Sunday, January 14, 2024

போகி பண்டிகை

இந்த போகியில் புகையில்லாமல்
எரித்து விடுத்தான்
நினைக்கிறேன்

என் கோபத்தை
என் பயங்களை
என் பொறாமையை
என் அகந்தையை
என் அகங்காரத்தை

மனதின் அடி ஆழத்தில் இருக்கும்
அன்பு பொங்கி எழ 
அழுத்தி இருக்கும் இவைகளை
எரித்து விடுத்தான் நினைக்கிறேன்.

பூமி.சாமி.









Friday, January 12, 2024

சில நேரங்களில், 
முல்லை கொடி என்று நினைத்து முற்க்கொடிக்கு தேரை கொடுத்து விடுகிறோம்.    
வள்ளலுக்கு எல்லா கொடியும் ஒன்றுதான், 
முற்க்கொடிக்கு எல்லா வள்ளலும் ஒன்றுதான், குத்தத்தான் செய்யும். 

பூமி.சாமி.

Wednesday, January 10, 2024

நீ பகிரவில்லை என்றாலும்
உன் வலியை
சுமக்கிறேன்

நீ வாங்க வில்லை என்றாலும்
என் ஆறுதலை 
உன்னிடம் கொடுக்கிறேன்

நீ சாயவில்லை என்றாலும்
என் தோள் கொடுக்கிறேன்

நீ சட்டை செய்யவில்லை என்றாலும்
உன் அருகிலேயே நிற்கிறேன் 

ஏன் என்றால் துயரங்களில்
உடனிருப்பதே அன்பென்று உணர்ந்திருக்கிறேன் நான்.

பூமி.சாமி.

Monday, January 8, 2024

Innocence to Intellectual is Easy
But
Intellectual to Innocence is Difficult.

-Boomi.Saami.

படித்ததில் பிடித்த கவிதை

விலகிச் செல்ல நினைப்பவர்களை 
விடாமல் பின்தொடராதே
வேண்டாமென மறுதலிப்பவர்களை
வலியச்சென்று அழைத்து வராதே
பாதி வழியில் தொலைபவர்களை
கண்ணீருடன் தேடியலையாதே

அவர்கள் 
செல்லட்டும் 

சிலர் 
உன் வாழ்விற்குள்
வருவதுதான்
வரமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்

சமயங்களில்
சிலர் 
உன் வாழ்விலிருந்து
விலகிச்செல்வது கூட 
ஓர் ஆசிர்வாதமே

ஆதலால் 
விலகிச் செல்ல நினைப்பவர்களை 
வேண்டாமென மறுதலிப்பவர்களை
பாதி வழியில் தொலைபவர்களை
அப்படியே
விட்டுவிடு 

அவர்கள் 
செல்லட்டும்
இனி ஒருபோதும் மனம் மாறி
திரும்பவியலா பாதைகள் 
வழியே

-ரிஸ்கா முக்தார்-

வாட்சப் உரையாடல்

பல வார்த்தைகளை 
விற்று
ஒரு எமோஜி ஐ வாங்குகிறேன்.

பூமி.சாமி.

Sunday, January 7, 2024

புத்தகத்துடன் ஐன்னல் ஓரமாக
அமர்கிறேன்

"கா கா" என்ற காகத்தின் கரைதல் 
தொந்தரவாக

ஐன்னலை மூடிவிட்டேன் 

மீண்டும் தொந்தரவாக கரைதல்

பிறகு ஜன்னலை திறந்துவிட்டு
புத்தகத்தை மூடிவிட்டேன்

கரைதலில் கரைதல்தான்
கற்றல் என்பதை அறிந்து கொண்டேன்.

பூமி.சாமி.