Thursday, April 9, 2020

கடன்வாங்கப்பட்ட #கருத்துக்கள், #தத்துவங்கள் உங்களது தலையில் இருக்கும்.

"ஒரு கதை!!!

ஒரு தத்துவாதி கிழிந்த காலணியை  சரிசெய்வதற்கு செருப்பு தைப்பவரிடம் சென்றார் . 

அவர்  இந்தவொரு ஜோடி காலணி மட்டுமே வைத்திருந்ததால் நான் காத்திருக்கின்றேன் .தைத்துக் கொடுங்கள் என்றார்.  

உடனே கடையை சாத்திவிட்டு நடையை கட்டுகிற நேரம். நாளை வாருங்கள் தைத்து வைத்திருக்கின்றேன் என்றார்.  

இல்லையில்லை என்னிடம் இந்த காலணிகள்தான் உள்ளது. ஆகவே தைத்துக்கொடுங்கள் என்று வற்புறுத்தினார்.  

 முடியாது.  நேரமாகிவிட்டது.  உங்களுக்காக என்னிடம் உள்ள காலணியைத் தருகின்றேன். இப்போது போட்டுக்கொண்டு செல்லுங்கள். நாளை வரும்போது நான் கொடுத்த செருப்பைக் கொடுத்துவிட்டு சரிசெய்த செருப்பைப் போட்டுக் கொள்ளலாம் என்றார்.  

அடுத்தவர்கள் போட்டுத் தேய்த்த செருப்பை நான் போடுவதா? நான் யாரென்று நினைத்தீர்கள்.  என்றார் கோபத்துடன் தத்துவவாதி.  

மற்றவர்களுடையக் கருத்துக்களை நீங்கள் கடன் வாங்கி உங்களது மண்டையில் வைத்துக் கொள்கின்றபோது மற்றவர்கள் அணிந்துகொண்ட இந்த செருப்பை அணிந்துகொள்வதில் தவறு ஒன்றுமில்லை என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.  

ஆகவே, இன்று ஒருநாள்  இந்த செருப்பைப் போட்டுக்கொண்டு செல்லுங்கள் என்றார்.  

அது உங்களது காலில் இருக்கும்.  மற்றவர்களிடமிருந்து கடன்வாங்கப்பட்ட  #கருத்துக்கள், #தத்துவங்கள் உங்களது தலையில் இருக்கும்.  

ஆகவே, மற்றவருடைய செருப்பை அணிந்துகொள்வதில் தவறு ஒன்றுமில்லை என்றார். 

#ஓஷோ

No comments:

Post a Comment