கிராமத்தான்
Wednesday, October 23, 2024
நீங்கள் கூப்பிடாமல்
உங்கள் வாசல் வரை வந்தது தவறுதான்,
நீங்கள் என்றோ ஒருநாள்
என்மீது வைத்த ஒருதுளி
நேசம் என்னை தானாய் நகர்த்தி
வந்துவிட்டது. நான் என்செய்ய.
பூமி.சாமி.
Sunday, October 20, 2024
மழை பெய்து
மண்ணோடு கலந்த பின்னும்
மழைமேக நினைப்பில்
மழை நீர்.
பூமி.சாமி.
Saturday, October 19, 2024
மழையில்
மண்ணில்
மல்லாந்து
கிடக்கும்
மலர்கள்
மலர்ந்து
சிரிக்கும்போது
வாழ்வில்
வீழ்கையில்
மீள்வது
எப்படி
என தெரிகிறது.
பூமி.சாமி.
Wednesday, October 16, 2024
எதையும் இழக்காமல்
எதையும் பெற்றுவிட வேண்டும் என்று
துடிக்கிறது இந்த விவர மனம்
நீண்ட தேடலுக்கு பிறகுதான்
இந்த மரமண்டைக்கு உரைக்கிறது
இழத்தல் தான்
பெறுதலுக்கான திறவுகோல் என்று.
பூமி.சாமி.
Tuesday, October 15, 2024
மழையில்
வண்ணப்பூச்சு
கரைந்து,
ஒரிரு இடங்களில் எட்டிப்பார்கிறது
சுவரின்
உண்மையான நிறம்.
முகம்.
-பூமி.சாமி.
Monday, October 14, 2024
எந்த கரத்தையும் பற்றுவதற்கு
கொஞ்சம் பயமாகவே இருக்கிறது
உதறி விடுமோ
மறந்து விடுமோ
துன்பத்தில் இழுத்து விட்டு விடுமோ
துரோகம் இழைத்து விடுமோ
நன்றி மறந்து விடுமோ என்று
இதை தாண்டி
சில நற்கரங்கள்
உன்னை சுற்றி
எந்த ஆர்ப்பாட்டமும்
அழகும் இன்றி அறிதாய்
இருக்க கூடும்
கண்டடைவது
உன் கையில் தான் இருக்கிறது.
-பூமி.சாமி.
Sunday, October 6, 2024
பயணம் முடிந்தபின்னும்
பாதையின் நினைவுகள்.
-பூமி.சாமி.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)