அப்பா சொல்லும் வாழ்க்கை அனுபவ கதைகள்,
சகோதர/சகோதரிகளிடம் சிறு சிறு சண்டை விளையாட்டுகள்,
அறை சுவர்கள் மட்டும் பார்க்கும் என் சிறு சிறு நடனம்,
குளியலறை சுவர் மட்டுமே கேட்கும் என் பாட்டு,
அடிக்கடி கண்ணாடி மட்டுமே தரிசிக்கும் என் புன்னகை,
அவ்வப்போது சன்னல் வழியே என் முகம் எட்டி பார்க்கும் உலகு,
எப்பொழுதாவது சிறு குறு படிப்பு,
மதிய வகுப்பறையில் வருவது போல் பெருந்தூக்கம்,
இவையெல்லாம் எனக்கு கொரானா தனிமைப்படுத்தலிலும், என் கைப்பேசியை தள்ளிவைத்ததாலும் கிடைத்தது.
வீடு உண்மையிலேயே உலகத்தின் சொர்க்கம்.
சாமியின் சிந்தனை.
No comments:
Post a Comment