Showing posts with label நம்பிக்கை அன்பு ஊக்கம் செல்வம் பாராட்டுக்கள். Show all posts
Showing posts with label நம்பிக்கை அன்பு ஊக்கம் செல்வம் பாராட்டுக்கள். Show all posts

Thursday, November 17, 2022

உங்களுக்காக கொடுக்க நிறைய இருக்கிறது என்னிடம்

உங்களுக்கு தர நம்பிக்கை என்னிடம் நிறைய இருக்கிறது
 எனக்குத்தான் என்னிடம் இல்லை

 உங்களுக்கு தர ஊக்கம் நிறைய இருக்கிறது எனக்குத்தான் என்னிடம் இல்லை

 உங்களுக்கு தர அன்பு நிறைய இருக்கிறது
 எனக்குத்தான் என்னிடம் இல்லை

 உங்களுக்கு தர செல்வம் நிறைய இருக்கிறது 
எனக்கு நானே செலவழிக்க தான் இல்லை 

உங்களை பாராட்ட வார்த்தைகள் என்னிடம் நிறைய இருக்கிறது
 என்னை பாராட்டிக் கொள்ளத்தான் வார்த்தைகள் இல்லை 

என்னிடம் இருக்கும் எல்லாம் உங்களுக்காக எண்ணும்போது 
எனக்கு தேவையானது உங்களிடமிருந்து வரும் என்ற நம்பிக்கையில் தான் ஓடுகிறது வாழ்க்கை.

-சாமி.