Tuesday, March 31, 2020

ஆப்(App) இல்லை, ஆப்பு

என்னுடைய நேரத்தை எல்லாம்
விழுங்கிவிட்டபின்,
நேர மேலாண்மைக்கும் ஒரு ஆஃப்(App)
இருக்கிறது வேண்டுமா என்று கேட்கிறது என் கைப்பேசி.
சாமியின் சிந்தனை.


Monday, March 30, 2020

இயற்கையின் சூத்திரம்

இந்நாட்களில் இயந்திரப்பறவை மோதி இயற்கை பறவை இறப்பு இல்லை,
இரயில்கள் மோதி யானைகள் இறப்பு இல்லை,
பேருந்துகள் மோதி மான்கள்  நாய்கள் இறப்பு இல்லை,
ஆனால் என் இனத்தின் இறப்பை மட்டும் ஏன் நிகழ்த்திக்கொண்டிருக்கிறாய் இயற்கையே, கொரானா என்ற பெயரால்.
இயற்கையின் சூத்திரம் எப்பொழுதும் புரிந்துக் கொள்ள முடியவில்லை எனக்கு.
சாமியின் சிந்தனை.

மீண்டும் விரல்கள் ........ அரட்டையில்

இனிமேல் அரட்டையை(chat) நாம் ஆரம்பிக்க கூடாது என்று மனதுக்கு இருக்கும் உறுதியில் ஒரு சதவீதம் கூட விரல்களுக்கு இல்லை. சாமியின் சிந்தனை.

Saturday, March 28, 2020

அடைப்பட்டப்பின்னும் சுதந்திரம்

நிறைய புத்தகங்கள் படிக்க முடியுது,
மகன்களுடன் நிறைய உரையாட முடியுது,
சமையலறையில் மனைவிக்கு உதவிட முடியுது,
மாணவிகளுக்கு ஆன்லைனில் கற்பிக்க முடியுது,
குடும்பத்துடன் நிறைய விளையாட முடியுது,
நண்பர்களிடம் நிறைய சேட் செய்ய முடியது,
சன்னலில் பறவைகளுக்கு உணவிட முடியுது,
மொட்டை மாடியில் இயற்கையுடன் பேச முடியுது,
நமக்கு பிடித்த இசையை கேட்க முடியுது,
நமக்கு பிடித்தவர்களிடம் காணொலியில் பேச முடியுது,
உலகத்திற்கு உள்ளிருந்தே பிரார்த்தனை செய்ய முடியுது,
எனக்கே எனக்காகவே நிறைய செய்ய முடியும்போது,
வெளியில் சென்றால் சில ஏழைகளுக்கு உணவிட முடியும் என்பதை தவிர, 
வெளியில் செல்ல முடியாததது என்பது பெரிய விசயமாக தெரியவிமல்லை எனக்கு.
சாமியின் சிந்தனை.

Tuesday, March 24, 2020

வீட்டு தனிமை

வீட்டில் உன்னை தனிமைப்படுத்திக்கொள் என்று சொல்லும் போதெல்லாம், நான் மனதில் நினைத்து சிரித்துக்கொள்வேன் " வீடு தானடா என் உலகம் என்று". சாமியின் சிந்தனை.

கொரானா தனிமைப்படுத்தல்

அம்மா செய்து தரும் சுவைமிகு நொறுக்கு தீனிகள், 
அப்பா சொல்லும் வாழ்க்கை அனுபவ கதைகள்,
சகோதர/சகோதரிகளிடம் சிறு சிறு சண்டை விளையாட்டுகள்,
அறை சுவர்கள் மட்டும் பார்க்கும் என் சிறு சிறு நடனம்,
குளியலறை சுவர் மட்டுமே கேட்கும் என் பாட்டு,
அடிக்கடி கண்ணாடி மட்டுமே தரிசிக்கும் என் புன்னகை,
அவ்வப்போது சன்னல் வழியே என் முகம் எட்டி பார்க்கும் உலகு,
எப்பொழுதாவது சிறு குறு படிப்பு,
மதிய வகுப்பறையில் வருவது போல் பெருந்தூக்கம்,
இவையெல்லாம் எனக்கு  கொரானா தனிமைப்படுத்தலிலும், என் கைப்பேசியை தள்ளிவைத்ததாலும் கிடைத்தது.
வீடு உண்மையிலேயே உலகத்தின் சொர்க்கம்.
சாமியின் சிந்தனை.

Sunday, March 22, 2020

அடங்கி கிடக்கின்றது உலகம்

*அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்*

சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது, மழை அதன் போக்கில் பெய்கின்றது, வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை....

மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன,முயல்கள் விளையாடுகின்றது,மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌...

தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை...

மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது...

முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்...

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை, உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றான் என்னன்னெவோ உலக நியதி என்றான்...

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக , நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்...

ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்...

ஓடினான், பறந்தான் உயர்ந்தான் முடிந்த மட்டும் சுற்றினான், கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான்...

ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி கொடுத்தது பாடம்...

முடங்கி கிடக்கின்றான் மனிதன் , கண்ணில் தெரிகின்றது பயம், நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்...

பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் கூட உள்ள பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என விம்முகின்றான்....

மண்புழுவுக்கும் கூட நான் சமமானவன் பலமானவன் இல்லையா என்பதில் அழுகின்றான்....

முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தை விட கீழானவனா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது...

மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை துடைக்கின்றான்...

காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும் நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் பாஷையில் பேசுகின்றன‌.

ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம் செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது.

கொரோனாவுக்காக மனிதன் கைகழுவி கொண்டிருப்பதை பார்த்து கொண்டு இடுப்பினை சொறிகின்றது குரங்கு, மருத்துவமனையில் அவன் அடைபட்டு கிடப்பதை பார்த்துகொண்டே இருக்கின்றது பண்ணையின் கோழி...

நிறுத்திவைக்கபட்ட விமானங்களை பார்த்தபடி எக்காள சிரிப்பு சிரித்து பறக்கின்றது பருந்து, நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலை கண்டு சிரிக்கின்றது மீன் இனம்..‌.

தெய்வங்கள் கூட தனக்காக கதவடைத்துவிட்ட நிலையில் காகங்களும் புறாக்களும் ஆலய கோபுரத்தில் அமர்ந்திருப்பதை சிரிப்புடன் பார்க்கின்றான் மனிதன்..‌.

கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க மனிதனை வெளிதள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு...

அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம்., கொஞ்சி கேட்கின்றது சிட்டு, கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்...

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில், வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கு பயமில்லை என்கின்றது கழுகு...

தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டோடு முடங்கி கிடக்கின்றான் மனிதன். தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..

அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்.

Forwarded...edited.