் செலுத்துகிறோம் .

   அதாவது நாம பிடுங்குற ஆணி எல்லாமே தேவையில்லாதது தான்.இது அண்ண ன் வடிவேலு தத்துவம்.

   நாம் 100 வருடம் வாழ்ந்தால் அதில் 80 வருடம் தூங்குவது , குளிப்பது ,     சாப்பிடுவது, பேசுவது என்று கழிகிறது.

  20 வருடம் தான் முக்கியமான செயல்களில் ஈடுபடுகிறோம். அதிலும் 80% அதாவது 16 வருடம் கவனம் இல்லாமல் அலட்சியமாகவும் அனிச்சையாகவும் செயல் செய்கிறோம்.

 மீதி நாலு வருடம் தான் நிஜமாகவே வேலை செய்கிறோம். இந்த நாலு வருடத் தை ஒவ்வொரு கணமும் கவனமுடன் முழுமையாக ஈடுபட்டால் போதும்.உங்கள் கர்மா அனைத்தும் காணாமல் போய் விடும்.

 இந்த கணம் அந்த நாலு வருடத்தில் ஒரு கணமாக இருக்கலாம்.எனவே ஒரு கணத்தையும்  வேஸ்ட் பண்ணாதீர்கள்.

படித்ததில் பிடித்தது

*வருமானம்* *இல்லா* *வாழ்க்கையை* *விட தன்மானம்* *இல்லா* *வாழ்க்கையே* *அவமானம்.* 
                 உங்களுக்கென ஒரு தன்மானம் எப்போதும் இருக்க வேண்டும்.

அது மற்றவர்களால் “திமிர்” என பார்க்கப்பட்டாலும் அந்த தன்மானத்தில் இருந்து எப்போதும் விலக்காதீர். 

வறுமை உங்களை வாட்டினாலும் தன்மானத்தோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான மரியாதையை தேடி தரும்.

தன் மீது குப்பைகள் விழுவதை கடலால் தடுக்க முடியாது.

ஆனால். அவைகளை, தன் அலையின் சக்தியைக்கொண்டு, தூக்கி தூர கரையில் வீச முடியும்.

அதுபோலத்தான். நம்மீது விழுகின்ற, இழிசொல், பழிச் சொல் இவைகளை நம்மால் தடுக்க முடியாது.

ஆனால், அவைகளை, அலட்சியம் படுத்துவதின் மூலம், தூக்கி தூர வீச முடியும்.

எந்த ஒரு மனிதனும் தனக்குப் பிடித்த ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேசாத வரை அவனது கவலைகளும் கஷ்டங்களும் எந்தக் காலத்திலும் முடிவுக்கு வருவதில்லை.

பிடிவாதம் அதிகமானால் தன்னைச் சேர்ந்தவர்களை விட்டுத் தொடர்ச்சியாகப் பிரிந்து விட வேண்டியது தான்.

உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத இடத்தில் சிரித்தாலும் அழுதாலும் ஒன்று தான்.

சோறு பொங்கும் போது தீயைக் கம்மிப் பண்ணுங்க. மனசு பொங்கும் போது வார்த்தைகளைக் கம்மிப் பண்ணுங்க.

அதுதான் வாழ்க்கைக்கு  அழகு.

படித்ததில் பிடித்தது

*வருமானம்* *இல்லா* *வாழ்க்கையை* *விட தன்மானம்* *இல்லா* *வாழ்க்கையே* *அவமானம்.* 
                 உங்களுக்கென ஒரு தன்மானம் எப்போதும் இருக்க வேண்டும்.

அது மற்றவர்களால் “திமிர்” என பார்க்கப்பட்டாலும் அந்த தன்மானத்தில் இருந்து எப்போதும் விலக்காதீர். 

வறுமை உங்களை வாட்டினாலும் தன்மானத்தோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான மரியாதையை தேடி தரும்.

தன் மீது குப்பைகள் விழுவதை கடலால் தடுக்க முடியாது.

ஆனால். அவைகளை, தன் அலையின் சக்தியைக்கொண்டு, தூக்கி தூர கரையில் வீச முடியும்.

அதுபோலத்தான். நம்மீது விழுகின்ற, இழிசொல், பழிச் சொல் இவைகளை நம்மால் தடுக்க முடியாது.

ஆனால், அவைகளை, அலட்சியம் படுத்துவதின் மூலம், தூக்கி தூர வீச முடியும்.

