Showing posts with label அறிவு மரம் மனம் மலர் காயம் வயது‌. Show all posts
Showing posts with label அறிவு மரம் மனம் மலர் காயம் வயது‌. Show all posts

Friday, October 14, 2022

வயது ஆக ஆக

அறிவு மரமாய் ஓங்கி வளர்ந்து நிற்கிறது மனம் பூவை விட மென்மையாய் ஆகியிருக்கிறது 

அறிவு, மரம் போல் பெரும் புயலையும் எதிர்த்து நிற்கிறது 

மனம், பட்டாம்பூச்சி கால்கள் பட்டு காயம் படும் மலர் போல் காயப்படுகிறது 

மனம், அறிவுமரம்  போல் ஆகிவிடலாம் என்று நினைக்கிறது 

வேண்டாம்,  இப்பூலகில் மனிதம் கொஞ்சமேனும் இருப்பதற்கு மனித மனம் தான் காரணம் 

காயப்படுவதும் மீண்டு எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி தான் 

இருந்து விட்டுப் போகட்டும் அப்படியே
மென்மை தான் மேன்மை

 மனம் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் விட்டு விடுங்கள்.

-சாமியின் சிந்தனை