Tuesday, October 25, 2022

மனதிற்காக
அறிவிற்காக
ஆன்மாவிற்காக
உடலிற்க்காக 
சமுதாயத்திற்காக
குடும்பத்திற்காக 
அடுத்தவருக்காக 
அடுத்த உயிரினங்களுக்காக 
இப்படி பல படிக்க வேண்டி இருந்தும் எதுவும் படிப்பதில்லை நாம்
படிப்பது எல்லாம் பணத்திற்காக என்று ஆகிவிட்டது

-சாமி.

Monday, October 24, 2022

தீபாவளி - அன்று -இன்று

பக்கத்து வீடெல்லாம் சேர்ந்து பலகாரம் செய்து பகிர்ந்து உண்ணும் பக்குவம் இருந்தது அன்று 
இன்று தானே வாங்கி தான் திண்ணியாய்

 வறுமையில் வெடி வெடிப்பதை பார்ப்பதே ஆனந்தமாய்  இருந்தது அன்று
 இப்பொழுது நாமே வெடித்தாலும் வெறும் மனதாய் 

புகைப்படம் எடுக்காமல் காட்சிகள் எல்லாம் மனதின் காணொளியாய் பதியும் அன்று 
 இன்று ஆயிரம் புகைப்படம் எடுத்தாலும் ஒன்று கூட நிற்கவில்லை மனதில்

 விலை குறைவான ரோட்டோர கடைகளின் ஆடைகளில் பெருமிதமாய் நடை இருக்கும் அன்று ஆனால் 
சில ஆயிரங்களில் எடுத்தாலும் ஆடை ஆனந்தம் தரவில்லை மனதிற்கு இன்று

 முன்பு பேசுவதற்கு ஒன்றும் இருக்காது ஆனால் மணிக்கணக்காய் கதைப்போம்
ஆனால் இன்று பேச நிறைய இருந்தும் அலைபேசியும் தொலைக்காட்சியும் பேச நாம் மௌனமாய் 

அன்று மனிதர்களின் மனம் தீபமாய் ஒளிர்ந்தது 
இப்பொழுது மனிதர்களின் பணம் மட்டுமே வெற்று வெளி ஒளியாய் ஒளிர்கிறது

 பார்ப்பதற்கு வெடிச்சரமாய் இருக்கிறோம் ஆனால் 
உணர்வது என்னவோ உதிரியாய்.

-சாமி.

Thursday, October 20, 2022

முக்கியத்துவம்

என் வேலை பளுக்கிடையேயும் வந்துப் போகிறது உன் நினைவு 
ஆனால்
 பொழுது போகாத நேரங்களில் உனக்கு வருகிறது என் நினைப்பு.

-சாமி.

Saturday, October 15, 2022

ஒரு சட்டை எடுப்பதற்காக ஆன்லைன் ஷாப்பிங்கில் தேடினேன் தேடினேன்  திருப்தி ஏற்படவில்லை

மறுநாள் ஒரு கடைக்கு சென்று பார்த்தேன் திருப்தி இல்லை

 அடுத்த கடைக்கும் சென்றேன் திருப்தி இல்லை 

பத்துக்கடை பார்த்து பதினோராவது கடையில்  ஒரு சட்டையை தேர்ந்தெடுத்தேன்

 ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் போடக்கூடிய சட்டையை தேர்ந்தெடுப்பதற்கு இவ்வளவு மெனக்கெடல் என்றால்

 வாழ்நாள் முழுவதும் நம்மோடு வருபவரை தேர்ந்தெடுப்பதற்கு எவ்வளவு மெனக்கெடல், பொறுமை , முதிர்ச்சி வேண்டும் நமக்கு.

-சாமி.

Friday, October 14, 2022

வயது ஆக ஆக

அறிவு மரமாய் ஓங்கி வளர்ந்து நிற்கிறது மனம் பூவை விட மென்மையாய் ஆகியிருக்கிறது 

அறிவு, மரம் போல் பெரும் புயலையும் எதிர்த்து நிற்கிறது 

மனம், பட்டாம்பூச்சி கால்கள் பட்டு காயம் படும் மலர் போல் காயப்படுகிறது 

மனம், அறிவுமரம்  போல் ஆகிவிடலாம் என்று நினைக்கிறது 

வேண்டாம்,  இப்பூலகில் மனிதம் கொஞ்சமேனும் இருப்பதற்கு மனித மனம் தான் காரணம் 

காயப்படுவதும் மீண்டு எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி தான் 

இருந்து விட்டுப் போகட்டும் அப்படியே
மென்மை தான் மேன்மை

 மனம் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் விட்டு விடுங்கள்.

-சாமியின் சிந்தனை 

Monday, October 10, 2022

உனது நேர நெருக்கடிக்குள்
உனது குடும்ப உறுப்பினர்கள், உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்குகிறாய் எனில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாய் என்று அர்த்தம்,

Thursday, October 6, 2022

ஆடிக்கு ஒருமுறை
அம்மாவாசைக்கு ஒருமுறை
அழைப்பவர் தொலைபேசியில் 
அழைத்தார்
நல்லா இருக்கீங்களா
வீட்டில் நல்லா இருக்காங்களா என்று கேட்டுக் கொண்டு இருக்கையில்
 டேய் உன் பாசமழை போதும்
உனக்கு என்னிடமிருந்து
நடக்க வேண்டிய வேலை என்ன
என்று முதலில் சொல்லுடா என்று
 திட்டிக்கொண்டிருந்தது மனசு.