Tuesday, March 31, 2020

விட்டில் பூச்சிகளுக்கு அறிவுரை

அறிவுரை, விட்டில் பூச்சிகளுக்கு வீண்,
அவை தற்காலிக வெளிச்சத்தை நம்பி, 
நிரந்தர இருட்டில்  வீழ்பவை.
சாமியின் சிந்தனை.

ஆப்(App) இல்லை, ஆப்பு

என்னுடைய நேரத்தை எல்லாம்
விழுங்கிவிட்டபின்,
நேர மேலாண்மைக்கும் ஒரு ஆஃப்(App)
இருக்கிறது வேண்டுமா என்று கேட்கிறது என் கைப்பேசி.
சாமியின் சிந்தனை.


Monday, March 30, 2020

இயற்கையின் சூத்திரம்

இந்நாட்களில் இயந்திரப்பறவை மோதி இயற்கை பறவை இறப்பு இல்லை,
இரயில்கள் மோதி யானைகள் இறப்பு இல்லை,
பேருந்துகள் மோதி மான்கள்  நாய்கள் இறப்பு இல்லை,
ஆனால் என் இனத்தின் இறப்பை மட்டும் ஏன் நிகழ்த்திக்கொண்டிருக்கிறாய் இயற்கையே, கொரானா என்ற பெயரால்.
இயற்கையின் சூத்திரம் எப்பொழுதும் புரிந்துக் கொள்ள முடியவில்லை எனக்கு.
சாமியின் சிந்தனை.

மீண்டும் விரல்கள் ........ அரட்டையில்

இனிமேல் அரட்டையை(chat) நாம் ஆரம்பிக்க கூடாது என்று மனதுக்கு இருக்கும் உறுதியில் ஒரு சதவீதம் கூட விரல்களுக்கு இல்லை. சாமியின் சிந்தனை.

Saturday, March 28, 2020

அடைப்பட்டப்பின்னும் சுதந்திரம்

நிறைய புத்தகங்கள் படிக்க முடியுது,
மகன்களுடன் நிறைய உரையாட முடியுது,
சமையலறையில் மனைவிக்கு உதவிட முடியுது,
மாணவிகளுக்கு ஆன்லைனில் கற்பிக்க முடியுது,
குடும்பத்துடன் நிறைய விளையாட முடியுது,
நண்பர்களிடம் நிறைய சேட் செய்ய முடியது,
சன்னலில் பறவைகளுக்கு உணவிட முடியுது,
மொட்டை மாடியில் இயற்கையுடன் பேச முடியுது,
நமக்கு பிடித்த இசையை கேட்க முடியுது,
நமக்கு பிடித்தவர்களிடம் காணொலியில் பேச முடியுது,
உலகத்திற்கு உள்ளிருந்தே பிரார்த்தனை செய்ய முடியுது,
எனக்கே எனக்காகவே நிறைய செய்ய முடியும்போது,
வெளியில் சென்றால் சில ஏழைகளுக்கு உணவிட முடியும் என்பதை தவிர, 
வெளியில் செல்ல முடியாததது என்பது பெரிய விசயமாக தெரியவிமல்லை எனக்கு.
சாமியின் சிந்தனை.

Tuesday, March 24, 2020

வீட்டு தனிமை

வீட்டில் உன்னை தனிமைப்படுத்திக்கொள் என்று சொல்லும் போதெல்லாம், நான் மனதில் நினைத்து சிரித்துக்கொள்வேன் " வீடு தானடா என் உலகம் என்று". சாமியின் சிந்தனை.

கொரானா தனிமைப்படுத்தல்

அம்மா செய்து தரும் சுவைமிகு நொறுக்கு தீனிகள், 
அப்பா சொல்லும் வாழ்க்கை அனுபவ கதைகள்,
சகோதர/சகோதரிகளிடம் சிறு சிறு சண்டை விளையாட்டுகள்,
அறை சுவர்கள் மட்டும் பார்க்கும் என் சிறு சிறு நடனம்,
குளியலறை சுவர் மட்டுமே கேட்கும் என் பாட்டு,
அடிக்கடி கண்ணாடி மட்டுமே தரிசிக்கும் என் புன்னகை,
அவ்வப்போது சன்னல் வழியே என் முகம் எட்டி பார்க்கும் உலகு,
எப்பொழுதாவது சிறு குறு படிப்பு,
மதிய வகுப்பறையில் வருவது போல் பெருந்தூக்கம்,
இவையெல்லாம் எனக்கு  கொரானா தனிமைப்படுத்தலிலும், என் கைப்பேசியை தள்ளிவைத்ததாலும் கிடைத்தது.
வீடு உண்மையிலேயே உலகத்தின் சொர்க்கம்.
சாமியின் சிந்தனை.