எந்த ஒரு மனிதனும் தனக்குப் பிடித்த ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேசாத வரை அவனது கவலைகளும் கஷ்டங்களும் எந்தக் காலத்திலும் முடிவுக்கு வருவதில்லை.

பிடிவாதம் அதிகமானால் தன்னைச் சேர்ந்தவர்களை விட்டுத் தொடர்ச்சியாகப் பிரிந்து விட வேண்டியது தான்.

உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத இடத்தில் சிரித்தாலும் அழுதாலும் ஒன்று தான்.

சோறு பொங்கும் போது தீயைக் கம்மிப் பண்ணுங்க. மனசு பொங்கும் போது வார்த்தைகளைக் கம்மிப் பண்ணுங்க.

அதுதான் வாழ்க்கைக்கு  அழகு.

Thursday, October 26, 2023

நம் வகுப்பறை

எவ்வளவு பாடங்களைக் கேட்டிருக்கும் எவ்வளவு பேரை பார்த்திருக்கும் எவ்வளவு அறிவுரைகள் கேட்டிருக்கும் எவ்வளவு பரீட்சைகளை பார்த்திருக்கும் எவ்வளவு கதைகளை கேட்டிருக்கும்
எவ்வளவு பேரின் வாழ்வை மாற்றியிருக்கும்

எவ்வளவு உரையாடல்களை உணர்ந்திருக்கும்
 எவ்வளவு சோகங்களை சுமந்திருக்கும் எவ்வளவு மகிழ்ச்சியை சந்தித்திருக்கும்

எவ்வளவு மகிழ்ச்சி சோகம் நம்பிக்கை
நட்பு  நன்றி மறத்தல்  நம்பிக்கை துரோகம்

 இவ்வளவு அறிந்த பின்னும்
 அனுபவம் பெற்ற பின்னும் 
இன்னும் அமைதியாகதான் இருக்கிறது 

" நம் வகுப்பறை".

பூமி.சாமி.

Wednesday, October 25, 2023

அடுத்தவரை அலட்சியம்
செய்து பார்ப்பதில் அலாதி பிரியம்
சிலருக்கு.

பூமி.சாமி‌

Monday, October 23, 2023

பேச விருப்பம் இருந்தால்
பேசுங்கள்,
நீங்கள் பேசுவது 
தாமரை இலையில்
தண்ணீர் போல்
இருக்கிறது.

பூமி.சாமி.

Sunday, October 22, 2023

எங்கள் ஊர்

உலகில் எங்கு சென்றாலும்
என் கரங்களை மட்டும் விடுவதே இல்லை கண்ணந்தங்குடி 

உன்னில் தான் பிறந்தேன் 
உன்னால் தான் வளர்ந்தேன் 
உன்னில் தான் மடியப் போகிறேன் 

எங்கு வேண்டுமானாலும் செல் 
எங்கு வேண்டுமானாலும் வாழ்
என்னை விட்டு நீங்காதே என்கிறது 
 கண்ணந்தங்குடி

எங்கு சென்றாலும் கண்ணை அயராமல் என்னை காக்கிறது கண்ணந்தங்குடி

எனக்கு வாழ கற்றுக் கொடுத்தது வாழ்வதற்கும் பிழைப்பதற்கும் வேறுபாட்டை கற்றுக் கொடுத்தது 
கண்ணந்தங்குடி

 கண்ணனுக்கு கண்ணாய்
உயிருக்கு உயிராய் 
என்னை காத்து நிற்கிறது கண்ணந்தங்குடி

 நான் ஒரு பொம்மலாட்டக் கலைஞன் என்னை கட்டுப்படுத்தும் கயிறு 
 கண்ணந்தங்குடி

 பழகுவதற்கும் 
பாசம் வைப்பதற்கு 
பற்றற்று இருப்பதற்கும் 
கற்றுக் கொடுத்தது  கண்ணந்தங்குடி

அது ஒரு கலாச்சார கடல்
அன்பின் பெருங்கூட்டம் 
அக்கறையில் தாய் 

மாமன் மச்சான் பங்காளி அத்தை அக்கா தங்கை அண்ணன் என ஒரு பாச பெருங்கடல்

 நாங்கள் வாழ்வதோ உலகெங்கும் ஆனால் எங்கள் உள்ளத்தில் என்றென்றும் உறங்குவது எங்கள் ஊர் 

