Friday, May 31, 2024

யார் யாரையோ
யாருக்குள்ளோ
தேடுவது தான்
இங்கு பிரச்சினை.

பூமி.சாமி.


Thursday, May 30, 2024

அலட்சியத்தை எல்லாம் அடுக்கி
வைத்துக்கொள்கிறது அறிவு

அடுத்தமுறை உதவி என்று
கேட்டால் அலட்சியம் செய்ய
வேண்டும் என நினைக்கிறது அறிவு

உதவி என்று குரல் வருகிறது
அலட்சிய அடுக்கின் மேல்
முதல் ஆளாய் ஏறிநின்று உதவ முனைகிறது மனசு.

பூமி.சாமி.


Wednesday, May 29, 2024

பசுமை
பாடல்கள் 
பஸ்
பயணம்
அதிகாலை.

இதைவிட
வாழ்வில்
என்ன
இருக்கிறது.

பூமி.சாமி.

Sunday, May 26, 2024

அன்பின் சொல்படி கேட்பதும்
அடிமையாய் இருப்பதும் 
வேறு வேறு.

பூமி.சாமி‌

Saturday, May 25, 2024

நாம் நம் குழந்தைகளுக்கு
முகமூடிகள் தயாரிப்பதிலும்
அதை அணிவிப்பதிலும்
முன்புறமாய் இருக்கிறோம்
ஏனெனில்
நமது உண்மை முகம்
சில நேரங்களில் குழந்தைகளின்
குணங்களில் செயல்களில் வெளிப்பட்டுவிடுகிறது.

பூமி.சாமி.
நம்மில் சிலர்
பணம் சொத்து சேர்க்கையில்
பாவங்களையும் சேர்த்தே சம்பாதிக்கிறோம்
பிறகு
பாவங்களை போக்க
பணத்தை செலவழித்து
பணம்தான் கரைந்ததே ஒழிய
பாவங்கள் கரையாமல்
சந்ததிகளிடம் சேர்ந்ததுதான்
மிச்சம்.



விவரம் தெரியாத மக்கு
ஒன்றும் தெரியவில்லை
என்று பலமுறை திட்டி இருப்போம்
வெள்ளந்திகளை

ஆனால்  எனக்கு ஒன்றும் மட்டும்
புரியவில்லை
கடவுள் ஏன் எப்போதும் அவர்கள் பக்கமே இருக்கிறார்  என்று.

-பூமி.சாமி.




Wednesday, May 22, 2024

படித்ததில் பிடித்தது

மற்றவர்களின் செயல் உன்னை பாதிக்காத அளவுக்கு உன் மனநிலையைச் வைத்துக்கொள்ள நீ பழகவேண்டும்.

நம்மைச் சுற்றிய நிகழ்வுகள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்ய முடியாது.

ஆனால் அப்படி நம்மைச் சுற்றி நடப்பவைகளுக்கு நீ இப்படித்தான் எதிர்வினை ஆற்ற வேண்டுமென்று முடிவு செய்யும் சுதந்திரம் நம் கையில் இருக்கிறது.

உன் எதிர்வினையின் காரணமாக உன் சூழ்நிலையின்மீது நீ அதிகாரம் செலுத்த முடியும்.

உன் உணர்ச்சிகளை நீயே தேர்ந்தெடு: நீ எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பாய் என்று நீ முடிவு செய்து விட்டால் உன்னை யாரும் துக்கப்பட வைக்க முடியாது.

எதையும் நீ எப்படி எடுத்துக் கொள்கிறாய் என்பதுதான் வாழ்க்கையில் முக்கியம்.

நாம் ஏன் வாழ்கிறோம்? :  இந்த கேள்விக்கு ஒரு பதிலை நாம் கண்டு பிடிக்க வேண்டும். ஹிட்லரின் வதைமுகாமில் இருந்த பலருக்கும் ஒரு குறிக்கோள் இருந்தது. தன் குழந்தைக்காக வாழ வேண்டும்.

தன்னுடைய நிறைவேறாத ஒரு ஆசைக்காக நாம் வாழ வேண்டும். இப்படி வாழ்க்கையில் ஒரு உன்னதமான குறிக்கோளை வைத்திருந்தால் அதன் பொருட்டு நாம் எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் தாங்கிக் கொள்கிற சக்தியை அது கொடுத்து விடும்.

