சிலரை பிடிக்கவில்லை என்று ஒதுக்கினேன்
சிலரை நம்பிக்கையற்றவர்கள் என்று ஒதுக்கினேன்
சிலரை நன்றியற்றவர்கள் என்று ஒதுக்கினேன்
சிலரை நாணயம் அற்றவர்கள் என்றும் சிலரை நேர்மையற்றவர்கள் என்றும் ஒதுக்கினேன்
சிலரை அக்கறையற்றவர்கள் என்றும் சிலரை நாகரிகமற்றவர்கள் என்றும் ஒதுக்கினேன்
காடு தோப்பானது
இப்பொழுதும் சிலரை எடை போட்டுக் கொண்டே இருக்கிறேன்
தோப்பு மரம் ஆகலாம்
கடைசியில் என்னை நானே எடைபோட முயன்றால் இவையெல்லாம் என்னுள்ளும் இருப்பதால் என்னை என்னால் ஒதுக்க முடியுமா.
-சாமி.
No comments:
Post a Comment