Tuesday, November 2, 2021

மழையும் நானும்

கல்லூரியில் வேலை முடிந்து 
வெளியில் வருகிறேன் நான்,

மழை மல்லிகையாய் கொட்டுகிறது,
மழை உடுப்பை மறந்ததை மனம் கொண்டாடுகிறது,

அறிவு ஆஸ்பித்திரியை நினைத்து பயம் கொள்கிறது,

மழையில் நனைந்தபடி பைக்கை செலுத்துகிறேன் நான்,

மழையில் ஒதுங்கி நிற்பவர் எல்லாம்
பாவப்பட்டவராய் தெரிகிறார்கள் எனக்கு,

என்றும் வேகமாய் செல்லும் வண்டி
 மெது மெதுவாய் செல்கிறது இன்று,

மிரட்டுகிறது மின்னல், குளிரில் நடுங்கிறது உடல், அதிலும் நடனம் ஆடுகிறது மனம்,

வெறும் சாலையில் நானும் மழையும் மட்டுமே செல்கிறோம்,

வீடு வருகிறது, இன்றுதான் வீடு இவ்வளவு அருகில் ஏன் இருக்கிறது என்ற நினைப்பும் வருகிறது,

மனைவி திட்டலுக்கு பின் தந்த தேனீர் இதமாய் இருக்கிறது,

தலை துவட்டியபின் மண்டையைவிட்டு இறங்கிய மழை இன்னும் மனதைவிட்டு இறங்க மறுக்கிறது.


-சாமி.


No comments:

Post a Comment