நாம் ஏன் வாழ வேண்டும்? : இந்த கேள்விக்கு ஒரு நல்ல பதிலை வைத்திருப்பவர்கள் எந்த கஷ்டத்தையும் எளிதாகத் தாங்கி விடுகிறார்கள்.

வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வைத்திருப்பவர்கள் வாழ்வின் துன்பங்களை எளிதாக கடந்து விடுகிறார்கள்.

"Man's Search for Meaning" by Victor E Frankl 

காசு காசு என அழைந்து 
காலம் கடந்தும் பின் தான்
புரியும்
வாழ்தல் என்றால் என்ன வென்று
காலத்தையும் காலனையும்
நிறுத்தி வைக்க முடியுமா என்ன.

பூமி.சாமி.

Tuesday, May 21, 2024

ஏதோ ஒன்றை மற்றவர்களிடம்
எதிர்பார்த்தது காத்து நிற்க்கீறீர்களா
அது அவரிடம் உனக்கு கொடுக்கும்
அளவு இல்லாமல் இருக்கக் கூடும்
காத்து நிற்க்காமல்
நீங்களே அவருக்கு அதை கூடுதலாக
கொடுத்து விடுங்கள்.
அன்பு, நன்றி எல்லாம் அப்படித்தான்.

-பூமி.சாமி.




காரணமான எண்ணத்தை மாற்றாமல்
விளைவுகளுடன் போராடுவது அர்த்தமற்றது.

- ஜேம்ஸ் ஆலன்.

Monday, May 20, 2024

படித்ததில் பிடித்தது

The pain of a good deed and the pleasure of a bad deed are only a few seconds


நற்செயலால் வரும் வலியும் தீச்செயலால் வரும் சுகமும் சில நொடிகளே


உனக்கு வேண்டியது
உனக்கும் தெரிகிறது 
எனக்கும் தெரிகிறது
உரிமையாய் கேட்டு பெற்றுக்கொள்ளுகிறாய்.

எனக்கு தேவையானது
எனக்கும் தெரியவில்லை
உனக்கும் தெரியவில்லை
கேட்கவும் தெரியவில்லை
கிடைக்கப் பெறவும் இல்லை.
ஆனால் மகிழ்வோடு இருக்கிறேன் 
உன்னை பெற்றதனால்.

பூமி.சாமி.
அலங்காரம் ஏதும் இல்லாமல்
அமைதியாய் சலனமே இல்லாமல் வெளிப்படும்
எதிர்பார்பற்ற உண்மையான அன்பு

மிகை அலங்காரத்துடன் 
வெற்று ஆர்பரிப்புடன் 
உய்யாரமாய்
அரிதாரம் இட்டு வரும்
போலியான அன்பு.

பூமி.சாமி.

Thursday, May 16, 2024

மனிதனின்
அறிவை 
சோதிக்கும்
இந்த சமூகம்
அறத்தை சோதிக்க
மறந்ததன்
விளைவை
சந்தித்து கொண்டிருக்கிறது 
இன்னமும் சந்திக்கும்.

பூமி.சாமி. 


Sunday, May 12, 2024

வயல் வரப்பில் அமர்ந்து 
பனை ஓலை தொன்னையில்
தின்ன பழைய சோறு

அதற்கு தொட்டுக்காய் 
சிறு தொன்னையில்
முருங்கை கீரை இட்டு சுண்டிய
பழைய குழம்பு
உளுந்து துவையல் 
வறுத்த சுண்டை மிளகாய் வற்றல்

சொர்க்கத்தில் அமர்ந்து அமுதுண்ண
அற்புத தருணங்கள் இவை

பனை மரங்கள் அற்ற வீட்டு மனைகளாய் வயல்கள்
பழைய சோறுக்கு பதிலாய்
பலநாள் முன் அறைத்த இட்லி மாவு
வெட்ட வெளியிலிருந்து
வீட்டுக்குள் சுருங்கி போன நாம்
சொர்க்கத்தில் நரகத்திற்கு
கொஞ்சம் இடைவெளி தான்
அது பத்து இருபது ஆண்டுகள் தான்.

பூமி.சாமி.






-பூமி.சாமி.


