Sunday, October 1, 2023

உன்னை முடித்துக் கொள்வது தீர்வல்ல, எதுவும் உன்னால் முடியும் என்பதே தீர்வு

ஆயிரம் உயிரனுவை முந்தி ஜெயிக்க முடிந்தது உன்னால்

கருவில் இருந்து உயிராய் துளிர்க்க முடிந்தது உன்னால் 

மழலையில் மீண்டும் மீண்டும் விழுந்த போதும் நடக்க முடிந்தது உன்னால்

 ஒன்றும் அறியாமல் உலகிற்கு வந்த உன்னால் படிக்க எழுத முடிகிறது இந்நாள்

பார்க்க முடிகிறது
கேட்க முடிகிறது
உணர முடிகிறது உன்னால்

 எல்லாவற்றிற்கும் மேலாக லட்சம் உயிரினங்களில் சிந்திக்க சிரிக்க முடிகிறது உன்னால் 

இவ்வளவு எல்லாம் முடிகிற உன்னால் எப்போரட்டங்களையும் கடக்க முடியும் தானே 

நேற்று மலையாய் தெரிந்தது 
இன்று மடுவாய் தெரிகிறது 
இன்று மலையாய் தெரிவது
நாளை மடுவாய் ஆகும் 

எனவே தைரியமாய் எதிர்கொள் உன்னால் முடியும் 
இல்லையெனில் 
கடந்து செல்.

-பூமி.சாமி.

No comments:

Post a Comment