Showing posts with label தீபாவளி அன்று -இன்று. Show all posts
Showing posts with label தீபாவளி அன்று -இன்று. Show all posts

Monday, October 24, 2022

தீபாவளி - அன்று -இன்று

பக்கத்து வீடெல்லாம் சேர்ந்து பலகாரம் செய்து பகிர்ந்து உண்ணும் பக்குவம் இருந்தது அன்று 
இன்று தானே வாங்கி தான் திண்ணியாய்

 வறுமையில் வெடி வெடிப்பதை பார்ப்பதே ஆனந்தமாய்  இருந்தது அன்று
 இப்பொழுது நாமே வெடித்தாலும் வெறும் மனதாய் 

புகைப்படம் எடுக்காமல் காட்சிகள் எல்லாம் மனதின் காணொளியாய் பதியும் அன்று 
 இன்று ஆயிரம் புகைப்படம் எடுத்தாலும் ஒன்று கூட நிற்கவில்லை மனதில்

 விலை குறைவான ரோட்டோர கடைகளின் ஆடைகளில் பெருமிதமாய் நடை இருக்கும் அன்று ஆனால் 
சில ஆயிரங்களில் எடுத்தாலும் ஆடை ஆனந்தம் தரவில்லை மனதிற்கு இன்று

 முன்பு பேசுவதற்கு ஒன்றும் இருக்காது ஆனால் மணிக்கணக்காய் கதைப்போம்
ஆனால் இன்று பேச நிறைய இருந்தும் அலைபேசியும் தொலைக்காட்சியும் பேச நாம் மௌனமாய் 

அன்று மனிதர்களின் மனம் தீபமாய் ஒளிர்ந்தது 
இப்பொழுது மனிதர்களின் பணம் மட்டுமே வெற்று வெளி ஒளியாய் ஒளிர்கிறது

 பார்ப்பதற்கு வெடிச்சரமாய் இருக்கிறோம் ஆனால் 
உணர்வது என்னவோ உதிரியாய்.

-சாமி.