Showing posts with label அன்பு சொல் செயல். Show all posts
Showing posts with label அன்பு சொல் செயல். Show all posts

Tuesday, October 10, 2023

அன்பு சொல் அல்ல, செயல்

இந்த பூமி
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது 

இந்த மலர் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த மரம் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த மழை 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த தென்றல் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த சூரியன் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

ஆனால் நாம் 
மட்டும் தான்.................................

-பூமி.சாமி.