Friday, July 23, 2021

நம்பிக்கை நன்றி

ஒருவனுடைய திறன்களை கண்டறிந்து
அவனுக்கு அவன்மேல் நம்பிக்கை ஏற்படுத்தி விடுங்கள், அவன் அந்நம்பிக்கை கைக்கொண்டு முன்னேறுவான் அதேநேரம்
 அவன் வாழ்நாள் முழுவதும் உங்களை மறக்க மாட்டான்.

-சாமி.

Tuesday, July 20, 2021

இளமை-இனிமை

பெட்டி கடைக்கு செல்கையில் வேல் தாத்தா தரும் இலவச பொட்டுக்கடலை வெல்லம்,

நண்பன் திருட்டு தனமாய் மரமேறி வெட்டிக் கொடுத்த நுங்கு,

காலை எழுந்தவுடன் ஓடி சென்று முதல் ஆளாய் பொருக்கி தின்னும் விளாம்பழம்,

பள்ளி சென்று திரும்புகையில் வயலில் தெரியாமல் பிடுங்கி தின்னும் கடலை,

பள்ளி செல்லும்போது நண்பர்களுடன் சேர்ந்து ரிக்சா மிதித்தது

வயிற்று வலி என்று பொய் சொல்லி பள்ளி செல்லாமல் இருந்தது,

பணம் கட்டவில்லை என்று பள்ளியில் இருந்து நண்பர்களுடன் திரும்பி நடந்து வந்தது,

உச்சி வெயிலில் வயலுக்கு ஓடிச் சென்று 
மாட்டு வண்டி ஓட்டி வந்ததது,

இரவில் நெற்க்கட்டுகளின் மேல் காவலுக்காக படுத்து உறங்கியது,

மாடுகள் பூட்டிய ஏர் கலப்பையை பிடித்து
உழவு செய்தது,

வரிசையாய் பூட்டிய மாடுகளை கொண்டு நெற்போர் அடித்தது,

பனந் தொன்னைகளில் வயல் வரப்பில் அமர்ந்து பசியாறியது,

நண்பர்களுடன் சேர்ந்து நாற்று அரிப்பது,  அண்டை வெட்டுவது, நாற்று விசுறுவது,

இப்படி எவ்வளவோ சுவையான இளமை நினைவுகள்,

இதில் ஏதாவது ஒன்றிரண்டு நினைவுகள் தினமும் என்னை அறியாமல் தூக்கி செல்கிறது மீண்டும் இளமைக்கு. 

-சாமி.

Saturday, July 17, 2021

நன்றி சொல்வதற்கு

நமக்கு உதவி தேவைப்படும்போது 
நம் கண்முன் வரும் முகம்,
பெரும்பாலும், உதவியின் பொருட்டு பலன் ஏற்படும்போது வருவதில்லை.

-சாமி.

காலம்

கடந்தகால கசப்புகளையும் வலிகளையும் மறக்க வைக்கும் காலம் எனும் மாமருந்து, சில நேரங்களில்
நல்லவைகளையும் நல்லவர்களையும் கூட மறக்க செய்துவிடுகிறது.

-சாமி.

Tuesday, July 13, 2021

ஏனெனில் நமது பயணம் குறைவு.

* நம் பயணம் குறுகியது *

* ஒரு வயதான பெண் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார். அடுத்த நிறுத்தத்தில், ஒரு வலிமையான இளம் பெண் மேலே ஏறி, வயதான பெண்ணின் அருகில் அமர்ந்து, அவள் லக்கேஜை வைத்து நெருக்கடி கொடுத்தாள். *

* வயதான பெண் அமைதியாக இருப்பதைக் கண்டதும்,  பெண் தன் பைகளால் அடித்தபோது ஏன் புகார் கொடுக்கவில்லை என்று நடத்துநர் கேட்டார். *

* வயதான பெண் ஒரு புன்னகையுடன் பதிலளித்தார்: "நமது பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதால், முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவோ ​​அல்லது அற்பமான ஒன்றைப் பற்றி விவாதிக்கவோ தேவையில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகிறேன் என்று சொன்னார் ." *

* இந்த பதில் தங்க எழுத்துக்களால் எழுதப்பட வேண்டியது: "இவ்வளவு அற்பமான ஒன்றைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நாம்  ஒன்றாக பயணம் செய்வது மிகவும் குறுகியகாலம்மட்டுமே." *

* இந்த உலகில் நம்முடைய வாழும் நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். பயனற்ற வாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவற்றால் அதை இருட்டடிப்பது நேரத்தையும் சக்தியையும் கேலிக்குரியதாக்கும். *

* யாராவது உங்கள் இதயத்தை உடைத்திருக்கிறார்களா? அமைதியாய் இருங்கள். நம் பயணம் மிகக் குறைவு. *

* யாராவது உங்களை காட்டிக் கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா அல்லது அவமானப்படுத்தினார்களா? ஓய்வெடுங்கள். மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். நம் பயணம் மிகக் குறைவு. *

