கோவில் சாவடிகள் வெறிச்சோடி போயின
அதன் பின் வீட்டு திண்ணைகள் ஆள் அரவமற்று போய்
பின் திண்ணையும் இல்லாமல் போயின
இப்பொழுது வீட்டின் வரவேற்பறையும்
வெறுமையாய்
ஒவ்வொருவரும் ஒரு அறைக்குள்
கூடி பேசி உறவையும் அறிவையும் வளர்த்த இனம்
ஒரு தொடுதிரைக்குள் ஒளிந்தும் ஒழிந்தும் போவதென்னவோ கொடுமை.
பூமி.சாமி.