Wednesday, October 18, 2023

ஒரு மாணவி
தனது பட்டப்படிப்பு சான்றிதழை பெறுவதற்காக கல்லூரிக்கு வருகிறார் 
அதை அலுவலத்தில் பெறுகிறார்
அப்பொழுது அங்கு அவருக்கு பாடம் நடத்திய ஒரு  பேராசிரியரும் அங்கு இருக்கிறார்
அந்த மாணவி அவர் அங்கு இருப்பது தெரிந்தும்
கண்டுக் கொள்ளாமல்
சான்றிதழை பெற்று செல்கிறார்.

இதுதான் இன்றைய நிலை.
மிகுந்த வருத்தத்திற்குரியது.



Sunday, October 15, 2023

காலம் தன் மறதி
கரங்களால் உன்
நினைவுகளை 
என்னிடமிருந்து
திருட முயல்கிறது 

தினம் தினம்
அதை எடுத்து
துடைத்து
நினைத்து
மகிழ்ந்து
வேறு வேறு இடத்தில் 
மறைத்து வைக்கிறேன் நான்.

-பூமி.சாமி.

Tuesday, October 10, 2023

அன்பு சொல் அல்ல, செயல்

இந்த பூமி
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது 

இந்த மலர் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த மரம் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த மழை 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த தென்றல் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

இந்த சூரியன் 
என்மீது அன்பாய்
இருப்பதாய் சொன்னதில்லை,
செய்கிறது

ஆனால் நாம் 
மட்டும் தான்.................................

-பூமி.சாமி.




Sunday, October 1, 2023

உன்னை முடித்துக் கொள்வது தீர்வல்ல, எதுவும் உன்னால் முடியும் என்பதே தீர்வு

ஆயிரம் உயிரனுவை முந்தி ஜெயிக்க முடிந்தது உன்னால்

கருவில் இருந்து உயிராய் துளிர்க்க முடிந்தது உன்னால் 

மழலையில் மீண்டும் மீண்டும் விழுந்த போதும் நடக்க முடிந்தது உன்னால்

 ஒன்றும் அறியாமல் உலகிற்கு வந்த உன்னால் படிக்க எழுத முடிகிறது இந்நாள்

பார்க்க முடிகிறது
கேட்க முடிகிறது
உணர முடிகிறது உன்னால்

 எல்லாவற்றிற்கும் மேலாக லட்சம் உயிரினங்களில் சிந்திக்க சிரிக்க முடிகிறது உன்னால் 

இவ்வளவு எல்லாம் முடிகிற உன்னால் எப்போரட்டங்களையும் கடக்க முடியும் தானே 

நேற்று மலையாய் தெரிந்தது 
இன்று மடுவாய் தெரிகிறது 
இன்று மலையாய் தெரிவது
நாளை மடுவாய் ஆகும் 

எனவே தைரியமாய் எதிர்கொள் உன்னால் முடியும் 
இல்லையெனில் 
கடந்து செல்.

-பூமி.சாமி.

Tuesday, September 12, 2023

பந்து நல்ல பந்துதான்...

பந்து திரும்பும் வேகம்
சுவரின் தரத்தை பொறுத்தது
அன்பும் அப்படித்தான்...

சில பந்து திரும்பாமலும்
போகலாம் 
மெய்நிகர் சுவராய்
இருக்கையில்.

பூமி.சாமி.

Monday, September 11, 2023

முதலாளித்துவம்

ஒரு துளியளவு தேன் ருசிக்கையில்
ஓராயிரம் மலர்களும்
சில நூறு தேனீக்களின் உழைப்பும்
கண்முன் வந்து போகின்றன.



பூமி.சாமி.

Saturday, September 9, 2023

வேஷம் வெளிப்பட

மழை பெய்து தான்
நரியின் சாயம் வெளுத்து போக
வேண்டும் என்று அவசியம் இல்லை
நரியை கொஞ்சம் கோபப்படுத்தி பாருங்கள்
வேஷம் வெளுப்பதோடு இல்லாமல்
முகமூடியும் கழண்டு போகும்.

பூமி.சாமி.