இன்றே தொடங்கு
தினமும் வாசி
காலாற நட
முடிந்தால் மூச்சிரைக்க ஓடு
புன்னகையை அணிந்து கொள் புதியதாய் கற்றுக் கொள்
முழு நிலவை ரசி
தாய் பூமியை முத்தமிடு இளஞ்சூரியனோடு பேசு
சிரிப்பை கைக்கொள்
இயற்கையோடு இயற்கையாகு
கைபேசியை கைவிடு
உடன் உள்ளோருடன் உரையாடு
துயருக்கு தோள் கொடு
ஆறுதல் கூறு
முடிந்தவரை உதவு
முதியவர்களுக்கு காது கொடு குழந்தையோடு குழந்தையாகு
மரத்தை வியந்து பார்
வானத்தை நிமிர்ந்து பார்
பறவைகளின் ஒலி கேள்
மழையில் நனைந்து பார்
பிடித்ததை செய்
எக்கணமும் இல்லை என இக்கணத்தில் வாழ்ந்து பார்
இன்னும் கூட நேரமாகிவிடவில்லை நீ வாழ்வதற்கு இன்றே வாழ தொடங்கு.
-சாமி.