மற்றவர்களின் செயல் உன்னை பாதிக்காத அளவுக்கு உன் மனநிலையைச் வைத்துக்கொள்ள நீ பழகவேண்டும்.
நம்மைச் சுற்றிய நிகழ்வுகள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்ய முடியாது.
ஆனால் அப்படி நம்மைச் சுற்றி நடப்பவைகளுக்கு நீ இப்படித்தான் எதிர்வினை ஆற்ற வேண்டுமென்று முடிவு செய்யும் சுதந்திரம் நம் கையில் இருக்கிறது.
உன் எதிர்வினையின் காரணமாக உன் சூழ்நிலையின்மீது நீ அதிகாரம் செலுத்த முடியும்.
உன் உணர்ச்சிகளை நீயே தேர்ந்தெடு: நீ எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பாய் என்று நீ முடிவு செய்து விட்டால் உன்னை யாரும் துக்கப்பட வைக்க முடியாது.
எதையும் நீ எப்படி எடுத்துக் கொள்கிறாய் என்பதுதான் வாழ்க்கையில் முக்கியம்.
நாம் ஏன் வாழ்கிறோம்? : இந்த கேள்விக்கு ஒரு பதிலை நாம் கண்டு பிடிக்க வேண்டும். ஹிட்லரின் வதைமுகாமில் இருந்த பலருக்கும் ஒரு குறிக்கோள் இருந்தது. தன் குழந்தைக்காக வாழ வேண்டும்.
தன்னுடைய நிறைவேறாத ஒரு ஆசைக்காக நாம் வாழ வேண்டும். இப்படி வாழ்க்கையில் ஒரு உன்னதமான குறிக்கோளை வைத்திருந்தால் அதன் பொருட்டு நாம் எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் தாங்கிக் கொள்கிற சக்தியை அது கொடுத்து விடும்.
நாம் ஏன் வாழ வேண்டும்? : இந்த கேள்விக்கு ஒரு நல்ல பதிலை வைத்திருப்பவர்கள் எந்த கஷ்டத்தையும் எளிதாகத் தாங்கி விடுகிறார்கள்.
வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வைத்திருப்பவர்கள் வாழ்வின் துன்பங்களை எளிதாக கடந்து விடுகிறார்கள்.
"Man's Search for Meaning" by Victor E Frankl
No comments:
Post a Comment