Monday, January 8, 2024

படித்ததில் பிடித்த கவிதை

விலகிச் செல்ல நினைப்பவர்களை 
விடாமல் பின்தொடராதே
வேண்டாமென மறுதலிப்பவர்களை
வலியச்சென்று அழைத்து வராதே
பாதி வழியில் தொலைபவர்களை
கண்ணீருடன் தேடியலையாதே

அவர்கள் 
செல்லட்டும் 

சிலர் 
உன் வாழ்விற்குள்
வருவதுதான்
வரமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்

சமயங்களில்
சிலர் 
உன் வாழ்விலிருந்து
விலகிச்செல்வது கூட 
ஓர் ஆசிர்வாதமே

ஆதலால் 
விலகிச் செல்ல நினைப்பவர்களை 
வேண்டாமென மறுதலிப்பவர்களை
பாதி வழியில் தொலைபவர்களை
அப்படியே
விட்டுவிடு 

அவர்கள் 
செல்லட்டும்
இனி ஒருபோதும் மனம் மாறி
திரும்பவியலா பாதைகள் 
வழியே

-ரிஸ்கா முக்தார்-

No comments:

Post a Comment