மனிதனின் கடிவாளம் அலைபேசி. சரிகவி.
Tuesday, January 15, 2019
Sunday, January 6, 2019
வங்காரி மத்தாயி
நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்?
அது 2004 ஆம் ஆண்டு. அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா. அந்த ஆண்டு பரிசை பெற்றவர் வங்காரி மாத்தாய். அமைதிக்கான நோபல் பரிசு பெரும் முதல் கறுப்பின பெண் அவர். கென்யாவில் பிறந்தவர். பசுமை இயக்கத்தை தோற்றுவித்தவர், கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க பகுதிகளில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்ணும் அவரே.
பரிசை பெற்ற அவரிடம், நீங்கள் யார் என்ற கேள்வி வைக்கப்பட்டது. சாதாரண நபர்களாக இருந்திருந்தால் தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டிருப்பார்கள். ஆனால் அவர் வங்காரி மாத்தாய். நான் யார் என்பதற்கு ஒரு கதை சொல்கிறேன் என்று தொடங்கினார்.
"காட்டில் தீப்பிடித்து எரிகிறது, அப்போது ஹம்மிங் bird (ரீங்காரச்சிட்டு) ஒன்று நீர்நிலைக்கு சென்று நீரில் மூழ்கி தண்ணீரை அள்ளிச் சென்று தீயை அணைக்க முயல்கிறது. பெரிய தும்பிக்கை இருக்கும் யானை உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் அமைதியாக இருக்க, இந்த சிறிய பறவை மட்டும் பறந்து பறந்து நீர்த்துளிகளை கொண்டுசென்றது. மற்ற மிருகங்கள் இந்த பறவையை பார்த்து சிறிய அலகை கொண்ட நீ என்ன செய்துவிடமுடியும் என்று கேட்கின்றன. அதற்கு பதிலளித்த ஹம்மிங் bird, "என்னால் எதை சிறப்பாக செய்யமுடியுமோ, அதை என்னால் முடிந்த அளவிற்கு செய்கிறேன் என்றது". இந்த கதையை சொல்லிமுடித்து வங்காரி மாத்தாய் சொன்னார், "நான் ஹம்மிங் bird" ஆக இருக்க விரும்புகிறேன் என்று.
வாருங்கள், நாம் எல்லோரும் ஹம்மிங் bird ஆக மாறுவோம். வங்காரி மத்தாயின் கைபிடித்து ஆபிரிக்க காடுகளில் உலாவ...
Tuesday, January 1, 2019
ஒப்பீடு பற்றி ஓஷோ
ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை உடையவன்.மற்றவர்களோடு ஒப்பிட முடியாது.
ஒப்பீடு அறிவீனம்.இங்கே யாரும் உயர்ந்தவரும் கிடையாது;தாழ்ந்தவரும் கிடையாது.
அவரவர் தன்மையில் அவரவர் உயர்ந்தவரே.
ரோஜாவும் தாமரையும் வித்தியாசமானது.அதனதன் அழகில் அது தனித்தன்மை உடையது.அவைகள் ஒப்பிட்டுப் பார்த்து கொள்வது இல்லை.
ஆனால் மனிதன் மாத்திரம் இதே பிழைப்பாக இருக்கிறான்.
மனித துன்பத்திற்கு இதுவே அடிப்படைக் காரணம்.
#ஓஷோ
ஓஷோ
தியானம் என்பது ஒரு முறிப்பு (jump).
மனதைப் பயன் படுத்திக் கொண்டே இருந்தால் மனதுக்கு அப்பால் ஒரு போதும் போகவே முடியாது.
அதிலிருந்து நீங்கள் முறித்துக் கொள்ள வேண்டும்.அந்த முறிப்பே
தியானம்.இது பகுத்தறிவுக்கும், தர்க்கத்திற்கும் அப்பாற்பட்டது.
யோசிக்காது முயன்று பாருங்கள்.
கண்களை மூடுங்கள்.எண்ணம் தோன்றுகிறது.நுட்பமாகப் பாருங்கள்.அதைப்பற்றி சிந்திக்காதீர்கள்.வெறுமனே பாருங்கள்.விரைவில் அதுவாகவே போய்விடும்.
மற்றொரு எண்ணம் அந்த இடத்துக்கு வருகிறது.இந்த எண்ண ஓட்டத்தை சலனமில்லாமல் பார்த்துக்கொண்டே இருங்கள்.
யோசனையின்றி பார்த்துக் கொண்டிருக்க முடிந்தால்;சாட்சியாய் இருப்பது பற்றி கொஞ்சம் அறிந்து கொண்டீர்கள்.
சிந்தித்தல் மனதின் செயல்பாடு.சாட்சியாய் இருத்தல் மனதின் செயல் கடந்த தன்மை.
மனதை முறித்துக் கொண்டு; மனம் செயல்படாது இருக்கும் போது நீங்கள் சாட்சியாக இருக்கிறீர்கள்.
அப்போது தான் நீங்கள் விழிப்புணர்வில் இருக்கின்றீர்கள்.
#ஓஷோ
Resolutions
1.Try to Read atleast one hour, 2.Write atleast ten lines as own, 3.Try to reduce cellphone usage, 4.Reduce expectations from others.5.Take healthy diet like fresh fruits and vegetables.6. spend more time with human and nature.
Monday, December 31, 2018
புத்தாண்டு வாழ்த்துக்கள்
மீண்டும் ஒரு 365 நாட்கள் உங்கள் கைகளில் கொடுக்கப்பட இருக்கிறது, ஒவ்வொரு நாளும் ஆக்கப்பூர்வமாக, பயனுள்ளதாக, அன்பு பாராட்டுவதாக, உதவி செய்வதாக இருக்கட்டும். கடந்த வருடத்தில் பெற்றவைகளை பாடமாகவும், நல்ல இலக்குகளை கொண்டு, ஒவ்வொரு நிகழ்கால தருணங்களையும் திட்டமிட்டு வாழ்வோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.💐💐💐. இரா.ரெங்கசாமி மற்றும் குடும்பத்தினர்.