தாய் மண்ணை கீரித்தான் கிட்டிப்பில்லு விளையாடினோம்
கட்டம் கட்டித் தான் சில்லுக்கோடு விளையாடினோம்
குழி நோண்டித்தான் கோழி குண்டு விளையாடினோம்
வட்டம் வரைந்து தான் பம்பரம் விளையாடினோம்
கோட்டுக்குள் கபடி விளையாடி உடம்பெல்லாம் மண் ஆனோம்
இன்று தாய் மண்ணில்
சிறு கீரலுமில்லை கட்டமும் இல்லை உடம்பில் மண்ணும் படுவதில்லை
விளையாட வேண்டிய தளிர் கரங்கள் எல்லாம் தொடுதிரைகளை மட்டும் தொட்டுக் கொண்டிருக்கின்றன.
-சாமி.
No comments:
Post a Comment