இன்றும்
மீன் குழம்பில்
மீனை தேடும்முன்
என் அம்மா வைக்கும்
குழம்பின்
சுவையையும்
மனத்தையும்
தேடுகிறது மனம்.

பூமி.சாமி.


உலகின் மிக சிறந்த போராளியை
உன்னால் காட்ட முடியுமா

உன்னால் தியாகத்தை உருவகப் படுத்தமுடியுமா

கலப்படமில்லாத அன்பை கண்டதுண்டா

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லா 
அன்பு என்று ஒன்று உண்டா 

கருணை காட்டிய அதே கண்ணால்
கண்டிப்பை காட்ட இயலுமா

வாழ்க்கை திறன்களை நமக்கு கற்று தந்த பல்கலைக்கழகத்தை உனக்கு தெரியுமா

கடவுளை நேரில் தரிசித்தது உண்டா

கடவுள் உன் அருகில் தான்
இருக்கிறார்
உன்னோடு தான் நேரிலோ நினைவாகவே இருக்கிறார் 
உணர்ந்தது உண்டா

அவள்தான் உலகத்தை உள்ளடக்கிய உலகம்.

தினம் தினம் அவளின் தினம்தான்.


அன்னையர் தின வாழ்த்துக்கள்.


Thursday, May 9, 2024

நெருக்கமாய் விலகியிருத்தலும்
விலகி நெருக்கமாய் இருத்தலும்
மனதிற்கும் உறவுக்கும் நன்று.

பூமி.சாமி‌.


Monday, May 6, 2024

👵Written by a 90 year old!!❤️
🤙42 lessons life taught me 💖
It is something we should all read at least once a week! Make sure you read to the end!
Written by Regina Brett, 90 years old, of the Plain Dealer, Cleveland, Ohio.
"To celebrate growing older, I once wrote the 42 lessons life taught me. It is the most requested column I've ever written. My odometer rolled over to 90 in August, so here is the column once more:
1. Life isn't fair, but it's still good.
2. When in doubt, just take the next small step.
3. Life is too short – enjoy it..
4. Your job won't take care of you when you are sick. Your friends and family will.
5. Pay off your credit cards every month.
6. You don't have to win every argument. Stay true to yourself.
7. Cry with someone. It's more healing than crying alone.
8. Save for retirement starting with your first pay check.
9. When it comes to chocolate, resistance is futile.
10. Make peace with your past so it won't screw up the present.
11. It's OK to let your children see you cry.
12. Don't compare your life to others. You have no idea what their journey is all about.
13. If a relationship has to be a secret, you shouldn't be in it...
14 Take a deep breath. It calms the mind.
15. Get rid of anything that isn't useful. Clutter weighs you down in many ways.
16. Whatever doesn't kill you really does make you stronger.
17. It's never too late to be happy. But it’s all up to you and no one else.
18. When it comes to going after what you love in life, don't take no for an answer.
19. Burn the candles, use the nice sheets, wear the fancy lingerie. Don't save it for a special occasion. Today is special.
20. Over prepare, then go with the flow.
21. Be eccentric now. Don't wait for old age to wear purple.💖
22. The most important sex organ is the brain.
23. No one is in charge of your happiness but you.
24. Frame every so-called disaster with these words 'In five years, will this matter?'
25. Always choose life.
26. Forgive but don’t forget.
27. What other people think of you is none of your business.
28. Time heals almost everything. Give time time.
29. However good or bad a situation is, it will change.
30. Don't take yourself so seriously. No one else does..
31. Believe in miracles.
32. Don't audit life. Show up and make the most of it now.
33. Growing old beats the alternative -- dying young.
34. Your children get only one childhood.
35. All that truly matters in the end is that you loved.
36. Get outside every day. Miracles are waiting everywhere. (I love this one)
37. If we all threw our problems in a pile and saw everyone else's, we'd grab ours back.
38. Envy is a waste of time. Accept what you already have not what you need.
39. The best is yet to come...
40. No matter how you feel, get up, dress up and show up.
41. Yield.
42. Life isn't tied with a bow, but it's still a gift.
❤️❤️❤️

படித்ததில் பிடித்தது

💟#அர்த்தமுள்ள_வாழ்க்கை💟

கணவன் மனைவி இருவரும் ...

ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

💟என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....

இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்

💟இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க... அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....

திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க.... அதான்...என்று இழுத்தாள்.

ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.

💟மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க

என்னத்த சொல்ல..

💟ஏதும் சின்னவீடு செட்பண்ணிட்டிங்களா...அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?

போடி லூசு.. அவன் சிரித்தான்.

ஆனால் அதில் உயிரில்லை.

மெதுவாய் சொன்னான்..

நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

💟என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....

அவன் இல்லையென தலையாட்டியபடியே...

அவனது அலுவலக பையை திறந்தான்.

ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

💟என்னங்க இது ..

படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.

அவள் படிக்க தொடங்கினாள் ...

அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.

உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.

ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.

அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.

உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.

அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.

இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.

அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...

நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.

உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.

அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.

உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.

அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.

நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.

நாம தான் விளையாடுவோம்.

அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..

அதுல பாதி பொய் இருக்கும்..

அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.

அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..

அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.

ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.

இப்ப வெளியே போகனும்...

இப்படி வெளியே போகணும்னு..

ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன்.

நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....

நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.

அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.

காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...

இப்ப அவ எப்படி இருக்கானு கூட

அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....

ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்...

அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே

நீ ரொம்ப பிசியாகிட்ட..

நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...

சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..

நான் காத்திட்டு இருந்தேன்.

கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..

ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...

என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...

பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.

ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...

பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.

நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது

அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..

அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.

உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...

அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...

அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.

இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.

இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...

உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...

என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..

ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல

அதான் உன்கிட்ட சொல்றேன்.

நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...

சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..

அதனால தான் இப்ப சொல்றேன்.

உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...

காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..

ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.

அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு அவர் பிசி....

அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..

அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல

ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..

பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத

உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...

இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.

நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.

இன்னும் சொல்லபோனா

நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..

அத கொஞ்சம் குறைச்சிக்கோ..

சீக்கிரம் வீட்டுக்கு வா.

பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...

அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....

ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...

ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?

செய்வேனு நம்புறேன்.

ஏன்னா என்கிட்ட நல்லா பேசின பையன் தானே நீ...

உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள்.

அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.

நிமிர்ந்து அவனை பார்த்தாள்....

இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.

அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

நான் தான்மா.....

ஏன் சும்மா பேசக்கூடாதா?....

என்ன செய்ற...

அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.

ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத்தொடங்கியது.... .

அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.

இனிமே அப்படித்தான்..

இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

Saturday, May 4, 2024

முதலில் 
கோவில் சாவடிகள் வெறிச்சோடி போயின 

அதன் பின் வீட்டு திண்ணைகள் ஆள் அரவமற்று போய் 
பின் திண்ணையும் இல்லாமல் போயின

 இப்பொழுது வீட்டின் வரவேற்பறையும் 
வெறுமையாய்
ஒவ்வொருவரும் ஒரு அறைக்குள் 

கூடி பேசி உறவையும் அறிவையும்  வளர்த்த இனம் 
ஒரு தொடுதிரைக்குள் ஒளிந்தும் ஒழிந்தும் போவதென்னவோ கொடுமை.

பூமி.சாமி.

Friday, May 3, 2024

எடைதாங்கா மேகம் ஒன்று 
என்னருகில் வந்தது
தன் தண்ணீரை இறக்க இடம் கிடைக்குமா என்றது 
நான் கண்ணீரை தருகிறேன் நீ தண்ணீரைத் தா என்றேன் 
பறிமாறிக் கொண்டோம்
வேகமாய் பறந்து செல்லும் மேகம் 
கணம் தாங்க முடியாமல் தனைவாய் தவழ்ந்தே சென்றது
அன்றிலிருந்து மேகங்கள் 
என்னருகில் வருவதே இல்லை.

பூமி.சாமி.

Wednesday, May 1, 2024

ஒருபோதும் உன்னால் சிறந்ததை
அடைய முடியாது

அப்படி அடைந்தாலும்
அடைந்தவுடன்
அது சிறப்பானதாக 
உனக்கு தெரியாது

ஆனால் 

ஒன்றை மட்டும் 
உன்னால் சிறப்பானதாக 
ஆக்க முடியும்
அது 
இத்தருணம் மட்டும் தான்.