Saturday, December 14, 2024

உன்னிடம் கேட்பது எல்லாம்

சிறுதுளி அன்பு
சிறுதுளி நட்பு
சிறிது நன்றி
சிறிது அக்கறை
சிறிதளவு உன் நேரம்
சிறிதளவு உன்னுடன் உரையாடல்

எதுவுமே கிடைக்காதபோது
பெருவெள்ளமாய் மனதில் பெருக்கெடுக்கிறது
கோபம்.

பூமி.சாமி.

Wednesday, December 11, 2024

என்னிடம் பேச நேரம் இல்லை
என்பவரின் நினைவுகள் தான்
என் முழு நேரத்தையும் வியாப்பித்து இருக்கிறது.

பூமி.சாமி.


Wednesday, December 4, 2024

ஒருவரை நம்பலாமா
வேண்டாமா என்று நகர்கிறது
வாழ்க்கை

நாம் நம்ப தொடங்கும்போது
அவரை நம்மைவிட்டு
நகர்த்தி விடுகிறது வாழ்க்கை.

பூமி.சாமி.
தேவதை என்பது
பெயர்ச்சொல் அல்ல,
வினைச்சொல்.

-பூமி.சாமி.

Tuesday, December 3, 2024

உன்மேல் சின்ன சின்ன
விசயங்களுக்கு கோப்படுகிறேன்
மனம் இருளில் இருக்கிறது.

காலையில் கதிரவன்
தோன்றுகையில் இருள் விலகி
பனி மறைகிறது
அன்பெனும் மலர் தெரிகிறது.

பூமி.சாமி.

Saturday, November 30, 2024

தேவை தீர்ந்தபின் வார்த்தைகளும் தீர்ந்து போகுமோ?

ஆரம்பத்தில்
பத்தி

அதன் பின்
சில வரிகள்
சில சொற்கள்

பிறகு 
ஒன்றிரண்டு சொற்கள்
ஒற்றை சொல்
ஸ்மைலி

கடைசியில் நின்றே போனது
உன் உரையாடல்.

பூமி.சாமி.

அது மழலை மழைக்காலம்

ஒட்டு திண்ணை
ஓர இருக்கை
மழை சாரல்
வாழை இலை
அம்மாவின் 
வெண் பொங்கல்
கருவாட்டு குழம்பு

உண்மையில் சொர்க்கம் அது.

பூமி.சாமி.