Saturday, August 19, 2023

அவ்வளவுதான் நம் அக்கறை

யோசித்து யோசித்து
'எதுக்கு நமக்கு இந்த தேவையில்லாத வேலை ' என்று 
பிறரிடம் சொல்லாமலேயே வைத்து கொள்கிறோம் 
பிறருக்கான அறிவுரைகளை.

-பூமி.சாமி.


Tuesday, August 8, 2023

எதிர்பார்ப்பு

தேன்த்துளியளவு கிடைக்கும் இடத்தில்
வானளவு எதிர்ப்பை சுமந்து 
சிறகொடிதந்து அலையும் சின்ன வண்ணத்துப்பூச்சி நான்.

-பூமி.சாமி.

Friday, August 4, 2023

சக மனிதனிடம்
அக்கறையை காட்ட
மாயா ஜால மந்திர வார்த்தைகள்
தேவையில்லை

"எப்படி இருக்கீங்க"
"சாப்பிட்டீங்களா"
என்ற சர்வ சாதாரண வார்த்தைகள்
போதும்.

பூமி.சாமி.

Saturday, July 29, 2023

அண்ணாந்து பார்க்கையில்
அன்மை மனிதனைவிட
அருகில் வந்து அமருகிறது
ஆகாயம் அன்யோன்யமாக.

- பூமி.சாமி.

Thursday, July 27, 2023

அன்பு எனும் முதலீடு

சிலரிடம் இருந்து வட்டியுடன் வருகிறது
சிலரிடம் கொடுத்தது வருகிறது
சிலரிடமிருந்து கொஞ்சமேனும்
வருகிறது
சிலரிடம் முதலீட்டுக்கே மோசமாய் முடிகிறது.

-சாமி.

Friday, July 21, 2023

தினமும்

அதே பாதை
அதே பயணம்
அதே முகங்கள்
அதே அறிவு
அதே மனப்பான்மை
அதே உணவு
அதே உணர்வு
நாட்கள் தான் புதிது புதிதாய்
நாம் அப்படியே
காலார நடப்பதற்கு
கண்ணுக்கெட்டிய தூரம்
வாய்ப்பு இருப்பினும்
செக்கு மாடாய் நாம்.

பூமி.சாமி.

Sunday, July 16, 2023

பல பத்திகளை அனுப்பி 
ஒரு வார்த்தை பதிலுக்காக
ஒரு நாள் காத்திருப்பேன்
உனக்கென்ன தெரியும்
அந்த காத்திருப்பின் வலி

இது பதிலாய் வரும் என நினைத்து
மனம் பூரிக்கும்
அல்ல,
 இது பதிலாய் வரும்
என் மனம் வேதனைகுள்ளாகும்

இப்படி ஓராயிரம் வார்த்தைகள் மனதில் வந்து செல்லும்
கடைசியில் ஒரு ஸ்மைலி பதிலாய் வரும்
ஒருவனை அவமானப்படுத்தப்
காக்க வைத்தலே போதுமாய் இருக்கிறது 

வார்த்தைக்கு பதில்
வார்த்தை தானே, 
ஸ்மைலி அல்ல.


-பூமி.சாமி.