Saturday, May 25, 2024

நாம் நம் குழந்தைகளுக்கு
முகமூடிகள் தயாரிப்பதிலும்
அதை அணிவிப்பதிலும்
முன்புறமாய் இருக்கிறோம்
ஏனெனில்
நமது உண்மை முகம்
சில நேரங்களில் குழந்தைகளின்
குணங்களில் செயல்களில் வெளிப்பட்டுவிடுகிறது.

பூமி.சாமி.
நம்மில் சிலர்
பணம் சொத்து சேர்க்கையில்
பாவங்களையும் சேர்த்தே சம்பாதிக்கிறோம்
பிறகு
பாவங்களை போக்க
பணத்தை செலவழித்து
பணம்தான் கரைந்ததே ஒழிய
பாவங்கள் கரையாமல்
சந்ததிகளிடம் சேர்ந்ததுதான்
மிச்சம்.



விவரம் தெரியாத மக்கு
ஒன்றும் தெரியவில்லை
என்று பலமுறை திட்டி இருப்போம்
வெள்ளந்திகளை

ஆனால்  எனக்கு ஒன்றும் மட்டும்
புரியவில்லை
கடவுள் ஏன் எப்போதும் அவர்கள் பக்கமே இருக்கிறார்  என்று.

-பூமி.சாமி.




Wednesday, May 22, 2024

படித்ததில் பிடித்தது

மற்றவர்களின் செயல் உன்னை பாதிக்காத அளவுக்கு உன் மனநிலையைச் வைத்துக்கொள்ள நீ பழகவேண்டும்.

நம்மைச் சுற்றிய நிகழ்வுகள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்ய முடியாது.

ஆனால் அப்படி நம்மைச் சுற்றி நடப்பவைகளுக்கு நீ இப்படித்தான் எதிர்வினை ஆற்ற வேண்டுமென்று முடிவு செய்யும் சுதந்திரம் நம் கையில் இருக்கிறது.

உன் எதிர்வினையின் காரணமாக உன் சூழ்நிலையின்மீது நீ அதிகாரம் செலுத்த முடியும்.

உன் உணர்ச்சிகளை நீயே தேர்ந்தெடு: நீ எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பாய் என்று நீ முடிவு செய்து விட்டால் உன்னை யாரும் துக்கப்பட வைக்க முடியாது.

எதையும் நீ எப்படி எடுத்துக் கொள்கிறாய் என்பதுதான் வாழ்க்கையில் முக்கியம்.

நாம் ஏன் வாழ்கிறோம்? :  இந்த கேள்விக்கு ஒரு பதிலை நாம் கண்டு பிடிக்க வேண்டும். ஹிட்லரின் வதைமுகாமில் இருந்த பலருக்கும் ஒரு குறிக்கோள் இருந்தது. தன் குழந்தைக்காக வாழ வேண்டும்.

தன்னுடைய நிறைவேறாத ஒரு ஆசைக்காக நாம் வாழ வேண்டும். இப்படி வாழ்க்கையில் ஒரு உன்னதமான குறிக்கோளை வைத்திருந்தால் அதன் பொருட்டு நாம் எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் தாங்கிக் கொள்கிற சக்தியை அது கொடுத்து விடும்.

நாம் ஏன் வாழ வேண்டும்? : இந்த கேள்விக்கு ஒரு நல்ல பதிலை வைத்திருப்பவர்கள் எந்த கஷ்டத்தையும் எளிதாகத் தாங்கி விடுகிறார்கள்.

வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வைத்திருப்பவர்கள் வாழ்வின் துன்பங்களை எளிதாக கடந்து விடுகிறார்கள்.

"Man's Search for Meaning" by Victor E Frankl 

காசு காசு என அழைந்து 
காலம் கடந்தும் பின் தான்
புரியும்
வாழ்தல் என்றால் என்ன வென்று
காலத்தையும் காலனையும்
நிறுத்தி வைக்க முடியுமா என்ன.

பூமி.சாமி.

Tuesday, May 21, 2024

ஏதோ ஒன்றை மற்றவர்களிடம்
எதிர்பார்த்தது காத்து நிற்க்கீறீர்களா
அது அவரிடம் உனக்கு கொடுக்கும்
அளவு இல்லாமல் இருக்கக் கூடும்
காத்து நிற்க்காமல்
நீங்களே அவருக்கு அதை கூடுதலாக
கொடுத்து விடுங்கள்.
அன்பு, நன்றி எல்லாம் அப்படித்தான்.

-பூமி.சாமி.




காரணமான எண்ணத்தை மாற்றாமல்
விளைவுகளுடன் போராடுவது அர்த்தமற்றது.

- ஜேம்ஸ் ஆலன்.