அவர்கள் எப்போதும் என்னோடே இருந்து விட மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்
அவர்கள் இடையில் எப்போதாவது என் கைகளை உதறிச் செல்வார்கள் என்பதும் எனக்குத் தெரியும்
அதற்காய் இப்போது என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் அவர்கள் கைகளை என்னால் உதறித் தள்ளிட முடியாது
என் இதயங்கள் அந்தளவு இரும்பாலானவை அல்ல
அவர்களின் இதயங்கள் எப்போது அப்படி இரும்பாலான இதயங்கள் ஆகின்றனவோ அப்போது அவர்கள் என் கைகளை உதறிச் செல்லட்டும்
பரவாயில்லை அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை
கடைசி வரை நான் இப்படியே மழைக்கு ஒதுங்கி நிற்க இடம் கொடுக்கும் ஒரு மரமாய் அவர்களின் வாழ்க்கையில் இருந்து விட்டுப் போகிறேன்
அதற்காய் நான் ஒரு போதும் அவர்களோடு கோபித்துக் கொள்ளப் போவதில்லை
சண்டையிட்டுக் கொள்ளப் போவதுமில்லை இன்னும் அவர்களை எண்ணி கண்ணீர் வடிக்கப் போவதும் இல்லை துக்கம் கொண்டாடப் போவதுமில்லை
மழைக்காக தன்னிடம் ஒதுங்கிய மனிதர்கள் தன்னை விட்டுப் போவதை எண்ணி எந்த மரமும் கண்ணீர் வடிப்பதுமில்லை துக்கம் கொண்டாடுவதுமில்லை
தன்னைத் தேடி வருபவர்களை மீண்டும் மீண்டும் அனைத்துக் கொள்கிறது அவ்வளவுதான்.
-அரூஸா ஜெவாஹிர்-✍️
No comments:
Post a Comment