Saturday, January 19, 2019

Beautiful 10 lines

*Beautiful 10 lines*

```✒SOMEONE HAS WRITTEN THESE 10 BEAUTIFUL LINES. READ and TRY  to UNDERSTAND the DEEPER MEANING of THEM.

📎 1). PRAYER is not a "spare wheel" that YOU PULL OUT when IN trouble, but it is a "STEERING WHEEL" that DIRECT the RIGHT PATH THROUGHOUT LIFE.

📎2). Why is a CAR'S WINDSHIELD so LARGE & the REAR VIEW MIRROR so small? BECAUSE our PAST is NOT as IMPORTANT as OUR FUTURE. So, LOOK AHEAD and MOVE ON.

📎3). FRIENDSHIP is like a BOOK. It takes a FEW SECONDS to BURN, but it TAKES YEARS to WRITE.

📎4). All THINGS in LIFE are TEMPORARY. If they are GOING WELL, ENJOY them, they WILL NOT LAST FOREVER. If they are going wrong, don't WORRY, THEY CAN'T LAST LONG EITHER.

📎5). Old FRIENDS are GOLD! NEW friends are DIAMONDS! If you GET a DIAMOND, DON'T FORGET the GOLD! To HOLD a DIAMOND, you ALWAYS NEED a BASE of GOLD!

📎6). Often when WE LOSE HOPE and THINK this is the END, GOD SMILES from ABOVE and SAYS, "RELAX, SWEETHEART; it's JUST a BEND, NOT THE END!"

📎7). When GOD SOLVES your PROBLEMS, you HAVE FAITH in HIS ABILITIES; when GOD DOESN'T SOLVE YOUR PROBLEMS, HE has FAITH in YOUR ABILITIES.

📎8). A BLIND PERSON asked GOD: "CAN THERE be ANYTHING WORSE THAN LOSING EYE SIGHT?" HE REPLIED: "YES, LOSING YOUR VISION!"

📎9). When   YOU PRAY for OTHERS, GOD LISTEN to YOU and BLESSES THEM, and SOMETIMES, when you are SAFE and HAPPY, REMEMBER that SOMEONE has PRAYED for YOU. 

📎10). WORRYING does NOT TAKE AWAY TOMORROW'S TROUBLES; IT TAKES AWAY today's PEACE. 

If you ENJOYED this, please COPY it and PASS it to OTHERS. It may BRIGHTEN SOMEONE else's DAY, too.....```

Tuesday, January 15, 2019

அலைபேசி

மனிதனின் கடிவாளம் அலைபேசி. சரிகவி.

மனிதன்

நிலையற்றவற்றை நிலையானது என நினைத்து ஏமாந்து போவதே மனிதனின் நிலையான குணம். சரிகவி.

Sunday, January 6, 2019

வங்காரி மத்தாயி

நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்?

அது 2004 ஆம் ஆண்டு. அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா. அந்த ஆண்டு பரிசை பெற்றவர்  வங்காரி மாத்தாய். அமைதிக்கான நோபல் பரிசு பெரும் முதல் கறுப்பின பெண் அவர். கென்யாவில் பிறந்தவர். பசுமை இயக்கத்தை தோற்றுவித்தவர், கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க பகுதிகளில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்ணும் அவரே.

பரிசை பெற்ற அவரிடம், நீங்கள் யார் என்ற கேள்வி வைக்கப்பட்டது. சாதாரண நபர்களாக இருந்திருந்தால் தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டிருப்பார்கள். ஆனால் அவர் வங்காரி மாத்தாய். நான் யார் என்பதற்கு  ஒரு கதை சொல்கிறேன் என்று தொடங்கினார்.
