Tuesday, April 30, 2024

எல்லா செயல்களுக்கும்
அர்த்தமும் பயணும் இருக்க 
 வேண்டிய அவசியமில்லை

வாழ்க்கையை அர்த்தப்படுத்த
அர்த்தமில்லா சில செயல்களை
மனதின் பொருட்டு செய்ய வேண்டி இருக்கிறது.

பூமி.சாமி.

Saturday, April 20, 2024

நட்பாகையில்
நீ அடிஅடியாய் முன் வர
நானும்  அங்குலம் அங்குலாமாய் நெருங்கி வந்தேன் 

பிரிகையில்
நீ  ஒரு கிலோமீட்டர் பின் சென்றபின்னும்
ஒரு அங்குலம் கூட பின் நகர முடியாமல்
நரகத்தில் நிற்கிறேன் நான்.

பூமி.சாமி.

வாழ்க்கை

மின்தூக்கி சுலபமாய்
வேகமாய் உயர்த்துகிறது
அதைவிட வேகத்தில் கீழ்
இறக்கி விடுகிறது

படிகளில் ஏறி செல்லுதல்
கடினம்தான்.........

பூமி.சாமி.

Sunday, April 14, 2024

உன்னை எனக்கு ' அவ்வளவு' பிடிக்கும்,
என்னை உனக்கு ' எவ்வளவு ' பிடிக்கும்,
என்ற கவலை எனக்கு இல்லை
அது 'எவ்வளவு' இருந்தாலும்
என்னுடைய ' அவ்வளவு ' மாறப்போவதில்லை,
நீ நீயாக இருக்க அனுமதிப்பதும்
அந்த ' அவ்வளவில் ' அடக்கம்.

பூமி.சாமி.
அனைவருக்கும்
          இனிய
தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துகள்.

Monday, April 8, 2024

சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்
சொல்ல நினைத்தது 
சொல்ல வேண்டாம் என்று
தோன்றக்கூடும்.

பூமி. சாமி.
இருவருக்கிடையே
எல்லாம் ஒரு வழிபாதையாகி
போனபின்
புரிதல் எப்படி புலப்படும்.

பூமி.சாமி.