Thursday, September 26, 2019

சுற்றுலா

    இயற்கை மனிதர்களுக்குள் புரிதல் ஏற்படுத்தும் என்று உணர்த்திய நாட்கள்,
    மலை, மரம், பனி, மேகம் இவைகளோடு  நாமும் உறைந்த நாட்கள்,
   கற்பித்தல் மறந்து உங்களிடமும் கற்க நிறைய இருக்கிறது என்று உணர்ந்த நாட்கள்,
   மணிக்கணக்கில் உங்களை பேசவிட்டு சிரித்து மகிழ்ந்த நாட்கள் ,
   வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுப்பது வகுப்பறை மட்டுமல்ல என்று உணர்ந்த நாட்கள்,
   மறக்க முடியாத, யாரும் பறிக்க முடியாத உன்னத நினைவுகளை தந்த நாட்கள்,
   அந்த நாட்கள் நாம் சுற்றுலா சென்ற நாட்கள்,
   உன்னத உணர்வுகளை தந்த அனைவருக்கும் நன்றி.

No comments:

Post a Comment