Saturday, November 26, 2022

இது இரகசியம்

சில ரகசியங்களை மனதில் ஒளித்து வைத்தேன்
 யாரிடமும் சொல்லிவிடாமல் இருக்க

 சிலவற்றை மனதில் ஆழப்புதைத்தேன் கனவில் கூட உளறிவிடாமல் இருக்க

 சில ரகசியங்களை உயிரின் உள்ளுக்குள் வைத்தேன்
 உயிரோடு இருக்கும் வரை பகிர்ந்து விடாமல் இருக்க

 சில ரகசியங்களை ஆன்மாவில் அமிழ்த்தினேன் அடுத்த ஜென்மத்திற்கு எடுத்துச் செல்லலாம் என 

ரகசியத்தின் ரகசிய இடங்களை இக்கவிதையால் கவிழ்த்து வைக்கிறேன் யாருக்கும் தெரியாமல் இருக்க.

-சாமி.

Saturday, November 19, 2022

ஆண்கள் தினம்

இந்த உலகத்தால் தினம் தினம்
உதை படும் கால்பந்து உங்கள்
அருகிலேயே இருக்கிறது
உங்களுக்கு தெரியுமா?

வெளியில் எரிமலை
உள்ளுக்குள் பனிமலையை பார்த்து இருக்குறீர்களா?

கடமையை  நிறைவேற்ற தன்
காலம் முழுவதும் கரைத்த ஒரு
ஜீவனை கண்டு இருக்கீறீர்களா?

குடும்பம் என்ற ஒரு வார்த்தை அன்றி
வேறெதுவும் தெரியாத அப்பாவியை கண்டு இருக்கீறீகளா?

இவ்வுலகம் எவ்வளவு அடித்தாலும் தாங்கும்
அப்பிரானியை கண்டதுண்டா?

தன் குடும்பத்தின் சுமையை சுகமாய் 
தாங்கும் சுமைதாங்கியை தெரியுமா?

இவர்கள் யார் என்று தெரிய வேண்டுமா?

அப்பா என்றோ
அண்ணன் என்றோ
கணவன் என்றோ
அழைத்து பாருங்கள்
அருகில் வருவார்.

ஆண்களை கொண்டாடுங்கள்
ஆண்கள் தினத்தை அல்ல.

-சாமி.




சக்கர வியூகம்

எந்த வ(ப)ழக்கமும் நமக்கு
சக்கர வியூகம் தான்,
நாமும் அபிமன்யு தான்.

-சாமி.

Thursday, November 17, 2022

உங்களுக்காக கொடுக்க நிறைய இருக்கிறது என்னிடம்

உங்களுக்கு தர நம்பிக்கை என்னிடம் நிறைய இருக்கிறது
 எனக்குத்தான் என்னிடம் இல்லை

 உங்களுக்கு தர ஊக்கம் நிறைய இருக்கிறது எனக்குத்தான் என்னிடம் இல்லை

 உங்களுக்கு தர அன்பு நிறைய இருக்கிறது
 எனக்குத்தான் என்னிடம் இல்லை

 உங்களுக்கு தர செல்வம் நிறைய இருக்கிறது 
எனக்கு நானே செலவழிக்க தான் இல்லை 

உங்களை பாராட்ட வார்த்தைகள் என்னிடம் நிறைய இருக்கிறது
 என்னை பாராட்டிக் கொள்ளத்தான் வார்த்தைகள் இல்லை 

என்னிடம் இருக்கும் எல்லாம் உங்களுக்காக எண்ணும்போது 
எனக்கு தேவையானது உங்களிடமிருந்து வரும் என்ற நம்பிக்கையில் தான் ஓடுகிறது வாழ்க்கை.

-சாமி.

Wednesday, November 16, 2022

உலகமே ஒரு நாடக மேடை

 நிரந்தரமற்ற மேடையில்
 நித்தம் நித்தம்
நிரந்தரமான நடிப்பு.

-சாமி.

Sunday, November 13, 2022

வாழ தொடங்கு

இன்னும் கூட நேரம் ஆகிவிடவில்லை
இன்றே தொடங்கு

தினமும் வாசி 
காலாற நட
முடிந்தால் மூச்சிரைக்க ஓடு
 புன்னகையை அணிந்து கொள்   புதியதாய் கற்றுக் கொள்
 முழு நிலவை ரசி 
 தாய் பூமியை முத்தமிடு   இளஞ்சூரியனோடு பேசு 
 சிரிப்பை கைக்கொள்
இயற்கையோடு இயற்கையாகு
கைபேசியை கைவிடு
உடன் உள்ளோருடன் உரையாடு
துயருக்கு தோள் கொடு
ஆறுதல் கூறு 
முடிந்தவரை உதவு 
முதியவர்களுக்கு காது கொடு குழந்தையோடு குழந்தையாகு
மரத்தை வியந்து பார் 
வானத்தை நிமிர்ந்து பார் 
பறவைகளின் ஒலி கேள்
மழையில் நனைந்து பார் 
பிடித்ததை செய்

எக்கணமும் இல்லை என இக்கணத்தில் வாழ்ந்து பார் 

இன்னும் கூட நேரமாகிவிடவில்லை நீ வாழ்வதற்கு இன்றே வாழ தொடங்கு.

-சாமி.

Monday, November 7, 2022

அர்த்தமில்லாத அர்த்தமுடைய வார்த்தைகள்

"நன்றாக இருக்கிறாயா?"

" சாப்பிட்டாயா"

 என்று நான் அனுப்பும் குறுஞ்செய்தி வெட்டி வேலை என்று நீ நினைக்கக் கூடும் 
அது என் அன்பின் வெளிப்பாடு 

உணர்வின் உந்துதல் 

உறவை உறுதிப்படுத்துதல் 

வேலை கிடையே வரும் உன் நினைவின் செயல்பாடு 

உன் மீதான அக்கறையின் அத்தாட்சி

 நன்றி நவிழ்தல்

உன்னோடு நான் என்றும் இருப்பேன் என்பதன் கூப்பாடு 

இதுபோல் அர்த்தமில்லாத வார்த்தைகளால் தான் வாழ்க்கை அர்த்தம் பெறுகிறது என்பதை நீ அறிவாயா.

-சாமி.