* யாராவது உங்களை காரணமின்றி அவமதித்தார்களா?  அதை புறக்கணிக்கவும்.நம் பயணம் மிகக் குறைவு. *

* உங்களுக்குப் பிடிக்காத  பக்கத்து வீட்டுக்காரர் உங்களைப் பற்றிய கருத்து தெரிவித்தாரா? ஆழ்ந்த மூச்சு விடுங்கள். அவரை / அவளை புறக்கணிக்கவும். மன்னித்து மறந்து விடுங்கள். நம் பயணம் மிகக் குறைவு. *

* யாராவது உங்களை எந்த பிரச்சனையில் கொண்டு வந்தாலும், நம் பயணம் மிகவும் குறுகியதாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். *

* நமது பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. எந்த நிறுத்தத்தில் அது முடியும் என்பது யாருக்கும் தெரியாது.  பயணம் குறுகியது. *

* நண்பர்களையும் குடும்பத்தினரையும் பாராட்டுவோம். *
* நாம் மரியாதைக்குரியவர்களாகவும், கனிவானவர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்போம். *
*  நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் நிறைந்திருப்போம்

* உங்கள் புன்னகையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் நமது பயணம் மிகவும் குறுகியது ... *

_ ஆசிரியர் தெரியவில்லை ஒரு சிந்தனையைத் தூண்டும் செய்தி

படித்ததில் பிடித்தது.

Monday, July 12, 2021

முதலில்நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்ப்போம்.

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

 கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால்
 அதுல பதிலை எழுதுங்க.

 ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது.

ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது.

 உங்களால முடியலேன்னா
 அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க.

அதுவும் முடியலியா….

 படிச்சிகிட்டே போங்க….

ரெடியா.....

1.
உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..

2.
2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

3.
சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள்
ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க….

4.
நோபல் பரிசு வாங்கிய
 உங்களுக்கு தெரிந்த
ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க…..

5.
கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய
ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…

உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா?

 இல்லே தானே?

நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ
 அல்லது
தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை.

 இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல.

அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள்.

 மிகப் பெரிய சாதனையாளர்கள்.

ஆனால்……?

 கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன.

சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன.

விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.

இப்பொழுது இன்னொரு ஐந்து கேள்விகள் கேட்கிறேன்

பதில் உடனே கி்டைக்குதா என்று பாருங்கள்

1)
உங்கள் பள்ளிக் காலத்தில்
மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்கள் பெயரை சொல்லுங்கள்.

2)
உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…

3)
உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…

4)
உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை கூறுங்கள்….

5)
நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ
அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…

சில மணித்துளிகளில்
விடைகளை
பட்டென்று எழுதி குவித்திருப்பீர்களே.......

இதிலிருந்து என்ன தெரிகிறது?

உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்
 பணக்காரர்களோ,
 புகழ்பெற்றவர்களோ
அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல.

உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே.

மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.

பணம் பட்டம் பதவி
இவற்றின் மூலம் பெறும் புகழோ
 வெற்றியோ நிலையானதல்ல.

 பிறருக்கு உதவி செய்து,
பிறர் மீது அக்கறை கொண்டு
ஒருவர் பெறும் புகழே
வெற்றியே நிலையானது.

உங்கள் மாணவர்கள்
 நண்பர்கள்
 மற்றும்
 உறவினர்கள்

 சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு
 அவர்கள் ஒருவராவது
 விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்…

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.

எனவே

அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால்

எப்போதும் நல்லதே நினையுங்கள்.
எல்லோருக்கும்
 நல்லதையே சொல்லுங்கள்.
 நல்லதையே செய்யுங்கள்.

கோவிலுக்கு போய் விழுந்து கும்பிட்டு
கடவுள் மனசுல இடம்பிடிக்கிறது இருக்கட்டும்.

முதலில்
நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்ப்போம்.
❤️❤️❤️

கடவுள் தானா தன் மனசுல இடம் கொடுப்பார்.
✿ பிடிச்சா லைக் பண்ணுங்க...!
   ✿ ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்க...!
   ✿ சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்க...!

Sunday, July 11, 2021

வீழ்வேன் என்று நினைத்தாயோ

பேரிருளை பிளந்து வரும் மின்மினி நான்

கல்தரையை உடைத்து துளிர் விடும் ஒற்றை விதை நான்

இரைச்சலை  தாண்டி கானம் பாடும் கருங்குயில் நான்

அதிகாலையில் ஒற்றை ஆளாய் ஒளி வீசும் வெள்ளி விண்மீன் நான்

புயலை எதிர்த்து போராடும் நாணல் நான்

நீர் வீழ்கையில் மேலெழும் நீர் சாரல் நான்

காரிருளை பிளக்கும் மின்னல் நான்

லட்சம் உயிர் அணுக்களில் முந்தி முதல் ஆளாய் வந்தவன் நான்.

-சாமி.