Thursday, February 29, 2024

நமது மனதிற்குள்
சில எதிர்பார்ப்புகள் உள்ளது
இதை சில பிடித்தவர்களிடம் 
எதிர்ப்பார்க்கிறோம்
அதை அவர்கள் செய்யாதபோது
அவர்களை Judge செய்கிறோம்
அதனால் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வதும் மிக கடினமாக இருக்கிறது.

எதிர்ப்பார்ப்புகளை குறைத்து கொள்வதுதான் இதுக்கு தீர்வாக அமையும்.

பூமி.சாமி.

Wednesday, February 28, 2024

நிறை குறைகளுடன் மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும்
மனிதர்களிடம் எந்தவித எதிர்பார்ப்பின்றி 
இருப்பதும் மிக கடினமாக இருக்கிறது.

பூமி.சாமி.

எல்லாவற்றிற்கும் கணக்கு
பார்த்து
கணக்காய் வாழ்ந்து
கணக்கு முடியப்போகும் போதுதான்
தெரியும்
கணக்கிட முடியாததது வாழ்க்கை என்று.

பூமி.சாமி.

Monday, February 26, 2024

எனக்கு பெரிய பேரரசை என்று 
ஒன்றும் இல்லை
இத்தருணத்தை  இந்த நொடியை
முழுவதும் வாழ்ந்து
விடவேண்டும் என்று
ஆனால் இதுநாள் வரை முடியவில்லை.

பூமி.சாமி.

Sunday, February 25, 2024

அன்புக்கு பதில் அன்பு மட்டும் இல்லை
வெறுப்புக்கு பதில் வெறுப்புதான் என்றில்லை
எந்த பதிலானலும் உண்மை இருக்கட்டும் எந்த வேசமும் வேண்டாம் 
விஷமே ஆனாலும் கலப்படம் வேண்டாம்.

பூமி.சாமி.



இயல்பாய் இருந்து விடுங்கள்

நல்ல பெயர் எடுக்க 
அதிபுத்திசாலி தனமாய் 
செய்யும் செயல்கள்
எடுத்துக் கொடுக்கிறது
கெட்டப் பெயரை.

பூமி.சாமி.

Saturday, February 24, 2024

அப்பா
அம்மா
கணவன்
மனைவி
பிள்ளைகள்
உடன்பிறந்தவர்கள்
யாரேனும் தியாகத்தின்
 உருவமாக உன் வாழ்வில் இருக்கக்கூடும்
அவரை இழந்து விடாதே
அவர்தான் இந்த உலகம்
உனக்கு கொடுத்த உன்னத
பரிசாக இருக்கக்கூடும்.

பூமி.சாமி.

Thursday, February 22, 2024

கல்லூரி முடித்து
ஒரிரு வருடம் கழித்து 
மாணவர்கள் தொலைபேசியில்
அழைப்பதுண்டு

ஒருவர் கேட்பார்
மதிப்பெண்
பட்டியல் வந்துவிட்டதா என்று

மற்றொருவர் கேட்பார் 
பட்டமளிப்பு விழா எப்போதென்று

இன்னொருவர் கேட்பார்
ஏதாவது வேலை வாய்ப்பு
இருந்தால் சொல்லுங்கள் என்று

இதுவரை ஒருவரும் கேட்டதில்லை
" தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்" என்று

-பூமி.சாமி.

Tuesday, February 13, 2024

பிடிவாதமாய் இருந்து
நான் வெற்றி பெறும் போதெல்லாம்
நம்மிடையே உள்ள உறவு 
தோற்று போகிறது.

-பூமி.சாமி.

Sunday, February 11, 2024

மின் கம்பி -தத்துவம்

முத்தமிட்டது 
யார் என்பது
பிரச்சினை இல்லை
உயிர்ப்போனது என்னவோ
பறவைக்கு தான்.

பூமி.சாமி

Friday, February 9, 2024

அறிவால் அறிந்தது எல்லாம்
நினைவில் இல்லை
மனதால் உணர்ந்ததை எல்லாம்
மறக்க முடியவில்லை.

பூமி.சாமி.

Thursday, February 8, 2024

எல்லாவற்றையும் சொல்லி விடுவதில்
ஆரம்பித்து 
இதை சொல்லலாமா வேண்டாமா என்பதில்
முடிந்துவிடுகிறது
எல்லா உறவும் நட்பும்.

பூமி.சாமி.

Wednesday, February 7, 2024

இலையுதிர் காலங்களில்
இலைகள்  மண்ணை
வளமாக்குகிறது

வாழ்வின் இலையுதிர் காலங்களில்
இன்னல்கள்  
மனதை திடமாக்குகிறது..

பூமி.சாமி