ஊரை சுற்றி வந்தால் உலகை சுற்றிய திருப்தி 

அது பசுமை போர்த்திய நெற்குன்று
 நீரால் நிரம்பி வழியும் நீலக்கடல்

 தப்பு செய்த போது தட்டி வைத்தது சோகமாய் இருந்த போது தோள் கொடுத்தது 
சாதிக்க துணிகையில் நம்பிக்கை தந்தது
கையறு நிலையில் இருந்த போது கை கொடுத்தது

 கல்வியை எல்லோருக்கும் கண்ணாய் கொடுத்தது 
அதுதான் எங்களுக்கு உலகை சுற்றிவர கருவியாக அமைந்தது 

ஒற்றுமையாய் இருக்க மலையேறி அம்மனை கொடுத்தது
நாங்கள் ஒன்று கூட திருவிழாவை வைத்தது 

ஒருவர் கூட பசியோடு உறங்க விட்டதில்லை  கண்ணந்தங்குடி
எந்த வீட்டை தட்டினாலும் சோறும் நீரும் கிடைக்கும் 

மனிதன் மட்டுமல்ல எந்த உயிரும் பசியோடு உறங்க விட்டதில்லை எங்கள் ஊர் 

நான் கவலைப்படும்போதெல்லாம் என்னை நினைவுகளாலும் கனவுகளாலும் அணைத்துக் கொள்ளும் 
கண்ணந்தங்குடி

 என்னை எப்பொழுதும் தனி மரமாய் விட்டதில்லை எங்கள் ஊர்

 ஒவ்வொரு முறை செல்லும் போதும் என்னை பிடித்து வைத்துக் கொள்கிறது
 கண்ணந்தங்குடி
ஆனால் பிழைப்புத்தான் விடமாட்டேன்
என்கிறது.

பூமி.சாமி.


Wednesday, October 18, 2023

ஒரு மாணவி
தனது பட்டப்படிப்பு சான்றிதழை பெறுவதற்காக கல்லூரிக்கு வருகிறார் 
அதை அலுவலத்தில் பெறுகிறார்
அப்பொழுது அங்கு அவருக்கு பாடம் நடத்திய ஒரு  பேராசிரியரும் அங்கு இருக்கிறார்
அந்த மாணவி அவர் அங்கு இருப்பது தெரிந்தும்
கண்டுக் கொள்ளாமல்
சான்றிதழை பெற்று செல்கிறார்.

இதுதான் இன்றைய நிலை.
மிகுந்த வருத்தத்திற்குரியது.



Sunday, October 15, 2023

காலம் தன் மறதி
கரங்களால் உன்
நினைவுகளை 
என்னிடமிருந்து
திருட முயல்கிறது 

தினம் தினம்
அதை எடுத்து
துடைத்து
நினைத்து
மகிழ்ந்து
வேறு வேறு இடத்தில் 
மறைத்து வைக்கிறேன் நான்.

-பூமி.சாமி.

Tuesday, October 10, 2023

அன்பு சொல் அல்ல, செயல்

இந்த பூமி
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது 

இந்த மலர் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த மரம் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த மழை 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த தென்றல் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த சூரியன் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

ஆனால் நாம் 
மட்டும் தான்.................................

-பூமி.சாமி.




Sunday, October 1, 2023

உன்னை முடித்துக் கொள்வது தீர்வல்ல, எதுவும் உன்னால் முடியும் என்பதே தீர்வு

ஆயிரம் உயிரனுவை முந்தி ஜெயிக்க முடிந்தது உன்னால்

கருவில் இருந்து உயிராய் துளிர்க்க முடிந்தது உன்னால் 

மழலையில் மீண்டும் மீண்டும் விழுந்த போதும் நடக்க முடிந்தது உன்னால்

 ஒன்றும் அறியாமல் உலகிற்கு வந்த உன்னால் படிக்க எழுத முடிகிறது இந்நாள்

பார்க்க முடிகிறது
கேட்க முடிகிறது
உணர முடிகிறது உன்னால்

 எல்லாவற்றிற்கும் மேலாக லட்சம் உயிரினங்களில் சிந்திக்க சிரிக்க முடிகிறது உன்னால் 

இவ்வளவு எல்லாம் முடிகிற உன்னால் எப்போரட்டங்களையும் கடக்க முடியும் தானே 

நேற்று மலையாய் தெரிந்தது 
இன்று மடுவாய் தெரிகிறது 
இன்று மலையாய் தெரிவது
நாளை மடுவாய் ஆகும் 

எனவே தைரியமாய் எதிர்கொள் உன்னால் முடியும் 
இல்லையெனில் 
கடந்து செல்.

-பூமி.சாமி.