Showing posts with label ஸ்மைலி பதில் காத்திருப்பு காயப்படுதல். Show all posts
Showing posts with label ஸ்மைலி பதில் காத்திருப்பு காயப்படுதல். Show all posts

Sunday, July 16, 2023

பல பத்திகளை அனுப்பி 
ஒரு வார்த்தை பதிலுக்காக
ஒரு நாள் காத்திருப்பேன்
உனக்கென்ன தெரியும்
அந்த காத்திருப்பின் வலி

இது பதிலாய் வரும் என நினைத்து
மனம் பூரிக்கும்
அல்ல,
 இது பதிலாய் வரும்
என் மனம் வேதனைகுள்ளாகும்

இப்படி ஓராயிரம் வார்த்தைகள் மனதில் வந்து செல்லும்
கடைசியில் ஒரு ஸ்மைலி பதிலாய் வரும்
ஒருவனை அவமானப்படுத்தப்
காக்க வைத்தலே போதுமாய் இருக்கிறது 

வார்த்தைக்கு பதில்
வார்த்தை தானே, 
ஸ்மைலி அல்ல.


-பூமி.சாமி.