Monday, March 18, 2024

என்னுடைய சுமையை
நீங்கள் சுமக்க வேண்டாம்
என்னுடைய சோகங்களில்
பங்கேற்க வேண்டாம்
என்னுடைய கஷ்ட நேரங்களில்
கூட இருக்க வேண்டாம்
நான் உடலாலும் மனதாலும்
அடிப்பட்டு வரும் நேரங்களில்
நான் உன்னோடு இருக்கிறேன்
என்று கண்ணால் உணர்த்துங்கள்
அதுபோதும் எனக்கு.




Thursday, March 14, 2024

கிடைக்கும் இடத்தில்
பெற மனமில்லை
கிடைக்கா இடத்தில்
யாசித்து காயப்படுகிறோம்,
அன்பு.

பூமி.சாமி.

Tuesday, March 12, 2024

படித்ததில் பிடித்தது

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம். நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.

நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.

எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.

பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.

சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.
சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள். சமாதானம் செய்யுங்கள்.

நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...

படித்ததில் பிடித்தது..!

Saturday, March 2, 2024

அன்பு செய்தல் நல்ல விசயம்தான்
ஆனால்
நீர் நெல்லுக்கு பாய்கிறதா
புல்லுக்கு பாய்கிறதா
என்பதில் கவனமாக இருங்கள்.

பூமி.சாமி.

Thursday, February 29, 2024

நமது மனதிற்குள்
சில எதிர்பார்ப்புகள் உள்ளது
இதை சில பிடித்தவர்களிடம் 
எதிர்ப்பார்க்கிறோம்
அதை அவர்கள் செய்யாதபோது
அவர்களை Judge செய்கிறோம்
அதனால் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வதும் மிக கடினமாக இருக்கிறது.

எதிர்ப்பார்ப்புகளை குறைத்து கொள்வதுதான் இதுக்கு தீர்வாக அமையும்.

பூமி.சாமி.

Wednesday, February 28, 2024

நிறை குறைகளுடன் மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதும்
மனிதர்களிடம் எந்தவித எதிர்பார்ப்பின்றி 
இருப்பதும் மிக கடினமாக இருக்கிறது.

பூமி.சாமி.

எல்லாவற்றிற்கும் கணக்கு
பார்த்து
கணக்காய் வாழ்ந்து
கணக்கு முடியப்போகும் போதுதான்
தெரியும்
கணக்கிட முடியாததது வாழ்க்கை என்று.

பூமி.சாமி.