Monday, September 19, 2022

அந்த பருத்தி மூட்டை கூடோன்லேயே இருந்திருக்கலாம்

உனக்கு குறுஞ்செய்தி அனுப்ப நினைத்து, எழுதுகிறேன் 
பிறகு சிலவற்றை அழிக்கிறேன்
 மேலும் சிலவற்றை சேர்க்கிறேன்
 பிறகு சிலவற்றை நீக்குகிறேன்
 இது நடந்து கொண்டே இருக்கிறது கடைசியாய் முழுவதும் அழித்து 
எதுவுமே அனுப்பாமல் வைத்து விடுகிறேன் கைபேசியை.

-சாமி.

Sunday, September 11, 2022

கடவுளை நேரில் தரிசித்து இருக்கிறீர்களா?

எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது

அவருடன் இருக்கையில் என்னை மிக அன்பாக பார்த்துக் கொண்டார் 

என்னை கை பிடித்து நடக்க வைத்தார்
நா பழக்கி பேச வைத்தார்

நன்மை தீமைகளை சொல்லி கொடுத்தார் 

வான் இடிந்து வீழ்ந்தாலும் அச்சம் படாதே என்றார்

கருணை மழை பொழிந்தார்
தீயவைகள் அண்டாமல் பார்த்துக் கொண்டார்

கண்ணை இமை போல் காத்தார்
அறிவுரைகள் கூறினார் 
அன்பை பொழிந்தார் 
கண்டிக்கவும் செய்தார்
சிரிக்க வைத்தார்
அழவும் வைத்தார்

மொத்தத்தில் தியாகத்தின் மறு உருவமாய் இருந்தார்

என்ன செய்தாலும் தன் கரங்களில் எப்பொழுதும் என்னை அணைத்தே இருந்தார் 

எனக்கும். அவர் சென்றபின் தான் தெரிந்தது அவர் தான் கடவுள் என்று. 

அம்மா.


-சாமி.

Friday, September 9, 2022

பாராட்டு

பாராட்டுக்கு மனித மனம்
எப்பொழுதும் ஏங்கவே செய்யும்
மனிதர்களிடம் பிடித்த நல்ல விஷயங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனம் உவந்து பாராட்டுங்கள். அப்பாராட்டுகள் அவரை மேலும் வளர்த்து கொள்ளவும் அதை மேலும் பலருக்கு கொண்டு சேர்க்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

மனம் -மரம்

சில மரங்களை
தொட்டு பார்க்கிறேன் 
சிலவற்றை வருடி செல்கிறேன்
சில மரங்களை கட்டி அணைக்கிறேன் 
சிலவற்றை காதல் கசிந்துருகி
பார்த்து திளைக்கிறேன்
சில மரங்களை முத்தமிடுகிறேன்
நினைக்கும் போதெல்லாம்
என் மனதை நிறைத்து விடுகிறது மரம்.
ஏன் இந்த பந்தம் இன்று வரை புரியவில்லை எனக்கு.

-சாமி.

Wednesday, September 7, 2022

நீ தோல்வி அடையும் போதெல்லாம்
நான் உன்னோடு இருப்பேன்,

நீ வெற்றி அடையும் போது
அதை யாருடனும் கொண்டாடலாம்,
அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

-சாமி.


கறிப்வேப்பிலையை
முந்தி விடுகின்றனர் சில மனிதர்கள்
தூக்கி எறிவதில்.

-சாமி.

Tuesday, September 6, 2022

படித்ததில் பிடித்தது ஒரு_இன்ச்_ஈகோ#ஒரு_இன்ச்_கோபம்

#ஒரு_இன்ச்_ஈகோ

#ஒரு_இன்ச்_கோபம் 

                ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட..

 சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான். அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்..

 அற்புதம் என்றார் மேலாளர்......

இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை. உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்.
                முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி..

 காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது..

காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்..

இளைஞன் சோர்ந்தான்.. 
தன்னையே நொந்து கொண்டான்..

ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்..

வாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்.. 
பின்னர் சரிசெய்யலாம் என்றார் மேலாளர்..

காரை கஷ்டப்பட்டு இருக்கும் வாயில் வழியே எடுத்து செல்லலாம்....
மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. 
அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம் என்றார் பெயிண்டர்..

முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. 
புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை..

 அனைவருக்கும் குழப்பம்.. 
முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும்.....

இவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை வெளியே கொண்டு செல்ல முடியலையே.....

 இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி முதலாளியிடம் "ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?" என்றார்.....

அனைவருக்கும் ஆச்சரியம்.. 
இந்த கிழவன் என்ன சொல்லப்போகிறான் என்று......

 ம்..ம்..ம்.. சொல்லு..... சொல்லு......

வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்.. காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக்கொள்ளலாம்..

அடடே.. எவ்வளவு சுலபமான வழி.. 
      எந்த சேதமும் இன்றி..

வாழ்க்கை மிக சுலபமானது.. 
வாழ்வது ஒரு முறை.. 
அதை அனுபவியுங்கள்..

ஒரு இன்ச் உயரம் போலவே ஒரு இன்ச் ஈகோ & ஒரு இன்ச் கோபம் என எல்லாவற்றையும் டயரிலிருந்து காற்றை கழட்டி விடுவதைப்போல் கழட்டி எறியலாம் தானே...
          
         ஒருவரின் தோற்றம் மற்றும் நிலையை வைத்து அவர் சொல்ல வரும் நல்ல விசயங்களை இழந்து விடாதீர்கள். அது எங்கேனும் உங்களுக்கு வாழ்க்கையில் உதவலாம். அடுத்தவர் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்கள்.. அது உங்கள் எண்ணங்கள் உயர வழி வகுக்கும்...

வாழ்க்கை மிக அழகானது... அதில் கோபம் குரோதம் பிடிவாதம் போன்றவற்றால் நிரப்பி அதன் பொலிவைக் கெடுத்து இன்னலில் சிக்கி தவிக்க வேண்டாமே...  

செல்லும் வழி எங்கும் அன்பினை விதைப்போம்....
சொல்லும் மொழியதனில் அன்பினை வளர்ப்போம்.....