"காட்டில் தீப்பிடித்து எரிகிறது, அப்போது ஹம்மிங் bird (ரீங்காரச்சிட்டு) ஒன்று நீர்நிலைக்கு சென்று நீரில் மூழ்கி தண்ணீரை அள்ளிச் சென்று தீயை அணைக்க முயல்கிறது. பெரிய தும்பிக்கை இருக்கும் யானை உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் அமைதியாக இருக்க, இந்த சிறிய பறவை மட்டும் பறந்து பறந்து  நீர்த்துளிகளை கொண்டுசென்றது. மற்ற மிருகங்கள் இந்த பறவையை பார்த்து சிறிய அலகை கொண்ட நீ என்ன செய்துவிடமுடியும் என்று கேட்கின்றன. அதற்கு பதிலளித்த ஹம்மிங் bird, "என்னால் எதை சிறப்பாக செய்யமுடியுமோ, அதை என்னால் முடிந்த அளவிற்கு செய்கிறேன் என்றது". இந்த கதையை சொல்லிமுடித்து வங்காரி மாத்தாய் சொன்னார், "நான் ஹம்மிங் bird" ஆக இருக்க விரும்புகிறேன் என்று.

வாருங்கள், நாம் எல்லோரும் ஹம்மிங் bird ஆக மாறுவோம். வங்காரி மத்தாயின் கைபிடித்து ஆபிரிக்க காடுகளில் உலாவ...

Tuesday, January 1, 2019

ஒப்பீடு பற்றி ஓஷோ

ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை உடையவன்.மற்றவர்களோடு ஒப்பிட முடியாது.

ஒப்பீடு அறிவீனம்.இங்கே யாரும் உயர்ந்தவரும் கிடையாது;தாழ்ந்தவரும் கிடையாது.

அவரவர் தன்மையில் அவரவர் உயர்ந்தவரே.

ரோஜாவும் தாமரையும் வித்தியாசமானது.அதனதன் அழகில் அது தனித்தன்மை உடையது.அவைகள் ஒப்பிட்டுப் பார்த்து கொள்வது இல்லை.

ஆனால் மனிதன் மாத்திரம் இதே பிழைப்பாக இருக்கிறான்.

மனித துன்பத்திற்கு இதுவே அடிப்படைக் காரணம்.

#ஓஷோ

ஓஷோ

தியானம் என்பது ஒரு முறிப்பு (jump).

மனதைப் பயன் படுத்திக் கொண்டே இருந்தால் மனதுக்கு அப்பால் ஒரு போதும் போகவே முடியாது.

அதிலிருந்து நீங்கள் முறித்துக் கொள்ள வேண்டும்.அந்த முறிப்பே
தியானம்.இது பகுத்தறிவுக்கும், தர்க்கத்திற்கும் அப்பாற்பட்டது.

யோசிக்காது முயன்று பாருங்கள்.

கண்களை மூடுங்கள்.எண்ணம் தோன்றுகிறது.நுட்பமாகப் பாருங்கள்.அதைப்பற்றி சிந்திக்காதீர்கள்.வெறுமனே பாருங்கள்.விரைவில் அதுவாகவே போய்விடும்.

மற்றொரு எண்ணம் அந்த இடத்துக்கு வருகிறது.இந்த எண்ண ஓட்டத்தை சலனமில்லாமல் பார்த்துக்கொண்டே இருங்கள்.

யோசனையின்றி பார்த்துக் கொண்டிருக்க முடிந்தால்;சாட்சியாய் இருப்பது பற்றி கொஞ்சம் அறிந்து கொண்டீர்கள்.

சிந்தித்தல் மனதின் செயல்பாடு.சாட்சியாய் இருத்தல் மனதின் செயல் கடந்த தன்மை.

மனதை முறித்துக் கொண்டு; மனம் செயல்படாது இருக்கும் போது நீங்கள் சாட்சியாக இருக்கிறீர்கள்.

அப்போது தான் நீங்கள் விழிப்புணர்வில் இருக்கின்றீர்கள்.

#ஓஷோ

Resolutions

1.Try to Read atleast one hour, 2.Write atleast ten lines as own, 3.Try to reduce cellphone usage, 4.Reduce expectations from others.5.Take healthy diet like fresh fruits and vegetables.6. spend more time with human and nature.