Saturday, January 10, 2026

முகமூடிகள் அழகாய் தான் இருக்கும் ஏனெனில் அது அப்படிதான் உருவாக்க படும், 
முகமூடிக்கு பின் இருக்கும் முகம் அழகானதா என்பதுதான் கேள்வி, 
முகம் அழகாய் இருந்து இருந்தால் முகமூடி தேவைப்பட்டு இருக்காது அல்லவா? 

-பூமி.சாமி.

Monday, January 5, 2026

அன்பு

முழு உண்மையை தேடி தேடி 
கிடைக்கும் பாதி உண்மையையும் 
தொலைத்து விடுகிறோம்.

-பூமி.சாமி.

Wednesday, December 31, 2025

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அதை செய்து விட வேண்டும் 
இதை முடித்து விட வேண்டும் 
என்று குறிக்கோளுடன் தான் தொடங்குகிறது ஒவ்வொரு ஆண்டும்.

மாதங்கள் ஆக ஆக 
வைராக்கியம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து
சிறிதேனும் செய்து விட வேண்டும் என்கிறது சிந்தனை 
மலை அளவு குறிக்கோள் இருந்தாலும் 
மடு அளவு சாதித்து விட முடிகிறது,
குறிக்கோளை முழுமையாய் அடைவது முக்கியமில்லை 
குறிக்கோளை குறித்து, முயற்சி செய்வதுதான் முக்கியம் என்கிறது  மனது.
 
மீண்டும்  குறிக்கோள்கள் குறித்து தீர்மானம் ஏற்போம் இவ்வாண்டிலும்,
செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையில்.

 நம்பிக்கைதான் வாழ்க்கை.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன். 
இரா.ரெங்கசாமி.

Sunday, December 21, 2025

நூற்றுக்கணக்கான செடி கொடி 
மரங்களுடன் வாழ்ந்தவனை
மொட்டை மாடி ரோஜா செடிகளுடன்
முடக்கி விடுகிறது வாழ்க்கை.

-பூமி.சாமி.

Wednesday, December 17, 2025

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

காகிதத்தை திங்கும் 
கழுதைக்கு 
காகிதத்தில் இருப்பது 
கட்டுரையா இருந்தால் என்ன 
கவிதையா இருந்தால் என்ன.

-பூமி.சாமி.
உங்கள் குடும்பத்திற்குள்
வருவதற்கு முன் கொஞ்சம் 
உசாராய் இருந்து இருக்கலாம்,

நீங்கள் தந்த ஒவ்வொன்றும் 
உண்மை என்று நம்பி இருந்தேன்,
உங்கள் நாடகங்களிலும்
போலி வார்த்தைகளிலும் சிக்கி கொண்டேன், 
பெரும் தாகக்காரன் கிணற்றில் விழுந்தது போல்,

நீங்கள் என்னவோ பறவை சிறகை உதிர்ப்பது போல எளிதாக உதிர்த்து விட்டீர்கள் என்னை
நான் தான் உங்களை உதிர்க்க முடியாமல்
தினம் தினம் துன்ப படுகிறேன்.

-பூமி.சாமி.



Sunday, December 14, 2025

நீ என் மனதிற்குள் இருக்கிறாய் 
நான் உன் கைகளுக்குள் இருக்கிறேன்.

-பூமி.சாமி.